உ
பாதகாதிபதி குற்றவாளியா?
பாதக கிரகங்கள் மற்றும் இராசிகள் எவை ? அவை
இலக்னத்துக்கு 11, 9, 7 ஆகிய பாவங்கள் அதில் உள்ள கிரகங்கள் அல்லது அவைகளின் அதிபதிகள்
ஆவர். இவை முறையே சர, ஸ்திர, மற்றும் உபய இராசிகளுக்கு உடையவை. ‘’ஜாதக பாரிஜாத’’ த்தில்
இந்த பாதகாதிபதிகள் காரா அல்லது மாந்தி இடம்பெற்றுள்ள இடத்தின் அதிபதிகளுடன், இடம்
பெற்றால் அதிக துன்பங்களை தரவல்லது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பாதகாதிபதி என்ற தகுதியை ஒரு கிரகம்
அடைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு நிலைகளை அடைய வேண்டும்.
முதலாவதாக
11, 9, 7 ஆம் வீடுகள் முறையே சர. ஸ்திர, உபய வீடுகள் அல்லது வீட்டு அதிபதிகளாக இருக்க
வேண்டும். அந்த பாதகாதிபதியானவர், காரேஷா அல்லது மாந்தி உள்ள இடத்தின் அதிபதியாகவும்
இருக்க வேண்டும். மாந்தி என்பது நாம் அறிந்த ஒன்று. காரேஷா பற்றி ‘’ஜாதக பாரிஜாதம்’’
ஸ்லோகம் 56 இல் செல்லப்பட்டள்ளது. அது என்ன? காரா என்பது இலக்னத்தில் இருந்து 22 ஆம்
திரிகோணம் ஆகும். அதன் அதிபதியே காரேஷா ஆவார்.
எனவே, மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே ஒரு
கிரகம் பாதகாதிபதி தகுதியை பெறுகிறது. எனவே, பல ஜாதகங்களில் பாதகாதிபதியே அமைவதில்லை.
அதனால், அப்படிப்பட்ட ஜாதகங்களில் பாதகாதிபதி நிலை பொய்த்துப் போய், சிறப்பான பலன்களைத்
தருபவர் ஆகிறார்.
பாதகாதிபதி என்ன பாதகம் செய்யும் எனபது ஸ்லோகம்
30 பகுதி 18 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதக ஸ்தானாதிபதி அல்லது அதற்கு தொடர்புடைய
கிரக தசா / புத்தி காலங்களில் நோய் மற்றும் துன்பங்களைத் தருகிறது. பாதக ஸ்தானத்துக்கு
கேந்திரங்களில் இடம்பெற்றுள்ள கிரக தசா / புத்தி காலங்களில் ஜாதகர் கவலைகளுக்கு உள்ளாவதோடு,
வெளிநாட்டு பயணங்களும் மேற்கொள்ள நேரிடுகிறது.
பிரசன்ன மார்க்கம் எனும் பண்டைய நூலில் வேறு
விதமாக விளக்கம், குழப்பான முறையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பாதக ஸ்தானங்கள்
இலக்கனத்தில் இருந்து 11, 9, 7 என்பது ஆரூட இலக்னத்தில் இருந்து பார்க்கப்பட வேண்டும்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் இந்த காரா
மற்றும் மாந்தியின் நிலைபற்றி குறிப்பிடப்படவில்லை. இது பிரசன்ன கட்டத்திற்கு மட்டுமே
பொருந்தும்.
அதன் (பிரசன்ன மார்க்கம்) ஆசிரியர் வசிஷ்டர்
குறிப்பிடுவதாகக் கூறுவதாவது ’’எதிர்காலத்தை பற்றிய பலன் அறிய வருபவர்கள், அவர்கள்
கேள்வி கேட்டாலும் கேட்காவிட்டாலும் பிரசன்ன கட்டத்தின் மூலமாக அவர்கள் பலன் அறிய ஆரூட
இலக்னத்தின் மூலமாக தகுதி உடையவர் ஆகிறார்கள். மேலும், ஜோதிடர் துல்லியமான கேள்வி நேரத்தை
குறித்துக் கொள்ளவதோடு சகுனம் மற்றும் சமிக்ஞைகளையும் நோக்க வேண்டும்.
பிரசன்ன மார்க்கம் மேலும் 2 விளக்கங்களை குறிப்பிடுகிறது.
1. பாதக ஸ்தானத்தில் இருந்து கேந்திரங்களில் உள்ள கிரகங்கள் பாதகம் செய்கின்றன.2. பொதுவாக,
எல்லா சர ராசிகளுக்கு பாதக ஸ்தானமாக கும்ப ராசி அமைகிறது.
விருச்சிக ராசி, சிம்மம், கன்னி, விருச்சிகம்
மற்றும் தனுசு ஆகிய ராசிகளுக்கு பாதகம் செய்கிறது. ரிஷபத்திற்கு மகரம் பாதகம் ஆகிறது. கடகம், கும்பத்திற்கும், மிதுனம், மீனம் ஆகிய ராசிகளுக்கு
தனுசு ராசியும் பாதக ஸ்தானங்கள் ஆகின்றன.
முதல் மற்றும் மூன்றாவது விதிகள் பிரசன்ன
மார்க்க ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரசன்ன மார்க்கத்தில் பாதகம் பற்றிக் குறிப்பிடுகையில்,
மனம், உடல், ஆத்மா, மனக் குழப்பம், உடல் உபாதைகள், தொல்லைகள் போன்றவற்றில் மட்டுமே
பாதகம் ஏற்படுத்துகிறது. பிற பிரச்சனைகளான சமூக பிரச்சனை, குடும்ப பிரச்சனைகள், பொருளாதாரம்,
உத்தியோகம் மற்றும் தொழில் பிரச்சனைகள் ஆகியவற்றில் பாதகம் செய்வதில்லை.
ஜாதகர்
படுகின்ற கஷ்டங்களுக்கான காரணங்கள் அல்லது இன்னல்களுக்கான வேர்களைக் கண்டறிந்து அதற்கான
பரிகாரங்கள் மற்றும் அதி தேவதைகளை குறிப்பிடுவதே முக்கியமாக கருதப்படுகிறது.
சில ஆசிரியர்கள் துர்ஸ்தானங்களான 6, 8 மற்றும்
12 ஆம் வீடுகளை பாதக ஸ்தானங்களில் சேர்த்தாலும் அவை பாதக ஸ்தானமாகக் கருதப்படக் கூடாது
என பிரசன்ன மார்க்கத்தில் 31 வது சுலோகத்தில், 15 வது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதாரணமாக, குரு பாதகாதிபதியாகி, அவர் இராகுவுக்கு
கேந்திரங்களில் நின்று அந்த பாவங்கள் துர்ஸ்தானங்களான 6, 8, 12 ஆகிய பாவங்களானால் பாதகம்
இல்லை என, பாதகம் மற்றும் துர்ஸ்தானங்களுக்கான வேறுபாட்டை விளக்குகிறார்.
ஜனன ஜாதகத்தில் பாதகாதிபதி, அது இருக்கும்
இடம், அதற்கான காரகங்களில், இயற்கை காரகத்துவங்களில் மட்டுமே பின்னடைவுகளையும், கஷ்டங்களையும்
தரும். பாதகாதிபதி இல்லாத ஜாதகர் தனது வாழ்க்கை எனும் கடலை கஷ்டங்களின்றி நீந்தி கரை
சேர முடியுமா?
ஜாதகம் – 1
பிறந்த தேதி – 15 – 5 – 1935 மாலை 1 – 40 மணி,
12 வ 18, 76 கி 37. சந்திர திசை இருப்பு – 2 வ 11 மா 24 நாட்கள்.
|
|
சூரி-1 புத-
19 |
சுக்-12 |
|
சனி |
சுக் |
செவ் |
புத |
சனி-17 லக்//15 |
ஜாதகம் -1 இராசி |
கேது-4 |
லக்// ராகு |
நவாம்சம் |
|
|||
ராகு-4 |
|
சூரி |
கேது |
|||||
|
மாந்தி 12 |
குரு-_(வ) 26
|
செவ்-15 சந்-29 |
|
|
மாந்தி |
சந் |
மேற் கண்ட ஜாதகத்தில், இலக்கினம் கும்பம்,
9 ஆம் இடம் துலாம், அதன் அதிபதி சுக்கிரன், துலாத்தில் குரு அமர்ந்துள்ளார். 22 வது
திரேகாணம் கன்னி இராசியில் 2 வது திரேகாணமாகும். அது மகரத்தில் விழுகிறது. மகரம் சனியின்
ஆட்சி வீடு. அந்த சனி கும்ப இராசியில் உள்ளார். எனவே, காரா அல்லது காரேசா சனி ஆகிறார்.
விருச்சிகத்தில் மாந்தி உள்ளார். அதன் அதிபதி செவ்வாய். பாக்கியாதிபதி சுக்கிரன், பாக்கிய
பாவத்தில் உள்ள குருவும், காராவுக்கு அதிபதியாகவோ, அல்லது மாந்தியுடன் இணைந்தோ இல்லாத
நிலையில், இலக்னத்தைப் பொறுத்து பாதகாதிபதி இல்லை என்ற நிலையே உள்ளது.
பண்டைய நூலாசிரியர்களின் கருத்துப்படி எந்தவொரு
பலனையும் இலக்கினத்துக்கும், சந்திரா இலக்கினத்துக்கும் பார்க்க வேண்டும் என்பதேயாம்.
இங்கு சந்திரா இலக்கினம் கன்னி. அதற்கு பாதக
ஸ்தானம் 7 ஆம் இடம் மீனம் ஆகும். அதன் அதிபதி குரு ஆவார். சந்திரனில் இருந்து 22 ஆம்
திரேகாணம் மேஷத்தின் கடைசி திரேகாணம், தனுசில் விழுகிறது. எனவே, குரு காரேசா ஆகிறார்.
சுக்கிரன் வீட்டில் குரு உள்ளார். மாந்தி செவ்வாயின் வீட்டில் உள்ளார். 7 ஆம் அதிபதி
சுக்கிரனோ அல்லது செவ்வாயோ அல்ல. எனவே, சந்திரனில் இருந்தும் இந்த ஜாதகத்தில் பாதகாதிபதி
அமையவில்லை.
ஆனாலும், இந்த ஜாதகி வாழ்க்கையில் படாதபாடுபட்டாள்.
உயர்ந்த மரியாதைக்குரிய குடும்பத்தில் பிறந்தவர், நடுத்தரமான நல்ல சமூக பின்புலம் உள்ளவர். இவரது மகன் வேறு ஜாதி, ஏழை பெண்ணை காதல் மணம் முடித்ததை
அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அழகிய மகளோ அரேபிய நாட்டில் ஒரு ஹோட்டல் பணியாளை காதலித்து
மணந்து அன்னைக்கு அசிர்ச்சி தந்தாள். பாதகாதிபதியின் பாதிப்பு இல்லாத பட்சத்தில் எப்படி
இந்த நிலை ஏற்பட்டது ? யோககாரகன் சுக்கிரன் 5 ஆம் வீட்டில் உள்ளார். 5 ஆம் வீடும்,
5 ஆம் அதிபதியும் பாபகர்த்தாரியில் இரு பாவ கிரகங்களான கேது மற்றும் செவ்வாய்க்கு இடையே
உள்ளார். 5 ஆம் அதிபதி புதன் அதற்கு 12 இல் உள்ளார். குரு 5 ஆம் வீட்டை பார்வை செய்தாலும்,
அவர் வக்ரமடைந்து அசுபராக பல இன்னல்களை தந்தார். எனவே, இங்கு பாதகாதிபதி இல்லாத நிலையில்
அதை பலன் காண எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
ஜாதகம் – 2
பிறந்த தேதி – 9-9-1960 – இரவு
7-15 மணி, 18 வ 56, 72 கி 51. சுக்கிர தசா இருப்பு – 14 வ
9 மா 18 நாட்கள்.
லக்//-5 |
சந்-17 |
|
செவ்-2 |
|
|
குரு |
சுக் கேது |
|
கேது |
ஜாதகம் - 2 இராசி |
கேது-4 |
புத |
நவாம்சம் |
|
|||
|
ராகு-23 சூரி-25 |
|
லக்// |
|||||
சனி-20 குரு-3 |
|
|
புத-3 சுக்-16 |
|
சூரி ராகு |
செவ், சனி |
சந் |
இந்த ஜாதகத்தில் 7 ஆம் அதிபதி புதன் ஆவார்.
இலக்கினம் மீனம் முதல் திரேகாணத்தில் இருப்பதால் 22 ஆம் திரேகாணம் துலாம் முதல் திரேகாணத்தில்
அமையும். அந்த இராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன், புதனோடு இணைந்து புதனின் இராசியிலேயே
உள்ளார். புதன் பாதகாதிபதி ஆவதோடு அவரே காரேஷாவும் ஆகிறார். எனவே, ஜாதகரின் மணவாழ்க்கையில்
எவ்வளவு பாதகங்கள் செய்து, ஒரு வழி செய்திருப்பார் உபய இராசிக்கு பாதகாதிபதியான புதன்.
ஜாதகரின் மனைவி துர்குணமுள்ளவளாக இருந்ததால்,
8 ஆண்டுகளே இணைந்து வாழ்ந்து விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாள். இரண்டாம் மனைவி
20 நாட்களே உடன் இருந்து பிரிந்துவிட்டாள். அவன் ஆண்மையற்றவன் என்று சொல்லி அவளும்
விவாகரத்து பெற்றுவிட்டாள். 7 ஆம் வீட்டு பாதகாதிபதி புதன் இவன் மணவாழ்க்கை சோகத்திற்கு
காரணமானான் என நாம் முடிவு செய்யலாமா?
பாதகாதிபதி புதன் என்பதை ஒதுக்கிவிட்டு,
7 வீட்டையும், களத்திர காரகன் சுக்கிரனை மட்டுமே வைத்து ஆராயலாமா?
7 ஆம் அதிபதி புதன் 8 ஆம் அதிபதி, களத்திர
காரகன் சுக்கிரனுடன் உபய இராசியில் இணைந்துள்ளார். 7 ஆம் பாவம், பாவாதிபதி மற்றும்
களத்திர காரகன் ஆகியோர் பிற உபய இராசிகளில் அமர்ந்துள்ள செவ்வாய் (2 மற்றும் 9 ஆம்
அதிபதி) மற்றும் சனியால்(11 ஆம் அதிபதி) பார்க்கப்படுகிறார்கள். இது பல தார யோகத்தை
தந்தது. உபய இராசியில் இருக்கும் சுக்கிரனை அசுப கிரகங்களான செவ்வாய், சனி பார்ப்பதே
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்திற்கு வழி வகுத்தது இங்கு உபய இராசியில் அமர்ந்த சுக்கிரனை,
இயற்கை பாவிகள் இருவர் பார்த்ததே இந்த பாதிப்பு நிலைக்கு மேலும் வலு சேர்க்கிறது.
