Search This Blog

Monday, 12 April 2021

தளபதி, தமிழ்நாட்டு இராஜா ஆவாரா ?

 


தளபதி, தமிழ்நாட்டு இராஜா ஆவாரா ?

        

         தளபதி……….தளபதி……… எங்கள் தளபதி என்று, தொண்டர் படையின் போற்றுதலோடு தேர்தல் களத்தில், எதிரிகளை விரட்ட, சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி, வெற்றி வாகை சூட, ஊர், ஊராகச் சென்று, ஓர் உத்வேகத்துடன் பரப்புரை மேற்கொண்டிருக்கும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் ஜாதக நிலைகள் என்ன சொல்கிறது ? என்பதை ஆராய மட்டுமே, பல பண்டைய நூல்களின் உதவியோடு எழுதப்பட்டதே இக் கட்டுரை. (அடியேன், கட்சி சார்பற்றவன்)

        தலைவர்கள் ஜாதகங்களில் வலிமை பெற்ற யோக நிலைகள் உள்ளதாலேயே, அவர்கள் தலைமை ஏற்கப் பிறந்தவர்கள் ஆகிறார்கள். சிலர் ஜாதகங்களில் அதிக யோகபலன்கள் இருப்பதால், முதல் தர தலைவர்களாகவும், குறைவான யோகபலன் உள்ள ஜாதகர்கள் இரண்டாம் நிலைத் தலைவர்களாகப் பரிமளிக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து உயர்ந்த் கொண்டே போவது, தசா புத்தி மாற்றங்கள் மற்றும் கோசார நிலை மாற்றங்கள் ஆகியவற்றைப் பொருத்தே அமைகிறது.

      

         அவர், விருச்சிக இலக்கினம், சிம்மராசி, உத்திரம் - 1 ஆம் பாதம். பாக்கியாதிபதி, கர்ம பாவத்தில் இருப்பதால், தன் தந்தையைப் போலவே மகனும், அரசியலில் தந்தைக்கு இசைந்து வாழ்ந்தார்.   களத்திர ஸ்தானாதிபதி, சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் கூட்டாளிக் கட்சிகளுடன் ஒற்றுமையின்மையைக் குறிக்கும். இலாபாதிபதி புதன் நீசமாகி இருப்பதால், மூத்த உடன் பிறப்புக்களிடம் சுமுகமான உறவு இருப்பது துர்லபமாகும். இலக்னாதிபதியுடன், அட்டமாதிபதி தொடர்பு சிறப்பானதல்ல. 9 ஆம் இடத்துக்கு 12 ஆம் இடம் 8 ஆம் இடம் ஆதலால், தந்தையின் வழிகாட்டுடதல் இன்றி, தனயனால், ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாத நிலையில் இருந்தார், என்பது வெள்ளிடை மலை.       

இனி, தளபதி அவர்களின் ஜாதகத்தை முழுமையாக அலசுவோம்.

புத,

செவ்

சுக்

குரு

 

சூரி

சுக்

ராகு

சூரி

 எம்.கே.ஸ்டாலின்

01-03-1953

11-50 இரவு

சென்னை.

இராசி

கேது

 

 

நவாம்சம்

ராகு

 

சந்

 

செவ்

புத

லக்//

சனி

(வ)

 

சந்,

கேது

சனி

(வ)

குரு

லக்//

 

 

