Search This Blog

Tuesday, 24 December 2019


பத்தாம் அதிபதி லக்னத்தில் இருந்தால்
ஜாதகருக்கு ஜீவன குறைவு கிடையாது, ஆனால் அதில் திருப்தி இருக்காது. தலைமை தாங்குதல் முதலாளி தோரணை இருக்கும். நிர்வாக திறமை இருக்கும். சொந்தத்தில் தொழில் செய்யும் எண்ணம் இருக்கும். பிறக்கும்போதே ஒருகர்மம் இருக்கும். ஒரு பதவியில் இருப்பார். இவர் புகழுக்காக ஏங்குவார். அன்னதானம், தானதர்மம், கர்மம் செய்யும் பாக்கியம் இருக்கும். பதவியில் இருக்கும்போதே மரணமடைவார்கள். சங்க கூட்டம், தலைமை தாங்குவது, சமுதாய கணக்கு வழக்கு பார்த்தல். ஆன்மீக நாட்டம் இவர்களுக்கு இருக்கும். மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சுயமாக சமைத்து சாப்பிடுவார்கள். இந்த இடத்தை குரு பார்த்தால் அரசு வெகுமதி இருக்கும்.
சூரியன் பார்த்தால் ஆன்மீகத் தலைவர் அரசு பொறுப்புள்ள பதவி கிடைக்கும்.
சுக்கிரன் பார்த்தால் நல்ல பதவி இருக்கும் இவர் ஒரு கர்மத்திற்கு போனபின்பு கருத்தரித்தவராக இருப்பார்.
பத்தாம் அதிபதி லக்னத்தில் இருந்து அந்த பாவத்திற்கு 5 9 தொடர்பு இருந்தால், ஜாதகருக்கு குலத்தொழில் அமையும். வாரிசு தொழில் அமையும்.
ஒன்பதாம் அதிபதி பத்தில் இருந்தால் தர்ம கர்மாதி யோகம் செயல்படும்.
பத்தாம் அதிபதி 9 ல் இருந்தால் இவர் தர்மம் செய்தால் இவர் பெயர் நிலைக்காது.
பத்தாம் அதிபதி இரண்டில் இருந்தால்
வாக்கால் தொழில். பணம் சார்ந்த தொழில் அமையும். தந்தையின் சொத்து பணம் கிடைக்கும். இவர்கள் உணவு தொழில் பார்த்தாலும் உணவுத் தொழிலில் இருந்தாலும் சிறப்பு. டிவியில் பேசும் தொழில் செய்யலாம். டப்பிங் வாய்ஸ் கொடுக்கலாம். சின்னத்திரையில் ஈடுபாடு இருக்கும். பல குரலில் பேசுவார்கள். அதிகமாக பேசுவார்கள் இவர்களை முதலில் பேசுவது நல்லது. இந்த ஸ்தானத்திற்கு திதி சூன்யம் தொடர்பு இருந்தால் எந்த ஒரு பிரச்சனைக்கும் சண்டைக்குப் போய் விடுவார்கள். இவர்கள் நிர்வாகத்தில் ஒரு அட்வைசர் ஆக இருப்பது நல்லது. தானியத்தை இருப்பு வைப்பது நல்லது. இவர்கள் வாழ்க்கையில் மாமியார் தலையீடு இருக்கும். இரண்டு வயதில் ஒரு கர்மம் இருக்கும். இவர் பேச்சால் பிறரை கவரும் தன்மை இருக்கும். 10, 5, 2 சம்மந்தம் இருந்தால் கோவில் திருப்பணி செய்யலாம். அன்னதானம் பண்ணலாம். குலதெய்வ கோவிலுக்கு திருப்பணி செய்யலாம். இவர்கள் வேலை செய்துகொண்டே படிப்பார்கள். படிக்கும்போதே வருமானம் இருக்கும். பார்ட் டைம் வேலைக்கு போவார்கள். பெரியம்மாவுக்கு ஆண் வாரிசு இருக்கும். இரண்டு வயதில் குடும்பத்தில் இரண்டு வருமானம் வந்திருக்கும். 20 26 வயதில் தொழில் செய்து இருப்பார்கள். தொழில் செய்யும் இடம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும்
பத்தாம் அதிபதி மூன்றாம் பாவத்தில் இருந்தால்
30
வயதுக்கு மேல் தொழில் அமையும். தொழிலில் இடமோ, தொழிலோ மாற்றுவார்கள். சிறு பயணம் சார்ந்த தொழிலாக இருக்கும். தொழிலுக்காக வெளியூர் போவார்கள். சகோதரனுடன் தொழில் பண்ணுவார்கள். 3 வயதில் ஒரு கர்மம் இருக்கும். சொந்த முயற்சியில் தொழில் செய்வார்கள். தொழிலில் புகழ்.
