விகாரி வருட பலன்கள் -மகரம்,கும்பம், மீனம்.
மகரம்
70%
( உத்திராடம்- 2,3,4-
பாதங்கள், திருவோணம்-1,2,3,4
மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
கர்மகாரகனான
சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு விஹாரி வருட கிரக நிலைகள் தரும்
பலன்கள் என்ன ? –என்பதைப் பார்ப்போம்.
சூரியன் – ஆனி மாதத்தில் நல்ஆரோக்கியம்,
சந்தோஷம், மனஅமைதி, இலாபம் ஆகியவை ஏற்படும். பலகாலமாக வசூலாகாத கடன் பாக்கிகள் வசூலாகும்.
எதிரிகள் பிரச்சனை குறையும். அவர்களை எளிதில் வெல்ல முடியும். எக் காரியத்திலும் வெற்றி
கிட்டும். பங்காளிப் பிரச்சனைகள் தீரும். வியாதிகள் குணமாகும். விரயச் செலவுகள் குறைந்து
கையில் பணம் நிற்கும். பொதுச் சேவையில் புகழும், புதிய பொறுப்புகளும் ஏற்படும்.
ஐப்பசி மாதத்தில் வெற்றிகளையும், செல்வம் மற்றும் நோயிலிருந்து விடுதலையையும் அளிப்பார். தொழில் முன்னேற்றம்,
உத்தியோக உயர்வு, வருமானம் அதிகரித்தல். வழக்குகளில் வெற்றி ஆகியவை ஏற்படும். வெளியூர்
பயணங்களால் ஆதாயம் உண்டு. தெய்வ வழிபாடுகள் மூலம் மனநிறைவு, சுபகாரிய முயற்சிகள் போன்ற
நல்ல பலன்கள் ஏற்படும்..
கார்த்திகை மாதத்தில் புதிய தொழில் முயற்சிகள்
மேற்கொள்ளலாம். பொதுச்சேவை செய்பவர்களுக்குச் சுற்று வட்டாரத்தில்
புகழ் பரவும். செய்தொழிலில் நல்ல இலாபம் ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியடைதல்,
பொதுச் சேவை மற்றும் சுற்றுப்புறத்தில் புகழ் கிடைத்தல், வீடு, வாகனம், நிலம், போன்றவற்றில்
புதிய முதலீடு செய்தல் அல்லது சீர்திருத்தம் அபிவிருத்தி செய்தல்.
பங்குனி மாதத்தில் புதிய பதவி மற்றும் அந்தஸ்து
கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தான தர்மம் செய்வர். விருப்பமான பெண்ணின் உறவு ஏற்படும். ஜாதகர் புத்திசாலி ஆகிவிடுவார்.
பிறருக்காக வாதாடி வெற்றி பெறுவார். பதவி உயர்வுகள் பலவும் ஏற்படும். இஷட்டப்பட்ட இடத்துக்குப்
பணி மாற்றம் கிடைக்கும். அனைவரும் இவரிடம் அன்பொழுகப் பேசி நட்பு பாராட்டுவர். பிள்ளைகள்
மூலம் கஷ்டமும், சுகமும் உண்டாகும். சுய சம்பாத்தியத்தால் பணம் பெருகும்.
செவ்வாய் – பங்குனி, ஆனி, கார்த்திகை ஆகிய மாதங்களில் அங்காரகன் சிறப்பான
பலன்களைத் தருவார். பொருளாதார இலாபம் ஏற்படும். தங்கள் தகுதிக்கு
ஏற்ப பதவி உயர்வுகள் கிடைக்கும். பூமி லாபம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் நவநாகரீக, நவீன சுக சாதனங்களோடு வீடு நிறைந்திருக்கும். பின்னர்
உணர்ச்சி மிகுதல், பெண்களால் தொல்லை, அதிக வெப்பத்தால் வரும் வியாதிகள் ஆகியவை ஏற்படும். வழக்குகளில் வெற்றி, காரிய வெற்றி, கட்டுப்பாடற்ற சுதந்திர சுகமும் உண்டாகும். பயிர் மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சகோதரரால்
நன்மைகள் ஏற்படும். வேதக் கல்விகளில் தேர்ச்சி ஏற்படும். உடலில் ஒளியும் பொலிவும் கூடும்.
எதிலும் வெற்றியும் சந்தோஷமும் ஏற்படமும். மகிழ்ச்சியும் கோலாகலமும் பல்கிப் பெருகும்.
புதன் – ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் நல்ல பலன்களை அள்ளி
வழங்குவார். உழைக்கும் உழைப்பு பயன் தரும். பெற்றோரின் ஆரோக்கியம் சிறக்கும். நல்ல பெயர் உண்டாகும்.
கல்வியில் முன்னேற்றம் உண்டாகும், கௌரவம்
ஓங்கும். அழகிய மனைவி அமைவாள். பலவகை
யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும். கௌரவப் பட்டங்கள் தேடிவரும். அரசாங்க உத்தியோகம் ஏற்படலாம். தனவிருத்தியாகிப்
பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கௌரவமும் கூடும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.
மன்னர் மன்னனாகும் இராஜயோகமும் உண்டாகும். மிகவும் உயர்ந்த அந்தஸ்தை அடைவார்.
சுக்கிரன் – ஆனி, ஆடி, கார்த்திகை ஆகிய மாதங்களைத் தவிர மற்ற 9 மாதஙுகளிலும் சிறப்பான
பலன்களைத் தருவார். செல்வம் கொழிக்கும், தானியவகைகள் குவியும்.
