Search This Blog

Monday, 12 April 2021

 




இபிஎஸ்ஸூம், இணையற்ற அரசாளும் யோகங்களும்.

 

         அன்பு நண்பர்களே! முக்கிய பிரமுகர்களின் ஜாதகங்கள் பல பிறந்த தேதிகளோடு இணையத்தில் உலா வருகின்றன. அதனால், பிறப்பு விவரங்கள் எதுவும் இதில் தரப்படவில்லை. அதில், ஒரளவு நம்பிக்கையுள்ள இந்த ஜாதகத்தின் மூலமாக, முதல்வரின் யோக பலன்களை ஆராய்வோம். ரிஷப இலக்னம், கன்னி இராசி, ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்த நமது, மாண்புமிகு முதல்வரின் ஜாதகம் முதல் தர யோக ஜாதகமா ? என்பதை அலசி ஆராய்வோம்.20-3-54

 

சுக்

சூரி

லக்//

குரு

கேது

சந்

கேது

புதன்

தமிழக முதல்வர் இடப்பாடி பழனிசாமி

இராசி

சனி(வ)

செவ்

 

 

நவாம்சம்

லக்//

 

குரு,சூரி

ராகு

செவ்

சனி

(வ)

சந்

சுக்,ராகு

புத

 

முதலில் பாவங்களில் கிரகங்கள் நின்ற பலன்களைப் பார்ப்போம்.

        இலாப பாவத்தில் உள்ள சூரியனால், ஜாதகர் மற்றவரைக் கவரும் வண்ணம், பொலிவுடன் இருப்பார். பலம் மிக்கவராக, செல்வந்தராக, கர்வமுடையவராக இருப்பார். மெடிடேஷன், சாந்தகுணம் (முனிவர் போல்) நற்குணங்களை உடையவராகவும் இருப்பார். குறைவாகப் பேசுபவராக இருந்தாலும், நல்ல பேச்சாளராகத் திகழ்வார். அரசரின் தயவால், ராயல் அத்தாரிட்டியும், எதிலும் தானே முடிவெடுக்கக் கூடிய உயர் பதவிகளையும் அடைவார். பணம் சேர்க்கும் வழிமுறைகள் தானாகவே உருவாகும். திடீரென, சொத்துக்கள் சேரும் அல்லது அரசு மூலமான வருமானங்கள் அதிகமாகும். வாகனங்கள், பணியாட்கள் என அனைத்து வசதிகளுடன் வாழ்வார். பொன், பொன் ஆபரணங்கள், நல்லாடைகள் என உலகத்திலேயே சிறந்த வசதி வாய்ப்புக்களுடன் இருப்பார். எப்போதும் பிஸியாக இருப்பார். எடுக்கும் காரியங்களில் எப்போதும் வெற்றியாளராக இருப்பார். திறமை மிக்கவர். மற்றவர்கள் திறமைகளையும் பாராட்டக் கூடியவர். நீண்ட ஆயுள் உடையவர். தனது 25 ஆவது வயதிலேயே, வாகன யோகம் உடையவர். நம்பிக்கைக்கு உரிய மற்றும் திடமான, அசைக்க முடியாத நண்பர்களை உடையவர். நண்பர்கள் அனைவருமே உதவிகரமாக இருப்பார்கள்.

