Search This Blog

Thursday, 23 May 2019






நரேந்திர மோடியும் ..... நாற்காலியும் !

கிடைத்தது

   
         தற்போதைய சூடான விவாதத்திற்குரிய தலைப்பு வரும் பாராளுமன்ற தேர்தலில் யார் வென்று பிரதமர் ஆவார் ? - என்பதே யாகும். அதிலும் மக்களின் துருவ நட்சத்திரம் இளைஞர்களின் இணையற்ற தலைவன் திரு. நரேந்திர தாமோதர மோடி அவர்களின் ஜாதக நிலைப்படி எதிர்காலம் எப்படி உள்ளது என்பதை இக் கட்டுரையின் மூலம் அலசுவோம்.    
      பாராளுமன்றத் தேர்தலுக்கான முக்கிய வேட்பாளாராக, மக்களாலும் அரசியல்வாதிகளாலும் இருவரின் பெயர்கள அழுத்தமாக உச்சரிக்கப்படுகின்றன. பிரதம மந்திரிக்கான இந்த இசை நாற்காலியில் அமரப்பொவது யார் ? – என்ற கேள்வியே, இன்றைய சராசரி இந்தியனின் மனதிலும் தலையாய கேள்வியாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக மோடியே முன்னிலைப்படுத்தப்படுகிறார். காங்கிரஸ பக்கம் ராகுல் ஆவார்.
   

         உலகப் புகழ் பெற்றவர், வாழ்க்கையில் சாதாரண நிலையில் இருந்து, எவரும் எட்ட முடியாத உயரத்திற்கு உயர முடியும் என்பதற்கு நமக்கு முன்னுதாராணமாகத் திகழும் நரேந்திர தாமோதர் தாஸ் மோதீ 2014 மே, 26 ஆம் நாள் முதல் இந்தியாவின்  14 வது பிரதம மந்திரி ஆனார். அவர் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் ஆவார்.  வாரணாசி தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு. மோடி அவர்கள் கடந்து வந்த பாதையை உற்று நோக்குவோம்.
       அவர் அப்போதைய பாம்பே மாநிலமும், தற்போதைய குஜராத் மாநிலத்தில் வாத்நகர் அருகிலுள்ள ஜீனாகர் – எனும் சிற்றூரில், 1950 ஆண்டு, செப்டம்பர் திங்கள் 17 ஆம் நாள், காலை 9-35 மணிக்கு, திரு தாமோதர தாஸ் மூல்சந்த் மற்றும் திருமதி ஹீராபென் தம்பதிகளுக்குப் பிறந்த 6 குழந்தைகளில் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.  மத்தியதர குடும்பத்தில் பிறந்த அவர், தனது ஆரம்பக் கல்வியை வாத்நகர் பள்ளியில் முடித்தார். பின்னர், தனது சகோதரருடன் தேநீர் கடையை நடத்திவந்தார். அதன் பிறகு முழுநேர ‘ராஷட்ரீய சுயம் சேவக் சங்’  எனும் ஆர். எஸ். எஸ் ஸின் முழுநேர பிரச்சார பீரங்கியாகும் வரை, குஜராத் மாநில போக்குவரத்துத் துறையின் சிற்றுண்டி விடுதியில் பணியாற்றினார். அரசியல் விஞ்ஞான பாடத்தில் உழர்கல்வி கற்றார். 
    
       தனது திறமையாலும், நேர்மையாலும், முழு முயற்சியாலும், கடின உழைப்பாலும், குஜராத் பாரதீய ஜனதா கட்சியின் பொறுப்பாளரானார். பின்னர் 1995 இல் ஹரியானா மற்றும் ஹிமாசலப்பிரதேசம் ஆகியவற்றின் பொறுப்பாளரானார். 1998 இல் பாஜக தேசிய செயலாளர் ஆகி, 2001 இல் குஜராத்தின் முதல்வராகவும் படிப்படியாக உயர்ந்தார். குஜராத்தையும் நாட்டின் முன்னோடி மாநிலமாக்கினார். அதன் காரணமாக நான்கு முறை குஜராத்தின் முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியதற்கு மக்கள் தந்த பரிசே 2014 இல் பிரதம மந்திரி பதவி ஆகும். தற்போது நரேந்திர மோடியின் ஜாதகம் என்ன சொல்கிறது ?
    
   

இராகு
குரு(வ)
     இராசிp

17  09 -- 1950
கேது
லக்//



நவாம்சம்
செவ்
காலை 9 - 35
வாத்நகர்
குஜராத்.;.
சனி
சுக்
புத(வ)
சூரி
இராகு
சுக்
செவ்.
சந்;
லக்//;
புத(வ)சூரி
கேது
சனி
குரு(வ)
சந்;

    


       மக்களுக்குத் தேவையான கடமைகளைச் செய்யும். அவர்களின் துக்கங்களிலும், துன்பங்களிலும், வலிகளிலிலும் பங்கேற்று அவர்களுக்கு உண்ண உணவு, இருக்க இடம் என மக்களின் தேவையறிந்து செய்யும், மன்னன் போல் பணியாற்றி, அவர்களின் அன்பையும், ஆதரவையும், ஆசிர்வாதத்தையும் பெற்ற திரு. மோடி அவர்களின் ஜாதகம் இது. பெருவாரியான ஜோதிடர்களின் கருத்துப்படி துலா இலக்கினம், விருச்சிக இராசியில் பிறந்துள்ளார்.
;

        ஜன்ம இலக்னம் துலாம், விருச்சிக இராசி, அனுஷ நட்சத்திரம் ஆகும். பொதுவாக அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றியாளர்கள். புகழ், மதிப்பு, மரியாதை அடையப் பிறந்தவர்கள். வெளிநாட்டுப் பயணங்களை மேற் கொள்ளுதல், உலகப் புகழ் பெறுதல், வெற்றியடைதல் இவையனைத்தும் அளிக்கவல்லது இந்த அனுஷ நட்சத்திரம். ஒரு பெரிய மக்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களுக்கு சிறந்த தலைமை ஏற்கும் தகுதியையும் அளிக்கவல்லது. அதேபோல், பாதுகாக்கப்பட்டவர், இரகசியங்கள் நிறைந்தவர், கலகம் அல்லது எதிர்ப்பு தெரிவிப்பவர், சுலபமாய் பாதிக்கப்படுகிற, இடமளிக்கிற, நுட்ப உணர்ச்சியுள்ள, உணர்ச்சிமிக்க நபராகவும், பிறரால் தவறான வழிகாட்டுதல்கள் ஆலோசனைகளைப் பெறுபவராகவும், மற்றவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவராகவும் இருப்பார்.