அரசு ஆதரவு கிடைக்கும். அரசாங்க விருதுகள்
கிடைக்கும். கண்கள் புத்தொளி பெறும், முகப் பொலிவும், கவர்ச்சியும் உண்டாகும்.
பின்னர் வரும் காலத்தில் மனம் நிலைகொள்ளாமல் தவிப்பர், கண்டபடி அலையும் அலைச்சல் ஏற்படும். வெளிநாட்டுப்
பயண வாய்ப்புகள் ஏற்படும். இந்திரன், ருத்திரன் போன்று உயர்ந்த வாழ்க்கைத் தரம் அமையும். பொன் ஆபரணங்கள்
விதவிதமாக்க் கிடைக்கும். அதிகாரம் பண்ணும் தலைமைப் பதவி கிடைக்கும். தைரியமும் வீரமும்
ஓங்கும்.
குரு தரும் பலன்கள்
குரு – 26 – 4 -
2019 முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 –
2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள்
இலாப மற்றும் விரய இராசி பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார். இலாப பாவத்தில் அமர்ந்த குரு கிராம அதிகாரம், அரசியல்
அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும். பணம் பல
வழிகளிலும் குவிந்து பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். இதுவரை நீங்கள்
செய்துவந்த பிரார்த்தனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் யோகபலன்களை அனுபவிக்கக் காத்திருக்கிறீர்கள்.
தடைப்பட்டிருந்த திருமண காரியங்கள் கைகூடும். சீக்கிரமே குழந்தை பாக்கியமும்
ஏற்படும். அன்பும், பாசமும் மேலோங்க தம்பதிகளின் வாழ்க்கை பூலோக சொர்க்கமாகத்
திகழும். சுற்றமும், நட்பும் ஒற்றுமையுடன் உங்கள் கரத்துக்கு வலுச் சேர்ப்பர். விரயபாவத்தில்
சஞ்சரிக்கும் காலத்தில் அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஆகியவை ஏற்படும். பிறர்
வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப்
பிறகே முடிக்க முடியும். எவ்வளவு பொருள்
வரவுகள் இருந்தாலும் வரவுக்கு மிஞ்சியதாகவே செலவுகள் இருக்கும். வீடு அல்லது கட்டிட சம்பந்தமான செலவுகள்
ஏற்படும். தொலை தூரப் பயணங்கள் மூலமான செலவுகள் தவிர்க்க
முடியாததாகும். தேவையற்ற கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும்.
மூத்த சகோதரர்களுக்குப் பல வழிகளிலும் நல்ல வருமானம் இருக்கும்.
சிலருக்குப் பெண்களால் அவமானங்கள் ஏற்படலாம். மனதில்
தயக்கமும், அச்ச உணர்வும் இருக்கும். உழைப்பினால்
எந்தவிதப் பயனும் இருக்காது. கடன் வாங்கிக் கடல் வாணிபம்
செய்தாலும் நஷ்டங்கள் ஏற்படும்.
விரய பாவ சனி தரும் பலன்கள்
சனி – 12 ஆம்
இடம் விரய பாவம் மட்டுமன்றி முதலீட்டு ஸ்தானமும் ஆகும். இதன் காரணமாக ஜாதகர்
கவலைகளுக்கு உள்ளாக நேரும். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க நேரும். நண்பர்கள்,
உறவுகளிடம் பகைமை நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நாவை அடக்கி, நிதானமாகச் செயல்பட
அறிவுறுத்தப் படுகிறீர்கள். சிலருக்கு எதிலும் சலிப்பு, டென்ஷன், தலைசுற்றல்,
காய்ச்சல், தூக்கமின்மை வந்துபோகும். சமயோஜித புத்தியுடன் செயல்படுவது
சங்கடங்களைத் தீர்க்கும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களின்
கடின உழைப்பே, அவர்களைக் கல்விக் கடலின் இனிய கரை சேர்க்கும். குடும்பத்தில்
குழப்பம்,
வெறுப்பு, குறிக் கோளற்ற மற்றும் பயனற்ற
அலைச்சல்கள் ஏற்படும். மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும்.
விரும்பாவிட்டாலும் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், ஏற்ற
இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிலிருந்து விடுபட, பணிகளை திட்டமிட்டு சீராகத்
திறம்பட செய்தல், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய செயல்பாடுகளே முக்கியம்
ஆகும். எவருக்கேனும் இரக்கப்பட்டு ஜாமீன் கையொப்பம் இட்டால், யானை தன்தலையில் தானே
மண்ணள்ளிப் போட்ட கதையாகிவிடும். எனவே, சும்மா இருக்கும் சங்கை ஊதிக்
கெடுத்துவிடாதீர்கள். தொழில் மந்த நிலைகள் உருவாக் கூடுமாதலால், தேவைக்கு
அதிகமாகக் கடன் வாங்குவதைத் தவிருங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு நோய்
முன்னெச்சரிக்கையாக முழு உடல் பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது.
சாடே
சாத்தி எனும் 7½ சனியின் நுழைவு
வாயிலாக அமையும் 12 ஆம் பாவத்தில் அமர்ந்து சக்திக்கு மீறிய
செலவுகளையும், வெகு தூரப்பயணங்களையும் ஏற்படுத்துகிறார்.
வேலை இல்லாமை அதன் காரணமாக வருமானமில்லாமை என அனைத்துத் துயரங்களையும்
தருவார். காளஹஸ்தி சென்று சனீஸ்வரனை மனமுருகி வேண்டிவர வேதனைகள்
குறையும்.
இராகு,
கேது தரும் பலன்கள்
ருண, ரோக, சத்ரு பாவத்தில் இராகுவும், விரயபாவமான
12 ஆம் பாவத்தில் கேதுவும் அமரும் போது இராகுவால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். ஆனால், கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.