         பஞ்சம திரிகோணத்தில் சந்திரன் அமர்ந்ததால், ஜாதகர் அதிர்ஷ்டசாலியாகிறார். நற்காரியங்களில் ஈடுபடுவார். ஆடம்பரப் பொருட்களும், செல்வமும் சேரும். சுலபமாக நிலம் போன்ற சொத்துகள் சேரும். வியாபாரம், லேவாதேவி, இன்னும் பல வழிகளிலும், சம்பாத்தியத்தை அதிகரித்துக் கொள்வார். அரசு மூலம் தன மற்றும் மனை இலாபங்களை அடைவார். அஷ்ட ஐஸ்வரியங்கள், வசதி வாய்ப்புகள் மற்றும் சந்தோஷங்களையும் அடைவார். நாற்கால் பிராணிகள் மூலமான இலாபங்களையும், பால் பண்ணை மூலமான வருமானங்களையும் அடைவார். மாநில அமைச்சர் ஆகும் யோகம் உண்டு. மற்றவர்களை எடைபோடுவதில் வல்லவர் மற்றும் அரசியலில் வெற்றிகரமானவர். சமூகத்தில் மரியாதைக்குரியவர்களின் வரிசையில் இருப்பதோடு, வெற்றிகளைக் குவிப்பவர். சுறுசுறுப்பானவர் மற்றும் நன்நடத்தையுடன், பிறரை மன்னிக்கும் குணம் உடையவர். சிலநேரங்களில், கோழையாகவும் இருப்பார். திறமைமிக்கவர். எளிமையானவர். செயல்பாடுகளில் மிகுந்த எச்சரிக்கை குணமும், இரக்க குணமும் உடையவர். உண்மையானவர், பண்பாளர், மகிழ்ச்சி மிக்கவர். ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தையை உடையவர். நல்ல நண்பர்களை உடையவர். அன்பான மனைவி, மக்களை உடையவர். மனைவி கபடில்லாத, கண்ணியமான, இவர்மேல் சிரத்தையுள்ள குணம் உடையவர். அவர், சுற்றியுள்ளவர் பால் அன்பு எனும் தென்றலாக வீசக்கூடியவர். இவரது கிரக நிலைகள் இவரது மனைவிக்கு அனுகூலமானவையாக அமைந்துள்ளன. எனவே, அதிர்ஷ்டசாலியாக இருப்பார். இவரது மனைவிக்கு திடீர் எனக் கோபங்கள் ஏற்படும். அல்லது கோபப்படுவது போல் நடிப்பார்.

         களத்திர பாவத்தில் உள்ள செவ்வாய், புத்திசாலித்தனத்தையும், வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களையும் அளிப்பார். நல்ல மனைவி என்றாலும், இவரைத் தன் கைக்குள் வைத்திருப்பார். கோபமுடையவர். ஜாதகருக்கு, சகோதரர்களும், தாய்வழி மாமா, அத்தை ஆகியோரும் இருப்பர். அனுகூலமான பலன்களே ஏற்படும்.

        கர்ம பாவத்தில் புதன் – இருப்பது, ஜோதிடத்தில்  மிகச் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. அனேகமாக பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த நிலைக்கு மிகச் சிறந்த பலன்களையே அனுமானிக்கின்றனர். தத்துவார்த்தமானவர், உண்மையானவர், மத உணர்வு உடையவர், இனிய பேச்சுடையவர். தேவையான, பாயிண்டை மட்டும் பேசக்கூடியவர். ஆகச் சிறந்த செயல்பாடுகளை உடையவர். எதையும் நிர்மாணிப்பதில் வல்லவர். மரியாதைக்கு உரியவர். அனைவருடனும் சகஜமாகப் பழகக்கூடியவர். புகழ் பெற்றவராய் இருப்பார். பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது பக்தியும், மரியாதையும் உடையவர். நினைவாற்றல் மிக்கவர். உடல் பலத்தின் மூலமாக சொத்துக்களைச் சேர்ப்பதில் வல்லவர். பொருளாதார நிலையில் வல்லமை மிக்கவர். பரம்பரைச் சொத்துகள் உண்டு. அரசால் அங்கீகரிக்கப்படுவார். அரசில் உயர்பதவிகளை அலங்கரிப்பார். அதன் மூலமாக சுயமாக தீர்மானிக்கவும் சக்தி பெறுவார். முக்கியமாக, உலகத்தின் மதிப்பையும், மரியாதையும் பெறுவார். குறிப்பாக, ஏழைகளின் கண்களுக்கு மரியாதைக்கு உரியவராகத் திகழ்வார். வணிக நடவடிக்கை மூலமாகவும், துணிவான நடவடிக்கைகள் மூலமாகவும் செல்வம் சேர்ப்பார். புகழும் அடைவார். வியாபாரம், எழுத்து, தரகு, கமிஷன், ட்ரவல் ஏஜண்ட் போன்ற தொழில்கள் மூலமாக புகழடைவார். தொடங்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி அடைவார்.