கிரகங்கள் இருக்கும் நிலைக்கான பலன்கள் –

        சுக பாவத்தில் சூரியன் இருக்க, தாய் மூலமாக அதிக சந்தோஷங்கள் கிடைக்கும். நண்பர்களால் அதிக சந்தோஷமும் நன்மைகளும் உண்டாகும். ஜாதகர், தனது ராயல் பேமிலியிலிருந்து, சொத்துக்களும், பெயரும் புகழும் அடைவார். சக்தி மிக்க அரச பதவிகள் கிடைக்கலாம். முக்கிய நிலைகளையும், பதவிகளையும் அடையலாம். இதயத்தால் மிருதுவானவர். இசை ஆர்வம் இருக்கும். மனைவி , குழந்தைகள், மற்றும் அளவற்ற சொத்துக்களால் ஆசிர்வதிக்கப்பட்டவர். மத்திம வயதிலேயே நல்ல சேவை, வண்டி வாகனம் மற்றும் வசதிகளைப் பெற்றிருப்பார். தனது 22 ஆவது வயதிலேயே, வாழ்க்கையில் எல்லா ஐஸ்வர்யங்களையும் பெற்று நிரந்தர தன்மையையும், (செட்டில் ஆகிவிடுவார்) மக்களின் அபிமானத்தையும், புகழையும் அடைவார்.   28 முதல் 50 வயது வரை உயர்ந்த நிலையில் இருப்பார். பிந்தைய வருடங்களில் புகழ் அடைவதோடு, தந்தைக்கும், அதிக சந்தோஷத்தைத் தருவார்.

         கர்ம பாவத்தில் சந்திரன் இருப்பதால் இரக்கமுடையவராய் இருப்பார். சமூகத்தாலும், குடும்பத்தாலும் மதிப்பும், மரியாதையும் பெறுவார். மக்களின் நன் மதிப்பைப் பெறுவார். இவரது புகழ் 8 திக்கும் பரவும். எப்போதும், தைரியமான, வீரமுள்ள, வெற்றியாளர். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும், திறம்படச் செய்பவர். அரசால் அடையாளம் காணப்பட்டு, அதன் மூலமாக சொத்துக்களை அடைவார். அவரது பெர்ஸனாலிட்டியும் கூடும். ஒரு அரசரைப்போல் மக்களிடம் இருந்து சொத்து இலாபங்களை அடைவார். அரசாங்க அதிகாரிகளோடு நல்ல தொடர்பில் இருந்து, தனது முழு செல்வாக்கையும் பயன்படுத்துவார். தன் தந்தையின் முழு சப்போர்ட்டும் பல உதவிகளையும் பெறுவார். தன் தந்தைக்கும் குடும்பத்திற்கும் மிகுந்த ஆதரவாய் இருப்பார். இளமையில், அனைத்து வசதி வாய்ப்புகளும் உடையவராய் இருப்பார்.

         புத்திர பாவத்தில் செவ்வாய் உள்ளார். பெண் இராசியாவதால் பல நன்மைகள் ஏற்படும். பிள்ளைகளால் தொல்லை உண்டு. அலைவதில் ஆர்வமுள்ளவர். உறவுகளால் அவமானப்படுவார். பெரியோர்களையும், பிராமணர்களையும் மதிக்கமாட்டார். மற்றவர்கள் போற்றிப் புகழ்வதை மிகவும் விரும்புவார். புதன் நீசம் பெற்றதால் உறவுகளிடம் பகை உணர்ச்சியுடன் செயல் படுவார்.

         புதன், புத்திர பாவத்தில் உள்ளார். பார்ப்பதற்கு அழகாக இருப்பார். இனிய பேச்சும், கூர்மையான புத்தியும் இருக்கும். வாதாடுவதில் வல்லவர்.  தன் கீழ் உள்ளவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார். கற்றவர். வியாபார நோக்கிலேயே இருப்பார். வேலைகளைப் பொருத்தவரை, தான் பின்னால் நின்று கொண்டு, மற்றவர்களை முன்னிறுத்துவார். உள்ளூர் கூட்டங்களில் பெயரும், புகழும் பெறுவதோடு, அனைவரையும் கவர்வார். நல்ல நடிகர். இவரது நட்பு வட்டம் மிகப் பெரியாதாக இருக்கும். பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. அசையும், அசையா சொத்துக்களுக்கும், குறைவிருக்காது. விதவிதமாக உடை அணிவதை விரும்புபவர். அரசவையில் கௌரவத்தைப் பெறுவார்.

         குரு ருண, ரோக, சத்ரு பாவத்தில் உள்ளார். இனிமையாகப் பேசுவார். அரசுப் பணிகள், விவாத மேடைகள், வழக்காடுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார். எதிரிகளை வெல்வார். நல்ல பணியாட்களை உடையவர். சுகாதாரத்துறை மூலமாகப் புகழடைவார்.

