உ
கோள்கள் கூடி கும்மியடிக்க, கொரோனாவுக்குக் கொண்டாட்டம்.
இகலோக ஜோதிடம், இது
நாடுகள் மற்றும் பிரபஞ்சம் தொடர்பான விஷயங்களை அறிவதற்கான சாதனமாகும். ஆயினும்,
இதுபற்றிய அறிவு ஓரளவே மக்களைச் சென்று அடைந்திருக்கிறது என்பதே உண்மை.
1800 ஆம் ஆண்டிலிருந்து, இதற்கு முன்
ஏற்பட்ட 43 மிகப் பெரிய, கண்டம் முழுவதும் பரவக் கூடிய, தொற்று நோய், கொள்ளை நோய்
ஏற்பட்ட காலங்களில், சுமார் 60% குருவும், புளுட்டோவும் தொடர்புறும் போதும்,
அல்லது தனுசு இராசியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை குருவும் வரும்போதே
ஏற்படுகிறது, எனலாம்.
இதுபோன்ற பிரபஞ்சப் பேரழிவுகள் பற்றி உலக சரித்திரத்தைப் புரட்டிப்
பார்க்கும் போது, மிகவும் குறிப்பிடத் தக்க நிகழ்வு, சுமார் 150 முதல் 200 கோடி
மக்களை காவு வாங்கிய, 1347 முதல் 1351 வரை
ஏற்பட்ட பேரழிவே முதன்மையானதாகும். இத்தகைய நிகழ்வுகளைக் கணக்கிடும் போது, நாம்
முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டிய, கிரகங்கள், நீண்ட காலம் இராசிகளில்
இருக்கக் கூடிய, கிரகங்களான யுரேனஸ் (84 வருடம்), நெஃப்டியூன் (165 வருடம்)
மற்றும் புளுட்டோ ஆகியவை ஆகும். இவையே, நீண்ட காலங்கள் அந்த இராசிகளில் இருந்து,
அந்த இராசியில் ஜனனம் எடுத்தவர்களை, உண்டு, இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கிவிடுகிறது.
அதிலும், கர்மாவைக் குறிக்கும், புளுட்டோ, ஒரு தலைமுறையில் பிறந்தவர்களையே
பாதித்துவிடுகிறது என்றால் மிகையாகாது. இத்தோடு, குரு இணையும், அந்த ஒர் ஆண்டு,
மிகவும் பாதிப்பினை அளிக்கவல்லது.
புளுட்டோ \ குரு – இந்த இணைவு புளுட்டோவுக்கு
முதல் இராசியில் (12 ஆம் இடத்தில்) ஏற்படும் போதும், அதற்கு அடுத்த வருடம்,
புளுட்டோ இருக்கும் இடத்தில் இருக்கும் போதும் பிரபஞ்சத்தில் இத்தகைய பாதிப்புகள்
குறிப்பிடும்படியாக , பெரிதாக ஏற்பட்டதில்லை. ஆயினும், குரு, எப்பொழுதெல்லாம், 12
மாதங்கள், ஒர் இராசியில் முழுவதுமாக இல்லாமல் இருக்கிறாரோ, அப்பொழுதெல்லாம்
பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதில்லை.
தனுசு இராசியில்,
எப்போதெல்லாம் குரு, நுழைகிறாரோ அப்போதெல்லாம், காலரா போன்ற வைரஸ் அல்லாத,
பாக்டீரியா மூலமாக பரவும் நோய்களைக் குறிகாட்டுகின்றன.
இத்தகைய, இயற்கை உத்பாதங்களின், சரியான,
ஆரம்பப் புள்ளியை துல்லியமாகக் கண்டறிதல் அரிதான விஷயமாகும். உதாரணமாக, 1347 இல்
(ப்ளாக் டெத்தை) ப்ளாக் மரணங்கள், ஐரோப்பாவில், ஆரம்பமானதாக எடுத்துக் கொண்டாலும்,
என்ஸக்ளோபீடியா பிரிட்டானிக்காவின்படி, அதற்கு முன்பே, சீனா மற்றும் ஆசியாவில்
தொற்று ஆரம்பித்துவிட்டதாக்க் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு தொற்று நோய்,
புதிய நோயா ? அல்லது அதற்கு முன்பே வந்த நோயின் தொடர்ச்சியா ? - என்பதை நாம்
அறுதியிட்டுக் கூற முடியாது. மேலும், நாட்டின் ஒரு பகுதியில் ஏற்படும்
தொற்றை, கொள்ளை நோயாக எடுத்துக் கொள்ள முடியாது.
