உ
சின்னம்மாவின்
ஜாதகம் சொல்வது என்னம்மா ?
ஆதரவாளர்களால்
சின்னம்மா என்று அழைக்கப்படும், வி. கே. சசிகலா அவர்களின் ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
18 ஆகஸ்டு 1954 அன்று திருத்துறைபூண்டி, தமிழ்நாடு, இந்தியாவில் பிறந்த அன்னாரின் ஜாதகத்தை
அலசுவோமா ? நண்பர்களே !
சந் |
|
|
கேது குரு |
|
புத |
கேது,சூரி |
செவ்,குரு லக்//சுக் |
|
|
|
புத |
|
|
|
|||
|
சூரி, லக்// |
சனி |
|
|||||
ராகு, செவ் |
|
சனி |
சுக் |
சந் |
|
ராகு |
|
சிம்ம இலக்னத்தில் பிறந்தவர்கள் இராஜ குணாதிசயங்களை
உடையவர்களாக இருப்பர். எந்த ஒரு நிகழ்வையும், படோடாபமாக, அதிக பட்ஜெட்டிலேயே காரியங்களைச்
செய்வர். இரக்க குணம் இருக்கும். ஆனால் சில சமயங்களில் குறுகிய எண்ணங்களைக் கொண்டவர்களாக
இருப்பர். அமைப்பாளராகவும், தலைமை ஏற்பதற்கும் உரிய ஆளுமை உடையவராகவும் இருப்பர். குறிக்கோள்களை
எட்டிப் பிடிக்க, முனைப்பாக செயல்பட்டு, வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவர். நவீன பாணியிலும்,
உயர்தரமான வாழ்க்கையை வாழவே ஆசைப்படுவர். மக்களிடையே கவர்ச்சி மையமாக (சென்டர் ஆஃப்
அட்ராக்ஷன்) இருக்கவே விரும்புவர். சுதந்திரமாகத் திரிவதை விரும்புவார்கள். ஆனால்,
மதிப்பின்மையை விரும்பமாட்டார்கள். பயமென்பது இருக்காது. அதிக தைரியம் உடையவர். பணியை
சுயமாகச் செய்வாரே அன்றி மற்றவர்கள் உதவுவதை விரும்பமாட்டார். எடுக்கும் காரியங்களை
நம்பிக்கையுடனும், அர்பணிப்பு உணர்வுடனும், முடிக்கும் திறனுடையவர். ஆயினும், சோம்பேறித்தனம்
வந்தால், வேலையை நிறுத்திவிட்டு அடியோடு ஒதுங்கிவிடுவார். புகழ் பெறுவதற்காக, சேவைகள்
செய்வார். தவிர்க்க வேண்டிய குணங்கள் – முரட்டுத்தனம், தற்பெருமை, அனைவரையும் தன் வசமாக்கும்
ஆசை, தன்னை மட்டும் பெரிதாகக் காட்டிக்கொள்ளும் தன்மை, மற்றும் ஓரவஞ்சனை செய்வது ஆகிய
குணங்கள் ஆகும்.
சூரியன் இலக்னத்தில்
இருப்பது, வாழ்க்கையில் நல் அதிர்ஷ்டத்தையும், நல் முன்னேற்றத்தையும் குறிக்கிறது.
உயரமான, அழகு கண் கொண்டு, எடுப்பான மூக்குடன், அகன்ற நெற்றியையும் கொண்டிருப்பார்.
கர்வம், தன்னம்பிக்கை, தீர்மானமானவர், உயர்நிலையையே விரும்புபவர். புத்திசாலி, அதிகம்
பேசமாட்டார். எல்லா வகையிலும், வழிகளிலும் புகழ் அடைவார். தன்னிச்சையாக அல்லது சுயமாக
உயர் பதவி அடைவார். படையில் முன்னணியில் நின்று போரிடுவார். ஆசைகள் அதிகம் மிக்கவர்
(பேராசை). அதிகாரம் கைக்கு வரும். மற்றவர்களை அடக்கி ஆண்டு, ‘பாஸா’க செயல்படுவதை விரும்புவார்.
