Search This Blog
Monday, 30 September 2019
Sunday, 29 September 2019
குருப் பெயர்ச்சி பலன்கள் - 2019 - 2020 - மகரம், கும்பம், மீனம்.
குருப் பெயர்ச்சி பலன்கள் - 2019 - 2020 - மகரம், கும்பம், மீனம்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட அலைந்து கொண்டே
இருப்பவரும், சாதிக்கும்
வலிமையும், பலன்
கருதி உதவுபவருமான மகரராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப்
பார்ப்போம். பொதுப் பலன்கள்,
பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி
நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.
விரய, மற்றும்
தைரிய பாவத்திற்கு அதிபதியான தேவகுரு, விகாரி வருடம், ஐப்பசி மாதம் 18
ஆம் நாள்,
(திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று பகல் மணி 01 – 09
க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1
ஆம் பாதம் தனுசு இராசிக்கு, விரய பாவத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதன் காரணமாக பிற்பகுதியில் அரசு விரோதம்,
சுப அசுப விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான
காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே
முடிக்க முடியும். எவ்வளவு பொருள் வரவுகள் இருந்தாலும் வரவுக்கு
மிஞ்சியதாகவே செலவுகள் இருக்கும். வீடு அல்லது கட்டிட
சம்பந்தமான செலவுகள் ஏற்படும். சிலருக்கு, வீட்டில் மராமத்து பணிகள் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தொலை தூரப் பயணங்கள் மூலமான
செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தேவையற்ற கடன்கள்
வாங்குவதைத் தவிர்க்கவும். மூத்த சகோதரர்களுக்குப் பல
வழிகளிலும் நல்ல வருமானம் இருக்கும். சுபகாரியச் செலவுகள்
ஏற்படும். சிலருக்குப் பெண்களால் அவமானங்கள் ஏற்படலாம்.
மனதில் தயக்கமும், அச்ச உணர்வும் இருக்கும்.
உழைப்பினால் எந்தவிதப் பயனும் இருக்காது. வேளாவளைக்கு
வாய்க்கு ருசியான உணவு கிடைக்காது. மனைவிக்கு ஆரோக்கியக்
குறைவு ஏற்படலாம். பிறருக்குப் பிணையாகக் கையெழுத்துப்
போட்டு வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். கடன் வாங்கிக்
கடல் வாணிபம் செய்தாலும் நஷ்டங்கள் ஏற்படும். அரசுடன்
தேவையற்ற பகை உண்டாகும். சுப விரயமும், அசுப விரயமும் மாறிமாறி ஏற்படும். கௌரவ பங்கத்தால்
மன உளைச்சல் ஏற்பட்டு, மன அமைதியும் குறையும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் தடைகளும், தாமதங்களும்
ஏற்பட்டு தோல்வி அடைய நேரும். எவ்வளவு பெரிய செல்வந்தராக
இருந்தாலும் கைபணம் சமயத்தில் உதவாது. வெளிநாட்டுப் பயண
வாய்ப்புகள் ஏற்படும். ‘வன்மை யுற்றிட இராவணன் முடி
பன்னிரெண்டினில் வீழ்ந்ததும்’ என்ற பழம் பாடலுக்கு ஏற்ப பதவி
இழக்க நேரும். வேலைமாற்றங்கள் ஏற்படலாம்.
குரு 5 ஆம்
பார்வையாக சுக பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக வீடு, மனை வாங்கவோ,
கட்டவோ நல்ல யோகம் ஏற்படும். புதிய பாடப் பிரிவுகளை கற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். இளைய சகோதரர்களுக்கு தனவருமானம் அதிகரிக்கும்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தாயாரின் மதிப்பும், மரியாதையும்
கூடும். தந்தையால் நடத்தப்படும் வழக்குகள் வெற்றி அடையும். தாயார், வீடு, சுகம்
போன்ற 4 ஆம் வீட்டுத் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் இருந்தாலும், பணவிரயங்கள்
ஏற்படும். விவசாயத் தொழிலில் இலாபம் ஏற்படும்.
குரு 7 ஆம்
பார்வையாக 6 ஆம் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக எதிரிகள் மறைவர்.
எதிர்ப்புகள் விலகும். சத்ரு ஜெயம் ஏற்படும். வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும்.