         இலக்னத்தில் திக்பலம் பெற்று அமர்ந்துள்ள குரு, மிகச் சிறப்பான பலன்களைத் தருவார். திடமான ஆனால் பலமற்றவராக, நுண்மையானவராக இருப்பார். இறைவனுக்கு நிகரான அழகு உடையவர் என்று வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்படையான, எதையும் தெளிவாக விளக்கக்கூடிய, தற்பெருமையுடைய, பணிவான, பண்பட்ட, இரக்க குணமும், பெரிய மனதும் உடையவர். மத ஈடுபாடும், தர்ம ஸ்தாபன ஈடுபாடும் உடையவர். இருவேறு தெய்வங்களை வணங்குவார். பக்தி மார்க்க ஈடுபாடு, அமானுஷ்ய விஞ்ஞான ஈடுபாடும் உடையவர். தன் எண்ணங்களை, நினைவுகளை, தன்னுள்ளேயே வைத்திருப்பவர். அலைவதில் ஆர்வமுடையவர். ஒரு மெச்சூரிட்டி, திடமனம், சுதந்திரமானவர், உண்மையானவர், பொறுமைமிக்கவர். பயமற்றவர். துணிவான மற்றும் புகழ் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அரசரிடமிருந்து கௌரவம், மற்றும் செல்வங்களையும் பெறுவார். அரசால் அடையாளங்காணப்படுவார். அனுகூலங்களையும் பெறுவார். தனது ஆகச்சிறந்த திறமைகளை மக்களிடையே நிரூபித்து புகழ் அடைவார். தனது சிறந்த குணத்துக்காக, சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுவார். விஷத்தைப் போல் எதிரிகளுக்குப் பிரச்சனைகளைத் தருபவர். தயவு, இரக்கம் காட்டுவதில் வல்லவர். குருவின் தாக்கத்தால் சுமாராக படித்தவர்களும், சிறந்த அறிவாளிகள் போல் காட்சியளிப்பர். வாழ்க்கையில் அவ்வப்போது  ஏற்படும் தடைகள் உடனடியாக நீங்கிவிடும். குருவின் சிறப்பான நிலையால், ஜாதகர், வாழ்க்கையின் முடிவில் சொர்க்கத்தை அடைவார்.

         இலாப பாவத்தில் உள்ள உச்ச சுக்கிரன், ஆரோக்கியமுடன் கூடிய, ஒளிரும் முகத்துடன் கூடிய ஜாதகரை உருவாக்குகிறார். இவரது ஆசைகள் அனைத்துமே நிறைவேறும். இவரிடம் நற்குணங்கள் மட்டுமே இருக்கும். உலகிலுள்ள அனைத்து இன்பங்களும், முன்னேற்றங்களும், அதிகாரங்களும் கைக்கு வந்து சேரும். நிலையான பொருளாதார நிலை, நிலையான புகழ், வண்டி, வாகன வசதிகள் ஆகியவை ஏற்பட்டு அரசன் போல் வாழ்வார். கிராமம், நாடு, நகரம் தொடர்பான கட்டுமானப் பணிகளின் மூலமாக வருமானம் பெருகும். ஒரு நல்ல நண்பரின் உதவியால் சிறப்பான முன்னேற்றங்கள் இருக்கும். அரசர்கள் யானை, குதிரை வாகனங்களை உபயோகித்தது போன்று ஆடம்பரக் கார்களை உபயோகிப்பார். அநேக பணியாட்கள் இவரின் ஆணைகளை சிரமேற் கொள்வர். இவரைக் கண்டு எதிரிகள் எகிறி ஓடுவர். சர்வதேச புகழை அடையக்கூடியவர்.

