பிறப்பின் இரகசியம் -2
14 – குழந்தையின் பாலினம் – 15 - கருத்தரித்த இலக்னம் ( இனி, இதைக் கரு இலக்னம் எனவே
அழைப்போம்.) சூரியன், சந்திரன் மற்றும் குரு ஆகியவை பலம் மிக்கதாக இருக்கவும், இவை,
ஒற்றைப்படை இராசிகளில் அமர்ந்து, அவை தங்கள் சுய நவாம்சத்தில், ஒற்றைப்படை இராசிகளில்
இருக்கவும், ஆண் மகவை எதிர்பார்க்கலாம். மேற்சொன்ன விஷயங்களில் பெரும்பாலனவை இரட்டைப்படையில்
இருக்க பெண் குழந்தையை எதிர்பார்க்கலாம். சூரியன் மற்றும் குரு ஆகியோர் பலம் மிக்கவர்களாக
இருந்து, ஒற்றைப்படை இராசியில் இருந்தால் ஆண் மகவும், சந்திரன் மற்றும் செவ்வாய் பலம்
மிக்கவர்களாகவும் பெண் இராசிகளில் இருக்கவும் பெண் குழந்தைப் பிறப்பை எதிர்பார்க்கலாம்.
16 – இரட்டைக் குழந்தைகள் – சூரியன் மற்றும் குரு ஆகியோர், தனுசு
அல்லது மிதுன இராசிகளில் புதனின் பார்வையோடு
இருக்க இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கும். அதுவே, சந்திரன், செவ்வாய் மீனம் மற்றும்
கன்னியில் இருந்து, புதனின் பார்வை பெற இரட்டைப் பெண் குழந்தைகள் பிறக்கும்.
17 – 20 இலக்னத்தைத் தவிர மற்ற ஒற்றைப்படை இராசிகளில் சனி இருக்க,
ஆண் குழந்தை குறிகாட்டப்படுகிறது.
கருத்தரிப்பு
நேரத்தில், உள்ள கிரகங்களின் பலம், யோகங்கள் ஆகியவற்றைப் பொருத்தே, குழந்தைப் பிறப்பு,
ஆணா ? பெண்ணா ? என்பதை நிர்ணயிக்க முடியும். ( கருத்தரிக்கும் இலக்னம் என்பது கருத்தரிக்கும்
நேரத்தில் கணிக்கப்படுவதாகும். இதற்கு, உண்மையான பொருள் என்னவெனில், ஆணின் விந்து,
பெண்ணின் கருமுட்டையுடன் இணையும் நேரமே, கருத்தரிக்கும் நேரம் எனக் கருதப்படுகிறது.
எனவே, ஆண், பெண் புணரும் நேரத்தை, கருத்தரித்தல் நேரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
திருநங்கை (அலிப்
பிறப்பு) பிறப்பு – சூரிய சந்திரர்களுக்கு இடையேயான நேர் பார்வை, அல்லது புதன், சனி
ஆகியோர்க்கு இடையேயான நேரடிப் பார்வை ஏற்படின், அலிப் பிறப்பு குறிகாட்டப்படுகிறது.
சூரியன் இரட்டைப்படை
இராசிகளில் அல்லது இலக்னம், சந்திரன் ஒற்றைப்படை இராசிகளில் இருந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டால்
திருநங்கை பிறப்பு ஏற்படும். புதன் ஒற்றைப்படை இராசியில் இருந்து, சந்திரன் இரட்டைப்படை
இராசியில் இருப்பதுவும், திருநங்கைப் பிறப்புக்குக் காரணமாகிறது.
இலக்னம், சந்திரன்,
புதன் ஒற்றைப்படை இராசியில் நிற்க, அவர்களின் நவாம்சம் இரட்டைப்படையில் விழவும், சனி,
சுக்கிரனின் பார்வை ஏற்படவும், அது திருநங்கைப் பிறப்பாகிறது. (இப்பேர்பட்ட, அலிப்பிறப்புக்குக்
குறிப்பிடப்பட்ட, இணைவு யோகங்கள், மலட்டுத் தன்மைக்கும் காரணமாகிறது.