         இலக்னாதிபதி சுக்கிரன், யோககாரகனான சனியுடன் இணைந்து இலாப பாவத்தில் இருப்பது, சந்தேகமின்றி ஓர் அனுகூல நிலையாகும். குருவின் பார்வை இலக்னத்தின் மீதும், சுக்கிரன் மற்றும் சனி மீதும் விழுகிறது. 12 இல் உள்ள உச்ச, அஸ்தமன, வக்ர புதன், கேது மற்றும், சூரியனுடன் இணைந்திருக்கிறார். புதன் அஸ்மனத்தால் பலமிழந்தவராக இருக்கிறார். இந்த இணைவுகள் அனைத்துமே அவரது வாழ்க்கையில் குழந்தைப் பருவம், வாலிபம் ஆகியவற்றில் பல கஷ்டங்களை அனுபவித்து  இன்றைய உயர்வான நிலைக்கு வர ஒத்துழைத்து உள்ளதென்றால் மிகையாகாது. இவர் இடைவிடாது ஊண் உறக்கம் இன்றி உழைக்கும் கடின உழைப்பாளியானார். சுக்கிரன், சனி இணைவு தாமதத் திருமணத்திற்கும், மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கைக்கும் காரணமானது. குருவின் பலம் மிக்க நிலையும், சனி, புதன் ஆகியோரின் பலம் குறைந்த நிலையும், பிறந்த போது நடந்த சனி திசையும் அவரை ஏழைக் குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களுக்குப் பிறகு நாட்டின் பிரதம மந்திரியாக அமர்த்தியுள்ளது.

              
       இது செவ்வாயின் ஆட்சி வீடு, சந்திரா இலக்ன கேந்திரத்தில் ஆட்சி பெறும் செவ்வாய் பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைத் தருகிறார். அத்ன் காரணமாக சந்திரனும் நீச பங்கம் பெறுகிறார். சந்திரனுடன் பரம நட்புடன் திகழ்கிறார். இதன் காரணமாக கடவுளின் கருணையும், சரித்திரத்தின் கருணையும், தாய் மற்றும் தாய் நாட்டின் கருணையும் கிடைத்தது. ஆம் அதிபதி சந்திர கேந்திரத்தில் இருப்பது முதல் இராஜ யோகத்தையும், இராஜ நீதிக்கு அதிபதிகளான 3 மற்றும் 6 க்கு உரிய வக்கிர குரு, திரிகோணத்தில் அமர்ந்து இலக்ன கேந்திரத்தைப் பார்க்கிறார். அரசியலில் வெற்றி பெற, 3 மற்றும் 6 ஆம் இடத்தின் பலம் மிகவும் முக்கியமானதாகும். அரசியலில், ஓர் அரசியல்வாதி பல எதிரிகளையும், எதிர்ப்புகளையும் வென்று முன்னுக்கு வர வேண்டியதிருக்கும்.
       திரு. மோதீயின் ஜாதகத்தில் 3 மற்றும் 6 ஆம் இடத்து அதிபதிகள் நல்ல நிலையில் அமர்ந்து, யோககாரகன் சனி மற்றும் இணைந்துள்ள இலக்னாதிபதி சுக்கிரனையும் நற்பார்வை புரிகிறார். இந்த நிலை எதிர்ப்புகளையும் மீறி அவருக்கு ஏற்றம் தந்தது.இலக்னாதிபதி சுக்கிரன் சுயசாரம் பெற்று வர்கோத்தமும் பெற்று, உபஜெய ஸ்தானத்தில் உள்ளார். இலக்னாதிபதி, மத்திய தரக் குடும்பத்தில் உதித்த திரு. மோடியை, மேலும் மேலும் மலையென உயர வைத்தது. சனியால் பார்க்கப்படுவது இரண்டாவது இராஜயோகமாகும். சனியும், குருவும் பரஸ்பர பார்வை புரிகின்றனர். இப் பார்வையால் தேசத்தின் குடும்பமான மக்களோடு மக்களாக இணைந்து, பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வைக்கிறது. 5 ஆம் இடம்  மக்களின் நம்பிக்கை, பிரியம் ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், இந்த நிலை ஜாதகரை சாமர்த்தியசாலி ஆக்கியது. இந்த இணைவுகளே அவரை அரசியலுக்கும் இழுத்து வந்தது.

   
    மங்களன் எனும் 2 மற்றும் 7 க்கு அதிபதியான செவ்வாயும், தனபாவத்தில் நீசமான கர்ம பாவாதிபதி சந்திரனும் இணைந்து சந்திர மங்கள யோகத்தைத் தருகிறார்கள். கிரக சாம்ராஜ்யத்தின் தளபதி செவ்வாய் வீரமான மற்றும் விவேகமான பேச்சுத் திறனையும், ஜலத்ததுவ சந்திரன் ஜலப் பிரவாகமாக, மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சுத் திறனையும் அளிக்கின்றார். இரண்டு மற்றும் 7 ஆம் அதிபதியுமான செவ்வாய் தனபாவத்தில் நீசமான கர்ம பாவாதிபதி சந்திரனுடன் அமர்வு. இந்த செவ்வாயின் நிலை அவருக்கு தைரியத்தையும், எந்த ஒரு முடிவையும் தயங்காமல், துணிந்து எடுக்கும் ஆற்றலையும் வழங்குகிறது. அதற்குத் தேவையான புத்தி கூர்மை, பகுத்தறியும் தன்மை அளித்தாலும், மணவாழ்க்கையைப் பொறுத்தவரை அனுகூலமான நிலையல்ல.