         சுக்கிரன் 6 ஆம் பாவத்தில் உள்ளாதால் இவர் உயர்குடிப் பிறப்பாக இருப்பார். எதிரிகளை வெல்வார் அல்லது எதிரிகளே இல்லாது இருப்பார். பிள்ளைகள், பேரன்கள் என ஆசிர்வதிக்கப்பட்டவர். தொண்டர்கள் மற்றும் சேவைகள் மூலம் ஆதாயங்களை அடைவார். எதிரிகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட சூழ்நிலையே எழும்.

         விரய பாவத்தில் உச்ச, வக்ர சனி அமர்ந்துள்ளார். தனிமையை விரும்புவார். தர்ம ஸ்தாபனத்தோடு தொடர்புடையவர். ரகசியமாகவும் சொத்துக்களைச் சேர்ப்பார். ஒரு பெரிய கூட்டத்துக்குத் தலைவராகத் திகழ்வார். இந்த நிலை வியாபாரத்திற்கும் சிறந்த நிலையாகும். அதிகார பதவிகளை அடைவார்.

       தைரிய பாவத்தில் இருப்பதால், பலம் மிக்க, சதைப்பற்றுள்ள, ஆரோக்கியம் மிக்க கட்டுடல் உடையவர். தைரியமுள்ள, வீரம் மிக்க, அதிர்ஷ்டம் மிக்கவர். புகழ் மிக்க, அங்கீகாரம் உடையவர். உலகப் புகழ் மிக்கவர். அனைவருடனும் நட்பு பாராட்டுபவர். எல்லோரையும் சமமாக பாவிப்பவர். நல்ல அதிர்ஷ்டத்தால் பல வழிகளில் தனம் சேரும். மிகப் பெரிய கோடீஸ்வரர். பணம் சேர்ப்பதில் இவருக்கு அதிக முயற்சிகள் தேவைப்படாது. எப்போதும் வசதி, வாய்ப்புகள் நிரம்பி வழியும். அரசால் கௌரவப்படுத்தப்படுவார். அரசனின் பலம் மிக்க சப்போர்ட்டும் இருக்கும். பகைவர்களின் சொத்துக்களை அழிப்பார். பல வெளிநாடுகளுக்குச் செல்வார்.

        பாக்கிய பாவத்தில் உள்ள கேதுவால், வீரம் மிக்கவராயும், ஆயுதம் ஏந்துபவராகவும் இருப்பார். வெளி நாட்டுக்காரர்களால் ஆதாயம் அடைவார். வெளி நாட்டுகாரர்களால் அதிர்ஷ்டம் உண்டாகும். இவர் ஒரு அரசராகவோ அல்லது மந்திரியாகவோ விளங்குவார்.

பாவங்களில் கிரகங்கள் மாறி நின்ற பலன்கள் –

         இலக்னாதிபதி, புத்திர, பூர்வ புண்ணிய பாவத்தில் அமர்ந்துள்ளார். எனவே, நீண்ட ஆயுளை உடையவர். கலை ஆர்வம் மிக்கவர். முணுக்கென்று கோபம் வரும். அரச சபைகளில் இடம் பிடிப்பார். குழந்தைகள் மூலமாக சந்தோஷத்தை அடைவார். அவர்கள் மேல் அதிக பாசமுடையவர். அதிகாரத்தில் இருந்து நல்ல காரியங்களையும் செய்வார்.

         தனாதிபதி ருண, ரோக, சத்ரு பாவத்தில் உள்ளார். எதிரிகளின் செல்வத்தை அழித்து, சொத்துக்கள் சேர்ப்பார். எப்போதும் பணம் சேர்ப்பதில் ஆர்வமாய் இருப்பார்.

         தைரிய பாவாதிபதி, விரய பாவத்தில் உள்ளார். அதிக செலவாளி. உற்றார், உறவினர்களுக்குத் தொல்லைகள் தருவார்.

         சுகாதிபதி விரயபாவத்தில் உள்ளார். தந்தையை விட்டு ஒதுங்கியே இருப்பார் அல்லது தந்தை வெளியூரில் இருப்பார். வீட்டுக்காகவும், விவசாயத்திற்காகவும் அதிகம் செலழிக்க வேண்டியதிருக்கும்.