        உச்ச சனி, சத்ரு பாவத்தில் தரும் பலன்களைப் பார்ப்போம். 6 ஆம் பாவத்தில் சனி இருப்பவர்களுக்கு, ருசியான உணவுகளை அருந்துவதில் ஆர்வம் இருக்கும். எப்போதும் நல்ல பசியிருக்கும். எனவே, நன்றாக சாப்பிடுவார்கள். நல்ல பேச்சாளர். விவாதம் செய்வதில் வல்லவர். எனவே, பகைவர்களுக்கு ஆபத்தானவர். அவர்களின் கர்வத்தையும் அழித்து, வெற்றி அடைவார். அவர்களும் மதிக்கத் தக்க பண்புடையவர். நல்ல பணி செய்பவர்களைப் பாராட்டுவார். அவர்களின் திறமைகளையும் சோதிப்பார். பலருக்கும் அடைக்கலம் தருபவர். நல்ல பணியாட்கள் மற்றும் அதிகத் தொண்டர்களையும் உடையவர். நாற்கால் பிராணிகளிடம், மிகவும் அன்பு காட்டுபவர். தான தர்மங்களை செய்பவர்களில் முதன்மையானவர். இவரது புகழ் நாடு முழுவதும் பரவும்.  நல்ல பணியாட்களின் மூலமாக சிறப்பான பணிகளை செய்து முடிக்க வல்லவர். அரசர் இவருக்கு எப்போதும் அனுகூலமானவராகவே இருப்பார். இராஜ வாழ்க்கை வாழ்ந்தாலும், அவ்வப்போது, சில பிரச்சனைகளால், சந்தோஷமின்மை தலைதூக்கும். வெளிநாடுகளுக்குச் செல்வார். சண்டைகள் மற்றும் கஷ்டங்களை முறியடித்து சீராக முன்னேறுவார். ஒன்றன் பின் ஒன்றாக, புகழ், அதிகாரம் மற்றும் சொத்துக்கள் இவரை வந்து சேரும். இவற்றில் ஒன்று மட்டுமே நிலைக்கும்.

        அட்டம பாவத்தில் இராகு உள்ளார். ஆரோக்கியம் மிக்க, பலமான, சக்திமிக்க உடலமைப்பு உடையவர். திருமணத்திற்குப் பிறகே, இவரது ஆரோக்கியம் மேம்பாடு அடையும். பாராட்டப்படுவார், எல்லோராலும் மதிக்கப்படுவார், அரசராலும், அறிஞர்களாலும் கௌரவிக்கப்படுவார். அரசர் மூலமாகக் கிடைக்கும் சொத்துக்களை சில நேரங்களில்   இழக்கவும் நேரலாம். தோற்கடிக்கப்பட்ட எதிரிகள் மூலமும் ஆதாயங்களைப் பெறுவார். பெண் மூலமாகவோ, உறவினர் மூலமாகவோ சொத்துக் கிடைக்க வாய்ப்புகள் இருந்தாலும், அதை அடைவதில் பல நடைமுறை சிக்கல்கள் எழலாம். 26 முதல் 36 வயதுக்குள் நல்அதிர்ஷ்டக் காற்று இவர் பக்கம் வீசும்.

         ஞானகாரகன் கேது தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உள்ளார். சந்தோஷமான, அழகான, திருப்திகரமான வாழ்க்கை அமையும்.

 

பாவாதிபதிகள் மாறிநின்ற பலன்கள் –

        இலக்னாதிபதி சுக்கிரன், உச்சமாகி, இலாப பாவத்தில் ஏறியிருப்பது, சிறப்பான அனுகூலமான நிலையாகும். பலவழிகளிலும் ஆதாயங்கள் உண்டு. மத அறிவு இருக்கும். அரசனைப்போல் வசதி வாய்ப்புகளைப் பெறுவார்.

        தன, குடும்ப வாக்காதிபதி புதன், கர்ம பாவத்தில் உள்ளார். பெற்றோர்களுக்கும், பெரியோர்களுக்கும் மரியாதை தருபவர். அரசாரால் கௌரவிக்கப்பட்டு, அரசராக வாழ்வார். அதிர்ஷ்டசாலி, புகழ் மிக்கவர், முரட்டுத்தனம் உடையவர். மிகப் பெரிய வணிகர். மணி லெண்டர், அரசு வேலைகளில் அபாரமான திறமைகளை உடையவர்.

         தைரிய பாவாதிபதி பூர்வ புண்ணிய பாவத்தில் அமர்ந்துள்ளார். நீண்ட ஆயுளை உடையவர். சகோதரர்களையும், மகனையும் அரவணைத்துச் செல்பவர். மகிழ்ச்சி மிக்கவர். தனது புத்தி கூர்மையால் புகழ் அடைபவர். நல்லெண்ணங்களை உடையவர்.

         சுக பாவாதிபதி, இலாப பாவத்தில் அமர சுய முயற்சியில் நன்கு முன்னேறுவார். திடீர் சொத்துக்களை அடைய முயற்சிப்பார். ஆனால், அதில் வெற்றி அடையமாட்டார். அடிக்கடி சிறு உடல் உபாதைகள் எழலாம்.