சத்ரு பாவ
இராகுவால் சேவைப் பணிகள் மூலமான ஆதாயங்கள், உதவியாளர்கள் மற்றும் உடன்
இருப்பவர்களின் மூலமான ஆதாயங்களும் குறிகாட்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தை
மிகுந்த எச்சரிக்கையுடன் பேணிக் காக்கவும். அதற்கு, எந்தவொரு விஷயத்துக்கும்
டென்ஷன் ஆகாமல், அதிக்க் கடினமான பணிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. கண்டதே
காட்சி, கொண்டதே கோலம் என்றில்லாமல் அனுபவபூர்வமாக உணர்ந்து செயல்படுவதே
சிறப்பாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர
பாக்கியம் ஏற்படும். நல்ல யோகமான
காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள்
என எல்லாம் நன்மையாகவே நடக்கும். சிலருக்கு நோய்கள் விலகும். வீட்டில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக்
கூடும். எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை. தந்தையுடன் இதுவரை இருந்த
மனக் கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் முன்னேறுவார்கள்.
குலதெய்வம் ஆசி கிட்டும். சுற்றுலாவின் மூலம் பல
புண்ணியத்தலங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். அரசியலில் அனுகூலம்
ஏற்படும்.
விரய பாவ
கேதுவால் ஆன்மீக விஷயங்களிலும், தியானம்
ஆகியவற்றிலும் ஆர்வம் ஏற்படும். இரகசிய திட்டங்கள், தியாக உணர்வு, தன்னம்பிக்கை
இன்மை, சந்தேக குணம், புரட்சிகரமான எண்ணங்கள் ஆகியவை ஜாதகரின் மனத்தில் கிளர்த்து
எழும். இந்தக் காலம் ஒருவர் தனது குற்றங்குறைகளை உணர்ந்து, தனது அனுபவத்தையே
பாடமாகக் கொண்டு வருங்கால முன்னேற்றத்துக்குப் படியாக அமைத்துக் கொள்ளும் காலம்
ஆகும். குடும்பத்தில்
நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும். சிறு
உடல் உபாதைகள் ஏற்படலாம். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற
மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும். தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி புண்ணிய ஸ்தலங்களுக்குப்
பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக சிறுசிறு வீண்விரயங்கள் எதிர்கொள்ள
நேரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனகளின்றி நிம்மதியாக வாழலாம்.
பணம் கொடுக்கல் வாங்கலிலும், கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதிலும் தடைகள்
உண்டாகும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்துப் போவது
நல்லது. அரசுப் பணியாளர்கள் சற்று நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உயர் அதிகாரிகளின்
ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால்
நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
பரிகாரம் – விகனம் தீர்க்கும் விநாயகருக்கும், , இராமபக்த
ஹனுமானுக்கும் கட்டுப்பட்டவனே சனி பகவான். எனவே, இவர்கள் இருவரையும் கெட்டியாகப்
பிடித்துக் கொண்டால் எட்டிச் செல்வான் சனி, கிட்ட வரான். குலதெய்வ வழிபாடு
சிறப்புத் தரும். வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை மாலை சூட்டி, எலுமிச்சை விளக்கேற்றி அர்ச்சனை
செய்து வழிபட்ட இராகுவால் ஏற்படும் தொல்லைகள் விலகும். சுபம்.
கும்பம்
70%
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4
பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
கர்மகாரகனான
சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு
விஹாரி வருட கிரக நிலைகள் தரும் பலன்கள் என்ன ? –என்பதைப்
பார்ப்போம்.
சூரியன் – சித்திரை மாதத்தில் கடன் வாங்கி வீடு, நிலம் வாங்கும்
பாக்கியம் ஏறபடும். படிப்பில் அக்கறை தேவை. பெரும்பாலும்
நல்ல பலன்களே நடக்கும். தைரியத்துடன் எந்த முயற்சியிலும் இறங்குவீர்கள். ஆபரண சேர்க்கை
ஏற்படும். விருந்து உபசாரத்துக்கு சென்று மகிழ்வீர்கள். நோய்கள் மறைந்து சுகம் கூடும்.
எதிர்பார்ப்புக்கு மேலாக தனவரவுகள் உண்டு. செய்தொழில் பிரகாசிக்கும். புதிய தொழில்
முயற்சிகள் சிறக்கும்.
ஆடி மாதத்தில் தூரப்பயணங்களை தவிர்ப்பது
நல்லது.
தொழில் விருத்தி உண்டு. நீண்ட காலமாக வராத கடன் நிலுவைகள்
சிக்கல் ஏதுமின்றி வசூலாகிவிடும். இதுநாள்வரை வங்கி மூலமாக முயற்சி செய்து புதிய கடன்கள்
காயாக இருந்தது பழுத்துவிடும், எதிரிகள் பிரச்சனை குறையும் அவர்களை சுலபமாக வென்று
விடுவீர்கள். பங்காளிப் பிரச்சனைகள் தீரும். விரையச் செலவுகள் குறைந்து கையில் நாலு
காசு சேரும். பொதுச் சேவையில் புகழும், புதிய பொறுப்புகளும் ஏற்படும். எல்லாக் காரியங்களிலும்
வெற்றி மேல் வெற்றிவரும்,
கார்த்திகை மாதத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில்
திருப்தி
நிலவும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்,. உத்தியோக உயர்வால்,
வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் பணிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வழக்குகளிலும்
ஜெயம் உண்டாகும்.. வெளியூர் பயணங்கள் நன்மைதரும். தெய்வ வழிபாடுகள் மூலம் மனநிறைவு
உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும். கார் , ஸ்கூட்டர் போன்ற
உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். இவர் நாடெங்கும் பிரசித்தி பெறுவார். மனிதர்களாலும்,
கால்நடைகளாலும் இலாபம் ஏற்படும்
மார்கழி மாதத்தில் பிறர் மேல் இரக்கம்
ஏற்படும். நெடுநாளைய சங்கடங்கள் நீங்கும். குடும்ப சுகம் பூரணமாகக் கிடைக்கும்.