நோய் பாதிப்புகளின் தாக்கமும், வேகமும் குறையும். ஆயினும், மருத்துவச் செலவுகள்
அதிகரிக்கும். கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுப்பதோடு அவமானப்படுத்தவும்
செய்பவர்கள். சிலருக்கு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் மூலமாக தனவருமானங்கள் வரும். மனைவி
மூலமான விரயச்செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தந்தையின் தொழில்கள் மேம்படும்.
தாய் தொட்டதெல்லாம் துலங்கும். வெற்றியும் ஆடையும்.
குரு 9 ஆம்
பார்வையாக 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக வம்பு வழக்குகள்
குறையும், மனைவி மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தந்தையால் செலவுகள்
அதிகரிக்கும். தெய்வீகப் பயணங்களால் பசவிரயங்கள் கூடும். கோர்ட் கேஸுகள் வெற்றி
அடையும். கைவிட்டுப் போன பொருட்கள் வந்து சேரும். விபத்துக்களில் இருந்து பெரிய
பாதிப்புகள் ஏதுமின்றி தப்பித்து விடுவீர்கள். பெண்களுக்குத் தடைப்பட்ட திருமண
வைபவங்கள் மீண்டும் நடைபெறும். வட்டி யில்லா கடன் உதவிகள் கிடைக்கும். பிறரின்
பணங்கள் கைவந்து சேரும். இன்ஷியூரன்ஸ், லாட்டரி, பந்தயங்கள், போட்டிகள் மூலமாக
எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும், புதிதாக வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாக, நிதானமாக
ஓட்டிப் பழகவேண்டும்.
உத்தியோகஸ்தர்கள் - அரசுப் பணியாளர்களுக்கு ஆதாயம் பெருகும். அதிகாரிகளின் ஆதரவும், பாராட்டுகளும்
கிடைக்கும். எதிர்பாராத வகையில், எதிர்பாராத இடத்துக்குப் பணி மாற்றங்கள் ஏற்படலாம்.
பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும். கணவன் மனைவி இருவரின் பக்தி மீதான நம்பிக்கையால் வாழ்க்கையில் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
வியாபாரிகள் –
கமிஷன் ஏஜெண்டுகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். அரிசி ஆலை, மளிகைப் பொருட்கள் விற்பனை
இலாபகரமாக இருக்கும். தொழிற்சாலையில் நவீன கருவிகளை நிறுவி உற்பத்தி பெருக்கத்தால் ஆதாயம் காணலாம். உதிரிப் பாகங்கள் அல்லது மென்பொருள் சாதனங்களின் விற்பனை சூடுபிடிக்கும்.
கலைஞர்கள் – கலைஞர்களுக்கு
தங்கள் முழுத் திறமைகளையும் காட்டி உழைத்து முன்னேற வேண்டிய காலம். இரவு பகல் தூக்கமின்றி
பணி செய்ய நேரும். தயாரிப்புத் துறையில் உள்ளவர்கள் தங்கள் பொருளாதார நிலையறிந்து புதுக்
கடன்களை வாங்குவது நல்லது. புதுப் பட வெளியீடுகளில் தடை, தாமதங்கள் ஏற்படும். இசைக்
கலைஞர்களுக்கு பரிசுகளும், விருதுகளும், பாராட்டுக்களும் கிடைக்கும்.
விவசாயிகள்
;- மா, பலா, ஆரஞ்சு போன்ற பழவகைகள் ஆதாயம்
தரும். வருமானம் பெருகினாலும், வாங்கிய கடன்கள் தொல்லை தரும். விவசாய வாகனங்களில் பழுது
ஏற்பட்டு தொல்லை தரும். தடை, தாமதத்திற்குப் பிறகு வீட்டில் சுபகாரியங்கள் நிறைவேறும்.
அதன் காரணமாக சுபச் செலவுகள் கூடும். ஆயினும், வீட்டில் மகிழ்சியும் ஆனந்தமும் பொங்கும்.
பெண்கள் : கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் கடமை தவறாது செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர், செலவுகளை குறைத்து சேமிப்பை உயர்த்த ஓளிமயமான வாழ்வு அமையும். பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகத்தில்
சாதகமான நிலை உருவாகும் வீட்டிலுள்ளவர்களால், வீட்டு மனைவிகளுக்கு வேதனைகளும் சோதனைகளும் ஏற்படும். ஆனால், குழந்தைகளின் தேர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். அரசின் உதவிகள் கைகொடுக்கும்.