         புத்திர பாவாதிபதி கர்ம பாவத்தில் அமர, குடும்பத்திலேயே பிரகாசமாய் ஜொலிக்கும் ஆபரணமாகத் திகழ்வார். அரசனைப் போன்ற அதிர்ஷ்டசாலி ஆவார். எப்போதும் நற்காரியங்களில் ஈடுபடுவார். அரசவையில் இடம் பெறுவார். அரசருக்கு நெருக்கமானவராக இருப்பார். எப்போதும் சந்தோஷ நிலையிலேயே இருப்பார். சேவை அல்லது அரசியல் மூலமாக சம்பாத்தியம் பெறுவார்.

         ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி, உச்சம் பெற்று இலாப ஸ்தானத்தில் உள்ளார். நாலுகால் பிராணிகளால் ஆதாயம் அடைவார். நண்பர்களே பகைவர் ஆவர்.  

         களத்திர ஸ்தானாதிபதி களத்திர பாவத்தில் அமர்ந்துள்ளார். கரடு முரடான பேச்சை உடையவர். பொறுமையற்றவர். ஆரோக்கிமும், ஆயுளும் மிக்கவர்.

         அட்டமாதிபதி இலக்ன பாவத்தில் இருப்பதால் திடீரென உணர்ச்சி வயப்படுவர். விதண்டாவாதம்புரிவர், அரசன் மூலமாக தனலாபம் அடைவர்.

         பாக்கியாதிபதி ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் இருக்க, அதிக எதிரிகளை உடையவராக இருப்பார். பல இன்னல்களுக்கு ஆளாவார். சில நேரங்களில் துரதிஷ்டசாலி. தாய்வழி ஒன்றுவிட்ட சகோதரன் அல்லது மூத்த சகோதரர் இருக்க வாய்ப்பில்லை.

         கர்மாதிபதி ருணரோக சத்ரு ஸ்தானத்தில் இருக்க, எதிரிகளால் தொல்லைகள் உண்டு. புத்திசாலி, ஆனால், சந்தோஷத்தை அடைவதில் எப்போதுமே வெற்றியடையமாட்டார். சில நேரங்களில் அரசனிடமே தன் எதிர்ப்பைக் காட்டுவார். சண்டையிடுவார். எதிரியிடமிருந்து தப்பித்தார் என்றால் அது அதிர்ஷ்டவசமானது. குழந்தைப் பருவம் மிக கஷ்டமானதாக இருந்திருக்கும். ஆரம்ப காலத்தில் வியாபாரத்தில் பல தடைகள் ஏற்பட்டிருக்கும். எதிரிகள் கஷ்டங்களைக் கொடுத்திருப்பர்.

         இலாபாதிபதி இலக்னத்தில் அமர்ந்துள்ளார். எல்லோரையும் சமமாகவே பாவிப்பார். துறவு மனநிலை உடையவர். மந்திரச் சொற்களாகப் பேசக்கூடிய, சிறந்த பேச்சாளர். சுற்றத்தாருக்கு மிகவும் பிடித்தமானவர். பரந்த மனப்பான்மை உடையவர். நல்ல காரியங்களைச் செய்பவர். அரசின் மூலமாக சொத்துக்களை அடைவார்.

         விரயாதிபதி களத்திர பாவத்தில் இருப்பதால், சளி, இருமல் ஆகிய உபாதைகளால் பாதிப்படைவார். இவரே வீட்டின் தலைவராக இருப்பார். கோர்ட், கேஸ், விவாதங்கள், சண்டைகளுக்காக பண விரயங்கள் ஏற்படும். இவரது களத்திரம் அதிக செலவாளியாக இருப்பார்.

யோகங்கள் –

வெசி யோகம் – சந்திரனைத் தவிர பிற கிரகங்கள் சூரியனுக்குப் 12 இல் இருப்பது.

ஜாதகருக்கு சொற் பொழிவுத்திறன் இருக்கும். கற்கும் திறன், நினைவாற்றல், உடல் பலம், தர்ம குணம், உண்மையின்மை. கீழே பார்த்தபடி நடத்தல் மற்றும் கஷ்டப்பட்டு உடலால் உழைத்து முயற்சித்தல் ஆகிய குணம் இருக்கும்.

சுபரால் ஏற்படும் இந்த யோகம் – சந்திரனைத்தவிர பிற சுபகிரகங்கள், சூரியனுக்கு 12 இல் இருத்தல்.

