Search This Blog

Tuesday, 24 December 2019

பத்தில் உள்ள கிரகம் தரும் பலன்கள்




பத்தில் உள்ள கிரகம் தரும் பலன்கள்

பத்தில் சூரியன் 



சூரியன் ஒருவருக்கு நல்ல விதமாக அமைந்து விட்டால் மதிப்பு மரியாதை 

எல்லாமே அவர்களுக்கு கூடிவரும்.


அரசாங்க உத்தியோகம் கிடைக்கும்.


அரசாங்கத்தை குறிக்கும் கிரகம் சூரியன் 10 ல் சூரியன் சம்பந்தப்பட்டால் 

செய்யும் தொழிலில் மரியாதை கௌரவம் இருக்கும், கிடைக்கும்.


சூரியன் மேலதிகாரிகளுக்கு காரகர் வகிப்பவர்.


இவர் துணை இருந்தால் கண்டிப்பாக பதவி உயர்வு முன்னேற்றம் கிடைக்கும்.


சூரியன் தொழிலில் நிரந்தரத்தை கொடுப்பவர்.


அரசியலுக்கும் இவர் காரகம் வகிக்கிறார். அரசியலில்இவர்கள் முன்னேற 

முடியும்.


இவர்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமாக 

நடந்துகொள்வார்கள்.


பத்தாம் பாவகம் சூரியனும் சம்பந்தப்படும்போது முதலாளித்துவத்தையும் 

கௌரவத்தையும் வலுப்படுத்துகிறது.


நிர்வாகிகள்.


அரசுக்கு நிகரான நிர்வாகம் இருக்கும்.


மருத்துவ குணம் இருக்கும்.