மேலே, குறிப்பிட்ட
கிரகங்களில், குரு, ஒரு வேகமாகச் செல்லும் கிரகமாகும். மேலும், ஒர் இராசியில்
சீராகச் செல்லும் கிரகமும் அல்ல. சில காலம் வக்கிர நிலை அடைவதும், அதிசாரம்
பெறுவதுமாக, முழுமையாக ஓர் ஆண்டு, சில வருடங்களில், ஓர் இராசியில் அவர் தங்குவதில்லை.
இதன் காரணமாக பெரழிவுகளின் துல்லியமான ஆரம்ப காலத்தை தேதி வாரியாகக் கணக்கிடுதல்
எளிதான ஒன்றல்ல.
·
கீழ்காணும்
அட்டவணையில், எப்போது குறிகாட்டும், குறிகாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
புளுட்டோவுக்கு
விரய பாவத்தில் குரு, இருக்கும் போது மக்கள் வீட்டுச் சிறையில் இருக்க
வேண்டியதாகிறது. (12 ஆம் பாவம்).
காலபுருஷ தத்துவப்படி,
12 ஆம் இடமான மீன இராசி குளிர்கால முடிவைக் குறிக்கிறது. இந்தக் குளிர்காலத்தில்
மக்கள் வீட்டுக்குள் அடங்கியிருந்து, மேஷத்தின், புது வசந்த காலத்தை எதிர் நோக்கி
வாழ்வர்.
12 ஆம் வீடான மீனம்,
பிறருக்கான சேவையையும் குறிக்கும். மேலும், பிறப்பு ஜாதகத்தின், 12 ஆம் இடம், இந்த
ஜன்மத்தில், முந்தைய, கர்மக் கடன்களை தீர்க்கும் இடமாக அமைந்துவிடுகிறது. இந்த
இடத்தில், பலம் மிக்க சூரியனோ சந்திரனோ அமர, ஜாதகர் திரை மறைவு வாழ்க்கை வாழ
வேண்டியதாகிறது. மேலும், பேரழிவு காலங்களில், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கு
எவ்வளவு மன அழுத்தம், கஷ்டங்கள் ஏற்படுகிறது என்பதை நாம் அறிவோம். அத்கைய சமூக
சேவையாற்றும் அனைத்து நபர்களுக்கும் நாம்,
நம் நெஞ்சார்ந்த நன்றிகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
12 ஆம் இடம்
சிறைச்சாலையைக் குறிக்கிறது. கர்ம வினைக்கான தண்டனைச் சாலைகள், சர்ச்சுகள்,
மருத்துவமனைகள், மிகப் பெரிய, பயங்கரமான. நம்பத்தகாத, ஒதுக்கப்பட்ட இடங்களில்
ஏதாவது ஒரு காரணத்துக்காக, வாழ்வதைக் குறிக்கிறது. இது தான் தன் வீட்டிலேயே
தனிமைச் சிறையில் ஏதேனும் ஒரு காரணத்திற்காக, வாழ்வதையும் குறிகாட்டுகிறது.
மேலும், வீட்டு மனைவியாக வீட்டில் தனித்திருத்தல், தீவிர நோய் ஏற்பட்டு, தனிமையில்
இருக்கும் சூழ்நிலை ஏற்படுதல் போன்ற நிலைகள், மருத்துவ, விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்காக
ஒதுக்கமான இடங்களில் இருத்தல், தீவிர ரகசிய திட்டமிடும் இடங்கள், போருக்கான இரகசிய
திட்டமிடல்கள் இவை அனைத்துமே 12 ஆம் இடத்தைக் குறிக்கின்றன. மேஷ இராசிக்கு அதிபதியான
செவ்வாய், போர் கடவுளாக கருதப்படுகிறார்.
காலபுருஷனுக்கு 12
ஆம் இடமான மீனம், கருவுற்ற பெண்களுக்கு, அன்றாட வாழ்க்கையில் இருந்து, பிரசவம் வரை
கட்டுப்பாடான வாழ்க்கை அமைகிறது. அடுத்த மேஷ இராசியானது, காலபுருஷனுக்கு முதல் இராசியாவதால், ஜனனம்
புது வசந்த காலமாக பெண்களுக்கு, புதுப் பிறப்பாக அமைகிறது.
கொரோனா வைரஸ்
கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஜோதிடப்படி கோவிட் -19 க்கான காரணங்கள் யாவை
?
அது,
விருச்சிகத்தில் இருந்து, தனுர் இராசிக்கு குரு மாறிய பின், சனி மற்றும் கேதுவுடன்
இணைந்ததால், (சனி தாமதம்) மெதுவாக 17 நவம்பர் 2019 அன்று தனது முதல் கணக்கை
சீனாவில் தொடங்கியது.