ஜாதகர் அறிவாளி, கற்றவர், பலம் மிக்கவர், செல்வந்தர், விஞ்ஞான ஆர்வம் உடையவர்.

பராக்ரம யோகம் – தைரிய பாவாதிபதி, சுப நவாம்சத்தில் இருத்தல் அல்லது சுபரால் பார்க்கப்படுதல் அல்லது செவ்வாய் சுப கிரக வீட்டில் இருத்தல்.

ஜாதகர் பராக்கிரமம் மிக்கவர்.

கணித வித்யாஜன யோகம் – குரு கேந்திரமேறி, தன பாவாதிபதி பலமாக இருக்க மற்றும் தன பாவத்தில் சுக்கிரன் உச்சம் பெற – (சர்வார்த்த சிந்தாமணி)

ஜாதகர்  கணிதத்தில் சிறந்தவர்.

ஜோதிஷிகா யோகம் – தனாதிபதி பலம் பெற்று, புதன் கேந்திரத்தில் இருக்க,  சுக்கிரன் 2 இல் உச்சமாய் இருக்கவும். (சர்வார்த்த சிந்தாமணி).

ஜோதிட ஞானம் இருக்கும்.

கர்ம ஜீவ யோகம்- இலக்னம், சூரியன் அல்லது சந்திரனில் இருந்து 10 ஆம் அதிபதியோடு, செவ்வாய் தொடர்புற. (பிருஹத் ஜாதகம்)

செவ்வாய் தொடர்புள்ள – மினரல், உஷ்ண சம்பந்தமான தொழில்கள், துணிகரச் செயல்கள் செய்தல் ஆகிய தொழில்கள் அமையலாம்.

சரீர சுக்ய யோகம் – இலக்னாதிபதி, குரு அல்லது சுக்கிரன் கேந்திரத்தில் இருக்க (சர்வார்த்த சிந்தாமணி)

நீண்ட ஆயுளும், அரசியல்வாதிகள் தொடர்பு அல்லது அரசியல் பலத்தால் சொத்துக்கள் அமைதல்.

:தேக ஸ்தூல்ய யோகம் – இலக்னத்தில் குரு இருக்க, அல்லது நீர் இராசியிலிருந்து இலக்னத்தைப் பார்க்க ஜாதகர் குண்டாக இருப்பார் (சர்வார்த்த சிந்தாமணி)

நீர் இராசியில் இலக்னம் அமைய அதில் சுபர் இருக்க அல்லது இலக்னாதிபதி .ஈர் கிரகமாய் இருக்க – இதே பலன் ஆகும்.

பூர்ண ஆயுள் யோகம் – இலக்னாதிபதியும், அட்டமாதிபதியும் ஸ்திர இராசியில் இணைந்திருக்கவும் அல்லது ஒருவர் ஸ்திர இராசியிலும் மற்றவர் உபய இராசியிலும் இருக்க ஜாதகர் நூறாண்டு காலம் வாழ்வார்.

இலக்னம் மற்றும் சந்திரா இலக்னம் இரண்டும் சர இராசியில் இருக்க அல்லது  ஒன்று ஸ்திர இராசியிலும் மற்றொன்று உபய இராசியிலும் இருக்க ஜாதகர் நூறாண்டு காலம் வாழ்வார்.

ருசக மகா புருஷ யோகம் – செவ்வாய் உச்ச அல்லது சுய வீட்டில், கேந்திரம் ஏற.

         ஜாதகர் பார்ப்பதற்கு அழகாக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். சுறுசுறுப்பு, பலம், சக்தி மிக்கவர். பெயரும் புகழும் உயரும் அளவுக்கு, சாதனைகளைப் புரிய ஆர்வம் கொள்வார். பிரபுத்துவம் உள்ளவர். எதையும் போராடி வெல்பவர். எதிரிகளை துவம்சம் செய்பவர். ஒரு கூட்டத்துக்குத் தலைவராக விளங்குவார். பாகுபடுத்தி, பிரித்துப் பார்ப்பதில் வல்லவர். குரு, மற்றும் பெரியோர்களுக்கு மதிப்பு, மரியாதை தரும் பண்பாளர். நீண்ட ஆயுளுடன் வாழ்வார்.

