Search This Blog

Monday, 12 April 2021

 





இரட்டை இலை துளிருமா? அல்லது உதிருமா?

சூரியன்... எழுமா? அல்லது விழுமா?.

 

        அம்மா என்று அனைவராலும் அழைக்கப்படும்மக்கள் முதல்வர் அம்மாவின் ஜாதகத்தை சென்ற தேர்தல் நேரத்தில் அலசிய போதுஅவருக்கு நடப்பு குரு திசை பலன்களைக் குறிப்பிட்டபோதுகீழ்கண்டபடி குறிப்பிட்டிருந்தேன்.

 

         அதிகாரத்தில் உள்ளவர்கள் தான் விரும்பியபடிகனிகளைப் பறிப்பர்யாகங்கள்வேதத்தைப்பற்றிய அறிவுகடவுள் பக்திசாத்திர அறிவு ஆகியவற்றைப் பெறுவர்நல்லவர்ஞானிகளின் நட்பு கிடைக்கும்மதிப்புமரியாதை உயரும்தலைமைப்பதவி தேடி வரும்கடந்த கால மற்றும் எதிர்காலம் பற்றிய அறிவு பெருகும்அரசாட்சி கைக்கு வந்து சேரும்அனைத்து வசதிகளும் பெருகும்மக்களால் போற்றி வணங்கப்படும் நிலை உருவாகும்.

 

          யாகங்கள்திருமண நிகழ்ச்சிகள் போன்ற அனுகூலமான நிகழ்ச்சிகள் மூலமாக சந்தோஷம் பெருகும்மக்கள் பணிபுரிபவர்களுக்குத் தலைமைப்பதவி ஏற்கும் நிலை உருவாகும்தர்க்கங்களிலும்போட்டிகளிலும் வெற்றிகிட்டும்உயர்பதவிகள் வந்து சேரும்உயர்பதவிகளுக்கான தேர்தல்களில் வெற்றி பெற்று உயர்பதவியைப் பிடிக்கும் நிலை உருவாகும்.

 

          தற்போதைய  அம்மாவின் சனி  –  புத்தியில் பொறாமை குணம், உடல் பலம் குறைவு, உள்ளூற மன சந்தோஷமின்மை ஆகியவை ஏற்படும். அரசாட்சியைக் கைப்பிடித்தல்,  அரசாங்கத்தில் உயர் பதவியை அடைதல் ஆகியவை ஏற்படும். அதிக செலவுகள் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள், செல்வநிலை உயருதல், வாகன வசதிகள் பெருகுதல் என எட்டாத உயரத்துக்குச் செல்லும் நிலையும் ஏற்படும். புகழ் மற்றும் உயர்நிலை ஏற்படும்அரசாள்பவரின் அனுகூலங்கள் கிடைக்கும்முன்னேற்றம்மதிப்புஅதிர்ஷ்டம் யாவும் பெருகும்பல அரசர்களுக்கும் அரசராகத் திகழ்வார்சில இன்னல்களும் ஏற்படலாம்அதற்கு ருத்ர ஜபம் மற்றும் விஷ்ணு ஸகஸ்ரநாமம் ஆகிய பரிகாரங்கள் செய்வது நலம்என்று குறிப்பிட்டிருந்தேன். அவைகளும் நடந்தன. உடல் பலம் குறைவு, மன சந்தோஷமின்மை அவரை மரணத்துக்கு அழைத்துச் சென்றது.

 

          இனிஅம்மாவுக்குப் பின் நடக்கவிருக்கிற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் என்ன ? – என்பது பற்றி தாஜிக முறைப்படி வருடபலன் என்ன சொல்கிறது என்பதைக் காண்போம். அதன்  48 - 49  வயதுக்கான  ( 2020-2021 ) வருட பலன் பற்றி பண்டைய முனிவர்களின் கூற்றுப்படி ஆராய்வோம்.

 

          இது ஜனன ஜாதகத்தில் உள்ள சூரியன் இருக்கும் இடத்திற்குஅடுத்த வருடம் சூரியன் வரும் காலத்தைக் கொண்டு கணித்து பலன் காண்பது வருட ஜாதகமாகும்வடமொழியில் இதை வருஷ பல்” – என அழைப்பர். இந்த முறையை தாஜிக முறையென்றும் அழைப்பர்.