உலகளாவிய நிலையை
பாக்கிய பாவம் குறிக்கிறது. எனவே, உள்ளூர் நோய், உலகளாவிய நோயாக, விரிவாக்கம்
மற்றும் பரப்புதலுக்கான காரகனான குருவால் வேகமாகப் பரவத்தொடங்கியது. அதன் பின்னர்
நடந்தவற்றைப் பார்ப்போம்.
·
24 – 1 – 2020 அன்று தனுசுவில் இருந்து, சனி மகரத்துக்கு மாறினார்.
தாமதம் தந்த சனி, குரு கேதுவை விட்டு விலகியதால், வேகமெடுத்த போது, சுமார் 250
பேருக்கு மேல் சீனாவில், பாதிப்பு அடைந்தனர்.
·
வைரஸ், பாக்டீரியா கண்ணுக்குத் தெரியாத கிருமிகளுக்குக் காரகர்கள்,
இராகு கேதுக்கள் ஆவர். தலை மட்டுமுள்ள இராகு மெதுவாகச் செல்பவர் அல்லது ஆரோக்கியக்
குறைவை மெதுவாக உருவாக்குபவர், தலையற்ற கேது திசை தெரியாதவர், வேகமாகச் செல்பவர்,
அழிவுக்குக் காரணமானவர் ஆவார். கேது, குரு இருவரின் தொடர்பு திசை தெரியாது, நோய் பரவுவதற்கும் வேகமெடுப்பதற்கும் காரணமானது
·
ஜோதிடப்படி சூரியன், ஆரோக்கியத்துக்கும். ஆன்மாவுக்கும், சுற்றுச்
சூழல் சுத்தத்திற்கும் காரகர் ஆவார். 15 டிசம்பர் 2019 இல் சூரியன் தனுசுவில்,
சனி, கேது தொடர்பு ஏற்பட்டு, பாதிப்பு அடைந்தார்.
·
அதற்குப் பிறகு ஜனவரி, 2020, பிப்ரவரி – 2020 மற்றும் மார்ச் 2020
ஆகிய காலத்தில் சனியின் ஆட்சி வீடுகளான, மகர கும்பத்தில் சூரியன் சஞ்சரிக்கும்
காலங்களிலும் பலமற்று இருந்தார். மீனத்திற்கு சூரியன் வந்த போது,சனியின் 3 ஆம்
பார்வை காரணமாக பலம் இழந்தார். எனவே, ஆரோக்கியத்துக்கான வழிகள் அனைத்தும்
அடைபட்டதால், எப்படி நோய் தீருவதில் முன்னேற்றம் இருக்கும். ?
·
ஜோதிட விதிகளின்படி, ரோக, விரய பாவங்களான 6 மற்றும் 12 ஆம்
பாவங்கள், நோய் மற்றும் மருத்துவமனையைக் குறிப்பன ஆகும். குறிப்பாக 12 ஆம் இடம்
மருத்துவமனை, பெரிய செலவுகள், பேரழிவுகள், பொருளாதார இழப்புகள் ஆகியவற்றைக்
குறிப்பனவாகும்
·
கால புருஷனுக்கு 10 ஆம் இடமான மகரத்தை இலக்னமாகக் கொண்ட சீனாவில்
,டிசம்பர் 2019 இல் பிரச்சனை தொடங்கியது. இலக்னாதிபதி, சனி, 12 ஆம் வீட்டில்
அமர்ந்து ஆறாம் (ரோகம்) அதிபதியான புதன், மற்றும் 8 ஆம் (ஆயுள்) அதிபதியான
சூரியன், 12 ஆம் அதிபதி குரு, கேது ஆகிய தொடர்புகள் மக்களின் ஆரோக்கியக் குறைவுக்கும்,
தீவிர கொள்ளை நோய்க்கும், பேரழிவுக்கும், பொருளாதார இழப்புகளுக்கும், கூட்டு
மரணத்துக்கும் காரணமாயின. ஆனால், சனி தனது ஆட்சி வீட்டுக்கு வந்ததால் மார்ச் 2020,
இறுதியில் பாதிப்பு குறைந்தது. சனி தனிமைப் படுத்துதலுக்குக் காரணமானதல், சீனா
இரண்டு மாதங்களுக்கு லாக் டவுண் அறிவித்தது.