வாக்கு வன்மையால் இலாபம் உண்டாகும். பாக்கியம் கூடும். புதிய பதவி, மரியாதை,
அந்தஸ்து ஆகியவை கிடைக்கும். சுற்றுப் புறத்தில் புகழ் கூடும். வீடு, நிலம்,
வாகனம் போன்றவற்றில் புதிய முதலீடு செய்தல் அல்லது சீர்திருத்தி அபிவிருத்தி
செய்தல் ஆகியவை ஏற்படும். எதிர்பார்த்த வரவினங்கள் கிடைத்து, சுபமான செலவுகள்
ஏற்படும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சியான
கொண்டாட்டங்கள், சுபகாரியங்கள் நடக்கும்.
செவ்வாய் – சித்திரை,
ஆடி, மார்கழி ஆகிய மாதங்களில் சிறப்பான பலன்களை அளிக்க வல்லவர். பொருளாதார நிலை திருப்திகரமாக
இருக்கும். மகன் பிறப்பான். குழந்தைகள்
மூலமாக மகிழ்ச்சி பெருகும். தீயசெயல்கள் ஒரு முடிவுக்கு வரும்.
பின்னர் வரும் காலத்தில் எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்பட்டு, ஆனந்தம்
பொங்கும். அந்தஸ்து புகழ் ஓங்கும். புதிய முயற்சிகளில்
தைரியமாக ஈடுபட்டு, காரியங்களில் வெற்றி அடைவீர்கள். வரவேண்டிய கடன்கள் வசூலாகும்.
தொழில் செய்யுமிடத்தில் நல்ல பெழர் கிடைக்கும்
புதன் – ஆடி, புரட்டாசி,
கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் சிறப்பான பலன்களை அள்ளி வழங்குவார். நம்பிக்கைக்கு உகந்த நண்பர்கள் கிடைப்பர். நல்ல
சுவைமிக்க உணவுவகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளோடு ஒத்துப்
போகமுடியாது. மனதில்
அமைதியின்மை நிலவும். பின் வரும் காலத்தில் வாக்குவன்மையால்
ஆதாயம். வெற்றிகளால் ஏற்படும் மகிழ்ச்சி, புத்தி கூர்மை, பலம் மற்றும் திறமை ஆகியவை அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி ஆகியவை ஏற்படும்.
சுக்கிரன்.— ஆடி, ஆவணி,
கார்த்திகை ஆகிய மாதங்களைத் தவிர மற்ற 9 மாதங்களிலும் சிறப்பான, சீரான பலன்களை அளிப்பார்.
அமைதியான தூக்கம். நல்ல உடைகள் அணியும் பாக்கியம்.
பரிமள வாஸனாதி திரவியங்கள் மீதான விருப்பம். மிகவும் அனுபவித்து உணரும் மனமகிழ்ச்சி, திருமணம்,
உயர் கல்வியில் தேர்ச்சி மற்றும் வெற்றி ஆகியவை ஏற்படும்.
பின் வரும் காலத்தில் உயிர் நண்பர்களின், இனிய உறவுகளின் உதவிகள் மற்றும் அதனால் ஏற்படும் இலாபங்கள், மக்கள் மத்தியில் மதிப்பு உயருதல் ஆகியவையும் ஏற்படும். உயர் அதிகாரிகளின் அன்பு மற்றும் அனுகூலம். பயனுள்ள மற்றும் மகிழ்ச்சிகரமான
உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள்.
குரு தரும் பலன்கள்
குரு – 26 – 4 -
2019 முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 –
2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள்
கர்ம மற்றும் இலாப பாவ பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார். புத்திர பாக்கியம்
ஏற்படும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள்,
எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள்
என எல்லாம் நன்மையாகவே நடக்கும். அனைத்துக் காரியங்களுக்கும் பிறர்
தயவையே நாட வேண்டியிருக்கும்.
சிலருக்கு இதுநாள்வரை
பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடவேண்டிய சூழல் எழலாம். சிலருக்கு இதுநாள்வரை வகித்து வந்த பதவி பறி போகலாம். பதவி உயர்வு கிடைக்க தடை, தாமதங்கள் கூட ஏற்படலாம். மனக்கவலைகளால் உடல் ஆரோக்கியம் கெட்டு, பல வியாதிகளுக்கு வழிவகுக்கலாம்.மாசினும் பணவரவுகள் ஓரளவு வந்து கொண்டுதான் இருக்கும். எவரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் விருப்பங்கள் எதுவும் நிறைவேறாது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு
என ஊரைவிட்டுப் போகவேண்டிய சூழ்நிலை எழலாம். மனச் சோர்வால், உடல் சோர்வும் சேர்ந்து கொள்ளும். பின் இலாப பாவ மேறி கிராம அதிகாரம், அரசியல் அதிகாரம்
ஆகியவற்றைத் தருவார். கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும்
குவிந்து பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். இதுவரை நீங்கள் செய்துவந்த
பிரார்த்தனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் யோகபலன்களை அனுபவிக்கக் காத்திருக்கிறீர்கள். 3, 5,
7 ஆகிய பாவங்களைப் பார்வை செய்வதால் இரு பாலருக்கும் தடைப்பட்டிருந்த திருமண
காரியங்கள் கைகூடும். சீக்கிரமே குழந்தை பாக்கியமும் ஏற்படும். அன்பும், பாசமும்
மேலோங்க தம்பதிகளின் வாழ்க்கை பூலோக சொர்க்கமாகத் திகழும். சுற்றமும், நட்பும்
ஒற்றுமையுடன் உங்கள் கரத்துக்கு வலுச் சேர்ப்பர். பொது வாழ்வில் பெரிய மனிதர்களின்
தொடர்பு ஏற்பட்டு, நட்பும் பலப்படும்.