 

        1972 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 17 ஆம் நாள், பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய முடிந்த வயது 48 – நடப்பு வயது 49 க்கான வருட ஜாதகம் 17 – 10 – 2020 அன்று இரவு 20 – 30 – 39  மணிக்கு வரும் சூரியனின் வருட பிரவேச நிலை கணக்கின்படி உருவான ஜாதகம் கீழே ;

 

செவ்(வ)

லக்//

ராகு

கேது

லக்//

அஇஅதிமுக

48- 99 வயது

2020 – 2021

 

இராசி

செவ்(வ)

புத(வ)

 

 

நவாம்சம்

சனி

சுக்

சனி

சந்

முந்தா,

குரு

கேது

சூரி,சந்

புத(வ)

முந்தா

சுக்,

குரு

சூரி

ராகு

 

        பண்டைய நூலான, “நீலகண்ட தெய்வஞர்” எழுதிய தாஜிக நீலகண்டீயம்” என்னும் நூலின்படி வருட பலன்களைக் காண்போம்.

 

        இந்த வருட ஜாதகத்தில்  “வருசேஷா” அல்லது வருடாதிபதி”  அசுரகுருவான சுக்கிரன்  ஆவார்.மிக்க பலமுடைய வருடாதிபதி குரு தரும் பலன்கள் ஆவன.

 

             பலம் மிக்க சுக்கிரன் தரும் பலன்கள் ஆவன -  இந்த வருடம் இக் கட்சியின் கட்டமைப்பு சிறக்கும். சந்தோஷ சூழ்நிலைகள் உருவாகும். இசை, நுண்கலைகள், இலக்கியம் முன்னேற்றம் கண்டு சிறப்பாக இருக்கும். நவநாகரீகமான புதிய திட்டங்கள் உருவாகும். இலவச திருமணங்கள் அதிகமாக நிகழும். அனுகூலமான, ஆடம்பரமான விழாக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவை நடக்கும். தலைவர்களின் நினைவிடங்கள் ஆடம்பரமான வகையில், அலங்காரங்கள் பல செய்து அதிகப் பொருட்செலவில் உருவாக்கப்படும். அனைத்து செயல்பாடுகளிலும் வெற்றி மேல் வெற்றி கிட்டும். அரசு அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும்.

 

       அரசு சம்பந்தமான விவகாரங்களில் மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகே வெற்றி கிடைக்கும்.

 

              அடுத்து இந்த வருடத்திற்கான முந்தா” வின் நிலை. “முந்தா” என்பது வருட ஜாதகத்தின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படுகிறது.

 

        ஒருவர் பிறந்த காலத்தில்ஜனன ஜாதகத்தில் இலக்னத்தில் இருக்கும் முந்தா ஒவ்வொரு வயதுக்கும் ஒரு இராசியாக முன்னேறும். ( இரண்டாவது வயதில் இரண்டாம் இராசிக்கட்டம் என ). இந்த 48 வது வயது ஜாதகத்தில் முந்தா” வின் நிலையைப் பார்ப்போம்.

 

       இந்த வருட ஜாதகத்தில் முந்தா  வருட இராசிக் கட்டத்தில் இலக்னத்துக்கு  8 ஆம் பாவத்தில் அமைகிறது.

 

இந்த வருட வருடாதிபதி (வருசேஷாமற்றும் முந்தாவின் நிலைகள்.

 

வருசேஷா

சுக்கிரன்

முந்தா இருக்கும் இராசி

தனுசு  

முந்தா இருக்கும் வீடு

8

முந்தேஷ் எனும் முந்தாதிபதி

குரு

முந்தாதிபதி இருக்கும் வீடு.

8

 

 எட்டாம் பாவத்தில் உள்ள முந்தா” தரும் பலன்கள் ;

 

தாஜிக நீலகண்டீயம்” கூறும் பலன்.

