உ
கோள்களின் நிலையும், கொரோனா வைரஸும்.
நவம்பர், 2019 இல், குருவானவர், தனுர் இராசியில்,
கேதுவின் சாரத்தில் அமர்ந்துள்ளார். கேதுவும் இணைந்துள்ளார். இங்கு முக்கியமாக கருத்தில்
கொள்ளப்படவேண்டியது இரண்டு, ஒன்று, கேது நட்சத்திரம் மூலம். கேதுவுடன், குரு இணைந்துள்ளார்.
மூலத்திற்கு அதிதேவதை அழிக்கும் கடவுளான – நிருருதி ஆவார். அடுத்து, கேதுவானவர், நீண்டகாலமாக
தீர்க்க முடியாத நோய் மற்றும் கட்டுப்படுத்த முடியாத கொள்ளை நோய்களுக்கும் காரகராகிறார்.
வைரஸ், பாக்டீரியா, பங்கஸ் போன்றவற்றிற்கு நிழல் கிரகங்களான இராகு, கேதுக்கள்
காரகத்துவம் பெறுகின்றனர். ஆரோக்கியக் குறைவு
மற்றும் நோய் ஆகியவற்றிற்கு சூரிய புத்திரன், சனி காரகர் ஆகிறார். ஜீவகாரகனான தேவகுரு
வாழ்பவர்கள் மற்றும் வாழ்க்கை வாழ்வதற்கான காரகத்துவம் பெறுகிறார். மேற்சொன்ன, 2019 – நவம்பர் மாதம் இந்த மூன்று கிரகங்களும்,
மேலே சொல்லப்பட்ட சார நிலைகளில் இணைந்து இருந்தனர். இந்த நிலைகளே கோவிட் – 19 எனக்
கூறப்படும் கொரோனா வைரஸ் பரவக் காரணமாயின.
குரு – வாழ்வையும், கேது – வைரஸையும், சனி – நோயையும் குறிக்கிறது அல்லவா ?
|
|
|
ராகு |
|
நவம்பர்-2019 |
|
|
|
|
||
சந்,சனி, குரு,கேது |
சுக் |
சூர்,(புத) |
செவ் |
மேலும், குரு, எதிர்மறையான வளர்ச்சியையும், பிரம்மாண்டத்தையும் குறிக்கிறது.
அவர், மூல நட்சந்திர சாரத்தில் உள்ளார். எனவே, குரு கேதுவின் சாரம் பெற்று, கேதுவுடன்
இணைந்துள்ளது, கொள்ளை நோய்க்கும், அதன் காரணமாக உருவான, கூட்டு அழிவையும் அல்லது இழப்பையும்
குறிகாட்டுகிறது. மேலும், இந்த இணைவை, மிதுனத்தில் உள்ள கரும்பாம்பு, மிகவும் அசுபரான
இராகுவும் பார்வை செய்கிறார். வாயு தத்துவ கிரகங்களான சனி, இராகு பார்வை தொடர்பு, கட்டுப்படுத்த
முடியாத, மிகவும் வேகமாகப் பரவக்கூடிய கொள்ளை நோய்க்குக் காரணமாகிறது. செவ்வாயின்
4 ஆம் பார்வையும் மேலும் கெடுதல் செய்கிறது.
இகலோக ஜோதிடத்தில், சூரிய, சந்திர கிரகணங்களின், தாக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றின் தாக்கம் சுமார் 6 மாதங்கள், கிரகணத்துக்கு
முன்னரும், பின்னரும் நீடிக்கும். இதனால் பல
நாடுகளில், பாதகமான சூழ்நிலைகளே, உருவாகும் என்று பிருஹத் சம்கிதா போன்ற, பண்டைய ஜோதிட
நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இம்முறை, சூரிய கிரகணத்தின் போது, சூரியன் மூல நட்சத்திர சாரம் பெற்றபோது, குரு,
சந்திரன், புதன் ஆகியோரும் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். அப்போது, தனுசுவில் இருந்த
கிரக நிலைகள் – குரு, சூரியன், சந்திரன், புதன் ஆகியோர், கேதுவின் மூல நட்சத்திரத்திலும்,
சனி மற்றும் கேது, பூராட நட்சதத்திரத்திலும் இருந்தனர். இந்த நிலைகளே கொரோனா வைரஸுக்குக் காரணமாயின. மேலும்,
எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றியது போல, இராகுவின் பார்வையும், மிதுனத்தில் இருந்து,
இந்த கிரகங்கள் மேல் விழுந்தது, மேலும் சிக்கல்களை உருவாக்கின.
இகலோக ஜோதிடப்படி, இந்த இணைவுகள், இயற்கையாகவே, காலபுருஷனுக்கு 9 ஆம் இடமான
தனுசுவில் ஏற்பட்டது. முதல் மற்றும் 8 ஆம் அதிபதியான செவ்வாயின், விருச்சிகம் மறைவான
பிரச்சனைகளை குறிகாட்டுகிறது. தனுசுவில் இணைந்த 6 கிரகங்களை (பாக்கிய பாவத்தில்) 3
ஆம் வீட்டில் இருந்து, மிதுன இராகு பார்வை செய்கிறார்.