21 – 22 – இரட்டையில்,
ஆண் ஒன்று, பெண் ஒன்றாகப் பிறப்பது. இலக்னமும், சந்திரனும், இரட்டைப்படை இராசிகளில்
இருந்து, பலம்மிக்க ஆண் கிரகத்தால் பார்க்கப்படுவது, ஆண் ஒன்று, பெண் ஒன்றாக்க் கருத்தரித்தலைக்
குறிகாட்டுகிறது. சந்திரன், சுக்கிரன் இரட்டைப்படை இராசிகளில் இருந்து, பலம் மிக்க,
இலக்னம், புதன், மற்றும் குரு ஆகியோர் ஒற்றைப்படை இராசியில் இருக்க அல்லது உபய இராசிகளில்
இருக்க, ஆண் ஒன்று, பெண் ஒன்று கருத்தரிப்பதைக் குறிகாட்டுகிறது.
23 – 24 – ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் – கருத்தரிக்கும்
நேரத்தில், இலக்னம், மற்றும் அனைத்து கிரகங்களும் உபய இராசியில் இடம் பெற்று, புதனால்
பார்க்கப்பட்டு, நவாம்சத்தில் மிதுனத்தில் இடம்பெற, ஆண் குழந்தை 2, பெண் ஒன்றாக மூன்று
குழந்தைகளுக்கான பிறப்பை எதிர்பார்க்கலாம். இந்த இணைவுகளோடு, புதனின் நவாம்சம், கன்னியில்
விழ, ஆண் ஒன்று, பெண் இரண்டு என, மூன்று குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு எனலாம்.
புதன், மிதுன
நவாம்சம் பெற்று, மிதுனத்தில் உள்ள, இலக்னம் மற்றும் அனத்து கிரகங்களையும் பார்க்க
அல்லது அவற்றின் நவாம்சம் மிதுனம் அல்லது, தனுசு ஆக, மூன்று ஆண் குழந்தைகள், ஒரே பிரசவத்தில்
பிறக்க வாய்ப்புண்டு.
புதன், கன்னி
நவாம்சம் பெற்று, கன்னியில் உள்ள, இலக்னம் மற்றும் அனத்து கிரகங்களையும் பார்க்க அல்லது
அவற்றின் நவாம்சம் கன்னி அல்லது, மீனம் ஆக, மூன்றுபெண் குழந்தைகள், ஒரே பிரசவத்தில்
பிறக்க வாய்ப்புண்டு.
குறிப்பு – சுலோகங்கள்
14 முதல் 26 வரையான கிரக நிலைகள் மற்றும் இலக்னம், கருத்தரிக்கும் நேரத்திற்கு உரிய
கணிதம் ஆகும்.
27 – கருத்தரித்தல் பகலில் உண்டானது எனின், சுக்கிரன், சூரியன்
முறையே தாய், தந்தையரைக் குறிக்கும். இரவில் எனில், சந்திரன், சனி ஆகியோர் முறையே தாய்
தந்தையைக் குறிக்கும். அதே போல் பகலில் கருத்தரித்தால், சந்திரன், தாயின் சகோதரியை
அதாவது சித்தியைக் குறிக்கும். சனியோ, தந்தைவழி மாமனையும், இரவில் எனில் சுக்கிரன்,
சித்தியையும், சூரியன், தந்தை வழி மாமனையும் குறிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
28 . தந்தைக்கும், தந்தை வழி மாமனுக்கும் குறிகாட்டக் கூடிய
கிரகங்கள், இலக்னத்துக்கு, ஒற்றைப்படை இராசியில் இருந்தால், அவர்கள் சிறப்பாக இருக்கிறார்கள்
என்பதைக் குறிகாட்டும். அதுவே, இரட்டைப்படை எனில், தாய் மற்றும் தாயின் சகோதரியின்
நன்நிலையைக் குறிகாட்டும்.
இந்த நிலைகள் மாறி இருந்தால், குறிப்பிடப்பட்ட நபர்களுக்கு
கஷ்ட நிலைகளைக் காட்டும். உதாரணமாக, பகலில் கருத்தரித்தல் ஏற்பட்டு, சூரியன் இரட்டைப்படையில்
இருக்க நேர்ந்தால், அது தந்தைக்குக் கஷ்டங்களையே கொடுக்கும். இதைப் போலவே மற்ற நிலைகளுக்கும்
பார்த்துக் கொள்க.