 

          எட்டாம் பாவத்தில் உள்ள  முந்தா” வானது வாழ்க்கையில் எதிரிகளால் தொல்லை மற்றும் பயந்த நிலையை உருவாக்கும். இழப்புகளும் அதிகமாகும்.  முந்தா எட்டில் இருப்பது கட்சிக்குள் குழப்பங்களைத் தரும். வருங்கால செயல்பாடுகளில் நிலையற்ற தன்மைகளையும், பணி மற்றும் அதிகார இழப்புகளையும் தரலாம். பொருளாதார நிலை மிக்க பின்தங்கி இருக்கும். மக்களுக்கு திடீர் நோய்களால் கஷ்டங்கள், அதன் காரணமாக நாட்டின், செலவினங்கள் அதிகரிக்கும். குறிக்கோளற்ற, கஷ்டமான, நீண்ட பயணமாய் இருக்கும். தேவையற்ற செலவினங்களால் சொத்துகள் குறையும். சில நேரங்களில் தோல்வியின் எல்லைவரை செல்ல வேண்டியதிருக்கும். இடமாற்றங்களும் ஏற்படலாம். தீய விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் நியாயத்திற்குப் புறம்பான காரியங்களில் ஈடுபட நேரும். இந்த வருடம் சில அனுகூலமற்ற பலன்களும் நடக்கும்.  தடைகள்,  பயணங்களில் தொல்லைகள், இடமாற்றங்கள் ஏற்படலாம். வழக்குகளில் இழுபறி நிலை தொடரும்.இதே பலன்களைத்தான் ஹயான் பாஸ்கர் என்ற ஜோதிட அறிஞரும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

 

         இதுவே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68 வது வருடபலன் ஜாதகத்தில், முந்தா 3 இல் இருந்த போது கீழே கொடுக்கப்பட்ட பலன்களை இருவரும் குறிப்பிட்டிருந்தனர்.

 

         முந்தா” 3  இல் இருக்க வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். எதிரிகளை வென்று ஜெயம் கொள்வார். மதிப்பு, மரியாதை மேலும் உயரும். ஆரோக்கியமும் சீராக இருக்கும். மத ஆர்வங்கள் கூடும். அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளும் கூடும். என்று குறிப்பிடுகிறார்.

 

            ஆம் பாவத்தில் உள்ள முந்தா”   ஜாதகரை தனது புதிய திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் மூலமாகவும், உயர் குறிக்கோள்களின் மூலமாகவும் உயரிய குறிக்கோள்களை சுலபமாக எய்துவார். ஜாதகரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் சமூகத்தில் நல்ல பெயரை ஏற்படுத்தும். கௌரவமும் கூடும். சக்தி மிக்க பெண்மணியாக விளங்குவதால் செல்வம், சுகம் மற்றும் புகழ் மேலும் மேலும் அதிகரிக்கும். எதிர்ப்பவர்கள் சிதறி ஓடுவர், வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். மத்திய அரசின் அனுகூலமும், முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். அருகிலுள்ளவர்கள் மற்றும் தொண்டர்களின் ஒத்துழைப்புக்கள் நன்மை பயக்கும். கடவுள் பக்தி, மத ஆர்வம் ஆன்மீகவாதிகளின் மீதான நம்பிக்கை கூடும். தீர்த்த யாத்திரைகள் ஏற்படலாம். சந்தோஷ சூழ்நிலைகளுக்கு மனம் இட்டுச் செல்லும். என்று குறிப்பிட்டு இருந்தனர்.

 

 

         அடுத்து முந்தா”  இடம் பெற்றுள்ள உள்ள இராசி தரும் பலன்களைக் காண்போம்  –

 

      அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய முடிந்த வயது 48 –  இந்த வருட ஜாதகத்தில் முந்தா”  குருவின் ஆதிபத்தியம் பெற்ற  தனுசு   இராசியில்  இடம் பெற்றுள்ளது.