கமிஷன், எழுத்து, தகவல்தொடர்பு இவற்றில் வருவாய் சம்பாதிக்கலாம்.
இந்த பாவத்தில் குரு சுக்கிரன் தொடர்பு இருந்தால் ஆடை ஆபரணம் தொழில் செய்யலாம்.
செவ்வாய் சூரியன் தொடர்பு இருந்தால் அதிகாரமிக்க தொழில் பண்ணலாம்.
தொழிலில் அலைச்சல் இருக்கும், அவசரத் தன்மை இருக்கும். இந்த அவசர தன்மையால் ஒரு இழப்பும் இருக்கும்.
பத்தாம் அதிபதி மூன்றாம் இடத்தை பார்த்தால் அவசர புத்தியால் தொழில் இருக்கும்.
பத்தாம் அதிபதி மூன்றிலிருந்து மூன்றாம் அதிபதி பலம் குறைந்தால் மாமனார் இருக்கமாட்டார்.தொழிலுக்காக பயணம் இருக்கும். மார்க்கெட்டிங் தொழில் செய்யலாம். முதல் தொழில் மாற்றத்தை உண்டு பண்ணும். தொழில் செய்யும் இடத்தில் ஒரு தற்கொலை இருக்கும். கம்யூனிகேஷன் தொழில் அமையும். தொழிலுக்காக மலேசியா, சிங்கப்பூர் வெளிநாடு போவார்கள். இவர்கள் போலீஸ் ராணுவத்தில் வேலைக்கு முயற்சி பண்ணி இருப்பார்கள். ஒப்பந்த தொழில்கள் அமையும். மூன்று தொழில்கள் அமையும். இவர்கள் குடும்பத்தில் ஆசிரியர், ஜோதிடர் யாராவது இருப்பார்கள்.
செவ்வாய் கேது சம்மந்தம் இந்தப் பாவத்திற்கு இருந்தால் மருத்துவர் இருப்பார்கள். தொழிலில் ஒரு வழக்கு இருக்கும். சகோதர சகோதரிக்கு உத்தியோகம் இருக்கும். பத்தாம் அதிபதி எங்கு போனாலும் ஆண் வாரிசு கொடுப்பார். கம்ப்யூட்டர் டிசைன், ஓவியம் இவற்றில் நாட்டம் இருக்கும். 30 வயதில் சொந்த தொழில் அமையும். சகோதர வர்க்கத்தில் கர்மம் செய்ய ஒரு ஆண் வாரிசு இருப்பார்
பத்தாம் அதிபதி நான்காம் பாவத்தில் இருந்தால்
பத்தாம் அதிபதி மட்டும் நான்காம் பாவத்தில் இருந்தால் உள்ளூரில் தொழில் இருக்கும். நான்கு வயதில் ஒரு கர்மம் இருக்கும். இந்த பாவத்திற்கு 7, 9, 12 தொடர்பு இருந்தால் வெளிநாட்டில் தொழில் இருக்கும். விரையாதிபதி தொடர்பு இருந்தால் உள்ளூரில் சொத்தை விற்றுவிட்டு வெளிநாடு போவார்கள். வீட்டில் இருந்து கொண்டு தொழில் செய்யலாம். 7, 9 தொடர்பு இருந்தால் வெளியூரில் தொழில் செய்த ஆசைப்படுவார்கள். பத்தாம் அதிபதி நான்கில் இருந்தால் உள்ளூரில் தொழில். 7, 9 தொடர்பு இருந்தால் உள்ளூரில் உற்பத்தி வெளியூரில் விற்பனை. வீட்டில் தொழில் செய்வது. பண்ணை தொழில். கால்நடை வண்டி. நீர் சார்ந்த தொழில். கட்டிடம் சார்ந்த தொழில் செய்யலாம். பத்தாம் அதிபதி சுபராக இருந்து அவர் நான்கில் இருந்தால் சொத்தை தொழிலுக்காக இழப்பார்கள். இவர்கள் வீடு கட்டி வாடகைக்கு விடலாம். புக் ஸ்டால் வைக்கலாம். பில்டிங் கட்டலாம். விவசாயம் மூலம்வருமானம் இருக்கும். பால் தயிர் மோர் விற்பனை செய்யலாம். போர்வெல் வாகனத்தை இயக்கலாம். இதில் மாந்தி நின்றால் கர்ம வாகனத்தை இயக்கலாம். கர்மம் சொந்த ஊரில் நடக்கும். வீடு கட்டும்போது ஒரு கர்மம் இருக்கும். நான்கு வயதில் ஒரு கர்மம் இருக்கும். தொழில் செய்யும் இடம் ஆற்றுக்கு பக்கத்தில் இருக்கும் அல்லது கிணற்றுக்கு பக்கத்தில் இருக்கும்.