         புத்திர பாவாதிபதி, சத்ரு பாவத்தில் உள்ளார். தந்தை மகன் உறவு சுமுகமாய் இராது. எதிரிகள் தொல்லை இருக்கும். முன்னேற்றங்களில் தடைகள் ஏற்படும். 

         ருண பாவாதிபதி, புத்திர பாவத்தில் உள்ளார். வேலைகளில், சந்தோஷம், அமைதி மற்றும் புத்திசாலித்தனம் இருக்கும். தந்தையுடன் ஒத்துப் போகாது.

         களத்திர பாவாதிபதி ருண பாவத்தில் உள்ளார். மனைவிக்கு முணுக்கென்று கோபம் வரும்.  ஆனால், பாசமாக இருப்பார்.

         அட்டமாதிபதி, புத்திர பாவத்தில் உள்ளார். இதன் காரணமாக நிலையான முன்னேற்றங்கள் இருக்காது. மிக வேகமாக சொத்து, சுகங்களை சேர்க்க விரும்புவார்.

         தர்மாதிபதி கர்ம பாவத்தில் இருப்பதால் தர்ம, கர்மாதிபதி யோகம் எனும் இராஜ யோகம் ஏற்படுகிறது. இதன் காரணமாக ஒருவர் மந்திரியாகவோ, கமாண்டராகவோ ஆவார். அரசுக்காக, அரசருக்காகப் பணிபுரிவார். அவர்கள் மூலமாக சொத்துக்களை அடைவார். வெற்றிகரமானவர். புகழ் தரும் காரியங்களைச் செய்வார். தாய் மேல் அதிக பாசம் உடையவர். அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டு, உயர் பதவிகளை அலங்கரிப்பார். அரசு வேலைகள் மூலமாக அதிர்ஷ்ட மலர்கள் அதிகம் மலரும். 

         கர்மாதிபதி, சுகபாவம் ஏறியுள்ளார். ரகசியமாக சில கடவுளை வணங்குவார். சந்தோஷம் மிக்கவர். தன் பெற்றோர்களைப் பேணிக்காப்பவர். மற்றவர்கள் தரும் தொல்லைகளை தாக்குப் பிடிப்பார். அரசால் ஆதாயம் அடைவார். விவசாயம் மூலமும் ஆதாயம் காண்பார்.

         இலாபாதிபதி, புத்திர பாவத்தில் உள்ளார். ஒட்டு மொத்த சந்தோஷங்களையும் உலகில் அனுபவிப்பார். மக்களால் மகிழ்ச்சி, காரிய வெற்றி ஆகியவைகளை அடைவார். தாய் வழி சொந்தங்களின் அன்பைப் பெறுவார். நன்றாக சாப்பிடுவார். தந்தையும் மகனும் பரஸ்பர பாசத்துடனும், சரிசமமான திறமைகளுடனும் விளங்குவர். மகன் தன் தேவைகளுக்காக மட்டுமே வாழ்வார்.

         விரயாதிபதி, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் உள்ளார். இதுவே, ஓர் விபரீத இராஜ யோகம் ஆகும். முன் கோபக்காரராக இருப்பார்.

சனி தசா பலன்கள் –

         சனி மஹா திசையில் ஜாதகருக்கு, கிராமத்தின், நகரத்தின், நாட்டின் தலைமைப் பதவிகள் வந்து சேரும். தந்தை பாதிக்கப்படுவார் அல்லது மரணிப்பார். நண்பர்களே பகைவர் ஆவர். சொத்துக்கள், மனைவி மக்கள், உடன்பிறப்புகள் மற்றும் பணியாட்கள் பாதிக்கப்படலாம். புகழ் மங்கும். சனி மகா தசா முடிவில், வியாபாரம், விவசாயம், பூமி, கால்நடைகள், ஆகியவை பாதிக்கப்படலாம். சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. ஓய்வின்மை, அதிகார வர்க்கத்தினரால் அச்சம், ஆகியவை ஏற்படலாம். நண்பர்களிடையே அந்தஸ்து உயரும். உடல் வலி மற்றும் பொருளாதாரக் கவலைகள் அதிகரிக்கும். வேலையில் அந்தஸ்து உயருதல், முன்னேற்றம் ஏற்படுதல் மற்றும் கௌரவம் கூடுதல் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். அசையாச் சொத்துக்கள், செல்வம், ஆபரணங்கள் ஆகியவையும் சேரும்.