 

      

       “தாஜிக நீலகண்டி” யில் – “முந்தா” மீதான குருவின் பார்வையால்,  அரசியலில் சக்தி மிக்க பதவிகள் கைக்கு வந்து சேரும்  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்சிக்கு சாதகமான எல்லா அனுகூலமான நிலைகளும் ஏற்படும். கூட்டாளிகளோடு, ஒற்றுமையான மற்றும் சந்தோஷமான நிலைகள் ஏற்பட்டு, மன மகிழ்ச்சியும் ஏற்படும். ஆன்மீகப் பெரியோர்களின் ஆதரவுகள், ஆசிகள், அவர்கள் சந்திப்பால் ஏற்படும் மகிழ்ச்சி ஆகியவை நிலைத்திருக்கும். கல்விச் சாலைகளில் புதிய நடைமுறைகளால், கல்வி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஆகியவை ஏற்படும். எதிர்பாராத ஆதாயங்கள், போட்டிகளில், தேர்தல்களில் வெற்றிகள் குவியும். அன்பளிப்புகள், இலவசங்கள் கிடைக்கும். கூட்டணி நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். 

 

         அடுத்துமுந்தேஷ் – முந்தாதிபதி குரு,  அதே எட்டாம் பாவம் அமர்ந்து தரும் பலன்கள் என்னவென்று பார்ப்போம். மறைவு ஸ்தானமான எட்டாம் பாவத்தில், வருசேஷாவான, குரு, அனுகூலமற்ற பலன்களைத்தானே தருவார். தொல்லைகள்தான். ஆரோக்கியக் குறைவு மற்றும் திடீர் நோய்கள் ஏற்படுதல் ஆகியவை ஏற்படும்.

 

         பொருளாதார முன்னேற்றங்கள் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்.  எதிரிகளின் மூலமான தொல்லைகள் அதிகரிக்கும். மன உழைச்சல், உடல் உழைச்சல்கள் ஏற்படும். அரசாங்கம் மற்றும் அதிகாரிகளால் மனதில் படபடப்பு, டென்ஷன்கள் அதிகரிக்கும்.  உணர்ச்சி வசப்பட்ட மனநிலைஎரிச்சலூட்டும் தொடர்புகள்கால் தூசுக்குப் பெறாத எதிரிகளின் எதிர்ப்பு மற்றும் பயமுறுத்தல்கள்பணியில் அஜாக்கிரதை நிலை மற்றும் மன இறுக்கம் ஆகியவை ஏற்படும்.

 

குருவின்  இராசியில் உள்ள முந்தா தரும் பலன் –

 

         தடைகள் மற்றும் ஆசைகள் நிறைவேறாத நிலைஆரோக்கியக் குறைவுஇடமாற்றம் மற்றும் தேவையற்ற பயணங்கள் ஆகியவை ஏற்படும்வழக்குகளில் வெற்றியின்மைமுந்தா - குருவின் இராசியில் இருக்க அல்லது குருவால் பார்க்கப்பட நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

 

       

         நல்ல எண்ணங்கள் அரசியல்வாதிகள் மனதில் உருவாகும். அதன் காரணமாக வெற்றி மேல் வெற்றி கிட்டும்.  கட்சி சந்தோஷம், தலைவர்கள் புகழ், செல்வம், சாதகமான விழாக்கள், அவர்களுக்கு மிகவும் மதிப்பு மிக்க உயர் பதவிகள் ஆகியவை கிடைக்கும். புதிய திட்டங்களில் வெற்றி கிட்டும். திட்டங்களை முடுக்கிவிட்டு முடித்து வைப்பதில் அதிகாரிகளின் ஆதரவு முழுவதுமாகக் கிடைக்கும்.  சமூக அந்தஸ்து மேலும் உயரும் மக்களின் நம்பிக்கை மற்றும் அரசியல் சேவைகள் கண்டிப்பாக வெற்றிக் கனியைப் பறித்துத்தரும். அதிகாரம் மற்றும் பொறுப்பு மிக்க பதவி கிடைக்கும். எதிரிகள் தானாகவே வந்து அடிபணிவர். மதிப்பு மரியாதை, கௌரவம் அனைத்தும் கூடும்.  மத ஆர்வம் கூடும். ஏற்கனவே குறிப்பிட்டபடி, புதிய திட்டங்களாலும், கொள்கைகளாலும் உயர்ந்த குறிக்கோள்கள் எட்டப்படும்.

 

 எனவே, தாஜிக வருடபலன் முறைப்படி சூழ்நிலை கட்சிக்கு, ஒரு சில பிரச்சனைகளைத் தவிர பலன்கள் சாதகமாகவே உள்ளது.

