Search This Blog

Thursday, 18 April 2019

விஹாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020


ஓம் ஶ்ரீ ராகவேந்திராய நமஹ.
விஹாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
2019 – 2020
விஹாரி வருட வெண்பா
பார விகாரிதனிற் பாரணநீ ருங்குறையும்
      மாரியில்லை வேளாண்மை மத்திபமாம்-சோரர்
                     பயமதிக முண்டாம் பழையோர்கள் சம்பாத்
                     தியவுடைமை விற்றுண்பார் தேர்.

         விஹாரி வருடத்தில் நாடெங்கும் நல்ல மழை பெய்யாது, தண்ணீர் பஞ்சம் ஏற்படும். வயல்களில் விளைச்சல்கள் மத்திமமாகும்.  மக்களுக்கு திருடர் பயம் அதிகம் உண்டகும். பூர்வீக சொத்துகளை விற்று ஜீவனம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும்.
   எனவே 12 இராசி அன்பர்களுக்கும் இந்த வருடத்தில் நல்லதே நடக்க, “திருவருள் சக்தி” யின் “விஹாரி வருட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பல.

         விஹாரி வருடத்தில் குறைவான அளவே மழை பொழிந்து, நாட்டு மக்கள் சுமாரான விளைச்சலை அடைவார்கள். நாட்டின், மக்களின் பொருளாதார நிலை ஓரளவு உயரும். பொருட்களின் விலை குறைவாகவே இருக்கும். மலர்கள் குறைவாகவே விளையும். மக்களுக்குத் தேவையான அனைத்து முக்கியப் பொருட்களும் ஓரளவே  கிடைக்கும். விலைவாசியும் ஏற்ற இறக்கமாக இருக்கும்.    மக்களிடம் பக்தி மார்க்க ஈடுபாடு அதிகரிக்கும். நாட்டில் லஞ்ச லாவண்யம் பெருகும்.  கலைஞர்களுக்கு முன்னேற்றமான வருடம் ஆகும். திரைப்பட இணைத் தொழில்கள் ஏற்றமும், சிறப்பும் பெறும். துவர்பான பயிர்கள், புன்சைப் பயிர்களும்  செழிக்கும்.  கிழங்கு வகைகள், கருப்பு தானியங்கள் விளைச்சல் அதிகரிக்கும். நாட்டின் சில பகுதிகளில் வறட்சி நிலவும். தீ விபத்துக்கள் அதிகரிக்கும். கல்வித் துறையில் முன்னேற்றங்களும், கல்வியாளர்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும்.மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் குறைவின்றிக் கிடைக்கும். நாட்டின் தென் பகுதிகளில் மிகுந்த காற்று வீசி பாதிப்புகள் வரலாம். மக்களின் ஆரோக்கியம் மேம்பாடு அடையும். அரசியல்வாதிகளுக்கு ஒருவித பயவுணர்வும், பெண்களுக்குத் தீமைகளும் ஏற்படும். வெள்ளி விலை குறையும். அரசியல் குழப்பங்கள் நிலவும்.  வெப்ப சம்பந்தமான நோய்கள் அதிகரிக்கும்.

கிரக நிலைகள்.

புத
02.29
சூரி
00.00
செவ்
15.09
லக்//
14.40
ராகு.27.54
சுக்
28.08
14/4/2019
சித்திரை – 1

காலை-10-55
தமிழ்நாடு
சந்
18.36


கே27.54
சனி26.11
கு(வ)00.11








சூரி,
குரு(வ)
செவ்
ராகு
சுக்

புத,சுக்
சூரி
செவ்
லக்//
ராகு
லக்//


நவாம்சம்
புத



பாவம்
சந்




கேது
சந்
சனி


குரு(வ)
கேது,
சனி




தமிழ் வருடம் – விஹாரி
தமிழ் தேதி – சித்திரை – 1
கிழமை – ஞாயிறு
ஆங்கிலதேதி = 14-04-2019
நேரம் – காலை - 10 – 55
திதி – சுக்ல தசமி.
கரணம் – தைதுலை
நாம யோகம் – சூலம்
நட்சத்திரம் – ஆயில்யம் – 1
இராசி – கடகம்
திசை – புதன் மகா தசை.
இருப்பு – 14 வ 6 மா 7 நாள்
இடம் – சென்னை, தமிழ்நாடு.
அட்சாம்சம் – 13 வ - 04 – 00
ரேகாம்சம் – 80 கி – 17 – 00
உதய நாழிகை – 12 நா – 17 வி
உதய லக்னம் – மிதுனம்
நவாம்ச லக்னம் – கும்பம்.

கிரகம்
பாகை/கலை
விகலை
நட்சத்திர
பாதம்
இராசி
சாரம்
நிலை
சூரியன்
00.00.02
அஸ்வினி-1
மேஷம்
கேது
உச்சம்
சந்திரன்
18.36.34
ஆயில்யம்-1
கடகம்
புதன்
சுயவீடு
செவ்வாய்
15.09.06
ரோகிணி-2
ரிஷபம்
சந்திரன்
நட்பு
புதன்
02.29.07
பூரட்டாதி-4
கும்பம்
குரு
நீசம்
குரு(வ)
00.11.14
மூலம்-1
தனுசு
கேது
மூலதிரிகோணம்
சுக்ரன்
28.08.40
பூரட்டாதி-3
கும்பம்
குரு
அதிநட்பு
சனி
26.11.15
பூராடம்-4
தனுசு
சுக்
சமம்
இராகு
  27.54.05
புனர்பூசம்-3
மிதுனம்
குரு
மூலதிரிகோணம்
கேது
27.54.05
உத்ராடம்-1
தனுசு
சூரியன்
மூலதிரிகோணம்
இலக்னம்
14.40.44
திருவாதிரை-3





வருஷ கிரக மாற்றங்கள்.( திருக்கணிதப்படி)
குருப் பெயர்ச்சி --- சித்திரை ௴ 12 ஆம் நாள், 26–4–2019 அன்று அதிகாலை 04.43 மணிக்கு, தனுசு இராசியிலிருந்து, விருச்சிக இராசிக்குள் பிரவேசிக்கிறார்.

ஐப்பசி மாதம் – 18  ஆம் நாள்- 04-11-2019 பகல் 01-09 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

பங்குனி மாதம் -15 ஆம் நாள் 23-03-2020 அதிகாலை 03-30 மணிக்கு தனுசு இராசியில் இருந்து மகர இராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
சனிப் பெயர்ச்சி தை ௴ 9 ஆம் நாள்,  23 – 01 – 2020 அன்று காலை 06 - 47 மணிக்கு தனுசு இராசியினின்று, மகர இராசிக்குள் பிரவேசிக்கிறார்.

மேஷ இராசி முதல் தொடரும்.

No comments:

Post a Comment