தவிர்க்க முடியாத கலைகளில் ஒன்று - ஜோதிடம்.
நாம் வாழும், வேகமாக ஓடும், நவீன விஞ்ஞான, உலக வாழ்க்கையில் ஜோதிடத்திற்கு இடம் உள்ளதா ? ஒளிகிரகமான சந்திரனிலேயே வாழப்போகும், வளர்ந்து பட்ட, ஒரு மனித சமூகத்துக்கு தேவையான ஒன்று என்பதை நியாயப்படுத்த முடியுமா ? அல்லது இந்த மாயா உலகில் தொட்டு தொடரும் பண்டைய மூட நம்பிக்கையா, சரித்திர காலத்தில் கண்ட பழங்கனவுகளா ? ஜோதிடம் போன்ற அற்புதமான, தவிர்க்க முடியாத, விலக்கிட முடியாத கலையில் பலனை அறிந்து கொள்ள வருபவர்களுக்கு, இது போன்ற கேள்விகள் மனதில் எழும்.
இதற்கு எளிய பதில் ஜோதிடம் பலன் தருகிறது என்பதே. அது உலகிலுள்ள கோடிக்கணக்கான நபர்களுக்கு பயனளிக்கிறது என்பதே உண்மை. வெளிநாடுகளில் கூட பல லட்சம் மக்களின் அபிமானத்தை ஜோதிடம் பெற்றுள்ளது என்றால் மிகையாகாது. அமெரிக்காவில் மட்டுமே ஜோதிடத்தைத் தொழிலாகக் கொண்டுள்ள பல ஆயிரத்துக்கும் மேலான ஜோதிடர்கள் உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் அதைப் போல மூன்று மடங்கு ஜோதிடர்கள் உள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம், உலக அளவில் உள்ள முக்கிய பத்திரிக்கைகள் அனைத்தும் மற்ற விஷயங்களுக்காக ஒதுக்குவதைவிட, ஜோதிடத்திற்கு எனத் தனியாக அதிக பத்திகளை ஒதுக்கி அதன் முக்கியத்துவதைப் பறைசாற்றுகின்றன. அதற்கான அங்கீகாரத்தையும் வழங்கி உள்ளன. ஜோதிடத்தின் நம்பகத் தன்மை கணகூடானதால், கீழைநாடுகளிலும், அதிக அளவு ஜோதிட அபிமானிகள் உள்ளனர்.
நமது நாட்டிலும் ஜோதிடப் பொருந்தங்களின் மூலமாகவே மணமக்களின் வாழ்வு நிச்சியிக்கப்படுகிறது. ஜோதிடத்தின் உதவியால், அதிகமான மேலைநாட்டு நாகரிக தாக்கத்திலும், விவாகரத்து வழக்குகள் குறைந்துள்ளன.
ஜோதிடம் ஒரு சுற்றுசூழல் மற்றும் மனிதனின் மீதான கிரகங்களின் தாக்கத்தை மட்டும் மனிதன் தானே படிக்கக்கூடிய பாடம் அல்ல. ஜோதிடம் மனித உறவுகளை, பந்தங்களை படிக்கக் கூடிய விஞ்ஞானம் ஆகும்.
நாம் நமது சுய பிரபஞ்சத்தின் மையத்தில் அனைத்து உறவுகளிடையே உள்ளோம். நமது இன்ப, துன்பங்கள் இவர்களிடையே நாம் எந்தவிதத்தில் நடந்துகொள்கிறோம்? நாம் நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் பொருட்களிடம் எங்ஙனம் தொடர்பில் உள்ளோம் – என்பதைப் பொறுத்தே அமைகிறது. நம் மனதில் உருவாகும், உணர்வுகள் நல்ல மற்றும் தீய விளைவுகளை நம்மை சுற்றியுள்ள உலகத்தில் ஏற்படுத்துகிறது. இதை நம் நண்பர்கள் மற்றும் எதிரிகள் மூலமாகவே நாம் அறிகிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒருவகை சூரியன் அல்லது கிரகம் அல்லது நட்சத்திரம் எனவே நமது தாக்கங்கள் நம்மைச் சுற்றியுள்ள பிரபஞ்சத்தை பாதிக்கிறது. அது அன்பாகவோ, உதவிகரமாகவோ அல்லது அழிக்கும் விதமாகவோ இருப்பதற்கு நம் மாறிக் கொண்டே இருக்கிற மனமே காரணமாகிறது.