பத்தாம் அதிபதிக்கு சனி தொடர்பு இருந்தால் நீதித்துறை, நேர்மை சார்ந்த 

பணிகள் அமையும்.
சூரியன் சனி திக் பலம் ஸ்தான பலம் இந்த அமைப்பு இருந்தால் எல்லாவித அந்தஸ்தையும் கொடுக்கும்.
தந்தையின் தொழில், குல தொழில், நிர்வாகம் இவையெல்லாம் இவர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
இவர்கள் தொழிலில் வேலையில் தந்திரமாக செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
இவர்களுக்கு தொழில் நோக்கம் இருக்கும்.
அரசு அரசியல் தொடர்பான ஈடுபாடு இருக்கும்.
பத்தில் சூரியன் இருந்து அரசு சம்பந்தமே இல்லையென்றால் என்றாவது ஒருநாள் இவர்களுக்கு டெண்டர் வரும்.
மருத்துவ குணம் இருக்கும்.
இவர்கள் வம்சாவழியில்
மருத்துவர் இருப்பார்கள். யாராவது இவர்களிடம் மருத்துவம் பார்த்தால் நல்ல கைராசி இருக்கும்.
தலைமை தாங்குவது.
பக்ஞ்சு வாலாட்டி இவர்களுக்கு இருக்கும்.
இவர்களை புகழ்ந்து பேசினால் நன்றாக வேலை செய்வார்கள்.
பிரபலமான நிறுவனம் தொழிலில் வளர்ச்சி காண முடியும்.
இவர்கள் சின்ன தொழில் செய்தாலும் கூட வெளியில் நல்ல விளம்பரம் இருக்கும்.
தொழிலில் அதிக கற்பனை இருக்கும்.
ஆனால் தொழிலில் திருப்தி இருக்காது.
ஆபரணம் உண்டு.
ஆண் வாரிசு இருக்கும்.
பத்து வயதில் குடும்பம் வளர்ச்சி அடையும்.
ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும்.
திருப்தியற்ற தாம்பத்தியம் இருக்கும்.
தொழில் செய்யும் இடத்தில் ஆல் அரசு அதிக வருடமான பழைய மரம் இருக்கும்.
தொழில் செய்யும் இடத்தில் ஒரு தீபம் எரிந்து கொண்டே இருக்கும்.
ஆன்மீக குருமார்கள் சாமியார்கள் இருப்பார்கள்.
கோவில் அருகே இருப்பார்கள்.
ஒரு நாளாவது ஆன்மீக குருமார்கள் இவர்கள் வீட்டிற்கு வருவார்கள்.
தான தருமங்கள் உண்டு.
குழந்தை பிரிந்து வாழும் அல்லது குழந்தை பிறந்த பின் குடும்பம் தெரியும்.
பெரிய குடும்பத்துப் பிள்ளை.
புத்திர சோகம் இருக்கும்.
ஆண் கிரகம் கர்ம ஸ்தானத்தில் இருக்க ஆண் வாரிசு உண்டு.
ஆண் குழந்தை பற்றிய கவலையும் இருக்கும்.
புத்திர தோஷத்தை கொடுக்கும் கிரகங்கள் குரு, சூரியன், செவ்வாய் இவர்கள் புத்திர தோஷத்தை கொடுப்பதில் வல்லவர்கள்.
ஆன்மீக கிரகங்கள் சூரியன், கேது, புதன், சனி.
பத்தில் சந்திரன்
சந்திரன் நிலையில்லாத தன்மை கொண்டவர். .
சந்திரன் எங்கு இருந்தாலும் ஒரு மாற்றத்தை கொடுப்பவர்.
அதையும் தவிர மக்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பார்.
நல்ல கிரகங்களின் சேர்க்கை, பார்வை இருந்தால் மக்கள் தொடர்பு காரணமாக ரொம்ப பிரபலமாக இருப்பார்கள்.
பாபர் சேர்க்கை பெற்றிருந்தால் பொதுவாழ்க்கையில் கெட்ட பெயர் வந்து சேரும்.
இவர்கள் வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும்.
தொழிலில் இருந்தாலும், வருமானத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும்.
அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டி இருக்கும்.
சந்திரன் சர ராசியில் இருந்து பத்தாம் வீட்டோடு சம்பந்தப்பட்டால் வியாபார சம்பந்தமாக பிரயாணம் செய்ய வேண்டி வரும்.
சந்திரன் நீர் கிரகம். நீர் சம்பந்தப்பட்ட தொழிலில் இருப்பார்கள்.
சில பேர் கப்பல் சம்பந்தப்பட்ட தொழிலில் பணிபுரிவார்கள். தொழிலில் மாற்றம் வரும். தொழிலில் செய்யும் இடத்தை மாற்றுவார்கள். டிரான்ஸ்போர்ட் மூலம் வருமானம் வரும். பயணம் சார்ந்த வருமானம் உண்டு. வெளிநாட்டு வருமானம் உண்டு. இவர்கள் விவசாயம் செய்யலாம். இவர்கள் தொழில் செய்தால் பெண்களை அதிகமாக வேலைக்கு வைத்துக் கொள்வார்கள். கடல் சார்ந்த தொழில் இதில் முத்து குளித்தல், உப்பு எடுத்து வியாபாரம் செய்வது, இவர்கள் அம்மாவின் பெயரில் தொழில் இருக்கும். தொழில் செய்யும் இடத்தில் தண்ணீர் வரும். பதவி பறிபோவது Promotion மீடியா இவை சந்திரனைக் குறிக்கும். பத்தில் சந்திரனுடன் நான்காம் அதிபதி இருந்தால் அது மகர வீடாக இருந்தால் பக்கத்தில் சலவை செய்யும் இடம் இருக்கும். சாராயக்கடை, டாஸ்மார்க், கள்ளுக்கடை இவையெல்லாம் இருக்கும். இவர்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யலாம். தொழிலில் ஒரு விரையம் இருக்கும். ஒரு ஏமாற்றம் இருக்கும். பத்து வயதில் ஒரு இடமாற்றம் இருக்கும். இவர்கள் ஒரு ஏமாற்றத்தையும் சந்திப்பார்கள். பத்து வயதில் தாய்வழியில் ஒருகருமம் இருக்கும். ஜவுளி தொழில் பண்ணலாம். காய்கறிக் கடை வைக்கலாம், பழக்கடை வைக்கலாம்.
பத்தில் செவ்வாய்