கரு வளரும் நிலை –
29 – 30 – கருத்தரித்த நாளில் இருந்து முதல் மாதக் கடைசியில்
கரு – ஓரளவு, சதைப் பிண்டமாகக் காட்சி அளிக்கும். இரண்டாவது மாதக் கடைசியில் ஓரளவு
கடினமான மாமிச உருண்டை வடிவில் இருக்கும். மூன்றாவது மாத இறுதியில், பலவேறு உறுப்புகள்
உரு எடுக்கும் நிலையில் இருக்கும். நான்காவது மாதக் கடைசியில், எலும்புகள் உருவாகும்.
ஐந்தாவது மாதக் கடைசியில், தோல் உருவாகும். ஆறாவது மாதக் கடைசியில் மயிர் வளரும்.
7 வது மாதக் கடைசியில் உணர்வுக்கான உறுப்புகள் உருவாகும். 8 வது மாதக் கடைசியில், திரிதோஷம்
எனப்படும், கபம், பித்தம், வாதம் மற்றும் பசி உருவாகும். 9 ஆம் மாதக் கடைசியில், முழுஉருவமாக
உருவாகி, 10 வது மாதத் தொடக்கத்தில் பூமியில் பிறப்பெடுக்க, வெளியில் வரத் தயாராகும்.
கருத்தரிப்புக்குப்பின்
ஒவ்வொரு மாத்த்தையும் ஆட்சி செய்யும் கிரகங்கள் – 1. சுக்கிரன். 2. செவ்வாய், 3. குரு,
4.சூரியன், 5. சந்திரன், 6. சனி, 7.புதன். 8 கருத்தரித்த இலக்னாதிபதி. 9. சந்திரன்,
10. சூரியன் ஆகும். இந்த 10 மாத அதிபதிகள் மூலமாக, கருவறையில், குழந்தையின் ஆரோக்கியம்
மற்றும் மாற்றங்கள் ஆகியவற்றை நிச்சயிக்கலாம்.
30 – 33 – கருச்சிதைவு –
மேலே குறிப்பிடப்பட்டுள்ள, 10 மாதத்திற்கான கிரகங்கள், தங்களுக்கிடையே
ஏற்பட்ட கிரக யுத்தத்தில் தோற்றாலோ, கிரக அஸ்தமனம் ஆனாலோ, நீச மற்றும் பகை வீட்டில்
இருந்தாலோ அல்லது மிகையான அசுபத் தாக்கம் பெற்றாலோ, குறுப்பிட்ட கிரகத்தின் மாதத்தில்,
கருச்சிதைவு ஏற்படும். செவ்வாய் மற்றும் சனி கரு. இலக்னத்தில் நகரும் போதும் அல்லது
கோசார சந்திரன் , கரு. இலக்னத்தில், நகர்ந்து, அதை சனி அல்லது செவ்வாய் பார்த்தாலும்,
கருச்சிதைவு ஏற்படும்.
34 - சுகப் பிரசவம் –
இராசியில் அல்லது கரு. இலக்னத்தில் சுபர் இருக்கவும் அல்லது
பார்க்கவும் சுகப் பிரசவம் ஏற்படும். 2, 4, 5, 7, 9 மற்றும் 10 ஆகிய பாவங்களில் சுபர்
அமர்ந்தாலும், அல்லது 3, 6, 11 ஆகிய பாவங்களில்
அசுபர் அமர்ந்தாலும், அல்லது கரு. இலக்னம்\சந்திரன், சூரியனால் பார்க்கப்பட்டாலும்
சுகப் பிரசவம் ஏற்படும்.
35 – 37 – கருவுற்ற பெண்ணின் மரணம் –
கருவுற்ற நேரத்தில் சூரிய சந்திரர்கள் வெவ்வேறு, இராசிகளில்,
பாவ கர்த்தாரியில் இருந்தாலும், அவர்களுக்கு சுபர் திருஷ்டி இல்லாமல் இருந்தாலும்,
சூரிய, சந்திரர்கள் இணைந்து ஒரே இராசியில் இருந்து, சுபர் பார்வையின்றி, அவர்கள் பாவகர்த்தாரியில்
இருந்தாலும், கர்பணிப் பெண் பிரசவத்துக்கு முன்பே இறந்து விடுவாள்.