மாணவர்கள் - மாணவ, மாணவிகளுக்கு அறிவுத்திறன் கூடி, கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். மிகுந்த அக்கறையுடன் கல்லூரிப் பாடங்களைப் படித்தால் முன்னேற்றம் சாத்தியப்படும். வாகனங்களில் செல்லும் போது நிதானமாகச் செல்லவும். தங்கள் முழுமுயற்சியால் உயர் கல்வியில் தீவிரமாகப் படித்து முன்னேறுவதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவர்.
பெற்றோர்களும் அவர்கள் விரும்பும்படியான அனைத்துச் செயல்களிலும் மகிழ்ச்சிக்கு
பங்கமின்றி உதவிகரமாக இருப்பர். வாழ்க்கையில் முன்னேற்ம் காண
காதல் விவகாரங்களை தள்ளிவைப்பது நல்லது.
மகர இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். பொது
மற்றும் சிறப்பு விதிகளின்படி இவர்களுக்கு
நற்பலன்கள் ஏற்படும். 70%
ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு ஹோரையில்,
தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து, மஞ்சள் வர்ண
மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும். கணபதி, மாரியம்மா,
தட்சிணாமூர்த்தி ஆகியோரை வணங்க வளமும், நலமும் பெருகும்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
ஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மனித இனத்திற்கு
சேவை செய்யும் மனப்பான்மையும், நியாயம் வழக்குவதில் சமர்த்தரும், ஆன்மிகத்
துறையில் நாட்டமுடையவருமான கும்பராசி
அன்பர்களே! தங்கள்
இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப்
பார்ப்போம். பொதுப் பலன்கள்,
பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும்
சீரான சிறப்பான பலன்களே அமையும்.
தங்கள் இராசிக்கு தன மற்றும் இலாபதியான குரு – விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18
ஆம் நாள்,
(திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று பகல் மணி 01 –
09 க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1
ஆம் பாதம் தனுசு இராசிக்கு, மாறுகிறார். இலாப பாவ மேறி கிராம அதிகாரம், அரசியல்
அதிகாரம் ஆகியவற்றைத் தருவார். கார் போன்ற நவீன வாகனங்கள் கிடைக்கும். பணம் பல
வழிகளிலும் குவிந்து பணப்புழக்கம் தாராளமாகவே இருக்கும். இதுவரை நீங்கள்
செய்துவந்த பிரார்த்தனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். மேலும் யோகபலன்களை அனுபவிக்கக் காத்திருக்கிறீர்கள். 3, 5,
7 ஆகிய பாவங்களைப் பார்வை செய்வதால் இரு பாலருக்கும் தடைப்பட்டிருந்த திருமண
காரியங்கள் கைகூடும். சீக்கிரமே குழந்தை பாக்கியமும் ஏற்படும். அன்பும், பாசமும்
மேலோங்க தம்பதிகளின் வாழ்க்கை பூலோக சொர்க்கமாகத் திகழும். சுற்றமும், நட்பும்
ஒற்றுமையுடன் உங்கள் கரத்துக்கு வலுச் சேர்ப்பர். பொது வாழ்வில் பெரிய மனிதர்களின்
தொடர்பு ஏற்பட்டு, நட்பும் பலப்படும். தொழில் வளர்ச்சி சிறப்பாக, நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். அரசு மூலம் வெகுமதிகள் மற்றும் பரிசுகள் கிடைக்கும். ஆடை ஆபரணாதிகள் சேரும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள்
ஏற்பட்டு மகிழ்ச்சி அளிக்கும். இலாப குரு
செல்வ நிலையை உயர்த்துவார். பாக்கியம் பெருகும். புகழ் ஓங்கும். பணி உயர்வு
கிடைக்கும். மனை, வயல் ஆகியவை சொந்தமாக்க் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணமும்
அதனால் ஆதாயமும் கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். வீடு, நிலம் ஆகியவற்றை உடனடியாகக் கிரையம் செய்வது நல்லது. நல்ல வேலையைத் தேடிக்கொண்டு, பின்னர் இருக்கும் வேலையை விட முயற்சிப்பதே அறிவுடமையாகும். மகான்களின் தரிசனம் கிடைத்து லௌகீக வாழ்க்கை சிறக்கும்.