அகண்ட சாம்ராஜ்ய யோகம் – குரு,- தன, பூர்வ புண்ய, இலாப பாவங்கள் ஒன்றில் இடம் பெற்று, தனாதிபதி, பாக்கியாதிபதி, இலாபாதிபதி இவர்களில் ஒருவர் கேந்திரத்தில் அமர, ஜாதகர் அகண்ட சாம்ராஜ்யத்தை உடையவராய் இருப்பார். (ஜோதிஷார்ணவ நவநீதம்)

வாகன யோகம் – இலக்னாதிபதி, சுக, பாக்ய, இலாப பாவங்களில் ஒன்றில் இருக்க ஜாதகருக்கு சொந்த வாகனமும், இன்னபிற வசதி வாய்ப்புகளும் உண்டு. (சர்வார்த்த சிந்தாமணி)

இராஜ யோகம் – இலக்னாதிபதி மற்றும் 4, 5, 7, 9, 10 ஆம் அதிபதிகளில் ஒருவரோடு பரிவர்த்தனை பெற.

 ஜாதகர் எல்லாவற்றிலும் வெற்றியடைதல், எல்லோராலும் மதிக்கப்படுதல், (அடையாளம் காணப்படுதல்) மற்றும் அந்தஸ்தில் உயர்தல் ஆகியவற்றில் உச்சத்தை அடைவார்.

இராஜ யோகம் – 5 ஆம் அதிபதி இலக்னாதிபதியோடு தொடர்புற அல்லது 4 ஆம் அதிபதியுடன் தொடர்பு கொண்டு இலக்னம் அல்லது சதுர்த்த கேந்திரம் அல்லது தசம கேந்திரத்தில் இருக்க (பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா)

அரசராவார். இராஜ்யத்தை ஆள்வார். பிரபுத்துவம் பெறுவார். நவீன காலத்தில் அரசியல் தலைவராவார் அல்லது உயர் அரசு பதவிக்கான அந்தஸ்தைப் பெறுவார்.

இராஜயோகம் – பௌர்ணமி நிலவை, உச்சம் பெற்ற அல்லது சுய வீட்டில் உள்ள கிரகம் பார்க்க (பலதீபிகா),

சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் ஆனாலும், அரசர் ஆவார்.

இராஜ யோகம் – தன, பாக்கிய, இலாபாதிபதிகளில் ஒருவர் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்து, தன, பூர்வ புண்ய, இலாபாதிபதிகளில் ஒருவராக குரு அமைய வேண்டும்.

ஜாதகர் மிகப் பெரிய ஆளுமையுடைய பிரபலமாவார் அல்லது நாட்டை ஆள்வார்.

ஜெய்மினி இராஜயோகம் – சந்திரன், சுக்கிரன் இணைந்திருக்க அல்லது சந்திரன் சுக்கிரனால் பார்க்கப்பட.

ஜாதகர் எதிலும் வெற்றியடைதல், எல்லோராலும் மதிக்கப்படுதல், (அடையாளம் காணப்படுதல்) மற்றும் அந்தஸ்தில் உயர்தல் ஆகியவற்றில் உச்சத்தை அடைவார்.

சுனபா யோகம் – சூரியனைத் தவிர மற்ற கிரகங்களில் ஒன்று சந்திரனுக்கு 2 இல் இடம்பெற.

அரசருக்கு நிகரான அந்தஸ்தை ஜாதகருக்கு அளிக்கிறது. அளவற்ற செல்வம், சுயமாகவே அதிர்ஷ்டத்தை அடையும் தகுதி, புகழ், கீர்த்தி, முழுமை அடைதல், எதிலும் திருப்தி அடைதல் மற்றும் நற்காரியங்களில் ஈடுபாடு ஆகியவற்றையும் அடைவார்.

அமலா (அமல கீர்த்தி) யோகம் – இயற்கை சுபர் 10 இல் அமர. (பலதீபிகா).

ஜாதகர் வணக்கத்திற்குரிய ஆட்சியாளர் ஆவார். உடல் சுகத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவர். தர்மவான், அனைவராலும் விரும்பப்படுபவர். பிறருக்கு உதவும் குணம் உடையவர். அழியாப் புகழ் உடையவர்.

பாக்ய யோகம் – இலக்னம், 3 ஆம் வீடு அல்லது 5 ஆம் வீட்டில் பலம் மிக்க சுபக் கிரகம் இருந்து, பாக்கிய பாவத்தைப் பார்க்க.