·
ஜனவரி கடைசியில்,
காலபுருஷனுக்கு 2 மிடமான ரிஷபத்தை இலக்னமாகக் கொண்ட இந்தியாவுக்கு 9 ஆம் இடத்தில்
சனி, சூரியன் இணைவு மற்றும் 12 ஆம் அதிபதி குருவின், இலக்னத்தின் மீதான பார்வை
பிரச்சனைகளுக்குக் காரணமானது. 9, 12 ஆம் இடத் தொடர்பால் வெளிநாட்டில் இருந்து
வந்தவர்களால் தொற்று உருவானது. இலக்னாதிபதிக்கு, 6, 12 ஆம் இடத் தொடர்பு இன்மையால்
பிரச்சனை தீவிரமாக இல்லை எனலாம். இந்தியாவின் புதுவருடமான சாவத் 2077 ஆம் ஆண்டின்
(24 மாரச்.2020) முந்தா அதிபதி மற்றும் இலக்னாதிபதி, சனி தன் சொந்தவீடான, மகரத்தில் இருந்ததால், சனிக்குக் காரகமான,
ஒதுக்கிவைக்கப்படுதல், தனிமைப்படல், சமூக கூட்டங்கள், சமூக நெருக்க மின்மை ஆகிய
நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.
·
29 மார்ச் 2020 அன்று குரு
அதிசாரமாக மகரத்தில் வந்த போது, சனி, செவ்வாய் யோடு இணைந்தார். சனி மற்ற
இருவரையும், கட்டுப்படுத்துவதன் காரணமாக, அதிகம் பரவுதலுக்கான காரகர், குருவின்
தன்மை குறைவதால், கோவிட் வேகம் குறைந்து காணப்படும். ஒதுங்கியிருப்பதும்,
தனிமைப்படலும் அதிகமாகும். இக் கால கட்டத்தில், இந்தியாவில், பாதிப்புகள் குறையும்
வாய்ப்பு உண்டு.
·
அடுத்து, 13\4\2020
இல் மேஷத்தில் உச்சம் பெறும் சூரியன், சுற்றுச் சூழல் ஆரோக்கியத்தை
மேம்படுத்துவார், மனித உடல் மற்றும் ஆத்மாவின் நேர்மறையான சக்திகளையும்,
மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பார். வெப்பம் அதிகரிப்பதின்
காரணமாக பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் சாகும் நிலை ஏற்படும்.
·
கிரக மாற்றங்களைக்
கருத்தில் கொள்ளும் போது, குருவின்
மாற்றம், 30\3\2020 க்கு பிறகு பிரச்சனையின் தாக்கத்தைக் குறைக்கும். 13\4\2020
க்குப் பின்னர் புதிய நோய்த் தொற்றுகளும் குறையும் வாய்ப்புண்டு. செப்டம்பர் 2020
கடைசி வாரத்தில் ஏற்படும், இராகு கேது மாற்றத்திற்குப் பிறகு, அனைத்துப்
பிரச்சனைகளும் கட்டுக்குள் வந்து நிலைமைகள் சீராகும்.
·
பரிகாரங்கள்-
இந்த வருடம், அக்டோபர், 2020 வரை தனிமைப்படல்
மற்றும் இடைவெளி விட்டு இருத்தல், அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக இருதுதல்
ஆகியவை, மிகவும் முக்கியமானதாகும்.
நோய்
எதிர்ப்பு சக்தி மிகமிக முக்கியமானதாகும். மூலிகை வைத்தியம், வைட்டமின் சி உள்ள
உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். அசைவ உணவு உண்பதைக் குறையுங்கள்.
உடற்பயிற்சி செய்து, நன்றாக தூங்குங்கள்.
தினமும் சூரிய ஒளிக் குளியல் 15 – 20
நிமிடங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். வயதானவர்கள் அதிக நேரம் வெயிலில்
இருக்கலாம். குரு மற்றும் சூரியனை பலப்படுத்த அதிக நேரம் காயத்ரி மந்திரத்தைச்
சொல்லுங்கள். சனியை பலப்படுத்த, மகா மிருத்யஞ்சய மந்திரத்தையும் சொல்லலாம். இதன்
காரணமாக நிழல் கிரகங்களின் பாதிப்புகளும் குறையும். ஹனுமான் சாலிசா, அனுமன் மந்திரங்கள்
ஆகியவற்றை சொல்ல உடல் பலமும், இரத்த சுத்திகரிப்பும் அதிகரிக்கும்.
அத்துடன், வீட்டில் இருங்கள், சுகமாக இருங்கள்.
வளமாக வாழுங்கள். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளியுங்கள்.
வாழ்க பாரதம்.
No comments:
Post a Comment