        இலக்னாதிபதி மற்றும் 8 ஆம் அதிபதி சுக்கிரன், இலாப பாவத்தில் இடம் பெற்றுள்ளார். அவருடன் சுக மற்றும் பூர்வ புண்ணிய பாவாதிபதியும் யோக காரகருமான சனி (அஸ்தமனம்) தனது பகை வீட்டில், தனது நண்பரான சுக்கிரனோடு இணைந்து, இலாப பாவத்தில் உள்ளார். இந்த இணைவு ஜாதகருக்கு வாழ்க்கையில் ஒரு சுய கட்டுப்பாட்டை வழங்கியது. நேர்மையானவராகவும், எதையும் வெளிப்படையாகப் பேசுபவராகவும் ஆக்கியது ஆரம்ப காலத்தில் வெற்றிகளைத் தாமதமாகக் கொடுத்தாலும் பின்னர் வெற்றியாளர் ஆவார். இதனால் ஜாதகர் மிகவும் நம்பத் தகுந்தவர். இவரது பொறுப்புணர்வு, ஆழமான வேரைப் போன்று மனதில் பதிந்த்தாய் இருக்கும்.
       பாக்கிய மற்றும் விரயாதிபதி புதன் தன் சுய வீடான 12 ஆம் பாவத்தில் உள்ளார். உச்ச மடைந்து, அஸ்தமனமான, வக்கிரமான புதனோடு, சூரியனும், கேதுவும் இணைவு. உச்ச புதன் ஜாதகருக்கு புத்திசாலித்தனத்தைக் கொடுத்து, தகவல் தொடர்பில் வல்லவராகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும் ஆக்கியது.
         இவரின் ஜாதகத்தில் குடும்ப பாவத்தில் செவ்வாய் மற்றும் நீச சந்திரன் இணைவு. சந்திரன் 10 ஆம் அதிபதி. 10 ஆம் அதிபதி 2 இல் இருப்பது குடும்ப சுகத்தைக் குறைத்து, வேலையிலும் கஷ்டங்களைத் தந்தது.

         இராகு 6 ஆம் வீட்டில் உள்ளார். இது நல்ல நிலையாகும். இதன் காரணமாக எதிரிகளை வெற்றி கண்டார். 6 ஆம் இடத்து மீது புதன், சனியின் பார்வையும் விழுகிறது. இவையெல்லாம், மோதீ அவர்களுக்கு கை கொடுத்து, அரசியிலில், எதிரிகளை வென்று ஏற்றம் பெற்றார்.
         இராகு மற்றும் கேது 6 ஆம் இடத்திலும், 12 ஆம் இடத்திலும் உள்ளனர். 12 இல் கேது இருப்பது மோட்ச நிலையை மற்றும் சன்யாச நிலையை அளிக்கும். நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக வாழ்பவரானார்.

        சுக்கிர திசை மற்றும் குரு புத்தியிலேயே திரு. மோடி அவர்களை தசா புத்தி நாதர்கள் உயர, உயர உச்சிக்கே கொண்டு சென்றார்கள். 2001 இல் சுக்கிர திசை காலத்தில்தான், குஜராத் மானிலத்தின் முதலமைச்சர் பதவியை அலங்கரித்தார். சிலருக்கு, பதவி பெருமை சேர்க்கும். ஆனால், இவர், பதவிக்கே பெருமை சேர்த்தார். அப்போது அவர் தோளில் ஏற்றி வைக்கப்பட்ட ஆட்சி எனும் ஒளி விளக்கு, தொடர்ந்து சூரிய திசையிலும், தற்போதைய சந்திர திசையிலும், மேலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. மேலும் நீசமான சந்திரன் பலம் மிக்க நீசபங்க இராஜயோகத்தைத் தந்ததால், அவருக்கு மக்களின் மனம் எனும் எனும் பல லட்சம் மலர்ச் செண்டுகளைப் பரிசாக அளித்தது. மிகச் சிறந்ததாகக் கருதப்படும் யோகங்களான ருசக யோகம் மற்றும் கஜகேசரியோகம் ஆகியவற்றால் அரசு எனும் கரடு முரடானான பெரும் மலையில் அவரால் ஏற முடிந்தது. இதை நிரூபிக்கும் வகையில் பல இன்னிங்ஸ் ஆடிய பின்னும் முதல் மந்திரி பதவியெனும் கிரிக்கெட் விளையாட்டில் கடைசி வரை வெளிவராத ‘நாட் அவுட் பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தார் திரு மோடி.

      2014 இல் சூரிய திசை மேலும்,மேலும் உயர்வு தந்தது. மேலும், உயர்வு தருவது உறுதி. கிரகங்கள் இராஜா ஆகவேண்டியவரை ஆக்கியே தீரும்.  

    தற்போது நடக்கும் சந்திர திசையானது மேலும் சக்தி மிக்க இராஜ  யோகத்தை அளித்தது. மேலும் அளிக்கவல்லது. புதன் புத்தியானது 2020 ஏப்ரல் வரை உள்ளது. புதன் புத்தியில் மீண்டும் பிரதமர் ஆகும் வாய்ப்புண்டு. அரசால், மக்களால் அங்கீகரிக்கப்படுவார். 27-3-2019 முதல் 21-6-2019 அந்திரத்தில் அதிகார பதவியை, முக்கிய இடத்தை அடைவார். சந்திர திசையில் பதவியில் உள்ளவர்களால் பயம், தூர தேச பயணங்கள், பணிகளில் தோல்விகள், கோபம், பிரியமானவர்களின் இழப்பு, வெற்றி மேல் வெற்றி ஆகியவையும் ஏற்படும்.பணம் சேர்ந்தாலும், புகழ், கௌரவம் குறைய வாய்ப்பும் உண்டு.
   