அதிர்ஷ்டசாலி. தெய்வீக குணங்கள் கூடிக் கொண்டே இருக்கும்.
மேலும், பொதுவாக
சில கிரகங்ள் தரும் பலனைப் பார்ப்போம். இவரது குடும்ப விவகாரங்கள் பணியாட்கள் மூலமாகவே
வெளி வரும். எதிரிகளை வெல்வார். அதிக மனை, சொத்துக்களை உடையவராவார், அதிகார தோரணை உடையவர்.
.
இலாப பாவ குரு,
அழகைக் கொடுத்தார். அரசு மரியாதை மற்றும் பல ஆதாயங்களையும் தருவார். மரியாதைக்குரியவர்களின்
நட்பைப் பெறவைப்பார். இவர்களின் ஆலோசனைகள் பயனுள்ளதாகவும், நன்மை அளிப்பதாகவும் இருக்கச்
செய்வார். பொருளாதார லாபம், சொத்துக்களின் இலாபம் ஆகியவற்றிற்கும் காரணமாகிறார் – குரு.
பல வழிகளிலும், எல்லையற்ற, அளவில்லாத செல்வச் செழிப்பை அடையவைப்பார். தொழில், வியாபாரம்,
வைரம், வைடூரியம், தங்கம், வெள்ளி, நவீன வாகனங்கள், அதிக பணியாட்கள் மற்றும் மதிப்பு
மிக்க பொருட்களை அள்ளித் தருவார். ராஜா அல்லது இராணியின் மூலமாக ஆதாயங்களைப் பெறவைப்பார்.
பூமியில் இவர் அடைய முடியாதது, ஏதுமில்லை என்று
நிலைக்கு உயர்த்துவார். இவரது குடும்பம் உயர்வதற்கு,
இவரையே காரணமாக்குவார். செல்வம், குழந்தை, கல்வி இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே கொடுப்பார்.
தனபாவத்தில்
உள்ள சுக்கிரனால், அழகிய முகம், பல்வரிசை, இனிய பேச்சு உடையவராவார். அறிவு, பக்தி இருக்கும்.
அரசியின் தோழியாய் இருப்பார். பல திறமைகள் இருக்கும். ஆடம்பர ஆடை அணிகலன்கள் சேரும்.
நிறைய பங்குகளை உடைய வர்த்தகராய் இருப்பார். திடீரென, சொத்து சேர்க்க நினைத்தால், இவர்
வெற்றி காண முடியாது. பெரிய குடும்பம், பலருக்கும் கை கொடுப்பார். பணப் பற்றாக்குறையே
இருக்காது. திருமணத்துக்குப் பிறகே வாழ்க்கையில் அதிக முன்னேற்றம் இருக்கும். இளமை
கடினமானதாகும், வலி நிறைந்ததாகவும் இருக்கும். பின்னர், சுகவாசியாகவும், முன்னேற்றமான
வாழ்க்கையையும் பெறுவார்.
தைரிய பாவத்திலுள்ள சனியால், நல்ல ஆலோசனைகளை
வழங்குவார். ஜோதிடத்தில் ஆர்வம் இருக்கும். பேச்சைக் குறைத்து ஞானிபோல் இருப்பார்.
வேகமான உழைப்பாளி, அதிர்ஷ்டசாலி, சக்தி மிக்கவர், எதிரிகளை துவம்சம் செய்பவர். இவரது
புகழ் எட்டு திசையும் பரவும். அனைவரையும் சமமாக பாவிப்பார். அநேக உடன் பிறப்புகள் உண்டு. 5 இல் இராகு இருப்பதால், முன்ஜென்ம சர்ப்ப தோஷத்தால்,
குழந்தையின்மை ஏற்படும். பல கம்பெனிகளின் வெற்றிக்குக்
காரணமாவார். மழலையில்லா, மகிழ்ச்சியற்ற வாழ்கைக்கே ஆசிர்வதிக்கப்பட்டவர். தார தோஷமும்
உண்டு.