சனி பகவான்
காலபுருஷ தத்துவத்தின் 11 ஆம் இராசியான கும்பம், சனியின் மற்றுமொரு ஆட்சி
வீடாகும். 12 ஆம் பாவத்துக்கும்,
இராசிக்கும் அதிபதியான சனி பகவான் இலாப பாவத்தில் உள்ளார். சமூகத்தில் பெரிய
மனிதர் என பெயர் எடுப்பீர்கள். காம இச்சை கூடும். உடல் ஆரோக்கியம் சீராகி
முழுமையான சுக, சௌக்கியம் ஏற்படும். தவறான உறவுகளிலும் மனம் செல்லலாம். உங்கள்
செயல்பாடுகளில் அளவுக்கு மீறிய முரட்டுத்தனம் காணப்படும். மாற்றனின் பணமும் கைக்கு
வந்து சேரும். பல புதிய நண்பர்கள் கிடைப்பர். தக்க சமயத்தில் அவர்களின் உதவிகளும்
கிடைக்கும். எல்லாக் காரியங்களையும் உங்கள் மூத்த சகோதரர் முன்னின்று நடத்துவார். அவரின்
எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத்
திருமணம் விரைவில் நடக்கும். புது
வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர
பாக்கியம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். இது உங்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது.
பல வழிகளிலும் பணம் வந்து குவியும். தேஜஸ் கூடும். தேகத்தில் புதுப் பொலிவு
ஏற்பட்டு, உற்சாகம் கூடும். பணிகள் மூலமான ஆதாயங்கள், உதவியாளர்கள் மற்றும் உடன்
இருப்பவர்களின் மூலமான ஆதாயங்களும் அதிகரிக்கும். பெண் குழந்தை பிறந்து வீட்டில்
மங்களம் பெருகும். கட்டளையிடும் கௌரவமான பதவிகள் ஏற்பட்டு மதிப்பும், மரியாதையும்
கூடும். நல்ல யோகமான
காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள்
என எல்லாம் நன்மையாகவே நடக்கும். புனித யாத்திரையாகத் திருநள்ளாறு
சென்று சனிபகவானை சேவித்து வந்தால், துன்பங்கள் பகலவனைக் கண்ட
பனிபோல் பறந்து மறைந்துவிடும்.
புத்திர பாவ
இராகுவும், இலாப பாவ கேதுவும் உங்களுக்குத் தரப்போகும் பலன்களைப்
பார்ப்போம். இராகுவால் சுமாரான ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
புத்திர பாவ இராகுவால்
காதல், குழந்தைகள் மூலமான சந்தோஷம் மற்றும் இலாபம் குறிகாட்டப்படுகிறது.
சாதகமான, சந்தோஷமான காதல் நிலைகள் உருவாகும்.
பங்குச் சந்தை விவகாரங்களில் அதிக இலாபம் கிடைக்கும். கற்ற கல்வி மூலமாக ஏற்பட்ட திறனால் உருவாக்கப்பட்ட புதிய பொருள்களை விற்பனை
செய்வதின் மூலமாக சம்பாதித்து செல்வம் சேர்ப்பர். சிலருக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த
இலாபங்கள் கிட்டாது, வீண்
விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொருளாதாரம்
சீராக இருக்காது. சிலர்
அன்றாடச் செலவுக்குக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட நேரும். சிலருக்கு புத்திர
தோஷம் அதாவது புத்திரர்களால் தொல்லை ஏற்படும். அவர்கள் நீங்கள்
சொன்ன பேச்சைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். கட்டுப்படவும் மாட்டார்கள். புத்தி கலக்கம் ஏற்படலாம்.
எல்லாக்
காரியங்களையும், முறையாகச் செய்யா மல் , தலைகீழகாச் செய்வார்கள். தாய், தந்தையரின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது உங்கள் கடமையாகும். சிலருக்கு விபத்து ஏற்பட்டு அங்ககீனம் ஆகலாம். எனவே வாகனங்கள்
ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. ஒழுக்கம் கெட்ட
பெண்களிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது.
இலாப பாவ கேதுவால்
எல்லாவழிகளிலும் இலாபம் உண்டாகும். பயிர் விளைச்சல்கள் அதிகரிக்கும்.
சொன்ன சொல் தவறாதவராக விளங்குவார். எல்லாக் காரியங்களிலும்
வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வீட்டில் குடும்பத்தார் அனைவருக்கும்
தேவையான அனைத்துப் பொருட்களும் நிரம்பி வழியும். சுகபோக வாழ்க்கைக்குத்
தேவையான அனைத்துப் பொருட்களும் இருப்பதால் ஜாதகர் எப்போதும் மகாராஜன் போல் வாழ்ந்து,
மகாராஜன் என்று பெயர் எடுப்பார். பல வகையான தொழில்களில்
முதலீடு செய்து வருமானத்தைப் பெருக்கி வாழ்வாங்கு வாழ்வீர்கள். சிலர் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெறுக்குவீர்கள்.