        
       இதனிடையே, ஒன்று பட்ட மனமுடைய உதிரிக் கட்சிகளின் உத்வேகம் கொண்டு சந்தர்பவாதக் கூட்டணி சகட்டுமேனிக்கு அமைந்துள்ளது. அதன் காரணமாக மோடி ஜீக்கு வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகிறது. தேர்தல் நாளின் கோசார நிலை நிற்கப் போகும் வேட்பாளர்கள், மக்களின் மன நிலை, மற்றும் கிரக நிலைகளே முடிவுகளை தீர்மானிக்கும் என்பதால் அவற்றின் கைகளிலேயே பொறுப்பை ஒப்படைப்போமாக. வாழ்க பாரதம் ! வாழிய பாரத மணித்திருநாடு. வந்தே மாதரம் !

Sunday, 12 May 2019

நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம் - 5அ




நாடியில் கோசார கிரகங்களின் கோலாட்டம் - 5அ



 ஜாதகம் எண் 44 அ & 44. ஆ

குரு


சந், ராகு
சனி, சுக்
உ. ஜா. 44. அ
இராசி



சுரி, செவ்

பு, கேது
லக்///





        ஜனன ஜாதகத்தில் தனுசு இலக்னம். இலக்னத்தில் புதன், கேது உள்ளனர். கோசார ஜாதகத்தில் புதனுக்கு பகை கிரகமான செவ்வாயுடன் சுக்கிரனும், இராகுவும் உள்ளனர். இதன் மூலமாக நாம் அறிவது ஜாதகர் தனது சொத்து விஷயமான பிரச்சனைகளை சந்திக்கிறார் மற்றும் பொருளாதார (கோசார சுக்கிரன் + ஜனன ஜாதக கேது) முன்னேற்றங்களில் தடைகளை அனுபவிக்கிறார் என்பதேயாம். கோசார குருவுக்கு 5 இல் இந்த இணைவு உள்ளதால் வக்ர நிவர்த்தி ஆன பின்னரும், செவ்வாய் தனுசைவிட்டு நகன்ற பின்னரும் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.






கேது

உ. ஜா. 44. ஆ
கோசாரம்

லக்///

சனி, சூரி
புத
 குரு (வ)
ராகு, செவ்
சுக், சந்





         ஜாதகம் 44 அ வில் சுக்கிரன் மற்றும் சனி கும்பத்தில் உள்ளனர். கோசாரப்படி குரு அவர்களைப் பார்க்கும் காலத்தில்  வீட்டில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள், வியாபாரத்தில் முன்னேற்றங்கள் ஆகியவை ஏற்படும். (தொழில் – சனி, சிறப்பான கொண்டாட்டங்கள் – சுக்கிரன்). மேலும், ஜாதகரின் சகோதரிக்கு நன்மைகள் பல ஏற்படும். குரு சிம்மத்திற்கு வரும் போதே அவரின் பார்வை சுக்கிரன், சனி மீது விழும்போதே இந்நிகழ்வுகள் ஏற்படும்.

         ஜாதகர் ஆலோசனைக்கு வந்த நேரத்தில் சிம்மத்தில் வக்கிர குரு இருந்தபோது அனுகூலமான பலன்கள் அமைந்தது. ஆனால், குரு நேர்கதி அடைந்த போது ஜாதகர் நடுநிலையான நல் அதிர்ஷ்டத்தை அனுபவித்தார்.

         ஜனன ஜாதகத்தில் சனியின் பரம எதிரிகள் மகரத்தில் இருப்பதாலும், கோசாரத்தில் சனியும் அங்கே வந்ததாலும் ஜாதகருக்கு ஓரளவு அதிர்ஷ்டமே ஏற்பட்டது. அதன் காரணமாக அவருக்கு வியாபாரத்தில் தடைகளும், தேவையற்ற எதிர்ப்புகளும், அரசு தலையீடுகளும் ஏற்பட்டது. ஜனன ஜாதகத்தில் தந்தைக் காரகன் சூரியன் மீது கோசார சனி வருங்காலம் ஜாதகரின் தந்தை மிகுந்த கஷ்டங்களை அனுபவிப்பார். நவகிரக சாந்தி, ஹோமம் ஆகியற்றைச் செய்தால் ஓரளவு கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். இன்னும் ஒரு வருடத்தில் கோசார குரு கன்னிக்கு மாறும் போது குருவின் நேர்கதியில் பார்வை பெற்று ஜாதகர் நன்மைகளை அடைவார்.

ஜாதகம் 45 அ (இராசி) & 45 ஆ (கோசாரம்)

சூரி, புத
சுக்


குரு, ராகு
லக்///, சந்

உ. ஜா. 45. அ
இராசி




 செவ்

கேது




         மற்றுமொரு ஜாதகியின் ஜனன ஜாதகத்தையும், அவர் ஆலோசனைக்கு வந்த நேரத்தின் கோசார ஜாதகத்தையும் அலசுவோம். (45.அ & ஆ). இந்த ஜாதகியின் ஜாதகத்தில் செவ்வாயின் சிம்ம இருப்பு அவர் ஒரு முரட்டுப் பெண் என்பதைக் காட்டுகிறது. அதுவும் கோசார குரு வரும் போது அவர் தான் தான் எல்லாம் என்ற தோரணையில் இருப்பதோடு, தான் வைத்ததுதான் சட்டம் என்ற நினைவில் ஆட்டம் போடுவார்.  ஜாதக சந்திரனோடு கோசார கேது கூடும் போது அவர் மன இறுக்கத்தையும், அமைதியின்மையையும், உணர்ச்சி மிக்கவராகவும் இருப்பார். அவருடைய சந்தோஷத்திற்கு தடையும், இடையூறுகளும் ஏற்படும்.





கேது

உ. ஜா. 45. ஆ
கோசாரம்

லக்///

சனி, சூரி
புத
 குரு (வ)
ராகு, செவ்
சுக், சந்





          இதே கோசார நிலையில் மற்றுமொரு ஜாதகமும் வந்தது. அது 46 இல் கொடுக்கப்பட்டுள்ளது.