இலாபத்தில்
உள்ள கேது, ஆளுமை மிக்க அழகையும், கவர்ச்சியையும், ஒளிமிகுந்த, பிரகாசமான முகத்தையும்
வழங்குவார். அழகான, நேர்த்தியான, புத்தம் புதிய ஆடைகளை அணிவார். ஜோவியலாக இருப்பார்.
சிறந்த பேச்சாளர். அரசராலும், மற்றவர்களாலும் பாராட்டப்படுவார். எல்லா வகையிலும் நன்மைகளை
அடைவார். தன்னை அலங்கரித்துக் கொள்வதிலும்,
ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் வல்லவர்.
நடப்பு இராகு
தசா / இராகு புத்தி 5/2021 வரை. இக் காலத்தில், சக்தி குறைவு, இருமல், ஆஸ்மா, நீர்
சம்பந்தமான உபாதைகள், ஆகியவற்றால் பாதிக்கப்படுவார். பலம் மிக்கவர்களால் பயம் ஏற்படும்.
குடுப்பத்திலும் பிரச்சனைகள் எழும். நல்லுணவு சித்திக்காது. அதிகாரத்தில் உள்ளவர்களால்
இலாபமும், கௌரவமும் அடைவார். நெருங்கிய
உறவைப் பிரிய நேரலாம். அதிகாரத்தில் உள்ளவர்களால் பயமும், தொழில் விவகாரங்களில் நஷ்டமும்
ஏற்படலாம். உடல் தளர்வு, எதிரிகள் தொல்லை,, சமூக பகைகள் ஆகியவை ஏற்படலாம். கௌரவக் குறைவு,
தவறான வழிகாட்டுதல் ஆகியவை ஏற்படலாம். வழக்கு விவகாரங்களால் சந்தோஷம் குறையும். மிகப்
பெரிய கூட்டத்தால் கௌரவமும், உயர் பதவிகளும் கிடைக்க வாய்ப்புண்டு. முன்னேற்றத்தில்
அங்கங்கே தடைகளும், கஷ்டங்களும் இருக்கலாம்.
இராகு புத்தியில்
மனக் குழப்பம், டென்ஷன் அதிகரிக்கும். சொந்த இடம்விட்டு வெகு தூரம் சென்றால் நல் அதிர்ஷ்டம்
உண்டு. ராஜியத்தை அலங்கரித்தல், உற்சாகம், சொத்துச் சேர்க்கை, மகிழ்ச்சி ஆகியவை ஏற்படும்.
அரசு அதிகாரிகளின் பகை, விரோதம், எதிர்ப்பு, முரண்பாடு ஆகியவை ஏற்படலாம். மேற்கண்ட
இன்னல்களுக்குப் பரிகாரமாக இராகுவுக்கு உரிய பொருட்களை தானம் செய்வது சிறப்பு.
சந்திர அந்தரம்
( மார்ச் – 2021 வரை ) – ஓய்வின்மை, கலகம், பதட்டம், குழப்பம் ஆகியவை ஏற்படும்.
செவ்வாய் அந்தரம்
– ( 8- மே 2021 வரை ) தொற்று மற்றும் ரத்த உபாதைகள் ஏற்படலாம். சொத்து இழப்பு, மனக்குழப்பம்
ஏற்படலாம்.
குரு புத்தி
– ( 10 / 2023 வரை ) உடல் நலம் பெறுதல், அரசாங்க ஆதரவு, புனித பயணங்கள், பக்தி மேலிடுதல்,
புகழடைதல், அதிகாரிகள் நட்பு, புதிய பதவி கிடைத்தல், எதிரிகள் அழிதல், சொத்து சேர்க்கை,
மகிழ்ச்சி, உற்சாகம், இராஜாவுடன் சுமுக உறவு, வளர்பிறைச் சந்திரன் போல் நாளுக்கு நாள்
செல்வமும் வளருதல், கிராம லாபம், குடும்பத்தில் தினமும் இனிப்பு தயாராகுதல், மத மற்றும் தர்ம காரிய ஈடுபாடு, ஆகிய சிறப்பான பலன்கள்
நடக்கும். ஆயுள் விருத்திக்கு சிவபெருமானை சிந்தையோடு வணங்குதல் சிறப்பு.
இதுவரை, பாரம்பரிய
முறைப்படி ஜாதகத்தை அலசினோம்.
இவரின்
ஜாதகத்திலுள்ள இராஜ யோகங்கள்.
குரு 5 ஆம் அதிபதி
க்கும், 4, 9 க்கும் உரிய பரஸ்பர தொடர்பு இராஜயோகத்தைத் தரும்.
பலன் – ஜாதகருக்கு, மதிப்பு, மரியாதையைக் கூட்டி, வெற்றியும்
தரும்.
5, மற்றும் 9 ஆம்
அதிபதிகளின் பரஸ்பர பார்வை அல்லது தொடர்பு இராஜ யோகத்தைத் தரும். ( பிரஹத் பராசர ஹோரா
சாஸ்த்ரா)
பலன் – ஜாதகரை அரசராக்கும், ராயல் ஸடேட்டஸ் அளிக்கும். ( அரச
பதவி )
இராகு கேந்நிர அல்லது
திரிகோணத்தில் இருந்து, ஒரு கேந்திர அல்லது திரிகோணாதிபதியால் பார்க்கப்பட இராஜ யோகம்
ஏற்படும். ( பி. ப. ஹோ. சா )
பலன் - ஜாதகரை அரசராக்கும், ராயல் ஸடேட்டஸ் அளிக்கும். ( அரச
பதவி )
ஒளி பொருந்திய
கதிர்களைக் கொண்டு அல்லது வக்ரம் பெற்ற கிரகம் அனுகூலமான நிலையில் இருக்க இராஜ யோகம்
தரும். ( பலதீபிகா )
பலன் – ஜாதகர் அரசனுக்கு நிகரான நிலையை அடைதல் அல்லது பிரபுத்துவம்
பெறுதல்.
2, 9, 11 க்கு உரிய
கிரகங்களில் ஒன்று, சந்திரனில் இருந்து கேந்திரத்தில் இருந்து, குருவானவர் 2, 5,
11 பாவங்களில் ஒன்றுக்கு அதிபதியானால், இராஜயோகம் ஏற்படும்.
பலன் – ஜாதகர் / ஜாதகி பெரிய ஆளாக ஆவார் அல்லது மரியாதைக்குரிய
ஆள்பவர் ஆவார்.
ஜெய்மினி இராஜ
யோகம் – சந்திரன், சுக்கிரன் இணைவு அல்லது பார்வை இராஜ யோகம் தரும்.
பலன் - ஜாதகருக்கு, மதிப்பு, மரியாதையைக் கூட்டி, வெற்றியும்
தரும்.
இனி, சின்னம்மாவின்
எதிர்காலம் என்ன ?
– என்பது பற்றி தாஜிக முறைப்படி அவரது 66 - 67 வயதுக்கான ( 2021 ஆகஸ்டு வரை- ) வருட பலன் பற்றி
பண்டைய முனிவர்களின் கூற்றுப்படி ஆராய்வோம்.
இது ஜனன
ஜாதகத்தில் உள்ள சூரியன் இருக்கும் இடத்திற்கு, அடுத்த வருடம்
சூரியன் வரும் காலத்தைக் கொண்டு கணித்து பலன் காண்பது வருட ஜாதகமாகும். வடமொழியில் இதை “வருஷ பல்” – என அழைப்பர்.