ஜாதகர் அளவற்ற சொத்து, உச்ச அதிர்ஷ்டம் மற்றும் உச்ச சந்தோஷங்களை அனுபவிக்கப் பிறந்தவர்.

மஹா பரிவர்த்தனை யோகம் – இலக்னாதிபதி, தன, சுக, புத்திர, களத்திர, பாக்கிய, கர்ம அல்லது இலாபாதிபதி இவர்களில் ஒருவருடன் பரிவர்த்தனை பெறுவது.

இந்த இணைவு ஜாதகருக்கு, செல்வம், அந்தஸ்து மற்றும் தேகசுகத்துக்கு உறுதி அளிக்கிறது. சம்பந்தப்பட்ட பாவத்துடன் தொடர்புடைய நல்ல பலன்களையும் அள்ளித் தருகிறது.

நடப்பு தசா புத்தி பலன்கள்

         நடப்பு சனி தசா / குரு புத்தி – ஜூலை 2021 முடிய உள்ளது. சனி தசாவில் நாட்டின் தலைவராகப் பொறுப்பேற்பார்.   சந்தோஷமும், புகழும் கூடும். உறவுகளின் எதிர்ப்பால் சில சொத்துக்களை இழக்க நேரலாம். மனைவி மக்களுடன் வீட்டில் மகிழ்ச்சி நிரம்பி வழியும். நண்பர்களிடையே அந்தஸ்து உயரும். தொழிற்சாலை மற்றும் வேலைகளில் நஷ்டம் ஏற்படலாம். சகோதரர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படலாம். பொருளாதார நிலை முன் எப்போதும் இல்லாத நிலைக்கு உயரும். மாநில அதிகாரம், கௌரவம், வேலைகளில் முன்னேற்றம் ஆகியவை குறிகாட்டப்படுகிறது. அசையாச் சொத்துக்கள், நகை நட்டுக்கள், சொத்து ஆகியவைகள் சேரும். மனதில் இரக்க குணம் எழும்.

         குரு புத்தியில் கடவுள், ஆன்மீகத் தலைவர்கள், யோகிகள் ஆகியோர் மீது பக்தி அதிகரிக்கும். அரசாங்க ஆதரவால் அனைத்து வசதிகளும் கூடும். புதிய பணிகள் சிறப்பாக நடக்கும். முன்பைவிட தற்போது புகழ் கூடும். திறமைகள் மற்றும் நற்பண்புகள் அதிகரிக்கும். குடும்ப சுகம், சந்தோஷம், அனைத்திலும் வெற்றி, வாகன சுகம், அறிஞர்கள் சேர்க்கை, ஞானிகள் மற்றும் குரு பக்தி, பூஜித்தல் ஆகியவை ஏற்படும். நெருங்கிய உறவை இழத்தல். அரசு அதிகாரிகளுடன் விரோதம், திட்டங்களில் தோல்வி, வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். செல்வநிலை, புகழ், மனைவியின் சந்தோஷம், அரசு மூலமான ஆதாயங்கள், வசதி வாய்ப்புகள், நல்லாடைகள், நல்லுணவு, ஆன்மிக எண்ணம், நாடு முழுக்க பிரபலமாதல், வேத வேதாந்தங்களில் ஆர்வம், தெய்வ பரிகாரங்களை நிறைவேற்றுதல், தானியங்களை தானமாக அளித்தல், ஆகியவை ஏற்படும். சொந்த பந்தங்களுடன் விரோதம், மன வேதனை, சண்டைகள், நிலை மாற்றம், துணிகரச் செயல்களில் இழப்பு, அரசால் அபராதம் விதிக்கப்படுதல், ஆகியவை ஏற்படும். சிவ சகஸ்ரநாமம் மற்றும் பொன் தானம் ஆகியவை தீமைகளைக் குறைக்கும். சுபம்.

         எனவே, நண்பர்களே, இதுவரை வேத ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ளபடி, கிரக நிலைகளுக்கான பலன்களை விரிவாகப் பார்த்தோம். இந்த ஜாதகத்தில், ஜாதகர் சிறப்பான நிலையில் இருப்பதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள். வாழ்க வளமுடன்.

 

No comments:

Post a Comment