சந், கேது





உ. ஜா. 46
இராசி

புத

லக்///
சூரி, சுக்,
 செவ்
சனி
குரு

ராகு


         கோசார ஜாதகத்தில் உள்ள இராகு, செவ், சுக், சந்திரன் ஆகியோர் ஜனன ஜாதக சனியைத் தொடும் போது சுக்கிரன் + சந்திரன் + சனி இணைவு ஜாதகருக்குப் பண இழப்பை ஏற்படுத்துவதோடு வீடு, சோத்து இழப்பையும் குறிகாட்டுகிறது. அத்துடன் ஜாதகருக்கு கடன்களும் மொத்தமாகச் சேர்ந்து தொல்லை தரும். மேலும், கோசார சிம்ம குரு ஜனன ஜாதக சூரியன், சுக்கிரன், செவ்வாயைத் தொடும் போது குடும்பத்தில் பொருளாதார கஷ்டங்கள் தலைதூக்கும். ஆனல், குருவின் கருணையால் கூடுதலான நன்மைகளும் கிடைக்கும். 

ஜாதகம் 47 அ & ஆ

         கஷ்யப நாடி விதிகளின்படி கீழ்கண்ட ஜாதகத்தின் பலனைக் காண்போமா ? ஜஸதகர் சிம்ம இலக்னத்தில் பிறந்துள்ளார். மீனத்தில் குரு இருப்பதால் இவர் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்துள்ளார். தந்தை காரகன் மற்றும் இலக்னாதிபதி சூரியன் 2, 11 க்கு உரிய புதனின் வீடான, மிதுனத்தில் 6 மற்றும் 7 ஆம் பாவத்துக்கு உரிய, தன் பகைவன் சனியுடன் அமர்ந்துள்ளார். இது ஜாதகரின் தந்தை பல இன்னல்களுக்கு ஆளாகி வாழ்க்கையில் முன்னுக்கு வந்ததைக் காட்டுகிறது.  

குரு

செவ்
கேது, சந்
புத
சனி, சூரி

உ. ஜா. 47 அ
இராசி




சுக், லக்///

ராகு



          தாய் காரகனும், 12 ஆம் அதிபதியும் ஆன சந்திரன், கேது மற்றும் 2, 11 ஆம் அதிபதி புதனுடனும் இணைந்துள்ளார். மனம், தாய்க்கு உரிய சந்திரன் + புத்திக்கு அதிபதி புதன் + மோட்சத்தை, விடுதலையைக் குறிகாட்டும் கேது ஆகியோரின் இணைவு தாயார் புத்திசாலி, அதிகம் கற்றவர் என்பதையும், அவருக்கு உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ளும் அமானுஷ்ய சக்தி இருப்பதையும் காட்டுகிறது. 5, 8 க்கு உரிய குரு தன ஆட்சி வீட்டிலும், தனக்கு 2 இல் 4, 9 க்கு உரிய செவ்வாய் தனது ஆட்சி வீட்டிலும் அமர்ந்திருப்பது, அவர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பதட்டம் அடைபவராகவும், எந்த முடிவையும் அவசரப்பட்டு, அஜாக்கிரதையுடன் எடுப்பதையும் காட்டுகிறது. இதன் காரணமாக அவருக்கு ஏகப்பட்ட எதிரிகள் உருவாகி, மதிப்புக் குறைந்து அதன் காரணமாக பல இன்னல்களுக்கு ஆளானார். மேலும், 2, 11 க்கு உரிய புதன் 12 ஆம் அதிபதி சந்திரன் + பகைவன் கேதுவுடன் இணைந்து உள்ளதால், படிக்கும் காலத்திலேயே கெட்ட பெயருக்கு ஆளானதோடு, பல பெண்களின் வலையில், பொறியில் சிக்கிக் கொண்டார்.





கேது
சந்

உ. ஜா. 47.ஆ
கோசாரம்

குரு

சூரி, சனி

ராகு , சுக்
செவ்





         எனவே, படிப்பைத்தரும் புதன், மனோகாரகன் சந்திரன் இணைவு திருப்பிகரமானதாக இல்லை. செவ்வாய்க்கு நட்பும், புதனுக்கு  பகையுமாக கேது உள்ளதால், ஜாதகர் கடந்து வந்த கல்விப் பாதை இடையூறுகளும், தடைகளும் மிக்க கரடுமுரடான பாதையாக ஆனது. புதன், கேது இணைவு மோசமான பெண்ணின் வலையில் விழவைத்து, பழி, குற்றத்துக்குக் காரகனான சந்திரனால் பெயரும் கெட்டது. படிக்கும் காலத்தில் ஒரு பெண்ணிடம்  தவறாக காதல் வயப்பட்டு, அவள் வலையில் விழுந்து, சமூகத்திலும் பழிக்கு ஆளாகி, கெட்ட பெயரும் சம்பாதித்துக் கொண்டார்.

         கோசார நிலை – ஜனன ஜாதகத்தில் கர்மகாரகன் சனி சூரியனுடன் உள்ளார். அவர்கள் மேல் மிதுனத்துக்கு கோசார கேது வரும்போது அவர் தந்தையும் ஜாதகரின்  வேலையிலும் கஷ்டங்கள் ஏற்பட்டது. இதன் காரணமாக ஜாதகரும் அவர் தந்தையும் வழக்கை சந்தித்தனர். ஜாதகர் சிறைக்கும் செல்ல வேண்டியதாயிற்று. பிராஜபதி வருடம் முதல் ஆங்கிரச வருடம் வரை கேது ரிஷபம் மற்றும் மிதுனத்தில் நகர்ந்து கொண்டிருந்த போது ஜாதகருக்கு 17 வயது முதல் 19 வயது வரையான காலமாக இருந்தது. அது சமயத்தில் ஜாதகருக்கு இத்தகைய இன்னல்கள் ஏற்பட்டது.