18 – 8 – 1954 அன்று பிறந்த சின்னம்மா
அவர்களின் முடிந்த வயது 66 – நடப்பு வயது 67 க்கான வருட
ஜாதகம் 18 – 8 –
2020 அன்று பகல் 02
– 46 – 07 மணிக்கு வரும் சூரியனின் நிலை கணக்கின்படி உருவான ஜாதகம்
கீழே ;
செவ் |
ராகு லக்// சுக் |
செவ்,சூரி புத |
கேது |
|||||
முந்தா |
66- 67 வயது 2020 – 21 18-8-2020 முதல் 8/22வரை இராசி |
சந் |
முந்தா லக்//சுக் |
நவாம்சம் |
||||
சனி(வ) |
சூரி,புத |
சனி(வ) |
||||||
கேது குரு(வ) |
ராகு, குரு(வ) சந் |
பண்டைய நூலான, “நீலகண்ட
தெய்வஞர்” எழுதிய “தாஜிக
நீலகண்டீயம்” என்னும்
நூலின்படி வருட பலன்களைக் காண்போம்.
இந்த வருட
ஜாதகத்தில் ‘வருசேஷா’ அல்லது “வருடாதிபதி” ‘சூரியன்’ ஆவார். பலமிக்க வருடாதிபதி சூரியன் தரும் பலன்கள்
ஆவன.
கௌரவம், மதிப்பு, மரியாதை கூடும்.
புகழ் ஓங்கும். மகிழ்ச்சி நிலவும், சொத்துகள் சேரும் மற்றும் வசநிகள் பெருகும்.
அரசு சம்பந்தமான விவகாரங்களில் வெற்றி
கிடைக்கும். அனுகூலமும் அடையலாம். அதிகாரத்தில்
உள்ளவர்களின் பழக்கமும், தொடர்பும் குறிகாட்டப்படுகிறது. சமூகத்தில் பெயர், புகழ்,
மதிப்பு ஆகியவை உயரும். புதிய பதவிகள் வந்து சேரும். பொருளாதார நிலை சிறப்பாக
இருக்கும். வழக்குகளில் வெற்றி, எதிரிகளை வெல்லுதல் ஆகியவை நிகழும்.
அடுத்து இந்த
வருடத்திற்கான “முந்தா” வின் நிலை. “முந்தா” என்பது வருட
ஜாதகத்தின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படுகிறது.
ஒருவர் பிறந்த
காலத்தில், ஜனன ஜாதகத்தில்
இலக்னத்தில் இருக்கும் முந்தா ஒவ்வொரு வயதுக்கும் ஒரு இராசியாக முன்னேறும். ( இரண்டாவது
வயதில் இரண்டாம் இராசிக்கட்டம் என ). இந்த 66 வது வயது
ஜாதகத்தில் “முந்தா” வின் நிலையைப்
பார்ப்போம்.
இந்த வருட
ஜாதகத்தில் முந்தா வருட இராசிக்
கட்டத்தில் இலக்னத்துக்கு 9
ஆம் பாவத்தில் அமைகிறது.
இந்த வருட
வருடாதிபதி (வருசேஷா) மற்றும்
முந்தாவின் நிலைகள்.
வருசேஷா |
சூரியன் |
முந்தா
இருக்கும் இராசி |
கும்பம் |
முந்தா
இருக்கும் வீடு |
9 |
முந்தேஷ்
எனும் முந்தாதிபதி |
சனி |
முந்தாதிபதி
இருக்கும் வீடு. |
8 |
ஒன்பதாம் பாவத்தில் உள்ள “முந்தா” தரும் பலன்கள் ;
“தாஜிக
நீலகண்டீயம்” கூறும் பலன்.
ஒன்பதாம் பாவத்தில் உள்ள “முந்தா” வானது வாழ்க்கையில்
அதிர்ஷ்ட நிலையை தருகிறது. செல்வ நிலை
உயர்வையும், துணிவுமிக்க
செயல்பாடுகளால் மிக்க புகழையும் அளிக்கும். நல்ல
நண்பர்களின் நட்பும் ஏற்படும். நற்குணம் மிக்க
பெரியோர்கள் மற்றும் கடவுளை வணங்குவதிலும் ஈடுபாடு அதிகரிக்கும். ஆரோக்கியம் மிக்கவராகவும், கருணை உள்ளம்
கொண்டு மக்கள் மத்தியில் புகழ் மிக்கவராகவும், மத்திய அரசின்
ஆதரவு பெற்றவராகவும் இருப்பார், என்கிறது.
