உ
அழகே
உன்னை ஆராதிக்கிறேன் !
அழகு என்பது இறைவன்
கொடுத்த வரம். சுயநம்பிக்கையை
நேரடியாகத் தெளிவாக ஒருவரின் முகத்தில் வெளிக்காட்டுவதே அழகாகும். அழகை நாம் ஒவ்வொருவரும்
ஆராதிக்கிறோம். உலகமே அழகை ஆராதிக்கிறது. சிறந்த அழ.கு என்பது போற்றப்படக்கூடிய
ஒன்று. அழகு என்பது வெளி அழகுடன் சேர்ந்து கருணை, நேர்மை, ஆளுமை, மரியாதை,
நேர்த்தி, இலட்சியம் பொன்ற அக அழகுகளையும் உள்ளடக்கியது. அழகுக்கான ஜோதிட விதி
என்ன?
அழகு என்பது, முகத்தின் அழகைப் பிரதானமாகக்
கொண்டால். ஒரு ஜாதகரின் முகம் 2 ஆம்
பாவத்தால் குறிகாட்டப்படுகிறது. இலக்னம் அல்லது சந்திரனில் இருந்து
இரண்டாம் வீட்டின் அதிபதி , அதனுடன் சுக்கிரன்
அல்லது புதனின் தொடர்பு சிறப்பாக இருப்பின், ஜாதகரின் முகம் அழகு
பிம்பமாகத் திகழும். இதை பல ஜாதகங்கள் மூலமாக ஆராய்வோம்.
·
ஜஸ்வர்யா ராய்.
நவம்பர் 1, 1973. 4-5-
12 வ 54, 74 கி 51
பிரபல
நடிகை, உலக அழகி ஜஸ்வர்யா ராயின் ஜாதகம். இவரது ஜாதகத்தில் சந்திரனுக்கு, 2 ஆம் அதிபதி
சனி, புதனின் மிதுன இராசியில் உள்ளார். அவர் இராசியில் உள்ள சுக்கிரனை பார்வை
செய்வது, மேற் சொல்லப்பட்ட விதியின் படி அழகுப் பதுமையாகத் திகழ்கிறார்.
|
செவ் |
|
கேது, சனி |
|
இராசி - 1 |
|
|
குரு |
|
||
சுக், ராகு, சந் |
புத |
சூரி |
லக்\\ |
கணேஷ் வெங்கட் ராம். – அழகான சினிமா நடிகர். – பல தமிழ் படங்களில்,
விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். பிறந்த தேதி – 20 மார்ச் 1980, 12 – 00
டைம் சோன் 5-5. அட்சரேகை 18 வ 58 --- தீர்க்கரேகை – 72 – கி - 50
சூரி |
சுக்,சந் |
|
லக்\\ |
கேது,புத |
இராசி - 2 |
|
|
|
குரு,சனி செவ்,ராகு |
||
|
|
|
|
இவரின் ஜாதகத்தில் இலக்னத்துக்கு 2 ஆம் அதிபதி சந்திரனும்,
இராசிக்கு 2 ஆம் அதிபதி சுக்கிரனும் இணைந்து, இராசியில் உள்ளனர். குருவும்
இவர்களைப் பார்வை செய்கிறார். இலக்னாதிபதியையும்
குரு பார்வை புரிகிறார். எனவே, இவர் ஆணழகனாகத் திகழ்கிறார்.
எமி ஜாக்சன் – ஆங்கிலப் பேரழகி. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி,
தெலுங்கு என பல மொழிப் படங்களில் நடித்து வரும் பலரையும் கவர்ந்த நடிகை.
இளைஞர்களின் கனவுக் கன்னி. 31 ஜனவரி 1992. டைம் சோன் – 0-0 அட்சரேகை – 54 வ 15, தீர்க்கரேகை – 04 மே
30.
|
|
லக்\\ |
கேது |
|
இராசி - 3 |
|
|
புத, சனி சூரி |
குரு |
||
செவ்,சுக் சந்,ராகு |
|
|
|
எமி ஜாக்ஸனின்
ஜாதகத்தில் இலக்னத்துக்கு 2 ஆம் அதிபதி புதனும், இராசிக்கு 2 ஆம் அதிபதி ஆட்சி
பெற்ற சனியும் இணைந்துள்ளனர். இலக்னாதிபதி சுக்கிரனை, இராசி அதிபதி குரு பார்வை செய்வதும், இந்த ஜாதகியைப்
பேரழகி ஆக்கியது.