நீதிபதி, வக்கீல் என நீதித்துறை பணிகளில் ஈடுபடும்
யோகம் ஏற்படும். உத்தியோகம் உயரும். அரசாங்கத்தால்
வரும் வருமானம் பெருகும். உறவுகளிடைய பகைமை நிலவும். ஆனால் அவர்களை உங்கள் சமயோஜித
புத்தியால் வெற்றி கொள்வீர்கள். அவர்களை உங்கள் கட்டுப் பாட்டுக்குள்
கொண்டுவந்து விடுவீர்கள். மூத்த சகோதரத்திற்கு அரிஷ்டம் உண்டாகலாம்.
ஆனாலும் எல்லாவகையிலும் நன்மையே அடைவீர்கள். இதுவரை
திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும். பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு
பெருமை சேரும். தொழில் துறையில்
நல்ல வளர்ச்சி ஏற்படும்.
மனைவி
மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும்.
வீட்டில்
மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பொதுவாக,
ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும்
கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
பரிகாரம் – வெள்ளிக் கிழமைதோறும் ஶ்ரீ மஹாலட்சுமி வழிபாடும், புதன்
கிழமை தோறும் பெருமாள் வழிபாடும் உங்கள் இன்னல்கள் நீங்க எளிய வழியாகும். துர்க்கை
வழிபாடு, புத்துக்கு பால் ஊற்றி வழிபடுதல் ஆகியவை துன்பம் நீக்கி இன்பம் தரும்.
மீனம்
70%
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
தேவகுருவான குருவை அதிபதியாகக்
கொண்ட மீனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு விஹாரி
வருட கிரக நிலைகள் தரும் பலன்கள் என்ன ? –என்பதைப் பார்ப்போம்.
சூரியன் – வைகாசி மாதத்தில் ஆரோக்கியம் மேம்படும்.
குடும்ப சுகம் அதிகரிக்கும். மனோதைரியம்
கூடும். சிறப்பான கௌரவங்கள் சேரும். தனலாபம் ஏற்படும்.
புதிய பதவிகள் கிடைக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். நல் ஆரோக்கியம் ஏற்படும். வியாதிகளில் இருந்து விடுதலை
கிட்டும். எதிரிகளை வெல்லுதல் எளிது. இலாபங்கள்
கூடும். வசதி வாய்ப்புகள் பெருகும். உயர் அதிகாரிகளின்
பாராட்டுக் கிடைக்கும். சிறப்பான கௌரவங்களை அடைவீர்கள். வாழ்க்கையில் உயர்வான நிலை
அடைவீர்கள். நல்ல மனிதர்களுடன் நட்பு ஏற்படும்.
ஆவணி மாதத்தில் எதிரிகள் அழிக்கப்படுவர். மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிரிகளை அழித்து, அவர்களை
நாசம் செய்யக் கூடிய தைரியம் பெறுவர். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
எடுத்துக் கொள்ளும் எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனஅமைதி ஓங்கும். மனக்கவலைகளும்,
மனக்குழப்பங்களும் விலகி ஓடும். இலாபங்கள்
அதிகரிக்கும்.
மார்கழி மாதத்தில் நல்ல தோழமை கிடைக்கும். நீங்கள்
மேற்கொள்ளக் கூடிய முக்கியமான காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.
செல்வ நிலை உயரும். நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும். தன இலாபம் கிடைக்கும். ஆடம்பரமான
பொருட்களை வீட்டில் வாங்கிக் குவிப்பீர்கள். நல்ல நண்பர்களின் தொடர்பு உருவாகும். அதிகாரம்
மிக்க ஆட்சியாளர்களின் நட்பு கிடைக்கும்.
தை
மாதத்தில் சூரியன் புதிய பதவி, கௌரவம் மற்றும் அதனால்
ஏற்படும் சந்தோஷம் ஆகியவற்றைக் குறிக்கும். தனலாபம் பெருகும். மடைதிறந்த வெள்ளம்
போல் வீட்டினில் சந்தோஷ வெள்ளம் பெருக் கெடுத்து ஓடும், வாழ்க்கையில் தொட்டதெல்லாம்
துலங்கும். நல்ல, ருசியான உணவுவகைகள் கிடைத்து உண்டு மகிழ்வீர்கள். குடும்ப சுகம் பெருகும்.
செவ்வாய் – வைகாசி,
ஆவணி மற்றும் தை மாதங்களில் சிறப்பான பலன்களைத் தருவார். மற்ற மாதங்களில் வயிற்று உபாதைகள் மற்றும் அஜீரணக்
கோளாறுகள் ஏற்படலாம். சிலர் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்.
பொருளாதார உயர்வு ஏற்படும். பூமி போன்ற அசையாச்
சொத்துக்கள் சேரும். அதன் பிறகு தனதான்ய விருத்தி ஏற்படும்.
எல்லாத் துறைகளிலும் இலாபம் ஏற்படும். பகைவரால்
ஏற்பட்டு வந்த அச்சங்கள் நீங்கும். தகராறுகள், வழக்குகள் எல்லாம் சாதகமாகவே முடியும். பலம் பெருகும். தைரியம் ஓங்கும்.
அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பாராட்டுகள் கிடைத்து கௌரவமும் உயரும். மழலைச்
செல்வங்களால் மனையில் மகிழ்ச்சி பொங்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பர்.
வாழ்க்கையில் வசதி வாய்ப்புகள் பெருகும். புத்திர பாக்கியம் ஏற்படும்.