ஹயான் பாஸ்கர்
என்ற அறிஞரின் கூற்று என்ன ?
“முந்தா”
9 இல் இருக்க வெற்றி மேல்
வெற்றி கிடைக்கும். எதிரிகளை வென்று
ஜெயம் கொள்வார். மதிப்பு, மரியாதை மேலும்
உயரும். ஆரோக்கியமும்
சீராக இருக்கும். மத ஆர்வங்கள்
கூடும். அனைத்துவிதமான
வசதி வாய்ப்புகளும் கூடும். அரசால் நன்மைகள் உண்டு. புனித
பயணங்கள் ஏற்படும். என்று குறிப்பிடுகிறார்.
9 ஆம் பாவத்தில் உள்ள “முந்தா” ஜாதகரை தனது
புதிய திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாகவும், உயர்
குறிக்கோள்களின் மூலமாகவும் உயரிய குறிக்கோள்களை சுலபமாக எய்துவார். செல்வம், சுகம் மற்றும்
புகழ் மேலும் மேலும் அதிகரிக்கும். எதிர்ப்பவர்கள்
சிதறி ஓடுவர், வழக்கு
விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். அரசின்
அனுகூலமும், முழு
ஒத்துழைப்பும் கிடைக்கும். கடவுள் பக்தி, மத ஆர்வம்
ஆன்மீகவாதிகளின் மீதான நம்பிக்கை கூடும். தீர்த்த
யாத்திரைகள் ஏற்படலாம். சந்தோஷ
சூழ்நிலைகளுக்கு மனம் இட்டுச் செல்லும்.
“முந்தா” உள்ள இராசி
தரும் பலன் –
இந்த வருட
ஜாதகத்தில் “முந்தா” சனியின்
ஆதிபத்தியம் பெற்ற கும்ப இராசியில் இடம்
பெற்றுள்ளது.
இதன் காரணமாக
இந்த வருடம் சில அனுகூலமற்ற பலன்களும்
நடக்கும். தடைகள், உடல் உபாதைகள்
ஏற்படும். பயணங்களில் தொல்லைகள், இடமாற்றங்கள்
ஏற்படலாம். இரத்த சம்பந்தமான பிரச்சனைகள் எழலாம்.
வழக்கு விவகாரங்களில் சாதகமற்ற நிலை ஏற்படலாம்.
அடுத்து, முந்தேஷ் – முந்தாதிபதி சனி, 8 பாவம் அமர்ந்து
தரும் பலன்கள்.
அனுகூலமற்ற பலன்களே
ஏற்படுத்தும். வசதி குறைவு, உடல்
உபாதைகள், சிறுநீர் சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். பணியில் இழப்புகள் ஏற்படலாம். குடும்பம்
மற்றும் அரசியல் பிரச்சனைகள் எழலாம். பொருளாதார
முன்னேற்றங்கள் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளின்
மூலமான தொல்லைகள் அதிகரிக்கும். மன உழைச்சல், உடல்
உழைச்சல்கள் ஏற்படும். அரசாங்கம்
மற்றும் அதிகாரிகளால் மனதில் படபடப்பு, டென்ஷன்கள்
அதிகரிக்கும். உணர்ச்சி
வசப்பட்ட மனநிலை, எரிச்சலூட்டும்
தொடர்புகள், கால் தூசுக்குப்
பெறாத எதிரிகளின் எதிர்ப்பு மற்றும் பயமுறுத்தல்கள், பணியில்
அஜாக்கிரதை நிலை மற்றும் மன இறுக்கம் ஆகியவை ஏற்படும்.
எனவே, தாஜிக வருடபலன் காணும் முறைப்படியும், பாரம்பரிய
முறையிலும் பார்க்கும் போது கலப்பு பலன்களாகவே உள்ளது. சூழ்நிலை சின்னம்மாவுக்கு சாதகமா? பாதகமா ? என்பதை பொருத்திருந்து
பார்ப்போம் .