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அது முழுவதுமான பால்வெளியும் சேர்கிறது. கிரகங்களைப் பொறுத்தவரை இது உண்மையாகிறது. அவற்றின் ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று, பூமியையும், அதிலுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து பாதிக்கின்றன,
ஜோதிடம், நம்மை பாதிக்கும் பிரபஞ்ச சக்திகளை நாம் புரிந்து கொள்ள உதவுகிறது..அதனால், அதற்குத் தகுந்தபடி நாம் நம் சுற்றுச் சூழல்களை அறிந்து நடந்து கொள்ள முடிகிறது. மற்வர்களிடமும் அனுசரித்துச் செல்ல முடிகிறது. பிரபஞ்சத்தில், நமது உறவுகளுக்கு மிகவும் நெருக்கமானது, நமது உடல் ஆரோக்கியம் ஆகும். நமது உடல், சுற்றுச் சூழல் தாக்கத்தால் பாதிக்கப்படும்போது, அதைக் கட்டுப்படுத்தும் சக்தி, நமக்கு ஓரளவே இருக்கும். அலைபேசி அழைப்பினை நாம் கேட்க முடிகிறது. புகைவண்டி வந்து சேருவது தாமதமாகிறது ஷேவ் செய்யும் போது பிளேடால் வெட்டிக் கொள்கிறோம். இவ்வாறாக பல விதத்தில் நம்மீது பிரபஞ்ச சக்தி குண்டுமழை பொழிந்து, நம் வாழ்க்கையில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இவற்றிலிருந்து நமக்குள் எழும் கேள்விகள், எது மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள நம்மை இயக்குகிறது ? விஞ்ஞானமும், ஜோதிடமும் இதே கேள்விக்கு பதில் தேடுகின்றன. விஞ்ஞானிகள் ஒரு வழியில் தேடினால்,, ஜோதிடமும் ஒரு மார்க்கத்தில் தேடுகிறது. விஞ்ஞானம், மனித உடலை மதிப்பிடுவதன் மூலமாகவும், உடல்கூறு மூலமாகவும், மனித மனத்தை ஆய்வது மூலமாகவும் தேடுகின்றன. இங்ஙனம், எப்படித் தேடினாலும் அதற்கு நிலையான தகவல்கள், முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஜோதிடம், மனித அனுபவத்தைக் கொண்டு தேடும் போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான அனுபவ ஆராய்ச்சியில், கிரகங்களின் தாக்கமே இதற்குக் காரணம் என்ற அசைக்க முடியாத முடிவுக்கு வந்தனர். இதுவே கிரேக்க ஜோதிடர்களால் நட்சத்திர விஞ்ஞானம் என்று அழைக்கப்பட்டது. ஜோதிட விஞ்ஞானம் கண்டுபிடித்ததை, நவீன விஞ்ஞானம் ஒத்துக் கொண்டுள்ளது.
பிரபஞ்ச வெளிக்கும், பூமிக்கும் உண்டான தொடர்பை நாம் சுலபமாக கற்பனை செய்து கொள்ள முடியும். இன்றும், பூமி எப்படி உருவானது என்பது விஞ்ஞானிகளும் அறியாத ஒன்று. ஆனால், அது பிரபஞ்சத்தின் ஒரு சிறிய துண்டே இவ்வுலகம் என்பது அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒன்று. மேலும், பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான, பூமி மீதான மனிதர்கள், ஒவ்வொரு நிலையிலும், செயலிலும் கிரகங்களின் தாக்கத்தையும் உணருகிறார்கள். அதிலும், மிகப் பெரிய சூரியனின் தாக்கம் நம்மீது ஏற்படுகிறது. அதுவின்றி நம் வாழ்க்கையில் எதுவும் இல்லை. சூரியனில்லையேல் வெப்பம் இல்லை. இரவுமில்லை, பகலுமில்லை. பருவ மாற்றங்கள் எதுவும் இருக்காதல்லவா?
அதேபோல், சந்திரனின் தாக்கமும் தேவை. உதாரணமாக, நீரலைகளில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமாகிறது. மனிதன் முதல் மிருகம் வரை அனைத்திலும் நீர் முக்கியமாக இருக்கிறது. கடலில் எழுகின்ற, விழுகின்ற அலைகளுக்கும் சந்திரனே காரணமாகிறான். சந்திரனின் தாக்கமே கடலலைகளின் மாற்றத்துக்கான காரணம் என்று விஞ்ஞானம் உரைக்கிறது. அதுமட்டுமின்றி, பூமியில் உள்ள அனைத்து ஜந்துக்களிலும் தண்ணீர் உள்ளது. மனித உடலில் 70 சதவிகித நீர் உள்ளது. அதுவும் சந்திரனின் தாக்கத்தால் மாறுதலுக்கு உள்ளாகிறது என்றால் மிகையாகாது. உதாரணமாக, பெண்களின் மாதாந்திர உதிரப் போக்கின் வட்டம் சந்திரனின் மாத நாட்களுக்கு இணையானது. கரு வளரும் காலம் 273 நாட்கள் அல்லது 9 சாந்திர மாதமாகும். மனித மற்றும் மிருகங்களின் இரத்த ஓட்டமும் சந்திரனின் சக்தியால் இயங்குகிறது. விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தாவரங்களிலும் சந்திரனின் தாக்கம் இருப்பதாக நம்புகிறார்கள். எனவேதான் பல நூற்றாண்டுகளாக அவர்கள் பயிரிடுவதற்கும், சந்திர மாத வட்டத்தை அனுசரிக்கின்றனர் என்பதே உண்மை.