கிரக பார்வை, அந்த வீட்டினால் வெளிப்படும் பலனையும், அந்த கிரக நிலைகள் உற்பத்தி
ஸ்தானமாகவும், மூலாதாரமாகவும், ஆரம்ப இடமாகவும் விளங்குகிறது. எனவே, இராகு, 3 ஆம் வீட்டில்
இருந்து, அதன் காரகங்களான தொண்டை, சுவாசக் குழாய், மார்பின் மேல்பகுதி ஆகியவற்றை பாதிக்கின்றன.
மிதுனத்தின் அதிபதி புதன், தோலையும், சுவாசிப்பதில் ஏற்படும் கஷ்டங்களையும் குறிகாட்டுகிறது.
நுரையீரலையும் கட்டுப்படுத்துகிறது. இந்த கிரக நிலைகளே, இத்தகைய சூழ்நிலைகளுக்குக்
காரணமாயின.
நோயைக் கட்டுப்படுத்துபவராகவும், மருத்துவ பொருட்களுக்குக் காரகராகவும் உள்ள
சூரியன் 15 மார்ச் 2020 க்குப் பிறகு மீனத்தில் வரும்போது நிலைமை சீராகலாம். காலபுருஷனுக்கு
12 ஆம் இடமான மீனம், மருத்துவ மனையைக் குறிக்கும் இடம். எனவே, இந்த நிலமைகள் சீராக
சூரிய பகவானை வணங்குவோம்.
அடுத்து, சீனாவில் தொடங்கியதற்கான காரணங்களை
அலசுவோம்.
2020 ஆம் வருடம்
சீனாவுக்கு துரதிர்ஷ்டமான விடியலாக அமைந்தது.
சீனாவின் வூகான் நகரத்தில் உருவான வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பால் – 11 நவம்பர் 2019 அன்று,
கோவிட் – 19 என நாமகரணம் சூட்டப்பட்டது. வௌவால், அதை உண்ணும் பாம்புகள் போன்றவற்றால்
இந்நோய் பரவுவதாக மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
2019-2020 சாந்த்ர மான வருடத்தின், வூகான், நகருக்கான ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சூரி,சந் |
|
செவ் |
ராகு |
சுக்,புத |
சாந்ர
மான வருடம்(2019-2020) 05
ஏப்ரல் 2019 மாலை-4-15. வூகான்.சீனா. |
|
|
|
லக்\\ |
||
சனி,குரு கேது |
|
|
|
இதில், சிம்ம இலக்னம். அதன் அதிபதி சூரியன்,
8 ஆம் இடத்தில் மறைவு. 8 ஆம் இடம் ஆயுள், தீவிர ஆரோக்கியக் குறைவு ஆகியவற்றைக் குறிக்கும்.
சூரியன், விரய ஸ்தானாதிபதியான சந்திரனுடன் இணைந்துள்ளார். 12 ஆம் இடம், மருத்துவமனை,
சிறை, மோட்சம் ஆகியவற்றைக் குறிக்கும். இந்த கிரகநிலைகள் அந்த இடத்தில் ஏற்படப் போகும்
அம் மக்களின் ஆரோக்கியக்குறைவு, அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளைச் சுட்டிக் காட்டுகின்றன. இலக்னம்,
மிருத்தியு ஸ்புடமான 2735 கலைக்கு மிக அருகில் 26°
49 கலையில் அமைந்துள்ளது. சந்திரன், அபமிருத்தியு (அகால மரண) சகத்திற்கு உரிமையாளராக
உள்ளார். அபமிருத்தியு சகம் - கடகம் 15 பாகை 54 கலையில், சனியின் நட்சத்திர சாரமான
பூசத்தில் அமைகிறது.
சனியானவர் சிம்ம இலக்னத்திற்கு 6 மற்றும் 7 இடமான, ரோக மற்றும் மாரக ஸ்தானங்களுக்கு
சோத்தக்காரர் ஆகிறார். இகலோக ஜோதிடத்தில், 6 ஆம் இடம், நாட்டின் கடன்கள், ஆட்சியளர்கள்
மற்றும் மக்களின் நோய்கள், நாட்டின் எல்லையில் ஏற்படும் போர் தாக்குதல்கள் ஆகியவற்றைக்
குறிக்கும். ஒளிக் கிரகங்கள், சர்ப்ப திரேகாணத்தில் இடம்பெற்றுள்ளனர். இலக்னம் + யுரேனஸ்
+ சூரியன் = பேராபத்து அல்லது நாச சகத்தைக் குறிக்கும். இது கன்னி இராசியில் 13 பாகை
50 கலையில் விழுகிறது. கன்னி இராசியின் அதிபதியான புதன் 2 மிடமான மாரக ஸ்தானத்திற்கு
அதிபதியாகி, மற்றொரு மாரகஸ்தானமான 7 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். அத்தோடு சந்திரன்
மேற்சொன்ன இரண்டு சகத்திற்கும் அதிபதியாவார். 5 மற்றும் 8 ஆம் அதிபதியான குரு திசை
நடக்கிறது. குரு, சனி, ராகு, கேதுவால் பாதிக்கப்பட்டு, பலமிழந்த நிலையில் உள்ளார்.