பூர்வீகச் சொத்துக்கள் மீதான வில்லங்கங்கள் ஒழிந்து உங்கள் கைக்கு வந்து சேரும்.
மாணவ மணிகளின் கல்வித் தரம் உயரும். குடும்பத்துடன் இனிய புனித பயணங்கள் மேற்
கொள்வீர்கள். நினைத்த காரியங்கள் அனைத்தும் எளிதாக வெற்றி பெறும்.
குரு தனது 5
ஆம் பர்வையால் தைரிய பாவத்தைப் பார்வை செய்வதால் வங்கிக் கடன்களில் இருத்த பொன்
நகைகள் மீட்கப்படும். சிலரின் சொந்த வீட்டுக் கனவுகள் சீக்கிரமே நனவாகும். ஆய்வு
தொடர்பான உயர் கல்வியில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களின் அறிவு விருத்தியாகி சிறப்பாக
செய்து முடிப்பர். சகோதர வகையில் புதிய முயற்ச்சிகள் வெற்றி தரும்.
முன்னேற்றங்களும் ஏற்படும். மனைவியைப் புதிய உயர் பதவிகள் தேடிவரும். தந்தைக்குப்
புதிய ஒப்பந்தங்களும், தாய்க்குப் புதிய பயணங்களும் ஏற்படும்.
குரு தனது
7 ஆம் பார்வையால் 5 ஆம் இடத்தைப் பார்வை
செய்கிறார். அதன் காரணமாக குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா
சென்றுவரும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள்
கைக்கு வந்து சேரும். சந்ததி விருத்தி ஏற்படும். பொன் ஆபரண, அணிகலன்கள் சேரும். குடும்பத்தில் சுப மங்கள காரியங்கள் சிறப்பாக நடந்தேறும். தாய்வழியில் தன வருமானம் வீடு தேடிவரும். குடும்பத்தில்
நிம்மதி நிலவும். அரசியலில்
உள்ளவர்கள் புதிய உயரிய பதவிகளை எதிர்பார்க்கலாம். குழந்தைகளின்
திறமைகள் வெளிப்பட்டு, பரிசுகள் பலபெற்று பெற்றோருக்குப்
பெருமை சேர்ப்பர் அதன் காரணமாக வீட்டில் சந்தோஷம் நிலவும்.
குரு தனது
9 ஆம் பார்வையாக 7 ஆம் இடத்தைப் பார்வை
செய்கிறார். அதன் காரணமாக
தம்பதிகளின் உறவுகளில் பரஸ்பர சந்தோஷம் நிலவும். குடும்ப
ஒற்றுமை ஓங்கி இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கூட்டுத்
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம்
ஏற்படும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகும். தந்தை வழியில் பொருளாதார உதவிகள் கிடைக்கும்.
வியாபார சம்பந்தமான வெளிநாட்டு ஒப்பந்தங்கள், பிராயாணங்கள்
ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் – அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகமாக இருக்கும். எனவே, பணி செய்யும்
இடத்தில் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிப்பது முன்னேற்றத்துக்கு அவசியம். பணிமாற்றத்துடன்
கூடிய இடமாற்றம் கிடைக்கும். காவல்துறை, இராணுவம் பொன்ற சீருடைப் பணிகளில் உள்ளவர்கள்
பட்டம், பதவி ஆகியவற்றைப் பெறுவர். சிலருக்கு வாழ்வில் உயர்வுகளும், கௌரவங்களும் கூடும்.
வியாபாரிகள் - வியாபாரம், தொழில் ஆகியவற்றைச் செய்பவர்களுக்கு மிகுந்த அனுகூலமான காலமாகும். வங்கிக் கடன்களும், அரசு உதவிகளும் கிடைக்கும். விவசாயப் பணிகளால் ஆதாயம் பெருகும். தங்கள் முதலீடுகளை வேறு புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முனைவீர்கள். வீட்டு உயோகப் பொருட்களின் வியாபாரம் அதிகரிக்கும். தோல் பொருள் வியாபாரிகளுக்குத் தேங்கிக்கிடந்த பொருட்கள் விற்பனையாகி இலாபம் பெருகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும். பழைய பகை மறந்து புதிய நட்பு மலரும். புதிய உறவுகளால் மன மகிழ்ச்சி ஏற்படும்
கலைஞர்கள் – சினிமாக் கலைஞர்களுக்கு திறமைக்கு ஏற்ப நல்ல
பாத்திரப் படைப்புகள் கிடைக்கும். முழுத்திறமைகளையும் காட்டி வெற்றி அடைவர்.