 

        மேலும், ஜனன ஜாதகம்படி, நடப்பு தசா / புத்தி, சனி தசா, புதன் புத்தி பிப்ரவரி 2022 வரை உள்ளது. இக் கிரகங்கள் தரும் பலனைக் காண்போம். சனி தசா ஜாதகப்படி தரும் சிறப்பு பலன்கள் ஆவன –

 

        தமிழ் நாட்டு மக்களுக்கு சந்தோஷம் கூடும். அரசியல்வாதிகளுக்கு அரசு மரியாதை கிட்டும். மக்கள் தொகை கூடும். கூட்டணிக் கட்சிகளிடையே, கட்சியின் மதிப்புக் கூடும். அரசு தொடர்புடைய தொழில் மற்றும் தொழிற்சாலைகளில் இழப்புகள் அதிகமாகும். பொருளாதார நிலை முன்னர் இருந்ததைவிடச் சிறப்பாக இருக்கும். அறிவுத்திறன் கூடும். அரச கௌரவம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி கிட்டும். கட்சிக்குப் புதிய சொத்துக்கள் சேரும். கட்சியின் சேவைகளால் பேரும் புகழும் கூடும். தைரியமும் கூடும்.

 

         புதன் புத்தியில் – பிரபுவின் அரசாங்கத்தில் கௌரவம், அந்தஸ்து கூடும். பதவி உயர்வு உண்டு. தொழில், வியாபார நிலைகளில் அதிக இலாபங்களை எதிர் பார்க்கலாம். நற்காரியங்கள் பல நடக்கும். அறிவாளிகள், மேதைகளின் அருகாமை களிப்பைத் தரும். கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். அதிர்ஷ்ட நிலை உயரும். மக்களால் பூஜிக்கப்படுவர். மதிப்பு, மரியாதை கூடும். மக்களுக்கு வாகன சுகங்களும் கூடும். மக்களிடையே மதத் தொடர்பான யாகங்கள், பூஜைகள், ராஜ யோகங்கள், என பக்தி மார்க்க ஈடுபாடுகள் அதிகரிக்கும். புனித ஸ்தலங்களில் கூட்டம் கூடும். இனிப்புகள் கொடுக்கும் அளவுக்கு கொண்டாட்டங்கள் ஏற்படும். ராஜாங்கம் கிடைத்தல், அரச பதவிகள் கிடைத்தல், உயர் பதவிகள் ஏற்படுதல், தலைமைப் பதவிகள் கிடைத்தல் ஆகிய நற்பலன்களும் உண்டாகும். 

எனவே, தசா புத்தி பலன்கள் சிறப்பாகவே உள்ளன என்றால் மிகையாகாது.

 

 

 

          இனிதிமுகா வின் எதிர்காலம் என்ன ? – என்பது பற்றி பார்ப்போம். தாஜிக முறைப்படி அக் கட்சிக்கு  71 - 72  வயதுக்கான  ( 2020-2021 ) வருட பலன் பற்றி பண்டைய முனிவர்களின் கூற்றுப்படி ஆராய்வோம்.

 

          இது ஜனன ஜாதகத்தில் உள்ள சூரியன் இருக்கும் இடத்திற்குஅடுத்த வருடம் சூரியன் வரும் காலத்தைக் கொண்டு கணித்து பலன் காணும், வருஷ ஜாதக கணிப்பு முறையாகும்வடமொழியில் இதை வருஷ பல்” – என அழைப்பர்.

 

         17 செப்டம்பர்  1949 அன்று அண்ணா என்று அழைக்கப்பட்ட அறிஞர் அண்ணாத்துரை அவர்களால் சென்னை, இராயபுரத்தில் உள்ள பூங்காவொன்றில் தொடங்கப்பட்ட தி. மு. க பேரியக்கத்துக்கு பிறந்த முடிந்த வயது 71 – நடப்பு வயது 72 க்கான வருட ஜாதகம் 17 – 9 – 2020 அன்று இரவு  20 – 36 – 18  மணிக்கு வரும் சூரியனின் பிரவேச நிலைக் கணக்கின்படி உருவான ஜாதகம் கீழே ;