சந்திர புத்தி பலன்கள் –

         எதிலும் ஊக்கம் குறைதல், மனக்கவலைகள், கோபம், தூஷணை ஆகியவை ஏற்படும். நண்பர்கள் கருத்துடன் ஒத்துப் போகாமை, நிரந்தர சண்டைகள், பிள்ளைகளால் கடினமான நேரமாக உணருதல், மறைமுக எதிரிகளின் தாக்குதல் ஆகியவை ஏற்படலாம். நேரத்துக்கு உணவு உண்ண முடியா நிலை ஏற்படும். புத்தி, ஆரம்பத்தில், சொத்து இலாபங்கள் ஏற்படும். தூக்கமின்மை, சோம்பேறித்தனம், சந்தோஷம் இழத்தல், ஆரோக்கியக் குறைவு, பொருள் இழப்பு, பதவி இழப்பு, ஆகியவை ஏற்படலாம். எதிரிகளின் எண்ணிக்கை கூடுதல், விரோதம், பகை, எதிர்ப்புகள் ஆகியவை கூடும்.  இவ்வித கெடு பலன்களைக் களைய வெல்லம், நெய், தயிர் சாதம், பசு, ஆகியவற்றை தானமாக வழங்கலாம்.

சனி அந்தரத்தில், வசதி வாய்ப்புகள் மற்றும் புகழ் குறையும்.

புதன் அந்தரத்தில் முனேற்றங்கள் ஏற்படும்.

கோசார நிலைகள்

         5 ஏப்ரல் 2021 இல் ஜனன சந்திரனுக்கு 6 இல் கோசார சந்திரன் பயணிப்பதால், பொருளாதார இலாபத்தைக் குறிகாட்டுகிறது. இவர்கள் விரும்பிய இடத்தைப் பிடிக்க சரியான, வெற்றிகரமான காலம். இவர்கள் பங்குக்கு உரிய சமூக அங்கீகாரத்தையும், புகழையும் அடையக்கூடிய காலமும் ஆகும். 

         5 ஏப்ரல் 2021 இல் ஜனன சந்திரனுக்கு, 7 இல் குரு பயணிக்கும் காலத்தில், சமூக வாழ்க்கையில் ஒரு சிறப்பான காலத்தை எதிர்பார்க்கலாம். உயர் அதிகார மையத்தால் கௌரவிக்கப்படலாம். இவர்களின் ஆசைகள் நிறைவேறுவதை அனுபவிக்கப் போகிற காலம் இது

         30 ஏப்ரல் 2021 இல் ஜனன சந்திரனுக்கு, 5 ஆம் இடத்தில் கோசார சந்திரன் பயணிக்கும் காலத்தில், எதிர்பார்ப்புகளில் ஏமாற்றமே மிஞ்சும். ஓவ்வொரு அசைவுகளிலும் தடைகள் ஏற்படும்.  இவர்களின் ஆசைகள் நிறைவேற எடுக்கும் காரியங்களில் முழு வெற்றி கிடைக்காத போது, மன அளவில் அப்சட் ஆகக் கூடிய காலம்.  இவர்களின் பொருளாதார நிலையை, எச்சரிக்கையுடன் இழுத்துப் பிடிக்க வேண்டிய காலம். 2 மே 2021 மதியம் மணி 2 - 36 க்குப் பிறகு ஜனன சந்திரனுக்கு 6 இல் கோசார சந்திரன் பயணிப்பதால், பொருளாதார இலாபத்தைக் குறிகாட்டுகிறது. இவர்கள் விரும்பிய இடத்தைப் பிடிக்க சரியான, வெற்றிகரமான காலம். இவர்கள் பங்குக்கு உரிய சமூக அங்கீகாரத்தையும், புகழையும் அடையக்கூடிய காலமும் ஆகும்.