இரசிகர்களின் முழு ஆதரவால் படங்கள் வெள்ளிவிழாக்காணும். பத்திரிக்கை துறை, மீடியா
நண்பர்களுக்கு பிரேக்கிங் நியூஸ்கள் அதிகம் கிடைக்கும். சின்னத்திரைக்
கலைஞர்களுக்கு வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.
விவசாயிகள் ;- திராட்சை, மாதுளை, இஞ்சி,
மல்லி, வாழை ஆகிய பயிர்களின் விளைச்சல் ஏற்பட்டு, அதிகமான வருமானமும் ஏற்படும்.
எதிர்பார்த்த வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். டிராக்டர் போன்ற நவீன விவசாய
வண்டிகளை வாங்கும் யோகம் ஏற்படும். குலதெய்வ கோவில் வழிபாடுகள் சிறக்கும். உற்றார்
உறவுகளின் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும்.
பெண்கள்: பணிபுரியும் பெண்கள் தங்கள் வேலைகளை ரசித்து மகிழ்ச்சியுடன் மேற்கொள்வர். வாகனங்களில் நிதானமாகச் சென்றால் விபத்துக்ளைத் தவிர்க்கலாம். அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்யப்படலாம். சுயதொழிலில் உற்பத்திப் பெருக்கி, ஆதாயமும் பெருகும்.
மாணவர்கள்; மாணவர்களுக்குத் தேர்வுகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியது வரும். போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு தங்கள் கல்வி நிறுவனத்துக்கும், பெற்றோருக்கும் பெருமை தேடித் தருவர். காதல்
விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருந்தால் அவமானங்களைத் தவிர்க்கலாம். தேர்வுகளில் வெற்றி பெற கவனமாகப்
படித்தல் வேண்டும். அசட்டையாக
இருந்தால் அல்லல்தான். முகநூல், வாட்ஸ்
அப், டுவீட்டர் ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்வது நல்லது
கும்ப
இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது. பொது
மற்றும் சிறப்பு விதிகளின்படி இவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படுவது அரிது. 85%
ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு
ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து,
மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.
முருகள், சக்கரத்தாழ்வரை வணங்க இன்னல்கள் அகலும்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட கீர்த்திமான், கெட்டிக்காரர், இரக்கமுள்ள,
அதிக செலவாளியுமான மீனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி
சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே
அமையும்.
தங்கள் இராசி மற்றும் கர்ம பாவத்திற்கும் அதிபதியான குரு – விகாரி
வருடம் ஐப்பசி மாதம் 18 ஆம் நாள், (திருக்கணிதப்படி) திங்கள் கிழமை, 04 – 11– 2019 அன்று பகல் மணி 01 – 09
க்கு மகர இலக்னத்தில், விருச்சிக இராசியில் கேட்டை – 4 ஆம் பாதத்தில் இருந்து மூலம் – 1
ஆம் பாதம் தனுசு இராசிக்கு மாறுகிறார். கர்ம பாவமான தனுசுவில் அமர்கிறார். அதன் காரணமாக ஈசன் பிரம்மனின் தலையைக் கொய்த தோஷத்திற்காக,
கிள்ளப்பட்ட அவனின் தலை ஓட்டிலேயே அவர் பிச்சை எடுத்துத் திரிந்தார்
என்பது பழம் பாடல். அப்படியிருக்க
நாம் எம்மாத்திரம். அனைத்துக் காரியங்களுக்கும் பிறர் தயவையே நாட வேண்டியிருக்கும். சிலருக்கு இதுநாள்வரை பார்த்துக் கொண்டிருந்த வேலையை
விடவேண்டிய சூழல் எழலாம். சிலருக்கு
இதுநாள்வரை வகித்து வந்த பதவி பறி போகலாம். பதவி உயர்வு கிடைக்க தடை, தாமதங்கள் கூட ஏற்படலாம். மனக்கவலைகளால் உடல் ஆரோக்கியம் கெட்டு, பல வியாதிகளுக்கு வழிவகுக்கலாம்.மாசினும் பணவரவுகள் ஓரளவு வந்து கொண்டுதான் இருக்கும். எவரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் விருப்பங்கள் எதுவும் நிறைவேறாது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு
என ஊரைவிட்டுப் போகவேண்டிய சூழ்நிலை எழலாம். மனச் சோர்வால், உடல் சோர்வும் சேர்ந்து கொள்ளும். எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமையாது. அரசு மூலம் எவ்வித ஆதாயங்களையும்
எதிர்பார்க்க முடியாது. வியாபாரம், தொழில்
புரிபவர்களுக்கு, போட்டிகள்
அதிகமாகி உழைப்புக்கேற்ற இலாபம் இருக்காது. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய்
இருக்கும். வீண்
விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். கையிலுள்ள பணமெல்லாம் விரயத்தால் கரையும். உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும். பொதுவாழ்வில் மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு
கெடுபிடிகள், வேண்டாத
டென்ஷன்,
எதிரிகளின் ஏற்றம் ஆகியவை காரணமாக இறங்குமுகமாக, முன்னேற்றம் எதுவும் இன்றி, பின்னடைவுகளைத் தரும். அவமானங்களும் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் நெருக்கடி தாங்காமல்
விடுமுறை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, அமைதியாக மருத்துவ விடுப்பு எடுத்து மனையிலேயே ஓய்வெடுப்பது டென்ஷனையாவது
குறைக்கும். பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.
குரு 5
ஆம் பார்வையாக தனபாவத்தைப் பார்வையிடுவது நல்ல நிலை ஆதலால் இல்லத்தில் இனிய விழாக்கள், சுபகாரியங்கள் சிறப்புற நடைபெறும்.பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். முன்னர் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்ந்து இன்ப மயமான வாழ்க்கை வாழ்வர். உடன் பிறந்தவர்கள் வெளியூருக்குப் பிரயாணங்கள் மேற்கொள்வர். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். வக்கீல், மதபோதகர், ஜோதிடர் போன்ற வாக்கால் வருமானம் ஈட்டுவோருக்கு தேவைக்கு அதிகமாகவே வருமானம் வரும்.
குரு 7
ஆம் பார்வையாக சுக பாவத்தைப் பார்வையிடுகிறார் அதன் காரணமாக புதிய நவீன வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய மனை, வீடு ஆகியவற்றை வாங்கும் யோகம் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். உடுக்கை இழந்தவன் கை போல உயிர் நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். ஆராய்ச்சிக் கல்வி படிக்கும் மாணவர்கள் வழிகாட்டுபவர்கள் உதவியுடன் மேன்மை அடைவர். உங்கள் வாழ்க்கைக்குத் துணைக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப புதிதாக, சிறப்பான, கைநிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வழக்கு, வியாஜ்யங்கள் உங்களுக்கு சாதகமாக வெற்றி பெறும்.
குரு தனது 9
ஆம் பார்வையால் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக நீண்ட நாட்களாக இருந்துவந்த வியாதிகள் மருத்துவ முன்னேற்றங்களால் நன் முறையில் குணமாகும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் சமாதானக் கொடி பறக்கவிட்டு நட்பு பாராட்டுவார்கள். பகை மறைந்து புதிய நட்புகள் உருவாகும். மனைவியின் மனம் கோணாமல் ஆடம்பர பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து மகிழவைத்து, மகிழ்வீர்கள். சமூகத்தில் தந்தையின் மதிப்பும், மரியாதையும் உயரும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள்
- அதிகமான உழைப்பின் பேரில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அலைச்சல்கள் அதிகரிக்கும். பதவி உயர்வுகள் கிடைப்பது தாமதப்படும். மறைமுகப் பணவரவுகள்
அதிகரிக்கும். நீண்டகால கோரிக்கைகள் கைகூடும். நீதித்துறை, தணிக்கை, மின்துறை ஆகியவற்றில்
பணிபுரிபவர்களுக்கு சுமாரான பலன்களே ஏற்படும். இறைபக்தியும் தரும
சிந்தனையும் உண்டானால் சிறப்பாகும். கோவில் திருப்பணிகள் செய்வதால்
தலைக்கு வந்த பிரச்சனைகள் தலைப்பாகையோடு போகும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும்.