பத்தாம் அதிபதி ஐந்தாம் பாவகத்தில் இருந்தால்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார். இவர்களுக்கு உழைக்காத வருமானம் இருக்கும். அறிவை பயன்படுத்தி செய்யும் தொழில் அமையும். தாய்மாமனுடன் தொழில் செய்யலாம். குலத் தொழில் செய்யலாம். இவர்கள் முதலீடு போட்டு தொழில் பண்ண கூடாது. அறிவைப் பயன்படுத்தி செய்யும் தொழிலைத்தான் இவர்கள் செய்ய வேண்டும். ஷேர் மார்க்கெட், ஜோதிடம், மந்திரம் ஜெபம், பஜனை கலைத் தொழில் பயிற்சி மையங்கள் அமைக்கலாம்.யோகா, மெடிடேஷன், சிட்பண்ட்ஸ் இவை எல்லாம் செய்யலாம், இவர்களுக்கு மனிதாபிமானம் இருக்கும். தான தர்மங்கள் பண்ணுவார்கள். பெரும்பாலும் ஆசிரியர் தொழில் அமையும். இவர்களுக்கு தொழில் தேடி வரும். தாய்மாமனுக்கு ஆண் வாரிசு இருக்கும். இவர்களுக்கு ஆன்மீகம் அதிகமாக இருக்கும் அதனால் சன்யாச நாட்டம் அதிகமாக இருக்கும். ஐந்து வயதில் ஒரு கர்மம் இருக்கும். இவர்கள் தொழில் பள்ளி கல்லூரி அருகே இருக்கும். குழந்தை தத்து போகும் அல்லது தத்து எடுப்பார்கள். இந்த மாதிரியான அமைப்புக்கு 5 8 10 சம்மந்தம் இருக்க வேண்டும்.
திதி சூனியம் பாதகாதிபதி சம்பந்தப்பட்டால் தாத்தா காணாமல் போவார். தாய்மாமனுக்கு ஒரு பதவி இருக்கும். புத்திர தோஷத்தை சொல்லும். தாய்மாமனுக்கு புத்திர தோஷம் இருக்கும். இவர்கள் மற்றவர் கல்விக்காக உதவுவார்கள். மருந்து தானம் பண்ணுவார்கள். தொழிலில் வழக்கு இருக்கும். தொழிலில் ஆர்வமும் பக்தியும் அதிகமாக இருக்கும். இவர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று இருப்பார்கள். இஷ்ட தெய்வத்தை இவர்கள் உபாசனை செய்வது ரொம்ப நல்லது.
ஜீவ சமாதி வழிபாடு நல்லது இவையெல்லாம் செய்தால் இவர்களுக்கு தொழில்ரீதியாக அந்தஸ்து இருக்கும்.
பத்தாம் அதிபதி ஐந்தில் நின்றால் குழந்தைக்கு கர்மம் செய்வார்கள்.
இவர்கள் சுகபோகத்தை விட்டு கொடுத்தால் முன்னேற்றம் அடையலாம்.