அஞ்சலி தேவி.
பழம் பெரும் நடிகை
அஞ்சலி தேவி. பலரைக் கவர்ந்த அழகி ஆவர். 24 ஆகஸ்டு 1927 இல் பிறந்தவர். நேரம் – 12
– 00. – டைம் சோன் – 5 – 5 – அட்ச ரேகை – 17 – வ – 06 – தீர்க்க ரேகை – 82 – கி –
13.
குரு |
|
|
ராகு |
|
இராசி - 4 |
புத, சந் |
|
|
செவ், சூரி. |
||
கேது. |
லக்\\ சனி |
|
சுக் |
அழகு தேவதை அஞ்சலி
தேவி ஜாதகத்தில் இலக்னத்துக்கு இரண்டாம் அதிபதி 5 இல் ஆட்சி பெற்ற குரு,
இராசியிலுள்ள புதனையும், இராசியையும், 7 இல் உள்ள சுக்கிரனையும், 9 ஆம் பார்வையால்
இலக்னத்தையும் பார்வை இடுவதன் மூலமாக இவர் ஓர் பேரழகி என்பதை உறுதி செய்கிறது,
அல்லவா ?
அலெக்ஸாண்ரா டடாரியோ
அலேக்ஸாண்ரா டடாரியோ (Alexandra Daddario) அமெரிக்க சினிமா நடிகை. மார்ச்16, 1986 -12 – 00 – நியூயார்க். 74 மே 00 – 40 வ 42. டைம்
சோன் – 5.
புத,சுக், சூரி |
ராகு |
சந் |
லக்\\ |
குரு |
இராசி - 5 |
|
|
|
|
||
செவ் |
சனி |
கேது |
|
இவர் ஒரு அமெரிக்க
நடிகை. 2010 இல் வந்த ‘தி லைட்டிங் தீஃப்’ - அனாபத் சேஸ் – என்ற பெயரில்
அறியப்பட்டார். இவரின் அழகின் இரகசியம் இந்த கிரக நிலைதான் ?
இலக்னத்துக்கு 2 ஆம் அதிபதி சந்திரன்
உச்சம் பெற்ற நிலையில், சுக்கிரனின் இராசியான ரிஷபத்தில் உள்ளார். இராசிக்கு 2 ஆம்
அதிபதி புதன் உச்ச சுக்கிரனுடன் இணைவு. இலக்னத்தை குரு பார்க்கிறார்.
சமந்தா
சமந்தா – தமிழ், தெலுங்கு மற்றும் பிரபல
மொழிகளில் பிரபலமாக கதாநாயகியாக நடித்துவரும் அழகிய சினிமா நடிகை ஆவார். பிறந்த
தேதி – 28 – ஏப்ரல் – 1987, நேரம் – 12 – 00 , டைம் சோன் 5 – 5 – அட்ச ரேகை – 13 வ
05 – தீர்க்க ரேகை – 80 கி 18.
சுக், ராகு குரு |
சந்,புத சூரி |
செவ் |
|
|
இராசி - 6 |
லக்\\ |
|
|
|
||
|
சனி |
|
கேது |
சமந்தாவின்
ஜாதகத்தில் இலக்னத்துக்கு 2 ஆம் அதிபதி சூரியன், உச்சம் பெற்று, இராசியில்,
இலக்னாதிபதியுடனும், புதனுடனும் இணைந்துள்ளார். இராசிக்கு 2 ஆம் அதிபதி சுக்கிரன்
உச்சம் பெற்று, பாக்கியாதிபதி, ஆட்சி பெற்ற குருவுடன் இணைந்துள்ளார்.
·
கதே
வின்ஸ்லெட் (Kate Winslet) – ஆங்கில நடிகை.
5 அக்டோபர் 1975 – 12 – 00 – டைம் சோன் – 0 – 0 மே
57, 51 வ 27
குரு |
|
கேது |
செவ் |
|
இராசி - 7 |
சனி |
|
|
சுக் |
||
|
ராகு, லக்,\\ |
|
சந்,புத, சூரி |
இலக்னத்துக்கு 2 ஆம் அதிபதி குரு, உச்ச புதனால்
இராசியிலிருந்து, பார்க்கப்படுகிறார்.