வியாபாரிகள் - தொழில் விரிவாக்கத்
திட்டங்களுக்கு அரசு மற்றும் வங்கி உதவிகள் கிடைக்கும். சுயதொழில்
புரிபவர்களுக்கு பணியாட்களின் ஒத்துழைப்பால் உற்பத்தி பெருகி இலாபம் அதிகரிக்கும்.
சிலருக்குத் தொழில் மாற்றங்கள் ஏற்படலாம். புதிதாக கூட்டுத் தொழிலில் ஈடுபட நினைப்பவர்கள்
அவசரப்படாமல் நிதானமாக கூட்டாளியின் குணாதிசயங்களை அறிந்து ஈடுபடுவது நல்லது.பங்குச் சந்தை முதலீடுகளில் எச்சரிக்கையுடன் ஈடுபட இழப்பைத்
தவிர்க்கலாம்.
கலைஞர்கள் – சக கலைஞர்களை முழுவதுமாக நம்பிவிடாமல் ஒதுங்கியே இருப்பது
நல்லது. புதிய வாய்ப்புகள் தேடி பல கம்பேனிகளுக்கு அலைய நேரும். விளம்பரப்
படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடிவரும். சின்னத்திரை நடிகர்களுக்கு புதிய
தொடர்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இசைக் கலைஞர்களுக்கு புதிய படங்களுக்கு
இசை அமைக்கும் வாய்ப்புகள் கதவைத்தட்டும். அரசு விருதுகள், பட்டங்கள், பதவிகள்
தேடிவரும்.
விவசாயிகள் ;- அரசு வகையில் எதிர்பார்த்த தகவல்கள் சாதகமாக வந்து சேரும்.
புதிய வங்கிக் கடன்கள் உடனடியாகக் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள்
சிறப்பாக நடக்கும். அதற்கான செலவுத் தொகைகள், மகசூல் மூலமாகக் கிடைக்கும். புனித யாத்திரைப் பயணங்கள் மகிழ்ச்சி
அளிக்கும்.
பெண்கள்; அரசுப் பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம்.
சுய தொழில் புரியும் பெண்களுக்கு
நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் உதவியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்புக் கிடைத்து,
உற்பத்தி பெருகி, ஆதாயமும் பெருகும். கடமை தவறாத பணியாளர்களுக்கு உயர்
பதவிகள், பாராட்டுக்கள் கிடைக்கும். வாகனங்களில் செல்கையில் கவனமுடன் செல்லுதல் அவசியம். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் தாமதமின்றி செய்யப்படும்.
மாணவர்கள் - மாணவர்களுக்குக் கல்வியில் உயர்வும், வெற்றிகளும் குவியும்.
நல்ல முன்னேற்றங் கண்டு பெற்றோர்க்கும், ஆசிரியர்களுக்கும் அவர்கள் பெருமை தேடித் தருவர். மாணவர்கள் தேவையற்ற வேலைகளில் ஈடுபடாமல், படிப்பில்
கவனம் செலுத்தி முன்னேற முயல வேண்டும். கல்வியில் உயர்வும்,
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியும் கிட்டும் அதனால் பள்ளி,
கல்லூரிகளுக்கு மாணவர்களின் உழைப்பு பெருமை சேர்க்கும். முகநூல், வலைத்தளங்களில் பொழுதைக் கழிக்காமல் படிப்பின்
மீது கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறலாம்.
மீன
இராசியினருக்கு குரு சுவர்ண மூர்த்தியாக முதல் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு சொர்ண ஆபரணங்கள், அணிகலன்கள் சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும். பொது
மற்றும் சிறப்பு விதிகளின்படி இவர்களுக்கு
நற்பலன்கள் ஏற்படும். 80%
ஒவ்வொரு வியாழக் கிழமையும், குரு
ஹோரையில், தொடர்ந்து 12 வாரங்கள் குரு ஸ்தோத்திரத்தை 108 முறை பாராயணம் செய்து,
மஞ்சள் வர்ண மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்ய நற்பலன்கள் சித்திக்கும்.
பிரத்தியங்கரா தேவியை வணங்க நிரந்தரமாக இன்னல்கள் மறையும்.
Subscribe to:
Posts (Atom)