Search This Blog

Saturday, 26 October 2024

நான்காம் பாவம் மற்றும் 5 ஆம் பாவ காரகங்கள்

 


நான்காம் பாவம் மற்றும் 5 ஆம் பாவம்

    சொத்துக்கள், அசையா சொத்துகள், வீடு, நிலம், தாய்,  வாகனங்கள், நீர், கற்றல், சந்தோஷம், கார், குடியிருப்பு பகுதிகள், உயிர் காக்குகும் மருந்துகள், ரகசிய வாழ்க்கை, முதுமை,மறைவான பொருட்கள், பாரம்பரியம், நினைவு சின்னங்கள், வயல்கள், படிப்பில் ஆர்வம் குறைவு, ஒத்தி அல்லது வாடகைக்கு விடுதல், வேலையில் இருந்து விடுவிக்கப் படுதல்,  முக்கிய முடிவெடுத்தல், பால், நீர், நதி, ஏரி, வீண் பழி, வீட்டை இழத்தல், பசு, எருமை மாடு, பயிர், விவசாய பொருட்கள், நிரந்தர தொழில்கள், அரசு, எண்ணெய்க் குளியல், இனம், ஆடைகள், வாசனைப் பொருள், சந்தோசமான வாழ்வு, நம்பிக்கை, நல்ல பெயர், கூடாரம், வெற்றி, தோட்டம், குளம், கிணறு வெட்டுதல், தாய் வழி உறவு, தூய்மையான அறிவு, தந்தையின் ஆயுள், மனைவியின் தொழில், சேமிப்பு, மாளிகை, கலை, வீட்டின் முன் வாசல், முடிவுக்கு வருதல், நிலை இன்மை, வீடிழப்பு, தந்தை வழி சொத்து, தேவதைகளுக்கு படைக்கும் உணவு, களவு போன பொருட்களை கண்டறிந்து கூறும் திறமை, எறும்பு புற்று, வேதம் மற்றும் புனித நூல்களை புதுப்பித்தல், பசுக்கள், எருமைகள், யானைகள், நன்செய் நிலத்தில் விளைந்த தானியங்கள், பழத் தோட்டங்கள், சுரங்கங்கள், கட்டிடங்கள், முன்னோர்கள் சொத்து, பொக்கிஷம், பந்துக்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள், போக்குவரத்து, குடும்ப அமைதி, விலா எலும்பு, இதயம், மார்பகங்கள் ஆகியவற்றையும் குறிக்கும்.

   நான்காம் இடமானது 3 ஆம் இடத்துக்கு 2 ஆம் இடமாக இருப்பதால் இறந்தவர்களின் சொத்துக்களையும், 12 க்கு 5 ஆம் இடமாதலால்  குழந்தைகளின் எதிரிகளையும், இளைய சகோதரர் மற்றும் சகோதரிகளின் வங்கி இருப்பையும், தாயின் ஆரோக்கியத்தையும், குழந்தைகளின் இழப்பையும், தந்தைக்கு ஆபத்தையும், அண்ணனின் எதிரிகளையும், ரகசிய எதிரிகளையும், 11 ஆம் இடத்துக்கு 6 ஆம் இடமாதலால், நண்பர்களின் ஆரோக்கியமின்மை மற்றும் நண்பர்களின், வேலையாட்களின் அதிர்ஷ்டத்தையும், 10 ஆம் இடத்துக்கு 7 ஆம் இடமாதலால் அரசனின் எதிரிகளையும் மற்றும் எதிரிகளின் வியாபாரத்தையும், லாபங்கள், தாய்மாமா, கூட்டாளியின் தொழிலையும், 9 ஆம் இடத்துக்கு 8 ஆம் இடமாதலால் மதத் தலைவர்களின் இறப்பையும் குறிக்கும்.

                               ஐந்தாம் பாவ காரகங்கள்

       அறிவு கூர்மை, உணர்ச்சிகள், உள்ளுணர்வு, புத்திகூர்மை, ஞாபகசக்தி,  மனத்திறன், உருவாகின்ற  அறிவுத்திறன், மாமத்தால் சந்தோஷம், காதல், காதல் கிளர்ச்சி,  சேமிப்பில் இருந்து வரும் லாபங்கள், வெற்றி, புத்திரம், எதையும் ஏற்று நடத்தும் திறன், கருவுறுதல், பாண்டித்யம், உயர் கல்வி, பயிற்சி, பதவி இழப்பு, சமூக வாழ்க்கை, ஏற்ற இறக்கங்கள், பக்தியால் பிறரை கவருதல், சீடர்கள், மாணாக்கர்கள், குலதெய்வம், மந்திரங்கள், யந்திரங்கள், பூஜை, தகுதி, திறமை, எதிர்காலம், செரிமானம், தந்தையால் செய்யப்படும் புண்ணிய காரியங்கள், அரசர், அமைச்சர், நல்லெழுக்கம், இயந்திரக் கலை, குடை, நீதிக் கதைகள், நற்செய்திகள், நற்பத்திரங்கள், ஆடைகள், விருப்பத்துடன் செயலாற்றல், மூதாதையர் சொத்து, விபசாரிகள் உறவு, உறுதியான எண்ணம், கமுக்கம், கண்ணியம், செய்திகளை எழுதுதல், இலக்கியங்களை படைத்தல், ஆரோக்கியம். நட்பு, மந்திர வழியாக வேண்டுதல், குபேர செல்வம், அன்னதானம், பாவ புண்ணியம் பார்த்தல்,, மிருதங்கம் போன்ற தாளக் கருவிகள் பயன்படுத்தும் விழாக்கள், பண்டிகைகள், ஆழ்ந்த புலமை, மன திருப்தி, முதல் கர்ப்பம், கருச்சிதைவு. 7 ஆம் வீடு 2 வது குழந்தையையும், 9 ஆம் வீடு 3 வது குழந்தையையும் குறிக்கும். சமூக முன்னேற்றம், கலைத்திறன், மகிழ்ச்சிக்கான வீடு, காதல் களிப்பு, விளையாட்டு, கேளிக்கை, இசை, நாடகம், நடனம்,  பூங்கொத்து, பொழுது போக்குக்கான இடங்கள், போட்டி பந்தயங்கள், லாட்டரி, சூதாட்டம், பந்தயம் கட்டுதல், பங்குச்சந்தை, காதல் விவகாரங்கள், இலக்கை அடையும் ஆர்வம், கடத்தல், பாலியல் பலாத்காரம், காமம், திருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏற்படுகின்ற காமக்களிப்பு, நல்ல மற்றும் தவறான இனங்கள், மத ஈடுபாடு, ஆழமான அறிவான கற்றல், புனத பயணங்கள், குழந்தைகளின் ஆரோக்கியம், தவறான உறவுகள் ஆகியவற்றை குறிக்கும்.



   

 

No comments:

Post a Comment