        கேது மிதுனத்தைக் கடந்து ரிஷபத்தில் ஜனன ஜாதக சந்திரன், புதன் மீது வந்த நாள் முதல் மேஷத்திற்கு நகரும் காலம் வரை ஜாதகருக்கு இப் பிரச்சனைகள் தொடர்ந்து கோண்டேயிருக்கும். மேலும் ஜனன ஜாதகத்தில் சிம்மத்திலுள்ள சுக்கிரன் தனக்கு 9 ஆம் இடமான மேஷத்தில் செவ்வாயைக் கொண்டுள்ளது. கோசாரத்தில் செவ்வாய் தனுசுவில் உள்ளது. ஜனன, கோசார ஜாதகங்களின் படி சுக்கிரன், செவ்வாய் கேது இணைவு ஜாதகருக்கு பெண்ணுடன் வழக்கு விவகாரங்களை ஏற்படுத்தி மன அமைதியைக் கெடுத்தது. ஜனன ஜாதகத்தில் உள்ள சூரியன் + சனியைக் கேது கடக்கும் போது வழக்கு விவகாரங்கள் ஏற்பட்டது. பின்னர் ஜனன ஜாதக புதன் + சந்திரனை கோசார கேது கடந்த போது கல்வியில் தடைகள், பெண்ணால் காதல் வலையில் வீழ்ந்து, வஞ்சிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு அதன் காரணமாக பணத்தையும் இழந்தார்.

        சிஷயனின் கேள்வி – குருவே ! ஜனன ஜாதக சூரியன் + சனி இணைவை கோசார கேது கடக்கும் போதெல்லாம் இப்பலன்கள் திரும்பத் திரும்ப நடக்குமா ?

        குருவின் பதில் – சிஷ்யா ! ஒரு குழந்தைக்கு சிறுவயதில் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது எனத் தெரியாது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும், அதுவே, வளர்ந்த பிறகு தன தவறை உணர்ந்து, சாப்பிடக் கூடிய வஸ்துகளை  மட்டுமே உண்கிறது.   அதேபோல், இளமைத்துடிப்பில் இளைஞர்கள் காதல் வலையில் வீழ்ந்து அல்லலுறுகின்றனர். ஆனால், வயதான பின் இவை அனைத்தும் மாறிவிடும், வயதானவர்கள் வாய்க்கு ருசியான உணவுகளையும், வசீகரமான ஆடைகளை அணிவதையும் விரும்புவர். எனவே, ஜோதிடர் பலன் உரைக்கும் போது வந்திருக்கும் ஜாதகரின் வயதைக் கணக்கில் கொண்டு அதற்குத் தகுந்தபடி  பலன்களை எடுத்துரைக்க வேண்டும்.

         சிஷ்யன் – குருவே ! இதே கிரக இணைவு வேறொரு இராசியில் இருந்து, கிரக சஞ்சாரம் நடந்தாலும் இதே பலன் ஏற்படுமா - என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா ?

         குரு – ஜனன ஜாதகத்தில் சந்திரன் + புதன் + கேது இணைவு மகாலட்சுமியைக் குறிக்கும் சுக்கிரனின் ரிஷப வீட்டில் உள்ளது. இதே இணைவு ஒரு ஆண் ஜாதகத்தில் செவ்வாயின் ஆட்சி வீடான மேஷத்தில் அல்லது விருச்சிகத்தில் இருந்தால் அதன் பலன் கீழ்கண்டவாறு இருக்கும்.

         மேற்சொன்ன இணைவு மேஷத்தில் இருந்து, மீனத்தில் சனி இருப்பதாகக் கொள்வோம். இதனால் ஜாதகர் தன் விவசாயம், தோட்டக்கலை பொன்ற தொழில்களில் பல முன்னேற்றங்களைக் காண்பார். எனவே, இராசிக்கு இராசி பலன்கள் மாறுபாடு அடையும். இரு வயதான ஆணும், பெண்ணும் பொது இடத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் எவரும் அவர்களைத் தவறாக நினைக்கமாட்டார்கள். அதுவே, அவர்கள் இரகசிய இடத்தில் சந்தித்தால் அதை தவறாக நினைக்க அனைத்து விதமான வாய்ப்பும், காரணமும் உண்டல்லவா ? எனவே, இவ்வாறாக கிரக அமர்வுகளை சீர்தூக்கிப் பார்த்தே பலனுக்கான சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். 

ஜாதகம் 49 – அ & ஆ.

         ஜனன ஜாதகத்தில் சனி சிம்மத்தில் உள்ளார். சூரியன் கும்பத்தில் செவ்வாயுடன் உள்ளார். சூரியன், சனி பரிவர்த்தனையில் உள்ளனர்.



இராகு


செவ்,
சூரி

உ. ஜா. 48. அ
இராசி



புத, சுக்
சந்
சனி
குரு

லக்///,
கேது







கேது


உ. ஜா. 48. ஆ
கோசாரம்


சனி
சூரி, சந்
குரு
செவ், சுக்
ராகு




பகை கிரகங்களான சனி, செவ்வாயுடன் நிரந்தர சண்டையில் உள்ளவர் சூரியன் ஆவார்.

        கோசார ஜாதகத்தில் கேள்வி கேட்ட நேரத்தில் குரு சிம்மத்தில் நுழைந்துள்ளார். அவ்விடத்தில்தானே ஜனன ஜாதகத்தில் சனி உள்ளார். இது கீழ்கண்டவாறு பலன்களை அளிக்கிறது.

         ஜனன ஜாதகத்தில் வீட்டைக் குறிப்பது சுக்கிரன். செலவுகளைக் குறிப்பது 4 ஆம் இடத்திலுள்ள சுக்கிரன், சந்திரன் மற்றும் புதன் ஆகும்.  எனவே, கோசார சனி இக் கிரகங்களைக் கடக்கும் போது ஜாதகருக்கு வீடு மற்றும் பூமி சொத்துக்களைப் பொறுத்தவரை ஒர் இழப்பும், ஓர் ஆதாயமும் ஏற்படும். எனவே, ஜாதகர் ஓர் வீட்டை விற்றுவிட்டு இடமாக வாங்கினார். ஜாதகர் ஆலோசனைக்கு வந்த போது கோசாரத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஜனன ஜாதகத்தில் சுக்கிரனும், புதனும் உள்ள இராசியில் நுழைந்துள்ளனர். எனவே, ஜாதகருக்கு அதிக அளவில் பொருட்செலவு ஏற்பட்டதாக பலன் ஏடுக்கப்பட்டது. சுக்கிரனுக்கு, சூரியன், சந்திரன் இருவருமே அளவிட முடியாத இடையூறுகளைத் தருபவர்கள் ஆவர்.