செவ்வாய் தைரியத்தை குறிக்கும் கிரகம். போலீஸ் ராணுவம் இந்த மாதிரி தொழில் அமையும். தொழிற்சாலைகள், இயந்திரங்கள் இவையெல்லாம் செவ்வாய் குறிப்பதால் இவை சம்பந்தப்பட்ட வேலையை கொடுப்பார். நெருப்பும் இவர் அதிபதியாக இருப்பதால் நெருப்பு சம்பந்தமான வேலையும் இவர் கொடுப்பார். நிலம் வீடு போன்ற ஸ்திர சொத்துக்கும் இவர் அதிபதியாக வருவதால் இது சம்பந்தமான வேலைகளும் ஜாதகர் ஈடுபடுவார். செவ்வாய் நல்ல நிலைமையில் இருக்கப் பிறந்தவர்கள் வீடு வாங்கி விற்பது, ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் செய்வார்கள். செவ்வாய் வலு இல்லாமல் இருந்தால் வீட்டு வேலை செய்யும் தொழிலாளியாக இருப்பார்கள்.
சனியும் செவ்வாயும் சேர்க்கை இருந்தால் 10 வயதில் சொத்து இருக்கும். ஒரு ஆண் வாரிசு உண்டு. மருத்துவ குணம் இருக்கும். இவர்கள் வீட்டில் சீருடை பணிகள் உள்ளவர்கள் யாராவது இருப்பார்கள். இயந்திரம் தொடர்புடைய தொழில், சமையல், வாகன சம்பந்தப்பட்ட தொழில் இவையெல்லாம் பண்ணலாம். தொழிலில் சகோதரனை கூட வைத்துக்கொள்வார்கள். கடன் உண்டு. வழக்கு உண்டு. செவ்வாய் என்பது ஆன்மிக கிரகம், குடும்பத்தை பிரிந்து இருப்பது மனைவி, மக்களை பிரிப்பதில் வல்லமை உள்ள கிரகம் செவ்வாய்.
இவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் போனால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கால் மூட்டுகளில் காயம் ஏற்படும். ஒரு வெட்டு காயம் தழும்பு இருக்கும். தொழிலுக்காக வாகனம் வைத்துக் கொள்வார்கள்.
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் இவை பத்தாம் வீடாக வந்தால் அரசு வாகனம் பயன்படுத்துவார்கள்.
திதி சூன்யம் பாதகம் இருந்தால் குற்றவாளி, தண்டனை என்று போய் போலீஸ் வாகனம் இருக்கும்.
இவர்கள் தொழில் செய்யும் இடத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். தொழிலில் ஒரு டென்ஷன் இருக்கும். தொழில் சம்பந்தமாக போலீஸ் வருவார்கள். ஒரு ஆயுதம் இருக்கும். ஆயுதம் சார்ந்த தொழிலும் அமையும்.
தொழிலுக்கு இவர்கள் கரடுமுரடான பாதையை கடந்து செல்ல வேண்டி வரும். தொழிலில் ஒரு திருட்டும் நடக்கும்.
பத்தில் புதன் இருந்தால் 

கமிஷன் வியாபாரம். ஏஜென்சி தொழில் இந்தத் தொழிலில் ஜாதகருக்கு நாட்டம் இருக்கும். புதன் அறிவுக்கூர்மையை குறிக்கும் கிரகம்அதனால் புத்திக் கூர்மையை கொண்டுள்ள தொழிலில் சிறந்து விளங்குவார்கள். ஆலோசனை தொழில். ஜோதிடம், மாந்திரீகம் ஈடுபாடுடன் வேலை செய்வார்கள்.புதன் இரட்டை கிரகம் ஒரு சிலர் இரண்டு விதமான தொழில் செய்வார்கள். இரண்டு தொழில் அமையும். பத்தாமிடத்தோடு புதன் சம்பந்தப்பட்டால் எஜமானனாக இருப்பதைவிட ஒருவருக்கு கீழ் இருப்பதை விரும்புவார்கள்.இரண்டு தொழில், இரண்டு வருமானம். ஜோதிடர் ஆசிரியர் இருப்பார்கள். பணம் பரிவர்த்தனை, translation ,கம்யூனிகேஷன், ரீசார்ஜ் ஜெராக்ஸ், கூட்டுத் தொழில் செய்யலாம். பத்து வயதில் ஒரு பாகப்பிரிவினை இருக்கும். ஏஜென்சி, பத்திரிக்கை, நியூஸ் பேப்பர் செய்திகள், டெண்டர் போடுவது இந்தமாதிரி தொழிலும் பண்ணலாம். தொழிலுக்காக வங்கிகள் கடன் வாங்குவார்கள். 40 வயதுக்கு மேலேயும் தொழில் செய்து கொண்டு படிப்பார்கள் MLM தொழில் பண்ணலாம் அதாவது செயின் லிங்க். தவணை முறையில் தொழில். சீட்டு தொழில். ஆடிட்டர். தாய்மாமன் உடைய தொழில் பண்ணலாம்.
பத்தில் குரு இருந்தால் 