 

 

 

 

செவ்(வ)

லக்//

ராகு

கேது

செவ்(வ)

முந்தா

71- 72 வயது

2020 – 2021

தி.மு.க

இராசி

சுக்

சந்முந்தா

 

 

நவாம்சம்

 

சனி(வ)

சூரி

சனி(வ)

புத,லக்//

கேது

குரு

சூரி,சந்

புத

சுக்

ராகு

குரு

 

       பண்டைய நூலான, “நீலகண்ட தெய்வஞர்” எழுதிய தாஜிக நீலகண்டீயம்” என்னும் நூலின்படி வருட பலன்களைக் காண்போம்.

 

       இந்த வருட ஜாதகத்தில்  “வருசேஷா” அல்லது வருடாதிபதி”  கர்மகாரகனான செவ்வாய்        ஆவார்.   பலமுடைய வருடாதிபதி செவ்வாய்  தரும் பலன்கள் ஆவன.

 

            புகழ் கூடும். எதிரிகள் அழிவர். அதிகார நிலைகள் கைக்கு வந்து சேரும். புதிய நண்பர்களின் சந்திப்புகள் நிகழும். சொத்துக்கள் சேரும் என்பதே வருடாதிபதி செவ்வாய் தரும் பலன்கள் ஆகும்.

        அதிகாரிகளின் தயவு அதிகமாகவே இருக்கும். முக்கியமாக, காவல் துறையினரின் சகாயம் கிட்டும். ஒழுக்கமும், கட்டுப்பாடும் தேவைப்படும் பணி அமையும். பொறுப்புள்ள, அதிகாரம் மிக்க பதவிகள் கட்சிக்கு வந்து சேரும். கண்டிப்பாக பதவி உயர்வு உண்டு. போட்டிகளில், தேர்தலில் வெற்றி கிடைக்கும். சோத்து லாபம், சண்டைகள், வழக்கு விவகாரங்கள் ஆகியவையும் ஏற்படும். கட்சியின் பலம் கூடும். புகழ் சேரும். மதிப்பு மரியாதையும் கூடும். பணியிடத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்கும் நிலை ஏற்படும்.

 

              அடுத்து இந்த வருடத்திற்கான முந்தா” வின் நிலை. “முந்தா” என்பது வருட ஜாதகத்தின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படுகிறது.

 

        ஒருவர் பிறந்த காலத்தில்ஜனன ஜாதகத்தில் இலக்னத்தில் இருக்கும் முந்தா ஒவ்வொரு வயதுக்கும் ஒரு இராசியாக முன்னேறும். ( இரண்டாவது வயதில் இரண்டாம் இராசிக்கட்டம் என ). இந்த 71 வது வயது ஜாதகத்தில் முந்தா” வின் நிலையைப் பார்ப்போம்.

 

       இந்த வருட ஜாதகத்தில் முந்தா  வருட இராசிக் கட்டத்தில் இலக்னத்துக்கு11 ஆம் பாவத்தில் அமைகிறது.

 

இந்த வருட வருடாதிபதி (வருசேஷாமற்றும் முந்தாவின் நிலைகள்.

 

வருசேஷா

செவ்வாய்

முந்தா இருக்கும் இராசி

கும்பம்  – 23-46-28

முந்தா இருக்கும் வீடு

11

முந்தேஷ் எனும் முந்தாதிபதி

சனி

முந்தாதிபதி இருக்கும் வீடு.

10

 

 இலாப பாவத்தில் உள்ள முந்தா” தரும் பலன்கள் ;

 

தாஜிக நீலகண்டீயம்” கூறும் பலன்.

 

       இலாப  பாவத்தில் உள்ள  முந்தா” வானது வாழ்க்கையில் நவநாகரீக பொருட்களை அடையும் அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தையும், மனத் திருப்தியையும் அளிக்கிறது. நல்ல நண்பர்களின் அருகாமை ஏற்படும். இதையே ஜோதிட மேதை ஹயான் பாஸ்கரும் குறிப்பிடுகிறார். 