         சிஷயன் – குருவே ! இலாபமும், நட்டமும் எப்படி ஒரே நேரத்தில் வரும் ?

         குரு – சுக்கிரன் – வீட்டுக்கும், பொருளாதாரத்துக்கும் காரகர். கோசார சனி சுக்கிரனைக் கடக்கும் போது வீட்டு இலாபமும், ஜனன ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரனுடன் இணையும்போது வீட்டை விற்பதையும் குறிக்கிறது. சுக்கிரன், சந்திரன் இணைவு பணச் செலவால் இழப்பையும், அதே இராசியில் கோசார சனி புதனைக் கடக்கும் போது பூமி இலாபத்தையும் அளிக்கிறது. ஏனெனில், புதனும், சனியும் நண்பர்கள் ஆவர். எனவே, பகை கிரகமான சந்திரன் அதே இராசியில் இருந்தபோதும் புதனுடன் இணையும் போது இழப்பை ஏற்படுத்தாது. ஜாதகர் வஞ்சித்து, ஏமாற்றி இலாபம் அடைவார்.

         எனவே, ஜனன ஜாதகத்தில் மகரத்தில் சுக்கிரன், புதன், சந்திரன் இருந்து அங்கே கோசார சனி வரும்போது ஜாதகருக்கு தன இலாபமும், இழப்பும் ஏற்படுகிறது.

         ஜனன ஜாதகத்தில் சுக்கிரன், புதன், சந்திரன் 3 கிரக இணைவுள்ள மகர இராசியை  கோசார சனி எப்போதெல்லாம் கடக்கிறாரோ, ஜனன ஜாதகத்தில் அதற்கு அடுத்த இராசியான கும்பத்தில் உள்ள மேற் சொன்ன 3 கிரகங்களுக்கும் பகை கிரகங்களான செவ்வாய் சூரியன் இணைவின் காரணமாக ஜாதகர் பலப்பல கஷ்டங்களுக்குப் பிறகு வீடு, பூமி இலாபத்தை பெறுவார். ஜனன ஜாதகத்தில் தந்தைக் காரகன் சூரியனைக் குறிக்கும் சிம்மத்தில் சனி உள்ளது. அதற்கு 7வது இராசியான கும்பத்தில் பகை கிரகங்களான சூரியன் சனி உள்ளனர்.  இரண்டுமே இரத்த உறவுகள் ஆகும். எனவே, ஜாதகருக்கு உற்ற சொந்தத்திலேயே எதிரிகள் உள்ளனர் என்பதாகிறது. இதன் காரணமாக மகரத்துக்கு மேற் சொன்ன 3 கிரகங்கள் மீது கோசார சனி வரும்போதெல்லாம், அதற்கு அடுத்த இராசியில் சூரியன், செவ்வாய் இருப்பதால் ஜாதகருக்கு வீடு, நிலத்தைப் பெறுவதில் அநேக கஷ்டங்களும், இடையூறுகளும், தடைகளும் ஏற்படும். 

         இதற்கு விமோசனம் எப்போதென்றால், கோசார குரு சிம்மத்தைக் கடக்கும் போது ஜனன ஜாதகத்திலுள்ள சனியைத் தொடும்போது அவர் பார்வையால் இப் பிரச்சனைகளுக்கு விமோசனம் ஏற்படும். ஜாதகர் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றங்களை அடைவார்.

ஜாதகம் 49 அ & ஆ

         மற்றுமொருவரின் ஜாதகம் மற்றும் அவர் வந்த நேரத்துக்கான கோசார ஜாதகம். கேள்வி – குருவே ! ப்ரோஜ்பதி வருடம், மகர மாதம் அமாவசையன்று கடக இலக்ன ஜாதகரைப்பற்றி தெரிந்து கொள்ள ஆவாலாய் உள்ளேன்.

         சிஷ்யா ! – நீ விளக்கச் சொல்லி கேட்பது ஹோரா சாஸ்த்ரா பற்றியதாகும். அதை விவரிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே, மற்றுமொரு நாள் விவரிக்கிறேன்.

         காவேரி நதிக்கரையில் கஷ்யப முனிவர் தனது சிஷ்யர் காந்தீவருக்கு ஹோரா சாஸ்த்ரா பற்றி விளக்கம் அளித்தார். அந்தக் காலத்தில் அவர் அளித்த விளக்கங்கள் அனைத்தும் கஷ்யப நாடி மற்றும் கஷ்யப ஹோரா என்ற நூல்களில் உள்ளன. இந்த விளக்கங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் உள்ளன.

சூரி

புத, சந்
சுக், கேது



உ. ஜா. 49. அ
இராசி
குரு(வ)

செவ்


ராகு, சனி
லக்///







கேது


உ. ஜா. 49. ஆ
கோசாரம்
சந்

சனி
சூரி
குரு
செவ், புத
சுக்




        இதன் மூலமாக ஜோதிடர் வரும் வாடிக்கையாளர் எதன் பொருட்டு வந்திருக்கிறார் என்று உரைப்பதோடு திருப்திகரமான பலனையும் உரைக்கலாம். அத்துடன் அவர் கூட வந்தவருக்கும் பலன் உரைக்க இயலும். இது, ஜோதிடருக்கு உள்ளுணர்வு அவசியமுள்ள மிகச் சிறப்பான கலை ஆகும்.  
        
         ஜாதகம் 49 அ & ஆ வின் விளக்கத்தை இப்போது காண்போம். ஜாதகரின் ஜாதகத்தில் சூரியன் குருவுக்கு பாக்கிய பாவத்தில் உள்ளார். இது அவர் சாதனை மிக்க, புகழ்பெற்ற முன்னோர்களை உடைய. மதிப்பு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை நமக்கு அறிவிக்கிறது.