பத்தாம் அதிபதி ஆறாம் பாவத்தில் இருந்தால்
இவர்கள் உணவு தொழில் செய்யலாம். இரவு வேலை செய்யலாம். ஏற்றுமதி இறக்குமதி செய்யலாம். குறைந்த முதலீட்டில் தொழில் செய்யலாம். இவர்களுக்கு வேலை தான் நல்லது. தொழில் என்று போனால் கடன், பகை, எதிரி இருக்கும். கடன் வாங்கி தொழில் செய்வார்கள். 50 வயதுக்கு மேல் சொந்த தொழிலில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு வேலை நன்று. ஆறு வயதில் ஒரு கர்மம் இருக்கும். இவர்கள் சுற்றுலா விடுதி, பைவ் ஸ்டார் ஹோட்டல் தொழில் செய்யலாம். போலீஸ், ராணுவம், போக்குவரத்து தொழில் செய்யலாம். மீன் பிடி தொழில், மீன் விற்பனை தொழில்கள் செய்யலாம். டிராவல்ஸ் ஏஜென்சி இந்த மாதிரி தொழில்கள் செய்யலாம். ஆறாம் இடம் என்பது சிறு தொழிலை குறிக்கும், சிறு தொழில் செய்யலாம். ஆறாம் இடம் கெட்டுப் போய் விட்டால் இவர்களுக்கு மாத சம்பளம் முழுமையாக கிடைக்காது. முழு சம்பளமாக வராது. புதன் நன்றாக இருந்தால் வார சம்பளம். புதன் கெட்டுப் போய்விட்டால் அது தினக்கூலியாக மாறிவிடும். சொந்த தொழிலும் ஆகாது, முதலீடும் ஆகாது. இவர்களுக்கு check சம்பந்தமான ஒரு பிரச்சனை இருக்கும். நான்கு ஆறு அதிபதிகள் எதை தொட்டாலும் பார்த்தாலும் நாய்கடி இருக்கும்.
அந்த காரக கிரகத்துக்கும் செவ்வாய் நட்சத்திரம் இருக்கும் வீட்டில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் நீசத்தில் இருந்தாலும் அவர்களுக்கு நாய் கடி இருக்கும்.
இவர்கள் விடாமுயற்சி செய்து 40 வயதிற்கு மேல் வெற்றி அடைவார்கள். முன்னேற்றம் உண்டு.
லக்னத்தில் இருந்து முதல் ஐந்து கட்டத்திற்குள் பத்தாம் அதிபதி இருந்தால் ஜாதகர் தொழில் செய்வார்.
ஐந்து கட்டத்திற்குள் ஆறாம் அதிபதி இருந்தால் உத்தியோகம் பார்ப்பார்.
ஆறாம் அதிபதி வலுத்து விட்டால் உத்தியோகம் மட்டும் பார்ப்பார்.
பத்தாம் அதிபதி வலுத்தால் தொழில் மட்டுமே செய்வார்
பத்தாம் அதிபதி ஏழாம் பாவத்தில் இருந்தால்
மனைவி பெயரில் தொழில் அமையும். கூட்டுத் தொழில் அமையும். திருமணத்திற்கு பிறகு தொழில் இருக்கும். திருமணத்தின்போது ஒரு கர்மம் இருக்கும். ஏழு வயதில் ஒரு கர்மம் இருக்கும். தொழில் செய்யும் இடத்தில் இவர்களுக்கு மனைவி அமைவார்கள் தொழிலுக்காக இவர்கள் நீண்ட தூரம் செல்வார்கள். இதில் கேது தொடர்பு கொண்டால் தாமத திருமணம் திருமணத் தடையை செய்துவிடும் .
5 7 9 10 12
ஆம் பாவத்திற்கு கேது தொடர்பு இருக்கக்கூடாது.
