Search This Blog

Saturday, 23 March 2019



மருத்துவர் யார் ? -- ஜெய்மினி.
       ஜெய்மினி சூத்திரப் படி காரகாம்சத்தில் சந்திரன் இருந்து, புதனால் பார்க்கப்பட ஒருவர் மருத்துவராகிறார். ஆத்ம காரக கிரகம் புதனோடு மற்றும் சந்திரனோடு இராசியிலோ, நவாம்சத்திலோ தொடர்பு கொள்ளவும் மருத்துவத் தொழில் அமையும்.
                 பிருஹத் ஜாதகா ; - ஒரு ஜாதகத்தில் இலக்னம் / சந்திரன் / சூரியன் / பலம் மிக்க 10 ஆம் அதிபதி. சூரியனின் நவாம்சம் ஏற, அந்த ஜாதகர் மருத்துவத் துறையில் தொடர்பு கொள்கிறார். மேலும், டாக்டர்களின் ஜாதகத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நீர் இராசிகள் 4 , 8 மற்றும் 12 ஆம் இடமாகி, அந்த இடங்கள் பலம் மிக்கதாக இருப்பதைக் காணலாம். 
                 ஆத்மகாரகன் ;- இராசியில் அதிக பாகையைக் கொண்டுள்ள கிரகமே ஆத்மகாரகன் ஆவார். நவாம்சத்தில் ஆத்மகாரகன் இடம்பெறும் இடமே காரகாம்சம் ஆகும். இதுவே, நாம் இக்கட்டுரையில் முக்கியமாக ஆராயப்போகும் நிலையாகும்.
     பார்வையைப் பொருத்தவரை - ஜெய்மினி சூத்திரத்தில் சரம், ஸ்திரத்தையும், ஸ்திரம் சரத்தையும், உபயம் உபயத்தையும் பார்க்கும் என்பது விதி. ஆயினும், சரம், ஸ்திரம், உபயம் தங்களுக்கு அருகிலுள்ள அல்லது அடுத்துள்ள இராசிகளைப் பார்க்காது.
                    முதல் ஜாதகத்தில், ஆத்மகாரகன் செவ்வாய், புதனின் அம்சமான மிதுனத்தில் உள்ளார். அதுவே காரகாம்ச இலக்னம் ஆகும். இராசியில் சந்திரன் மற்றும் புதன் பரஸ்பர பார்வை செய்கின்றனர். நவாம்சத்திலும் அதே நிலை.      (சரம் ஸ்திரம் பார்வை) நவாம்சத்தில் சூரியன் காரகாம்சத்தில் இடம்பெற்றுள்ளார். புதன் காரகாம்சத்தில் இருந்து 9 ஆம் இடத்தில் இருக்கிறார். காரகாம்சத்தில் இருந்து 10 ஆம் இடத்து அதிபதி குரு சூரியனின் இராசியில் வர்க்கோத்தமம் பெற்றுள்ளார்.
ஜாதகம் - 1

சந்
லக்///
கேது

சுக்

லக்//
சுக்
கேது

சூரி
செவ்
ஆ.கா.
செவ்
(வ)
23/08/1956.
குரு-0வ9மா20நா

இராசி

புத


நவாம்சம்
சந்

சூரி
குரு

சனி
குரு

சனி
இராகு
புத


இராகு


        2 வது ஜாதகத்தில்  ஆத்மகாரகன் சனி, கடகத்தில் சந்திரனின் ஆட்சி வீட்டில். சந்திரனின், புதனின் இராசியில் 10 ஆம் இடத்தில். நவாம்சத்தில், காரகாம்சத்தில் செவ்வாய் மற்றும் அதற்கு 5 ஆம் இடத்தில் சந் - தனது  ஆட்சி வீட்டில் இருந்து புதனை பார்வை செய்கிறது. (சரம், ஸ்திரம்).

ஜாதகம் - 2.



இராகு


ஆ.கா.
சனி,
செவ்.

சூரி


         10/11/1947.
சந்- 1வ1மா20நாள்.
சனி
செவ்
புத


நவாம்சம்
கேது
சந்


இராகு

லக்//
குரு
சுக்,கேது
சூரி
புத
சந்


குரு
சுக்
லக்///


ஜாதகம் - 3.

            இவர் ஒரு குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர். அதற்கு,  புத்திர ஸ்தானமும், சூரியன் மற்றும் குருவும் தொடர்பு ஏற்பட வேண்டும். சந்திரன் ஆத்மகாரகன். அவன் மீனத்தில் வர்க்கோத்தமம் பெற்றுள்ளார். சந்திரனோடு     10 ஆம் அதிபதியான குருவும் இணைந்துள்ளார். சிம்மத்தில் புதன், அவருக்கு இடங்கொடுத்த சூரியன் கடகத்தில், இதன் காரணமாகச் சந்திரன், புதன், சூரியன் மூலமாகத் தொடர்பு பெறுகிறார். நவாம்சத்தில் காரகாம்சத்தின் அதிபதி குரு, புதனால் பார்க்கப்படுகிறார். (ஸ்திரம், சரம்). குரு இராசிச் சக்கரத்தில் சந்திரனோடும், நவாம்சத்தில் புதனோடும் தொடர்பு கொள்வதால் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவரானார்.


சந்
குரு


லக்///
செவ்

ஆ.கா.
இராகு
சந்
செவ்
இலக்//
புத

இராகு
         25/07/1951.
புத-1வ6மா5நாள்.
சூரி

சனி


நவாம்சம்



சுக்
புத,கே.
குரு




சனி



சுக், சூரி,
கேது

ஜாதகம் - 4.


சந்

புத,
குரு,கே

 புத
 குரு,
கே,செ
ஆ.கா

சந்

     23/07/1954.
கேது 2 வ 6 மா 9 நாள்.
   இராசி
சூரி



    நவாம்சம்



லக்//
சுக்

சூரி

செவ்(வ)
இராகு

சனி

சனி

 இராகு
 லக்,///
சுக்

          இந்த ஜாதகர் ஒரு சர்ஜன் ஆவார். சர்ஜரிக்குப் பொறுப்பு ஏற்பவர்கள் செவ்வாய் மற்றும் இராகு ஆவர். இங்கே,  ஆத்மகாரகன் குரு புதனுடன் இணைவு. சந்திரன் செவ்வாயின் ஆட்சி வீட்டில் உள்ளார். குருவும் புதனும் செவ்வாய், இராகுவைப் பார்வை புரிகின்றனர்.
                  நவாம்சத்தில், காரகாம்சமான மேஷத்தில் ஆத்ம காரகன் குருவோடு, செவ்வாயும் இணைந்துள்ளார்.  இராசி, நவாம்சம் இரண்டிலும் செவ்வாய் ஆத்ம காரகனுடன் இணைந்துள்ளார். எனவே, இவர் சர்ஜரியில் திறமைபெற்ற டாக்டர் ஆனார்.

No comments:

Post a Comment