குருவின் மற்றுமொரு ஆதிபத்திய வீடான மீனத்தில், 8 ஆம் வீட்டில் ஒளிக்கிரகங்கள் உள்ளன.
குரு திசை 21-1-2020 இல் முடிந்து, சனிதிசை ஆரம்பிப்பதால் நோயின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை.
குரு அதிசாரம் பெற்று மகரத்திற்கு மார்ச் கடைசியில், சென்ற பின் தாக்கம் குறைந்து,
நிலமை சீராகலாம். ஆயினும், நம் ஒற்றுமையும், அரசுக்குக் கை கொடுப்பதுமே முக்கிய காரணியாகும்.
ஆம். இந்த கொரோனா வைரஸ் பேரிடர், குறைவதும், சரியாவதும் உண்மையில், முழுவதும் அரசு மற்றும் மக்கள் கையில்தான் உள்ளது.
மக்கள் சுத்தம், சுகாதாரத்தை சீராகப் பேணுவதும், அரசின் ஆரோக்கியம் சம்பந்தமான அறிவுறைகளையும்,
வழி காட்டுதல்களையும் சிரமேற் கொண்டு, தொற்றுக்கள் மேலும் பரவாமல் தடுப்பது ஒவ்வொருவர், கடமையாகும். இந்தக் கிருமிகளை எதிர்த்துப்
போராடும் போராளிகளாக மாறவேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.
இதற்கு, கடந்த 22 – 3 – 2020 அன்று நடந்த ஊரடங்கு உத்திரவு கண்டிப்பாக உதவியது
எனலாம். மக்கள் 2 இரவுகள், மற்றும் ஒரு பகல் என சுமார் 34 முதல் 36 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்டபோது,
பரவுவதற்கான வாய்ப்பு குறைந்தது எனலாம். மேலும், வெப்பம் அதிகமான, இந்திய சீதோஷ்ண நிலையும் இதற்கு கை கொடுக்குமன்றோ ?
மேலும், ஒரு ஜாதகருக்கு, ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் பலம் பொருந்தியதாக இருந்தால்,
நோய் தொற்று சாத்தியமில்லை. அது போல் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீள்வதும், அவரவர்
ஜாதகத்தின் கிரக, பாவ பலங்களைப் பொறுத்தது.
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தபோது, சூப்பர்
சிங்கரில், பாடகி, சித்ரா, “சில பூக்கள் தானே மலர்கின்றன, பல பூக்கள் ஏனோ, உதிர்கின்றன”
– என பாடிக் கொண்டிருந்தார். எனவே, வெளிநாடுகளில் பாதிப்பு அதிகமாக இருக்கலாம்.
இகலோக ஜாதகத்தின்படி, எந்தெந்த நாட்டின் ஜாதகத்தில் குரு பலமற்ற நிலையில் இருக்கிறாரோ,
அந்தந்த நாடுகளில் இந்த நோய் வேகமாகப் பரவும் வாய்ப்புண்டு. இந்திய ஜாதகத்தில் பலமிக்கவராக
உள்ளதால் அதிகம் பாதிப்பு இராது. சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் காரகம் பெறுபவர்கள்
சுக்கிரனும், சனியும் ஆவர். அவர்கள் பலம் பெறும் போது எந்த நோயும் தலை தெரிக்க ஓடிவிடும்.
மகாலட்சுமி வழிபாடு சுக்கிரனை பலப்படுத்தும். அதே போன்று மற்ற கிரக அதிதேவதைகளைத் தொழ,
அவற்றின் பாதிப்புகளும் குறையும். செவ்வாய்க்குப் பிரியமான தமிழ்நாட்டில், அதன் அதிபதி
முருகப் பெருமான் அருள்புரியும் திருநாட்டில், பாதிப்பு அதிகம் இருக்காது எனலாம்.
எனவே, நாம், அரசு வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து, சத்தான உணவுகளை உண்டு, தேவையான
உடற்பயிற்சிகளை செய்து, நோய் தொற்றிலிருந்து, நம்மையும், நம் குடும்பத்தையும் காப்போமாக
! வாழ்க வளமுடன். ஆரோக்கியமான வாழ்வுக்கு, அடியேனின், அன்பான, வாழ்த்துகள்.
ஜோதிட ப்ரவீணா . எட்டயபுரம் . எஸ். விஜயநரசிம்மன்.
(எம்.எஸ்ஸி.(அப்ளைடு அஸ்ட்ராலஜி) 9789101742.
No comments:
Post a Comment