இரண்டாவது குழந்தை பிறந்தபின் இவர்களுக்கு சொந்த தொழில் அமையும். நல்ல பதவியில் இருப்பார்கள். சூரியன் குரு தொடர்பு இருந்தால் அரசியலில் ஈடுபாடு இருக்கும். மனைவி பெரிய இடத்து பிள்ளையாக இருக்கும், மனைவி தத்து போனவராக இருப்பார். இவர்களுக்கு பெண்ணை பிடித்துள்ளதா என்று தெரிந்துகொண்டு உறுதியாக தெரிந்து திருமண ஏற்பாடுகள் திருமண முடிவு செய்ய வேண்டும்
பத்தாம் அதிபதி எட்டாம் பாவத்தில் இருந்தால்
இவர்களுக்கு கர்மம் செய்ய தடை இருக்கும். 10, 8 சம்மந்தம் இருந்தால் எந்த கர்ம த்திலும் கலந்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள், தொழிலில் ஒரு வழக்கு இருக்கும். ஒரு அவ சொல் இருக்கும். திருட்டு இருக்கும். எல்ஐசி பிஎஃப் இவை நன்று. மாந்திரீகம், செய்வினை, பேய் ஓட்டுவது இதிலெல்லாம் ஈடுபாடு இருக்கும். இதனால் தொழிலில் பாதிப்பு இருக்கும். முதியோர் இல்லம் நடத்துவதில் ஈடுபாடு இருக்கும். பில் போடாத தொழில் இவர்களுக்கு அமையும். தவறான ஆவணம் பயன்படுத்தி தொழில் செய்வார்கள். இவர்கள் தொழிலை மற்றவர்கள் அபகரிப்பார்கள். டாஸ்மார்க், குப்பை, காண்ட்ராக்ட், Scrap contract இதையெல்லாம் செய்யலாம். எட்டு வயதில் ஒரு கர்மம் இருக்கும். மாமியாருக்கு ஒரு சர்ஜரி இருக்கும். ஆயில், டீசல், பெட்ரோல் பங்க் இதில் வேலை செய்யலாம். இவர்கள் அதிகமாக வட்டி கட்டுவார்கள். குவாரி மண் சம்பந்தப்பட்ட தொழில் செய்யலாம். மறைவிட தொழில் செய்யலாம். பத்தாம் அதிபதி எட்டில் இருப்பவர்களுக்கு லக்னத்தில் சந்திரன் மாந்தி இருந்தால் இவர்கள் யாருக்குமே உணவு சாப்பிட கொடுக்க கூடாது, மீறி கொடுத்தால் அது வம்பில் போய் முடியும்.
பத்தாம் அதிபதி ஒன்பதாம் பாவத்தில் இருந்தால்
இது அவ தர்மகர்மாதிபதி யோகம். ஒரு விஷயத்துக்காக செலவு செய்து அவச்சொல் வரும். ஒன்பது வயதில் ஒரு கர்மம் இருக்கும். தந்தையின் தொழிலை செய்யலாம். ஆன்மீக யாத்திரை போகலாம். குருமார்களின் ஆசிர்வாதம் இருக்கும். ஆசிரியர் பெரியோர்களின் உபதேசம் இருக்கும். அரசு அரசாங்க தொடர்பு இருக்கும். இவர்கள் கௌரவமாக இருப்பார்கள். இவர்கள் மதம் சத்திரம் கோவில் இவையெல்லாம் பராமரிப்பு செய்யலாம். இவர்களின் தந்தையின் குடும்பம் பெரியதாக இருக்கும். தந்தைவழியில் பதவியில் உள்ளவர்கள் இருப்பார்கள்.
இவர்கள் மற்றவர்களிடம் பலனை எதிர்பாராமல் தர்மம் செய்வது நல்லது, எதிர்பார்த்து தர்மம் செய்தால் ஏமாற்றம் தான் வரும்.
ஜீவசமாதி, கல்லறை வழிபாடு நன்று. இவர்களுக்கு தொழில் தேடி வரும். மூன்றாவது குழந்தை இவர்களுக்கு அபார்ஷன் ஆகி இருக்கும். இந்த இடத்தில் கேது சம்பந்தப்பட்டால் தந்தைக்கு கல்லறை இருக்கும்.