விரைவான மாற்றங்களைக் கொள்ளும் நவீன உலகத்திலே, ஒவ்வொருவரும், தங்கள் எதிர்காலம் எப்படி அமையும் என்பதைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டுள்ளனர். இதில் ஏழை, பணக்காரன், புகழ் பெற்றவன், புகழ் பெறாதவன் என்ற வித்தியாசமின்றி ,நாளை என்ன நடக்கும் என்பதை அறிவதில் ஆர்வமாக உள்ளனர்.
சந்திரனின் மாற்றத்தால் நோயின் தாக்கம் அதிகரிப்பதாகவும், பௌர்ணமி நாளில், குற்ற சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் பல நாடுகளின் கணக்கெடுப்புகளில் தெரிய வருகிறது. மேலும், சந்திரனின் மாற்றங்களைப் பொருத்தே, காம உணர்வுகள், இச்சைகள் மாறுபடுவதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
நீங்கள் யார் ?- என்பதை அறிந்து கொள்ள சில வழிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. கிருத்து பிறப்பதற்கு முன்பே ஜோதிடம் இவ் வழிமுறைகளை கண்டறிந்தது. முதல் முறையானது, மனித உடலில் உடனடியாக ஊக்குவிக்கக் கூடிய பாகங்களான உடல் அசைவுக்குக் காரணமாகும் – தசைகள், ஜீரண உறுப்புகள், உணர்வுகள் அல்லது மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள் ஆகியவை ஆகும். மற்றுறொரு முறை குறிப்பிடுவதாவது - மனித குணங்கள் எண்ட்ரோக்ரைன் நாளங்களால் உருவாகின்றன. அதன் பிரிவுகளே பிட்யூட்ரி நாளங்கள், தைராய்டு மற்றும் ஹைபர் தைராய்டு நாளங்கள் ஆகும். இவையாவும் மனித உடலில் மாறுபாடின்றி அமைந்துள்ளன.
உங்கள் பிறந்த தேதியே முக்கியம். அதன் மூலமாகவே உங்களை நீங்களே உங்கள் பிறந்த நாளில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது. அன்றைய ராசி மண்டலமே, உங்கள் துல்லியமான ஜாதகம் ஆகிறது. நீங்கள் பிறந்த நேரத்தின் துல்லியமான இராசிமண்டலத்தின் புகைப்படமே உங்கள் ஜாதகம். நீங்கள் பிறந்த நேரத்தில் ஆகாயத்தில் இடம் பெற்றுள்ள கிரகங்களின் நிலையுடன் கூடிய சரியான நகலே உங்கள் ஜாதகம் என்றும் கூறலாம்.
இந்த தகவல் மட்டுமே ஜோதிடருக்குப் போதாது. அவருக்குக் காரகங்கள் என்ற (கிரக குணங்கள்) ஒரு பின்புலம் தேவை. உதாரணமாக, ஒன்றுக்குள் ஒன்றாக இரு பந்துகளை கற்பனை செய்து கொண்டால், பந்துகளினுள் ஊடுருவிப் பார்க்கக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. இரண்டின் நடுவேயும் உள்ளதை உள்ளேயும், சுற்றுப் பகுதிகளிலும் ஜோதிடரால் பார்க்க முடியும். பந்தின் வெளிப்பகுதி 12 ஓரளவு சமமாகப் பிரிக்கப்பட்ட இராசிகளை உடைய இராசிமண்டலம், உள் பந்து நமது ஜாதகம் ஆகும். இந்த இராசிகளில் உள்ள கிரகங்களைப் பார்த்தே ஜோதிடர் ஆய்வு செய்கிறார். இந்த 12 பகுதிகளும் இராசி அல்லது வீடு என அழைக்கப்படுகிறது.
நம் ஜாதகங்களில் மாறுபட்ட பல நேரங்களில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கிரக நிலைகள் மாறுபட்டே காணப்படும். ஆனால், இராசிகளும், இராசி மண்டலமும் மாறாது. உங்கள் குணங்கள் அனைத்தும் மேல் நாட்டு முறைப்படி சூரியனைக் கொண்டும், இராசியைக் கொண்டும், நம் நாட்டு முறைப்படி சந்திரனைக் கொண்டும் இலக்னத்தைக் கொண்டும் காணப்படுகிறது. |
No comments:
Post a Comment