குரு ஒரு சுப கிரகம். புகழையும் பதவியும் கொடுப்பார். குரு தன காரகன். பணம் புழங்குகின்ற இடத்தில் இவர்களுக்கு வேலை அமையும். பேங்க், கருவூலங்கள் அந்த மாதிரி பணம் புழங்கும் இடத்தில் வேலை கிடைக்கும். நியாயமான முறையில் சம்பாதிப்பார்கள். குரு வேதாந்தம் மதங்களை குறிக்கும் இது சம்பந்தமான வேலையும் கிடைக்கும். குருவானவர் உயர்ந்த பதவியை கொடுப்பார். குருவுக்கு பாவரோட சேர்க்கையோ பார்வையோ இருந்தால் மிக மிக சாதாரணமான பதவியில் தான் இருப்பார்கள். ஆண் வாரிசு உண்டு. ஆண் குழந்தையை பற்றிய கவலை இருந்துகொண்டே இருக்கும். தொழிலில் ஒரு வளர்ச்சி இருக்கும். ஒரு பதவியில் இருப்பவர்களிடம் பொறுப்பில் உள்ளவர்களிடம் தொடர்பில் இருப்பார். குருவின் நட்சத்திரம் உடைந்த நட்சத்திரம் பயணம் கலந்த தொழில் இருக்கும். ஜோதிடத்தில் மிகத்தெளிவான நீட்டான வெளிப்பாடு இருக்கும்.இவர்கள் குடும்பத்தில் அன்ன தானம் செய்தவர்கள் யாராவது இருப்பார்கள்.
இவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி இருக்கும் இவர்கள் அன்னதானம் கொடுத்து மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். ஆடை தானம் பண்ணலாம். கோவில் திருப்பணி செய்யலாம்.
சூரியனும் குருவும் சேர்ந்தால் மதம் சார்ந்த தொழில் பண்ணுவார்கள். ஷேர் மார்க்கெட் செய்யலாம்குழந்தை பிறந்த போது ஒரு கர்மம் இருக்கும். பத்து வயது இருக்கும் போது ஒரு குழந்தை உறவில் பிறந்திருக்கும். கோவில் அருகே வீடு இருக்கும். குழந்தைகளுக்காக சேமித்து வைப்பது குரு.
பத்தில் குரு இருந்து ஏழாம் பார்வையாக நான்காம் இடத்தை பார்ப்பதால் சொத்தை இழக்க வைத்து பின் வாழ்க்கையில் சுகபோகமான வாழ்க்கையை கொடுக்கும். குருவின்ஏழாம் பார்வை கேந்திர பார்வை இது சிறப்பு இருக்காது. குரு புதன் சுக்கிரன் 7 கட்டத்திற்கு மேல்யாராவது ஒருவர் இருப்பது சிறப்பு.
பத்தில் சுக்கிரன் இருந்தால் 

கலைக்கு அதிபதியான கிரகம் சுக்கிரன். இவர் பத்தாம் வீட்டோடு சம்பந்தப்பட்டால் கலைத் தொழிலில் பிரகாசிக்கலாம். வண்டி, வாகனம் குறிக்கும்கிரகம் சுக்கிரன்.வாகனம் சம்பந்தப்பட்ட துறையிலும் பணி புரியலாம். சுக்கிரன் பெண்களுக்கு காரகம் வகிப்பவர். சுக்கிரன் சுபர்களின் சேர்க்கையோ பார்வையோ இருந்தால் பெண்களால் அனுகூலம் அடைவார்கள். இரண்டாம் இரண்டாம் வீட்டுடன் சம்பந்தம் ஆனால் ரொம்ப இனிமையாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். அழகு சாதனத்தை குறிப்பவர் சுக்கிரன்தான் அழகு சாதனம் சம்பந்தப்பட்ட தொழிலும் செய்யலாம். வாகன தொழில், சுற்றுலா தொழில், சினிமா தொழில். அழகுக்கலை தொழில், வெள்ளி ஆடை ஆபரணம். பசு வளர்த்தல். உல்லாச விடுதி தொழில் செய்யலாம். மனைவியால் வருமானம் இருக்கும். மனைவி பெயரில் தொழிலில் இருக்கும். பட்டு தொழில், பட்டுப்பூச்சி வளர்த்தல். உயர்ரக மதுபானங்கள். ஆடம்பர பொருட்கள், அழகு பொருட்கள். வீட்டு உபயோக பொருட்கள். பசு பண்ணை, பால்பண்ணை. பழக்கடை. இனிப்பு தொழில் செய்யலாம். பத்து வயதில் உறவில் ஒரு திருமணம் நடந்திருக்கும்
பத்தில் சனி இருந்தால்