இலக்னத்திலும்,
7 ஆம் பாவத்திலும் சுபர்கள் பார்வை இன்றி அசுபர் அமர்ந்து இருந்தாலும், பலம் இழந்த
சந்திரன் இல்லது சனி இலக்னத்தில் அமர்ந்து, செவ்வாயால் பார்க்கப்பட்டாலும், 12 இல்
சூரியனும், 4 இல் செவ்வாயும், பலமிழந்த நிலையில் சந்திரனும், அல்லது சுக்கிரன், சுபர்
பார்வை இன்றி பாவகர்த்தாரியில் இருந்தாலும், மேற்படி நிலையே ஏற்படும்.
38 – 40 – தாயும், சேயும் இறப்பு – கரு. இலக்னம் அல்லது சந்திரனுக்கு
4 ஆம் வீட்டில், அசுபர் இருக்கவும், 7 ஆம் வீட்டில் அல்லது இலக்னத்தில் செவ்வாய் அமர்ந்தாலும்,
தாய், சேய் இறப்பைக் குறிகாட்டும். செவ்வாய் 4 இல், சூரியன் 12 இல், பலமற்ற சந்திரன்
இருந்து அசுபர் பார்வை பெறவும், இலக்னத்தில் சூரியன், பலமிழந்த சந்திரன் அல்லது செவ்வாய்
இருந்து, 2 மற்றும் 12 ஆம் இடங்களில், சுபர் பார்வை பெறாத, அசுபர் இருந்தாலும், தாய்,
சேய் மரணம் நிகழும்.
41 – சூரியனும், செவ்வாயும்கிலக்னத்திலும், 7 ஆம் வீட்டிலும்,
எதிர் எதிரே இருக்க அல்லது இருவரும் இணைந்து இலக்னத்திலோ அல்லது 7 ஆம் வீட்டிலோ அமர,
அந்த கர்பிணிப் பெண் ஆயுதத்தால், மரணிப்பாள்.
42- கரு. இலக்னமானது, பலம் மிக்க புதன், குரு, சுக்கிரன் அல்லது
சூரியனால் பார்க்கப்பபட, சுக பிரசவம் உறுதியாகும். அந்தந்த மாதத்திற்கான அதிபதிகளின்
பலத்தைப் பொறுத்து, குழந்தையின் ஆரோக்கியம், பொது வளர்ச்சி ஆகியவை இருக்கும்.
43 – கருவுற்று, 3 ஆம் மாத அதிபதியின் வர்க்க மேன்மைகளைப் பொறுத்தும்,
நற்கிரக பார்வைகளைப் பொறுத்தும், கரு. இலக்னத்திலுள்ள கிரகத்தின் பலத்தைப் பொருத்தும்,
கர்பிணிப் பெண் உண்ணும் உணவு, நொறுக்குத் தீனி, நீராகாரம் ஆகியவற்றின் ருசியானது மாறுபடும்
அல்லது மேம்படும்.
44 – கரு. இலக்னம் அல்லது சூரியன் சர இராசியில் இடம்பெற, பிரசவம்
10 மாதத்திலும். ஸ்திர இராசியில் இடம்பெற, 11 ஆம் மாதத்திலும், உபய இராசி எனில் 12
ஆம் மாதத்திலும் பிரசவம் நிகழும் எனலாம். இதே, நிலையையே, இராசியை வைத்துப் பார்க்கும்
போதும் நிகழும்.
45 – 47 கரு உருவானபோது கணக்கிடப்படும் இராசிக் கட்டத்தின்,
ஷட்வர்க்க கணிதத்தின் மூலமாக பிரசவ நேரத்தை அனுமானிக்கலாம். கருவுருவான நட்சத்திரத்தில்
இருந்து 10 வது நட்சத்திரத்தில் குழந்தைப் பிறப்பை எதிர்பார்க்கலாம் என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் சில அறிஞர்கள், இராசிக்கோ, கரு. இலக்னத்திக்கோ, 7 ஆம் இடம், பிறக்கும் குழந்தையின்
பிறப்பு இலக்னமாக அமையும் எனக் குறிப்பிடுகின்றனர். ஆயினும் கீழ்க்கண்ட விதிகளை அனைத்து
அறிஞர்களுமே ஒத்துக் கொள்கின்றனர் எனலாம்.