பத்தாம் அதிபதி பத்தாம் பாவத்தில் இருந்தால்
இவர்களுக்கு நல்ல கௌரவம் இருக்கும். ஜீவன யோகம் இருக்கும். தாமத திருமணம் உண்டு. நிர்வாகத்திறன் நன்றாக இருக்கும். எதிலும் தலைமை தாங்கும் அமைப்பு இருக்கும். தானாகவே சமைத்து சாப்பிடுவார்கள். பிற்கால வாழ்க்கை இவர்களுக்கு நன்றாக இருக்கும். ஓய்வு ஊதியம் வாங்கும் யோகம் இருக்கும். Trust, சமுதாயம் கணக்கு பார்த்தல், விவசாயம் செய்யலாம். கர்மம் செய்ய ஒரு குழந்தை இருக்கும். மாமியார் வசதியானவர். இவர்களுக்கு வம்சம் விருத்தியாகும். 5 9 10 இந்த அதிபதிகள் யாராவது ஒருவர் லக்னத்திற்கு தொடர்பு கொண்டால் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
பத்தாம் அதிபதி 11ல் இருந்தால்
தொழிலில் லாபம் இருக்கும். பேராசை இருக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். சிலருக்கு இருதார யோகம் இருக்கும். இவர்கள் வேலைக்கு வந்தவர்களை இரண்டாம் தாரமாக கட்டிக் கொள்வார்கள். மூத்தவருக்கு கர்மம் இருக்கும். 50 வயதுக்கு மேல் தொழிலில் ஒரு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். தொழில் நண்பர்கள் சேர்க்கை இருக்கும். இவர்கள் பேச்சு லாப நோக்குடன் தான் இருக்கும். ஜோதிட தொழில் செய்யலாம். குல தொழில் செய்யலாம். பத்தாம் அதிபதி பதினொன்றில் இருந்து பதினொன்றாம் அதிபதி இந்த ஸ்தானத்தை பார்த்தால் மாமியார் நான்காவது பிறப்பு. சனி 6 8 12 ஆம் பாவங்களுக்கு அதிபதியாக இருந்தால் பொதுமக்களால் ஜாதகருக்கு பாதிப்பு இருக்கும்.
சந்திரன் 6 8 12 ஆம் பாவங்களுக்கு அதிபதியாக இருந்தால் பெண்களுக்கு நீர் போன்ற பாதிப்பு இருக்கும். ஜாதகருக்கும் நீரினால் பாதிப்பு இருக்கும். பத்தாம் அதிபதிக்கு கேது சம்பந்தப்பட்டு 5, 7, 9 இல் இருந்தால் அந்த காரக உறவை தெய்வமாக நினைப்பார்கள்.
பத்தாம் அதிபதி 12 ஆம் பாவத்தில் இருந்தால்
இவர் களுக்கு இரவு வேலை நல்லது. நிறுவனம் சார்ந்த வெளிநாடு போவார்கள் அல்லது இவர் வேலை செய்யும் நிறுவனம் வெளிநாட்டில் இருக்கும். .தொழிலில் வழக்கு விரையம் இருக்கும். இவர்கள் பயணம் செய்து செய்கின்ற தொழில் லாபத்தை கொடுக்கும். சர்வே, ஸ்கிராப் தொழில் லாபம் தரும். உயரமான இடத்தில் வேலை செய்வார்கள், கொஞ்சம் காலம் செய்யும் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்வார்கள். தொழில் பற்றி ஒரு பயம் இருக்கும். இறுதி காலம் வரை இவர்கள் உழைத்துக்கொண்டே இருப்பார்கள். இரண்டாவது தொழில் இவர்களுக்கு நல்லது. மணவாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. கோவில் திருப்பணி செய்வது, ஆன்மீக சொற்பொழிவு செய்யலாம். தடையை மீறி தான் தொழிலில் வெற்றி காண முடியும். தொழில் செய்யும் இடத்தை காலி பண்ண சொல்லி உரிமையாளர்களால் பிரச்சனை வரும். தொழில் செய்யும் இடத்தில் அருகில் ஜெயில், சுடுகாடு இருக்கும். தொழில் துவங்கிய உடன் ஒரு கர்மம் இருக்கும். தொழிலுக்காக விளம்பரம் செய்வார்கள். தானதர்மம் செய்வார்கள். இவர்களுக்கு விரையம் இருந்துகொண்டே இருக்கும்

No comments:

Post a Comment