         தெற்கு இராசியான ரிஷபத்தில், சுக்கிரனும், கேதுவும் உள்ளது. இது அவரது மனைவி அடிக்கடி நோய் உபாதைகளுக்கு ஆளாகி கஷ்டங்களை அனுபவிப்பவர் என்பதைக் குறிகாட்டுகிறது. மற்றுமொரு தெற்கு இராசியான மகரத்தில் செவ்வாய் உள்ளார். இது சுக்கிரன் + கேது + செவ்வாய் இணைவை உருவாக்குகிறது. இதன் மூலமாக அவருக்கு மனைவியுடன் உள்ள கருத்து வேற்றுமைகள், வழக்கு விவகாரங்களையும், அவர் வாழ்வாதாரத்தைத் கஷ்டப்பட்டு தானே தேடிக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் என்பதையும் குறிகாட்டுகிறது.

         புதன் + சந்திரன் இணைவு ஜாதகருக்கு இரவு நேரங்களில் ரகசியமான இடத்தில், வேறுவொரு பெண்ணுடன் ஏற்பட்டிருக்கிற தவறான உறவினைக் குறிகாட்டுகிறது.
   
         மகரத்தில் கோசார சனி வரும்போது, ஜன்ன ஜாதகத்தில் உள்ள புதன் + சந்திரன் இணைவு ஜாதகருக்கு பூர்வ கர்மாவின் பலனாக (சனி) காம (புதன்) எண்ணத்தையும், அதற்கான தற்காலிக மனநிலையையும் (சந்திரன்) தந்தது.

        ஜனன ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் பரிவர்த்தனையில் உள்ளன. எனவே, ஜாதகரின் தொழில் நிலையைப் பொருத்தவரை வழக்கு விவகாரங்களும், பகையும், வேலை இழப்பும் ஏற்படலாம்.

        செவ்வாயும் சனியும் பரிவர்த்தனை காரணமாக இரண்டுமே மகரத்தில் இருப்பதாக பாவிக்கலாம். அதன் காரணமாக அவளுக்கு இரு காதலர்கள் இருப்பதையும், இருவருக்குமே உண்மையற்றவளாக இருப்பதையும் காட்டுகிறது. புதனும், சந்திரனும் நிலையற்ற, அலைமோதுகிற மனதை உடைய வேசியாக ஜாதகியைக் காட்டுகிறது. 

ஜாதகம் 50



செவ்,
சந்
சூரி,
புத(வ)
சுக்,
லக்///
குரு

உ. ஜா. 50.
இராசி
ராகு

சனி,
கேது






          ஜாதகம் எண் 50- ஜாதகர் வேலை இழந்து, குடும்பத்தில் பல இன்னல்களை சந்தித்து வருகிறார். மேஷ இராசி, சந்திரன் கார்த்திகை 1 இல், இலக்னம் மிதுனம் ஆகும். மகரத்தில் கோசார சனி வர ஜாதகர் தனது வேலையை இழந்து, பல கஷ்டங்களை அனுபவித்தார்.

          மிதுனத்தில் உள்ள சுக்கிரனை கோசார (49ஆ) கேது தொடும் போது பொருளாதாரக் கஷ்டங்கள், குடும்பப் பிரச்சனைகள், சண்டைகள், மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுதல் ஆகியவற்றால் ஜாதகருக்கு மன அமைதியின்மையும் ஏற்படும். மேலும் ஜாதகருக்கு வேறுவொரு பெண்ணுடன் தகாத காதல் உறவு இருப்பதின் காரணமாக சமூகத்தில் முகத்தை வெளிக்காட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.

         ஜனன ஜாதகத்தில் மகரத்தில் இருக்கும் சனி, கேதுவை, கோசார சனி கடக்கும் போது ஜாதகர் மீண்டும் வேலையை இழந்தார். சுக்கிரனும், புதனும் பரிவர்த்தனை பெற்றுள்ளனர். எனவே, புதனும் கோசார கேதுவின் பாதிப்புக்கு ஆளாவதால்,   வேறுவொரு பெண்ணுடன் முறையற்ற காதல் நிலவியது. மேலும், கேதுவால் அவளுடனும் கருத்துவேறுபாடுகள் ஏற்படும். கோசார கேதுவால் ஏற்படும் சுக்கிரனின் பாதிப்பு மனையாளுடன் சண்டை, கருத்துவேறுபாடுகளை ஏற்படுத்தும். கோசார கேது சுக்கிரன், புதனுக்கு மத்தியில் நகரும் போது மனைவிக்கும், கள்ளக் காதலிக்கும் இடையே சண்டைகள் வலுக்கும்.

ஜாதகம் - 51  

         மற்றுமொரு ஜாதகத்தைப் பார்ப்போம். (51) ஆண் ஜாதகம். தனுசு இலக்னம். ஜாதகர் தனது 39 வது வயதில் பல கஷ்டங்களை அனுபவித்தார்.







குரு
உ. ஜா. 51.
இராசி
ராகு, செவ்

சனி, சந், கேது


லக்//
சுக்(வ)
சூரி,புத


         வட திசை இராசிகளான கடகம், விருச்சிகத்தில் செவ் + ராகு + சுக் (வ) இணைவு உள்ளது. எனவே, அவரது திருமண விஷயத்தில் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டன. சனி + சந்திரன் + கேது இருக்கும் மகர இராசியைக் கோசார கிரக பாதிப்புகள் தீரும்வரை ஜாதகர் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.

         ஜாதகரின் 30, 31 வது வயதுகளில் சனி மகரத்தைக் கடந்த போது, ஜாதகர் தனது வேலையை இழந்தார். அதன் காரணமாக மனஅமைதி இழந்து, உலக வாழ்க்கையை துறந்துவிடும் எண்ணம் மனதில் மேலோங்கியது. எனவே, கோசார சனி மகரத்தைக் கடந்து கும்பத்தில் உள்ள குருவைத் தொடும் போதே வாழ்க்கையில் புதிய ஒளி வீசும். வாழ்க்கையில் நல்ல நிலைக்கும் வருவார்.