சந்திரனுக்கு 2 ஆம் அதிபதி சுக்கிரனுக்கு
இடம் கொடுத்த சூரியன், உச்சம் பெற்ற புதனுடன் இணைந்துள்ளார். இலக்னத்துக்கும்,
இராசிக்கும் குருவின் பார்வை சித்திக்கிறது.
ஷாலினி அஜித்
ஷாலினி அஜித் –
பிரபல தமிழ், மலையாள சினிமா கதாநாயகி. பல
படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். பிறந்த தேதி 20 நவம்பர் 1979. நேரம் –
12 – 00 . டைம் சோன் – 5 – 5 அட்ச ரேகை 13 – வ 05 – தீர்க்க ரேகை - 80 கி 18. இவரது ஜாதகத்தைப் பார்ப்போமா ?
|
|
|
|
கேது. |
இராசி - 8 |
|
|
லக்\\ |
குரு,ராகு செவ் |
||
|
சந்,புத, சூரி, சுக் |
|
சனி |
ஷாலினியின் ஜாதகத்தில், இலக்னத்துக்கு 2 ஆம்
அதிபதி சனி புதன் வீட்டில் அமர்ந்து, இராசியிலுள்ள புதனை, சுக்கிரனைப்
பார்க்கிறார். இராசிக்கு 2 ஆம் அதிபதி குருவுக்கு, இடம் கொடுத்த சூரியனும்
இவர்களுடன் இராசியில் இணைந்துள்ளார்.
ஜெனிஃபர் லியன் கோன்லி.
ஜெனிஃபர் லியன்
கோன்லி ( Jennifer Connelly ).– அமெரிக்க சினிமா நடிகை. குழந்தை நட்சத்திரமாக
விளம்பரப் படங்களில் நடித்து தனது பயணத்தைத் தொடங்கினார். 1984 இல் ‘‘ஒனஸ் அப்பாண்
ஏ டைம் இன் அமெரிக்கா’’.
12 டிசம்பர் 1970, 12 – 00 ரவுண்ட் டாப் – டைம்
சோன் – 5 . 96 மே 41, 30 வ 3.
|
சனி |
சந் |
|
ராகு |
இராசி - 9 |
|
|
லக்\\ |
கேது |
||
புத |
குரு,, சூரி |
சுக், செவ் |
|
இலக்னத்தில் இருந்து 2 ஆம் அதிபதி சனி, சுக்கிரனால்
பார்க்கப்படுகிறார்.
சந்திரனுக்கு, 2 ஆம் இடத்தை புதன் பார்வை செய்கிறார்.
இதுவே, அவரின் அழகுக்குக் காரணியாகும்.
ஜோதிகா
ஜோதிகாவும் ஓர் அழகிய சினிமா நடிகை. கதாநாயகி ஆவர். இவர்
பிறந்த தேதி - 18 அக்டோபர் 1978. நேரம் – 12 – 00. டைம் சோன் – 5.5, அட்சரேகை – 18
– வ – 58, தீர்க்கரேகை – 72 – கி – 50.
கேது |
சந் |
|
|
|
இராசி - 10 |
குரு |
|
|
சனி |
||
லக்\\ |
|
செவ்,புத சுக்,சூரி. |
ராகு |
இலக்னத்துக்கு
2 ஆம் அதிபதி சனி, புதனையும், இராசிக்கு 2 ஆம் அதிபதியான ஆட்சி வீட்டிலுள்ள, சுக்கிரனையும்
பார்க்கிறார். இலக்னத்துக்கு 2 ஆம் அதிபதி சனிக்கு இடம் கொடுத்த சூரியனும் அங்கு இணைந்தள்ளார்.
இலக்னத்துக்கு 2 ஆம் இடத்தை குரு பார்வை புரிகிறார்.
இந்த ஆண்டின்
முதல் கட்டுரையாக, இந்தக் கட்டுரையை எழுதியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அழகின் காரணிகள்,
மேற்கண்ட, அனைத்து ஜாதகங்களிலும் அமைந்திருப்பதைக் கண்டோம், நண்பர்களே. மேற்படி, உதாரண
ஜாதகங்கள் உதவி அஸ்ட்ரோ சேஜ் வலைத்தளம். நன்றி. வணக்கம். வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment