இராகு - கேது காரகங்கள்
இராகுவும், கேதுவும் கிரகங்களாகக் கருதப்படுவதில்லை. அவை வெறும் புள்ளிகளே. அவற்றை நிழல் கிரகங்கள் என அழைக்கிறோம். மேற்கத்திய ஜோதிடத்தில் இவற்றை முறையே டிராகன்ஸ் ஹேட் அல்லது அஸண்டிங் நோட்ஸ் என்றும் டிராகன்ஸ் டெயில் அல்லது டிஸண்டிங் நோட்ஸ் என்றும் அழைக்கிறார்கள். காளிதாஸரின் கூற்றுப்படி இராகு ரிஷபத்தை உச்ச வீடாகவும், விருச்சிகத்தை நீச வீடாகவும் கொண்டுள்ளது எனவும், துலாம் மற்றும் மகரம் நட்பு வீடாகவும், கடகம், சிம்மம் பகை வீடாகவும் மேஷம், தனுசு, மீனம் சம வீடுகளாகவும் கருதப்படுகின்றன.
கேதுவுக்கு விருச்சிகம்
உச்ச வீடாகவும், ரிஷபம் நீச வீடாகவும், கன்னி மூல திரிகோண வீடாகவும், துலாம், மகரம்
நட்பு, கடகம், சிம்மம் பகை, மேஷம், தனுசு, மீனம் சம வீடுகளாகவும் கருதப்படுகின்றன என்றும்
குறிப்பிடுகிறார். நிழல் கிரகங்கள் இரண்டுமே அசுபராவார். ஆனால், பொதுவான விதியாக உச்சம்
பெறுகையில் பலம் மிக்கவர்கள் ஆகின்றனர். மேலும், இராகு 4, 7, 9 அல்லது 10 அல்லது
11 ஆம் இடங்களில், கேது 3 ஆம் இடத்திலும் சுபராகக் கருதப்படுகின்றனர். இராகு, சனியை
போன்றும், கேது செவ்வாய் போன்றும் குணங்களைக் கொண்டுள்ளார்.
இராகு மற்றும் கேதுக்கள் காதல் விவகாரங்களையும், தீய
எண்ணங்களையும், திருப்தியின்மை, தந்தை வழி தாத்தா, குஷ்டம், பயந்த சுபாவம்,
பொய்யர், முறையற்ற உறவுகள், கடினமான பேச்சு, புனித யாத்திரைகள், மலட்டுத்தன்மை,
தத்தெடுத்தல், கண்பார்வைக் குறைவு, ஆரோக்கியமின்மை, உடலுறவுகள், தூண்டுதல், தனிமை
வாழ்க்கை, மனமுதிர்ச்சியற்ற, விபத்தால் காயமடைதல், தீக் காயங்கள், தாமதங்கள், தடைகள், மெதுவாக
வேலை செய்தல், இருப்பிட மாற்றம், அதிகாரிகளின்,
அனுகூலமற்ற நிலை, கொடூர குணம், பிள்ளைகளால் கவலை, பொருளாதார இலாபம், இருதார
நிலை, சந்தேக குணம், மற்றும் மனம்,
ஆபரணங்கள் மற்றும் திக்குவாய் ஆகியவற்றைத் தருகின்றன. இராகு இருமல்,
சுறுசுறுப்பின்மை, அருவருப்பான, குடல் உபாதைகள், அல்சர், கட்டிகள், மண்ணீரல்,
இதயத்துடிப்பு பிரச்சனைகள், முடக்குவாதம், ஆகியவற்றையும், கேது- குடல் புழு,
பெருவாரியான தொற்று நோய்கள், காய்ச்சல், குறைந்த இரத்த அழுத்தம், காது கேளாமை,
திக்குவாய் ஆகியவற்றிற்கும் காரணமாகின்றன.
இராகு கேதுகள் அவை நின்ற வீட்டின் அதிபதி, இணையும், பார்வை புரியும் கிரகங்களின்
குணங்களைக் கிரகித்துக் கொண்டு தானே பலன்களை அளிக்கின்றன.
இராகு – தற்புகழ்ச்சி,
பிறரை ஏமாற்றுதல், மெஸ்மரிஸம், மூர்ச்சை நோய், நாடகம், இசை, சினிமா சம்பந்தமான
தொழில்கள், கோமாளி, போலி, திருட்டு, மோசடி, கொள்ளையடித்தல், கொலைவேறி, அடிமைப்
படுதல், வெளிநாடு சென்று குடியேறுதல், மதக் கோட்பாடுகளுக்கு மாறுபட்ட,
சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுதல், ஆள் மாறாட்டம், விதவை, நோயுற்ற
பெண் ஆகியோருடன் உறவு கொள்ளுதல், விஷ ஜந்துக்களிடம் பயம், சிறைப்படுதல், போர்,
கீழ்த்தரமான பழக்க வழக்கங்கள், பொறாமை குணம், வெறுக்கப்படுதல், குடிப்பழக்கம்,
கருப்பு, புடலங்காய், முருங்கக்காய். வெங்காயம், பலாப்பழம், பஞ்சு, கங்கையில் குளித்தல்,
ரேடியோ, தந்தி, தொலைபேசி, கோமேதகம், பகல் பொழுதில் உடலுறவு கொள்ளுதல், மூங்கில்,
ராட்சத எந்திரங்கள், பனைமரம், வெளிநாட்டு மொழி, பச்சைப் புல், பாம்பு பிடிப்பவர்,
புத்த மதத்தினர், கழுதை, செம்மரியாடு, நரி, கொசு, ஈ, மூட்டைப் பூச்சி, பூச்சிகள்,
ஆந்தை, பழைய துணிகள், பாம்புப் புற்று, எறும்புகள், ஆகிய காரகங்களையும் உடையவர்.
கேது – தவறான அறிவு,
தாய் வழிப் பாட்டி, மோசடி, சுய இன்பம், பஞ்சமகா பாதகங்கள், கீழ்த்தரமான நடத்தை,
பாவத் தொழில், தோல் பதனிடுதல், கசாப்புக்கடை, செங்கல் சூளை, வெளி நாட்டில்
குடியேறுதல், அடிமைப் படுதல், அல்ஸர், ராஜபிளவை,
நீர் கோர்வை, பாண்டு, குஷ்டம், அஜீரணம், புற்று நோய், சயரோகம், விபசாரம்,
சிறைப்படுதல், தண்டனை அனுபவித்தல், தண்டத் தீர்வை செலுத்தல், டார்ச் லைட்,
கொள்ளையடித்தல், கொலை செய்தல், சிசுக் கொலை, பொறாமை குணம், வெறுத்தல், வறுமை,
தரித்திரம், பதியிடுதல், அறியாமை, போர், கசாப்புக் கடைக்காரர், நாசம், போரில் மரணம்,
எப்போதும் புகைப்பிடித்தல், பாம்புகள், விஷக் காய்ச்சல் போன்ற தொற்று நோய், விஷ
ஜந்துக்கள், துரோகம் செய்தல், காட்டிக் கொடுத்தல், காம
இச்சை, இருட்டு, சிகப்பு, வெடி மருந்து, கொள்ளு, ஞானம், பல வண்ண ஆடை, எப்போதும்
புகைப் பிடித்தல், பிராமணர், தோப்பு, கணபதி, அடிமைத் தளை அறுத்தல், மோட்சம், இடது
கண், உபாசனை, செம்மரியாடு, யானை, கால்கள், வெளிநாட்டு மொழி.
No comments:
Post a Comment