 

அடுத்து இவரின் ஜாதகத்திலுள்ள இராஜ யோகங்களைப் பார்ப்போம்.

யோகங்கள் –

வசி யோகம் – சந்திரனைத் தவிர பிற கிரகங்கள் சூரியனுக்குப் 2 இல் இருப்பது. (புதன்)

ஜாதகருக்கு இனிய பேச்சு இருக்கும். அழகாய் இருப்பார். மற்றவர்களை முட்டாள் ஆக்குவதில் வல்லவர்.

பராக்ரம யோகம் – தைரிய பாவாதிபதி, சுப நவாம்சத்தில் இருத்தல் அல்லது சுபரால் பார்க்கப்படுதல் அல்லது செவ்வாய் சுப கிரக வீட்டில் இருத்தல்.

ஜாதகர் பராக்கிரமம் மிக்கவர்.

பாஷ் யோகம் –

அனைத்து கிரகங்களும் 5 இராசிகளில் இருந்தால் ஏற்படும் யோகம்.

அதிகம் பேசக் கூடியவர்கள். சிறை வாசம் உண்டு. திறமைசாலி, பல பணியாட்களை உடையவர்.

யவனர்கள் கூற்றின்படி – அசுப கிரகம் உச்சம் ஆனால், குறுக்கு வழிகளில் ஜாதகர், அரசராவார் என்றும். 

ஜீவ ஷர்மா – கூற்றின்படி – அசுபக் கிரகம் உச்சம் பெற்ற ஜாதகர்கள் பராக்கிரமசாலி ஆவார்களேயன்றி, அரசர் ஆகமாட்டார் என்றும்,

கல்யாண வர்மாவோ – ஜாதகர் ஒரு பகுதிக்குத் தலைவர் ஆகி கௌரவிக்கப்படுவார் - என்றும் குறிப்பிடுகிறார்.

மகா ராஜா யோகம் – இலக்னாதிபதியும், 5 ஆம் அதிபதியும் பரிவர்த்தனை பெறுதல்.

இந்த யோகத்தில் பிறந்தவர்கள், சந்தோஷமாகவும், புகழுடனும் வாழ்வார்கள்.

இலக்னாதிபதி அல்லது ஆத்மகாரகன் இருக்கும் இராசிக்கு 3, 6 ஆகிய பாவங்களில் அசுபகிரகங்கள் இருக்க.

ஜாதகர் அரசர் ஆவார்.

இலக்கினத்தையோ, ஹோரா இலக்னத்தையோ அல்லது கடிக இலக்னத்தையோ  ஒரு கிரகம் பார்க்க.

ஜாதகர் அரசராவார், இங்கு ஹோரா இலக்கினம் கடகம் ஆகும். இராகு பார்க்கிறார்.

1 அல்லது 2 அல்லது 3 கிரகங்கள் உச்சம் பெற, அரச குடும்பத்தில் பிறந்தவர் அரசராகவும், பிற குடும்பத்தில் பிறந்தவர்கள் அரசருக்கு இணையானவர் ஆவார். அல்லது செல்வந்தர் ஆவார்.

ஆத்ம காரகன் (சந்) அமத்திய காரகன் (செவ்) இவர்களில் ஒருவர் கேந்திர, கோணங்களில் இடம்பெற ஜாதகர் ராஜரீக (ராயல்) குடும்பத்தின் கருணையைப் பெறுவார், உதவியைப் பெறுவார், அதன் மூலமாக சந்தோஷத்தை அடைவார்.

 

விபரீத விமல இராஜ யோகம் –

12 ஆம் அதிபதி 6, 8, 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருக்க.

வெற்றியாளர், சந்தோஷமானவர், நல்ல நிலையில் இருப்பார். (பலதீபிகா)

இராஜயோகம்

         5 ஆம் அதிபதிக்கும், 7 ஆம் அதிபதிக்கும் பரஸ்பர தொடர்பு இருக்கவும். அதுபோல், 9, 10 ம் அதிபதிகள் பரஸ்பர தொடர்பு பெற்றாலும்.