பத்து வயதில் ஒரு கர்மம் இருக்கும். சொந்தத் தொழில் செய்யும் எண்ணம் இருக்கும். 50 வயதுக்கு மேல் வளர்ச்சி உண்டு. உழைப்பின் மூலம் வருமானம் இருக்கும்.சனி நேர்மையான கிரகம் பொதுசேவை ஈடுபாடு இருக்கும். வர்மம். நரம்பு எண்ணெய். இயற்கை மருத்துவம் இது இவர்களுக்கு பிடித்தமான தொழில். தொழிலில் திருப்தி இல்லாமல் பணம் வாங்குவார்கள்.
இவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும்.
இவர்கள் நன்றாக வேலை செய்தால் தான் மனசு சாந்தியடையும். தொழிலில் தடை தாமதம் இருக்கும். குப்பை மேடு, கழிவுதொல்லைகள் இருக்கும். டெலிபோன், ஜெராக்ஸ் கடை வைக்கலாம். முடி வெட்டுதல். Scrap ஏலம் எடுத்தல்.மணல் குவாரி. கார் வண்டி .கிரானைட் தொழில் செய்யலாம். இவர்கள் தொழில் சுடுகாடு அருகே தான் இருக்கும். தோல் shop வைக்கலாம். இவர்கள் வாழ்க்கையில் கஷ்டபடுவார்கள். வாழ்க்கையின் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். 40 வயதுக்கு மேல் தான் முதலீடு போட்டு வேலை செய்வார்கள். உபஜெய ஸ்தானத்தில் பாவர்கள் இருந்தால் பெரும்பாலும் நல்ல பலன்களையே கொடுப்பார்கள்.
டிப்ஸ்
உபஜெய ஸ்தானத்தில் 3, 6, 10, 11 இல் பாவிகள் இருந்தால் நன்மையான யோகம் தான். ஆனால் ஆரோக்கியம் குறைவாக இருக்கும் உபஜெய ஸ்தானத்தில் சுபர்கள் இருந்தால் யோக பலன் குறைவு பாதுகாப்பு அதிகமாக இருக்கும்.
பத்தில் ராகு இருந்தால் 
வெளிநாடு, வெளிமாநிலம், ஏற்றுமதி-இறக்குமதி. உதிரிபாகங்கள் தொழில் செய்யலாம். சர்வீஸ், ரிப்பேர். ஸ்பேர் பார்ட்ஸ் கடை. பிளாஸ்டிக், பாலித்தின். விஷ மருந்து. டாஸ்மார்க். ரகசிய தொழில். கொலைத் தொழில். ஸ்டூடியோ, கேமரா, பிலிம், பிம்பம் தொழில்கள் அமையும். எலக்ட்ரானிக்ஸ் பண்ணலாம் ஜோதிடம் மாந்திரீகம், வாஸ்து பண்ணலாம். ராகுவின் ஆதிக்கம் இருந்தாலே ஜோதிடத்தில் ஜெயிக்கலாம் அதிர்வலைகளை கண்டறிய ராகு பயன்படும் ஒன்றுக்கு மேற்பட்ட தொழில் செய்வார்கள். பத்து வயதில் ஜாதகருக்கு மூன்று கண்டம் வந்திருக்கும்.பத்தில் ராகு இருந்தால் மாமியார் இவர்கள் வீட்டில் தான் இருப்பார்

பத்தில் கேது இருந்தால் 

மருத்துவம் நன்று. ஜோதிடம் நன்று. சந்துக்குள் தொழில் இருக்கும். பெரிய இடம்


இவர்களுக்கு ஆகாது. தொழிலில் தடை தாமதம் இருக்கும். தொழிலில் வழக்கு 

இருக்கும். கடன் உண்டு. இவர்கள் தொழில் செய்யும் இடத்தில் விநாயகர் 

கோவில் ஆஞ்சநேயர் கோவில் இருக்கும். கர்மம் செய்வதற்கு தடை இருக்கும்

கேது என்றாலே பின்ன கூடியது டிசைன் போடுவதுப்ளூ பிரிண்ட். சென்ட்ரிங் 

வேலை செய்யலாம். தொழிலில் ஒரு விரக்தி இருக்கும் சனி என்றால் தொழில் 

காரகன். சனியுடன் குரு, சுக்கிரன், புதன், சூரியன், ராகு இவர்கள் யாராவது 

ஒருவர் சேர்ந்தால் ஒரு வளர்ச்சி இருக்கும். சனியுடன் கேது சந்திரன் செவ்வாய் 

சேர்ந்தால் பலவீனமாகத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment