உ விமான விபத்தும், வீர மரணமும், விதி செய்த சதியும். நமது இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைவர் ‘’சீஃப் ஆஃப் தி டிபெனஸ் ஸ்டாஃப்’’ ஜெனரல். பிபின் ராவத், அவர்கள் மற்றும் பல வீரர்கள் 8 டிசம்பர் 2021 இல் குன்னூர் மலைப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது நாம் அனைவரும் அறிந்ததே. அதற்கான காரணிகளை அலசுவோமா ? நண்பர்களே! இராசி மண்டலத்தில் காற்று இராசி- ஹெலிக்காப்டர் விமான விபத்து ஏற்பட்ட தருணம் - இலக்கினம் எழுந்தது காற்று இராசியான கும்பத்தில் – அதுவே , விபத்தைக் குறிகாட்டுகிறது. நவாம்சத்திலும் இலக்கினம் வர்க்கோத்தமம். அதுவே, விபத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. அசுப செவ்வாயின் அவிட்ட நட்சத்திர சாரத்தில் இருப்பதால், அசுபமான குரு இலக்கினத்தில் உள்ளது. உருவத்தில் பெரிய, தன, இலாபாதிபதி குருவின் இருப்பு பாதிப்பினை ஏற்படுத்தியது. அதுவே, ஒரு வாயு கிரமாகக் கருதப்படுகிறது. குரு இயற்கை சுபராக இருப்பினும் ‘’சந்திர காவியம்’’ எனும் நூலில், கும்ப இராசிக்கு அவர் அனுகூலமற்றவர் எனக் குறிப்பிப்பட்டுள்ளது.
விபத்து நடந்த நேரத்தில், கும்ப இலக்னத்தில், குருவும், செவ்வாயும் தீய பலனையே அளிக்க வல்லவர்கள். 3 மற்றும் 10 ஆம் இடத்திற்குரிய. செவ்வாயும், கும்ப இலக்கினத்துக்கு, அசுபராகக் கருதப்படுகிறார். மேலும், குருவின் 2 பாகை 16 கலை, அவிட்ட நட்சத்திரம் மூன்றாம் பாதம் ஆகும். நவாம்சத்தில் குரு மற்றுமொரு காற்று இராசியான, துலா நவாம்சம் ஏறுகிறார். அதுவும் அவிட்டம் மூன்றாம் பாதமும் அங்கேதானே விழும். நவாம்சத்தில் செவ்வாய் தனது 4, 7, 8 ஆம் பார்வையால், குருவையும், 12 ஆம் இடத்தையும் மற்றும் கும்ப இலக்கினத்தையும் பார்வை செய்கிறார். தவறான வழி நடத்தலுக்குக் காரணமாகும், முகமூடி அணிந்த, உண்மையை விழுங்கி விடக்கூடிய, நிழல் கிரகமான இராகுவும் கும்ப நவாம்சத்தில் உள்ளார். இது பனி படர்ந்த கண்ணை மறைக்கக் கூடிய, மேகக் கூட்டத்தைத்தானே, குறிகாட்டுகிறது. அதுவே, திசை மாறிய பயணத்திற்கும், காரணமாயிற்று. அந்த விமானம் உயரமான மரத்திலோ, மலை முகட்டிலோ முட்டி, மோதி விபத்துக்குள்ளானதாகக் கருதப்படுகிறது. தவறான தீர்மானத்திற்கு இராகுவே காரணமாகிறார். கொடிய விஷமுடைய, இராகுவே, தெளிவற்ற, கடுஞ்சிக்கலான, மறை புதிரான எந்திரக் கோளாறுகளுக்குக் காரணமாகி, இந்த எதிர்பாராத விபத்துக்கும் வழிவகுக்கிறார். கூட்டு மரணத்தை அளிக்கக் கூடியவரும் கரும் பாம்பே. மேலும், விபத்து நடந்த இடத்தின் பெயர்களைப் பார்த்தோமானால். காட்டேரி மலை முகடு, நஞ்சப்பா சமுத்திரம் இராகுவைத் தொட்டுக்காட்டுகின்றன. அடுத்து, வேத ஜோதிடத்தில் விவரமாக விளக்கப்பட்டுள்ள, திரிகோண சொரூபம் பற்றி காணலாம். இலக்கினம் 16 பாகை 28 கலையில், 2 ஆம் திரேகாணத்தில் விழுவதால், அது வெடித்துச் சிதறுதல் மற்றும் தீப் பிடித்தல் ஆகியவற்றைக் குறிகாட்டுவதாகப் பண்டைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கும்ப இராசி, 2 ஆம் திரேகாணம் அடர்ந்த காட்டில் வாழக் கூடிய அசுத்தமான, கந்தலாடை அணிந்த பெண்ணைக் குறிக்கிறது. அவள் ஓரு, பருத்திச் செடி நிறைந்த, எரிக்கப்பட்ட வண்டியில், அமர்ந்துள்ளாள். அவள் தலையில் உள்ள பானையில், இரும்புத் துண்டுகளை சேகரிக்கிறாள். இதில், முக்கிய சொற்களான, அடர்ந்த வனம், எரிந்த, தலையில் உள்ள பானை, வான் சுழலி எரிபொருள் (ஏவியேஷன் டர்பைன் ஃப்யூயல்) மற்றும் இரும்பினாலான பொருட்களை திரேகாண நிலை குறிகாட்டுகிறது. திரேகாண இலக்கினம் மிதுனம், காற்று இராசியில் முதலாவது மற்றும் ஒர் உடைபட்ட அல்லது பிளவு பட்ட இராசியாகும். மேலும், திரேகாணத்திலும் இலக்கினம் குரு மற்றும் செவ்வாயால் பார்க்கப்படுகிறது. அடுத்து, நமது தேசத்தின் மற்றும் ‘’சீஃப் ஆஃப் தி டிபெனஸ் ஸ்டாஃப்’’ ஜெனரல். பிபின் ராவத், ஜாதகங்களில் உள்ள இரு மடங்கு பாதிக்கும் சனியைப் பற்றி காண்போம்.
ஜெனரலின் ஜாதகத்தில், ( கிடைத்த தகவலின்படி பிறந்த தேதி 16 மார்ச், 1958 ) மகர இராசி, நடப்பு 7-1/2 யில் ஜென்மச் சனி, அதுவும் விபத்து நடந்த அன்று, இராசியில் சந்திரன் இருக்க, கோசார நிலைகள் மிகுந்த பாதிப்பைக் குறிகாட்டுகின்றன. விபத்து நடந்த நேரத்து ஜாதகப்படி, சந்திரனும், சனியும் மிக நெருக்கத்தில் ‘’ புனர்பு தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஜனன ஜாதகத்திலும், சந்திரன் மகரத்தில் உள்ளார். எனவே, கோசார மற்றும் ஜனன ஜாதகங்களில் சனி, சந்திரனுக்கு நெருக்கமாகவே உள்ளார். பலத்த சத்தத்தோடு உடைதல், நொறுங்குதல் அல்லது முடிவை, மோட்சத்தைக் குறிப்பது 12 ஆம் இடம். 12 ஆம் இடம் – பெரும்பாலும், எப்போதுமே விளக்கப்படுவது பெரிய இழப்பு, இறப்பு, மோட்சம் போன்றவற்றைப் பற்றியதே ஆகும். இலக்கினாதிபதி, விரயத்தில் இருப்பது, நெடுந் தூரத்தையும், மறைவு ஸ்தானமான 6 ஆம் வீட்டு அதிபதி சந்திரன், மிகவும் ஒதுக்கப்பட்ட தூரத்திலுள்ள இடத்தையும் குறிகாட்டுகிறது, அல்லவா? விபத்து நடந்த நேரத்தில், சந்திரன் தன் சுய சாரமான திருவோணம் மூன்றாம் பாதத்தில் அமர்ந்திருந்தார். எனவே, அந்த நேரத்தில் நடந்து கொண்டிருந்தது சந்திர திசையில், சனி புக்தி ஆகும். இலக்னாதிபதி மற்றும் 6 ஆம் அதிபதியும் இணைந்து, விரய பாவத்தில் அமர்ந்து திசை நடத்துவது எங்ஙனம் சிறப்பைத் தரும் ? மேலும், விரயத்தில் இருக்கும் கர்ம காரகன், ஜாதகருக்குப் பல இன்னல்களைத் தருவான், எதிரிகளின் மூலமான இன்னல்களையும் அனுபவிப்பான்.- என ‘’பிருஹத் பராசர ஹோரா’’ நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சனி புத்தி தன் மோசமான விழைவுகளைக் காட்டிவிட்டது. கோசாரத்தில் சனி, குருவின் அனுகூலமற்ற பயணத்தால், இந்திய நாட்டிற்கு பேரிழப்பும், பேரழிவுக்கான பயணமும் ஆனது.
மேற் கண்ட ஜாதகத்தில் தற்போது கோசாரத்தில் சனி, ஜாதக சந்திரனுக்கு 7 ஆம் இடத்தில் சஞ்சரிக்கிறார். கண்டச் சனியின் காலம் விபத்தை ஏற்படுத்தியது. கோசார குருவும் அட்டம ஸ்தானத்தில் இருப்பதுவும் அனுகூலமற்ற நிலையே. சூரிய கிரகணம் டிசம்பர் 4, 2021 இல் நிகழ்ந்தது. அதுவும், இந்திய ஜனன ஜாதக இலக்னத்துக்கு 7 ஆம் இடத்தில், விபத்து நடப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தது. எப்போதுமே, கிரகணம் நடந்த பகுதியில், நாட்டில், 6 மாதங்களுக்குள் ஏதேனும் இயற்கை சீற்றங்கள், அழிவுகள், அசம்பாவிதங்கள் ஏற்படும் எனபது சரித்திர நிகழ்வுகள் ஆகும்.(நன்றி இ.எஸ்,டி மற்றும் சி.எஸ்.மணியன்). இந்த ஆய்வு வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி இக்கட்டுரையை முடிக்கிறேன்.ஜோதிட ப்ரவீணா. எட்டயபுரம். எஸ். விஜயநரசிம்மன், எம்-4/118, வீ.வ.வா குடியிருப்பு, பகுதி - 6, கூடல் புதூர் - மதுரை - 625 017. 9789101742,6383625384.
|