புதன் – ஆவணி, ஐப்பசி, தை, மார்கழி
ஆகிய மாதங்களில் சிறப்பான பலன்களைத் தருவார். ஆடை ஆபரணாதிகள் சேர்க்கை, திருமணமாதல், மக்கட்பேறு ஆகிய பாக்கியங்கள் ஏற்படும். அதன் பிறகு பிறருக்கு தான தருமம்
செய்கிற புண்ணியம் கிடைக்கும். விவசாய உற்பத்திகள் பெருகி
ஆதாயமும் பெருகும். கை வைக்கும் காரியங்களெல்லாம் கட்டாயம் வெற்றி உண்டு. சுற்று
வட்டாரத்தில் புகழ் ஓங்கும். வாயைத் திறந்தாலே உங்கள் வாக்கு வருமானமாக மாறும். இளைஞர்
முதல் முதியவர் வரை அனைவராலும் விரும்பப்படுவீர்கள். பகைவரை வெல்வீர்கள். சிலருக்குப் தகாத ஆசைகளும், கெட்ட சவகாசங்களும்
ஏற்படும்.
சுக்கிரன் – ஆவணி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களைத் தவிர மற்ற 9 மாதங்களில் சிறப்பான
பலன்களைத் தருவார். உயர் வாகனாதிகள் கிடைக்கும். கணிதத்தில் திறமையும்,
கல்வியில் முன்னேற்றமும் இருக்கும். சுப
காரியச்செலவுகள் கூடும். அச் சுப காரியங்களால் வீட்டில் மகிழ்ச்சியும்
கூடும். அதன் பின்னர் வெளியூர் மற்றும் வெளிநாட்டுப்
பயணங்கள் அனுகூலமாக அமையும். புண்ணிய யாத்திரைகள் மனஅமைதி
தரும். புதிய இடமாற்றங்கள் பயனுள்ளதாக இருக்கும். சுகந்த
பரிமள வாசனை திரவியங்களில் நாட்டம் ஏற்படும். புதிய பெண் நண்பர்களின் நட்பு ஏற்படும்
அது சில நேரங்களில் காதலாகவும் மாறலாம். தாய், சகோதரி, மகள் போன்ற பெண் இனத்தவரால்
ஆதாயமும், இன்பமும் பெருகும்.
குரு தரும் பலன்கள்
குரு – 26 – 4 - 2019
முதல் 4 – 11 – 2019 வரை விருச்சிகத்திலும் பின்னர் தனுசுவிலும் 29 – 3 – 2020 முதல் மகர இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். எனவே, தங்கள் பாக்ய மற்றும்
கர்ம பாவ பலன்களை முறையே ஆறு ஆறு மாதங்களுக்குத் தருவார். முதல் 6 மாதத்தில்
பாக்கிய பாவமான ஒன்பதாமிடம் அமர்ந்து உங்கள்
இராசியை நேரடியாகப் பார்க்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்குத்
திருமணம் விரைவில் நடக்கும். புது வாகனம் வாங்கும் யோகம்
மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால்
சரியாகிவிடும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். இதுநாள்வரை இருந்து வந்த சிறு உடல் உபாதைகள் மறையும். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை ஆகியவை மறைந்து கணவன் மனைவிக்கு
இடையே நல்லுறவு ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இராஜ தந்திரத்தால் அரசியலில்
நல்ல பதவிகள் வந்து சேரும் இராஜயோகம் உண்டாகும். அரசாங்கத்தின் மூலமாக
எதிர்பார்த்த அனுகூலங்கள் அனைத்தும் தாமதம் இன்றிக் கிடைக்கும். புண்ணிய காரிய
ஈடுபாட்டினால் தானதருமங்கள் செய்து மங்காத புகழ் எய்துவீர்கள். கர்ம
பாவத்தில் குரு இருந்த காலத்தில் ஈசன்
பிரம்மனின் தலையைக் கொய்த தோஷத்திற்காக, கிள்ளப்பட்ட அவனின் தலை ஓட்டிலேயே அவர் பிச்சை எடுத்துத் திரிந்தார்
என்பது பழம் பாடல். அப்படியிருக்க
நாம் எம்மாத்திரம். அனைத்துக் காரியங்களுக்கும் பிறர் தயவையே நாட வேண்டியிருக்கும். சிலருக்கு
இதுநாள்வரை பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடவேண்டிய சூழல் எழலாம். சிலருக்கு இதுநாள் வரை வகித்து வந்த பதவி பறி போகலாம். பதவி உயர்வு கிடைக்க தடை, தாமதங்கள் கூட ஏற்படலாம். மனக் கவலைகளால் உடல் ஆரோக்கியம் கெட்டு, பல வியாதிகளுக்கு வழி வகுக்கலாம். ஆயினும் பணவரவுகள் ஓரளவு வந்து கொண்டுதான் இருக்கும். எவரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் விருப்பங்கள் எதுவும் நிறைவேறாது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு
என ஊரைவிட்டுப் போகவேண்டிய சூழ்நிலை எழலாம்.
சனி தரும் பலன்கள்
சனி பகவான் இராசி மண்டலத்தின் 12 வது இராசியும்,. குருவினை
ஆட்சி வீடாகக் கொண்ட கால புருஷனுக்கு மோட்ச
வீடான மீனத்துக்கு 11, 12 க்குரிய சனி 10 வீட்டின் பலனை தருகிறார். இதன் காரணமாக
வலிமையும் வளமும் கூடும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களின்றி
நிம்மதியாக வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும், கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதிலும்
தடைகள் உண்டாகும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்துப் போவது
நல்லது. அரசுப் பணியாளர்கள் சற்று நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உயர் அதிகாரிகளின்
ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கு இடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகும். சிலருக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, வீண்
விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொருளாதாரம்
சீராக இருக்காது. சிலருக்கு
புத்திரர்களால் தொல்லை ஏற்படும். அவர்கள் நீங்கள்
சொன்ன பேச்சை காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். கட்டுப்படவும் மாட்டார்கள். புத்தி கலக்கம் ஏற்படலாம்.