சுக்கிரன் உபய இராசியில் அமர்ந்து, அந்த இராசி
அதிபதி உச்சம் பெற்று, 7 ஆம் அதிபதியும் பலம் பெற ‘’பகு-தார யோகம்’’ (பல தார யோகம்)
ஏற்படும் என்று ‘’ பிருஹத் பராசர ஹோரா சாஸ்த்ரா’’ விலும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலைகளை நாம் இந்த ஜாதகத்தில்
காணமுடிகிறது. பாதகாதிபதியை விலக்கிவிட்டுப் பார்த்தாலும் மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை
உறுதியாகிறது. ஆயினும், இரு முறையும் விவாகரத்து வரை சென்று வாழ்க்கை வீணானதற்கு காரணமாக
பாதகாதிபதி புதனை சொல்லலாம்.
ஜாதகம் – 3
தியாகி - வீர சர்வார்கர் -28
– 5 – 1883 – இரவு – 9 – 25 மணி, 18 வ 23, 73 கி 53. செவ்வாய் திசை இருப்பு – 1 வ
1 மா 26 நாட்கள்.
தனுசு
இலக்கினம். 7 ஆம் அதிபதி புதன், உபயத்துக்கு பாதகாதிபதி. 22 வது திரேகாணம் கடகத்தின்
3 வது திரேகாணத்தில் விழுகிறது. அந்த திரேகாணாதிபதி குரு, காரேஷா ஆகிறார். குரு 7 இல்
அதன் அதிபதி மற்றும் பாதகாதிபதி புதனுடன் மிதுனத்தில் உள்ளார். பாதகாதிபதி புதன் 7,10 க்கு அதிபதியாகி இலக்கினத்தை
பார்வை செய்கிறார்.
|
செவ்-8 கேது-19 சுக்-16 |
சூரி-16 சனி-
10 |
குரு-14 புத-0-16 |
|
ராகு சனி |
|
சூரி |
செவ் |
சந்-4 |
ஜாதகம் - 3 இராசி |
|
குரு |
நவாம்சம் |
|
|||
|
|
|
சுக் |
|||||
லக்//27 |
|
ராகு
|
|
லக்// |
சந் |
புத |
கேது |
எனவே,
இந்த பாவங்கள் அனைத்துமே மிகவும் பாதிப்புகளை அடைகின்றன. மிகப் பெரிய தியாகி, சுதந்திர
போராட்ட வீரர், மதிப்பிற்குரிய விநாயக் தாமோதர சர்வாக்கர் தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும்
துச்சமாக நினைத்து வெள்ளையனை எதிர்த்துப் போராடி நமது தாய் திருநாட்டிற்காக இன்னலுற்று
தன் வாழ்கையை அர்பணிக்க நேர்ந்தது. தாய் நாட்டிற்காக அவர் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல.
இயற்கை
சுபர் குரு, இலக்கினாதிபதியாகி, இலக்கினத்தைப் பார்த்த போதும், அவருக்கு ஏற்பட்ட வறுமையை,
பொருள் கஷ்டத்தை, துன்பங்களையும் தடுக்க முடியாதவர் ஆனார். அதற்கு காரணம் அவர் இராகுவின்
திருவாதிரை நட்சத்திர சாரம் பெற்று, ஆயுத திரேகாணத்தில் அமர்ந்ததேயாம். பாதகாதிபதியின்
தொடர்பு மேலும் அதிக துன்பத்திற்குக் காரணமாயிற்று.
மேற்கண்ட ஜாதகங்களை அலசி ஆராய்ந்து பார்க்கும்
போது, பாதகாதிபதி மட்டுமே ஜாதகருக்கு பாதகம் செய்துவிடவில்லை என்பதை அறிகிறோம். அடிப்படையிலேயே
ஜனன ஜாதகத்தில் பாதிக்கக் கூடிய கிரக அமைப்புகள் இருந்தால் மட்டுமே பாதகாதிபதியின்
தாக்கம் எடுபடும் என்பதை அறிய வேண்டும். அப்போதுதான் பலன்கள் மேலும் சீர்கேடடையும்.
No comments:
Post a Comment