       “முந்தா” 11 இல் இருக்க வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். எதிரிகளை வென்று ஜெயம் கொள்வார். மதிப்பு, மரியாதை மேலும் உயரும். ஆரோக்கியமும் சீராக இருக்கும். மத ஆர்வங்கள் கூடும். அனைத்துவிதமான வசதி வாய்ப்புகளும் கூடும். என்று குறிப்பிடுகிறார்.

       11 ஆம் பாவத்தில்  முந்தாவைக் கொண்ட இந்த வருடத்தில் பொருளாதார நிலை சூப்பராக இருக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகிவிடும். பணியிடத்தில் பல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். ஆசைகள், விருப்பங்கள், கனவுகள் அனைத்தும் நிறைவேறும்.   அரசு அனுகூலங்கள் திருப்திகரமாக இருக்கும். உறவுகள் மற்றும் நண்பர்களை சந்திப்பதிலும் மனத்திருப்தி நிலவும்.  அரசியல் வெற்றி, விழாக்களில் பங்கேற்றல் ஆகியவையும் நிகழும். 

 

முந்தா” உள்ள இராசி தரும் பலன் –

 

       இந்த வருட ஜாதகத்தில் முந்தா”  சனியின் ஆதிபத்தியம் பெற்ற கும்ப  இராசியில்  இடம் பெற்றுள்ளது.

 

       இதன் காரணமாக இந்த வருடம் சில அனுகூலமற்ற பலன்களும் நடக்கும்.  தடைகள், உடல் உபாதைகள் ஏற்படும். பயணங்களில் தொல்லைகள், இடமாற்றங்கள் ஏற்படலாம். வழக்குகளில் இழுபறி நிலை தொடரும்.

       “தாஜிக நீலகண்டி” யில் – “முந்தா” மீதான குருவின் பார்வை  அரசியலில் சக்தி மிக்க பதவிக்கு வரும் வாய்ப்பை அளிக்கும்  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அடுத்துமுந்தேஷ் – முந்தாதிபதி சனி, 10 பாவம் அமர்ந்து தரும் பலன்கள்.

 

        எதிர்பார்ப்புக்கு மேலான வெற்றிகள் குவியும். பதவி உயர்வுகள் கிடைக்கும். விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவை நிறைவேறும். சமூகத்தில் முன்பு இருந்ததைவிட அந்தஸ்து உயரும். பொருளாதார முன்னேற்றங்கள் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும்.  எதிரிகளின் மூலமான தொல்லைகள் அதிகரிக்கும். மன உழைச்சல், உடல் உழைச்சல்கள் ஏற்படும். அரசாங்கம் மற்றும் அதிகாரிகளால் மனதில் படபடப்பு, டென்ஷன்கள் அதிகரிக்கும்.  உணர்ச்சி வசப்பட்ட மனநிலைஎரிச்சலூட்டும் தொடர்புகள்கால் தூசுக்குப் பெறாத எதிரிகளின் எதிர்ப்பு மற்றும் பயமுறுத்தல்கள்பணியில் அஜாக்கிரதை நிலை மற்றும் மன இறுக்கம் ஆகியவை ஏற்படும்.

 

சனியின்  இராசியில் உள்ள முந்தா தரும் பலன் –

 

       

   வெற்றிகள் மற்றும் போட்டிகளால் பணவரவுவழக்குகளில் வெற்றி, மதிப்பு, மரியாதை, புகழ்,       பலம்,  பணியிடத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றல் என அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என எதிர்பார்க்கலாம்எதிரிகள் தானாகவே வந்து அடிபணிவர். மதிப்பு மரியாதை, கௌரவம் அனைத்தும் கூடும்.  

 

          எனவே, தாஜிக வருடபலன் முறைப்படி தி. மு. க. வின் வருட ஜாதகம்  முந்தா இலாபத்திலும், முந்தாதிபதி 10 ஆம் பாவத்தில் அமைந்துள்ளது மிகச் சிறந்த நிலை எனக் கருதப்படுவதால், முடிவை வாசகர்களே எடுத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். ஜனன ஜாதகத்தில் தற்போது நடக்கும், சுக்கிர திசை, புதன் புத்தியும் சிறப்பாகவே உள்ளது. வாழ்க வளமுடன்.

 

No comments:

Post a Comment