எல்லாக்
காரியங்களையும், முறையாகச் செய்யாமல், தலைகீழாகச் செய்வார்கள். தாய், தந்தையரின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது உங்கள் கடமையாகும். வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. ஒழுக்கம் கெட்ட
பெண்களிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது.
ஓரளவு தன வருமானம்
இருக்கும். மேலதிகாரிகளின் தேவையற்ற இடையூறுகளால் மனதில் நிம்மதி குறையும்.
அதிகாரிகளின் கெடுபிடி அல்லல் தரும். தொழிலில் கூட்டாளிகளின் வஞ்சனையால் ஏமாற்றி,
தொழில் முடக்கம் ஏற்படும். எந்தவொரு விஷயத்துக்கும் டென்ஷன் ஆகாமல், அதிகக்
கடினமான பணிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றில்லாமல்
அனுபவபூர்வமாக உணர்ந்து செயல்படுவதே சிறப்பாகும். தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி
புண்ணிய ஸ்தலங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக சிறுசிறு வீண்
விரயங்கள் எதிர்கொள்ள நேரும். பங்குச் சந்தை விவகாரங்களில் அதிக இலாபம் கிடைக்கும்
என்று நம்பி அதில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம். சில அரசியல் பிரமுகர்களுக்கு
மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்து எதிர்ப்பு வலுக்கும். பொதுவாக, ஜாதகத்தில்
நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை
கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
இராகு- கேது தரும் பலன்கள்.
சுக பாவத்தில் இராகுவும், கர்ம பாவத்தில்
கேதுவும் இருப்பது சாதகாமான அமைப்பு அல்ல. இதன் காரணமாக சுக பாவ இராகுவால் மனைவி
வழியிலும், சகோதர வழியிலும் வெட்டிச் செலவுகளும், தாயாரின் உடல் நிலை பாதிப்பு, வாகன விபத்துகள் அல்லது வாகனத்தில்
ஏற்படும் பழுதுகளைச் சீர் செய்ய வேண்டிய
வகையில் பராமரிப்புச் செலவுகள், கால்நடைகளுக்குச் சேதாரங்கள் ஆகியவைகளும்
ஏற்படலாம். வீண் அலைச்சல்களைத் தவிர்க்கவும். சொத்து பரிவர்த்தனைகளின் போது
எச்சரிக்கையுடன் இருக்கவும். உயர்கல்வி பயில்பவர்கள் வேண்டாத விஷயங்களில் மூக்கை
நுழைக்காமல் எச்சரிக்கையாக இருந்தால் தேறலாம். மருத்துவரின் கவனக் குறைவால்
வேண்டாத பிரச்சனைகள் எழலாம். நண்பர்களும் பகைவராவர். யாத்திரையின் போது எச்சரிக்கை
தேவை. இத்தகைய பிரச்சனைகளால் தூக்கம் குறையும் கவலைகள் அதிகரிக்கும். வீடு, நிலம்,
வாகனம் போன்றவற்றை வாங்கும் முன் தரகர்களை நம்பாமல் அவற்றின் தஸ்தாவேஜூகளை அலசி,
ஆராய்ந்து முடித்துக் கொள்வது நல்லது.
கர்ம
பாவக் கேதுவால் நற்பலன்கள் உண்டாகும்.
பணவரவும், இலாபமும் அதிகம் இருந்த போதும், சூதாட்டம் போன்ற முறையற்ற வழிகளில்
ஈடுபடுவதனால் அவற்றை இழக்க நேரும். இதுவரை இழுபறியாய் இருந்த காரியங்கள் வெற்றி
அடையும். புதிய முன்னேற்றத்துக்கான பாதைகள் வகுக்கப்படும். தொழிலில் இலாபமும்,
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் உத்தியோக உயர்வும் ஏற்படும்.
சிலர் போலித் துறவியாகும் சூழ்நிலை உருவாகலாம். இராகுவை விட
கேது இவ்விடத்தில் அசுப பலனைக் குறைவாகவே தருவார் என்பதே ஓர் ஆறுதல். வேள்வி,
யாகாதி காரியங்கள், புண்ணயத்தல யாத்திரைகள் ஆகியவை ஏற்படும். சிலருக்கு
மடாதிபதிகள், மதத் தலைமை ஏற்று நடத்துதல் போன்ற முக்கிய பொறுப்புகள் தேடி வரும்.
பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும்.
கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.
பரிகாரம் – சனி பரிகாரம் - திருநள்ளாறு
திருத்தலம் சென்று மந்தனை மனதார வேண்டி வந்தால் ஓரளவு துன்பங்கள் குறையும். ஆயினும் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க எடுத்ததுதானே இந்த மனிதப்பிறவி.
வெள்ளிக் கிழமையன்று இராகு காலத்தில் நாகாபரண பூஷிதனான சிவ பெருமானைத் தொழுது, நவக்கிரக
சந்நிதியில் உள்ள இராகு பகவானுக்கு மந்தாரை மலரால் பூஜித்து, கருப்பவண்ண ஆடை சாத்தி
வேண்டி வழிபட வேதனைகளும், சோதனைகளும் பஞ்சாய் பறக்கும்.