         இது ஜாதகரை வெற்றியின் மூலமாகவும், அங்கீகரிக்கப்படுவதின் மூலமாகவும்,  அந்தஸ்தில் உயர்த்துகிறது.

இராஜயோகம்.

இலக்கின கேந்திரம் தவிர மற்ற கேந்திரங்களில் சந்திரன் இடம் பெற்று, குருவால் பார்க்கப்பட. (சர்வார்த்த சிந்தாமணி)

ஜாதகர் ஆள்பவராகவும் அல்லது அவருக்கு சமமானவராகவும் ஆவார்.

இவ்வளவு யோகங்கள் இருந்தும் ஜாதகத்தில் பாதக நிலைகள் அதிகம் உள்ளபடியால் இவரது முதல்வர் கனவு பலிக்காமலே போகிறது.

ஜீவ ஷர்மா – கூற்றின்படி – அசுபக் கிரகம் உச்சம் பெற்ற ஜாதகர்கள் பராக்கிரமசாலி ஆவார்களேயன்றி, அரசர் ஆகமாட்டார் என்றும்,

கல்யாண வர்மாவோ – ஜாதகர் ஒரு பகுதிக்குத் தலைவர் ஆகி கௌரவிக்கப்படுவார் - என்றும் குறிப்பிடுகிறார்.

          மேலும், இலக்னாதிபதி செவ்வாய், நீச புதனுடன் இணைந்து பலமிழந்ததாலும், இலாபாதிபதி புதன் நீசமானதால் வெற்றியும் குறையலாம். அரச கிரகங்களான, அசுர குருவும், தேவ குருவும் இணைந்து மறைவு ஸ்தானம் ஏறியதாலும், ஸ்திர இராசிக்குப் பாதகாதிபதியான சந்திரன் பத்தாம் இடத்தில் அமர்ந்து, பாதகம் செய்கிறது. பாக்கிய பாவத்தில் கேது அமர்ந்து அனைத்து பாக்கியங்களும் தடையாகிறது.  கனவுகளும் தகர்கின்றன. புத்திர ஸ்தானாதிபதி, மற்றும் ருணபாவாதிபதிகள் பரிவர்தனை பெற்று, செவ்வாய் 6 இல் ஆட்சியாகி இருப்பது, எதிரிகளின் கை ஓங்கி, வெற்றி எட்டாக் கனி ஆகும் நிலை. கர்மகாரகன் சனிக்குக் கர்ம பாவத்தில் கேதுவும் அமர்ந்து பதவி, புகழ், அந்தஸ்துக்கு தடையானது. சந்திரா இலக்கினத்துக்கு கர்மாதிபதி சுக்கிரன் அவயோகி ஆனார். மேலும், தசாம்சத்தில் கர்ம பாவத்தில் அட்டமாதிபதி அங்காரகன். எனவே, இவரது ஜாதகத்தில் பாதக நிலைகள் அதிகமாக உள்ளதால் பொறுத்திருந்து பார்போமா? நண்பர்களே! ஜோதிடப்படி இது ஒரு ஆய்வு மட்டுமே.

         தொண்டர் முதல் தலைவன் வரை அனைவரின் பங்களிப்பு, வலிமையான தலைமை, தலைவர்களின் ஆளுமை, வாக்கால் மக்களின் பங்களிப்பு, பலமான கூட்டணி, விலைவாசி உயர்வு, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள், பணப்பட்டுவாடா, இலவச அறிவிப்புகள், மக்களின் அறியாமை, கில்லாடித்தனமான பேச்சுகள், ஏச்சுக்கள், அனைவரையும் கவரும் விதமான பரப்புரைகள், கூட்டம் சேர்த்தல் என இவ்விதமான பல காரணிகளே, தேர்தலில், கட்சிகளின் வெற்றி, தோல்விகளை  தீர்மானிக்கின்றனவேயன்றி, அது ஒரு தனி மனித சாதனையல்ல. எனவே, ஒற்றுமையுடன் பாடுபட்டால் கட்சிகளுக்கு வெற்றி நிச்சியம். வாழ்க. வளமுடன். வாழிய பாரத மணித் திரு நாடு. வந்தேமாதரம். ஜெய்ஹிந்த்..

No comments:

Post a Comment