Sri Aghasthiyar Jothida Payirchi Mayam. MADURAI.
ஸ்ரீ அகத்தியர் ஜோதிடப் பயிற்சி மையம்.மதுரை.
வாழ்க ஜோதிடம் ! வளர்க தமிழகம்!
வேதம் யாராலும் இயற்றப்பட்டதாக சொல்லப்படுவதில்லை.ஏனெனில் அது பிரம்ம தேவனின்
படைப்பாகும்.பிரம்மதேவன் நாவில் சரஸ்வதிதேவியிருந்து வேத ஒலியை ஒலித்து க்கொண்டே
இருந்தாள் என புராணங்கள் கூறுகின்றன. உலக சிருஷ்டிக்காக,மனிதவரக்கத்தின் மேன்மைக்காக
சற்றேறக்குறைய ௩௯ முப்பத்தொன்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வேதம் பிரம்மனால்
நாரதனுக்கும்,சன்னத்குமாரனுக்கும்,,சநந்தனுக்கும் உபதேசிக்கப்பட்டதே சத்தியம்.வேதம் யுக
தர்மத்தின்,நாகரீகத்தின் முதல் படைப்பு என்று சொல்வது முற்றிலும் உண்மையாகும்.
தெய்வக் ஞ சிரோமணி அமரர் பி.எஸ்.ஐயர்.
குரு வாழ்க! குருவே துணை!
எமது குருவின் வழியில் ஜோதிடத்தை வளர்ப்பதே எமது குறிக்கோள்.குரு அவர்கள் ஜோதிட மா மேதையாவார். அவரின் நினைவாக
மதுரையில், அவரது ஆத்மார்த்தமான சீடர், திரு.கா சேகர் எம்.,ஏ அவர்கள் வழிகாட்டுதலின் படி ஜோதிடத்தை வளர்த்து வருகிறோம்.
ஆண்டுதோறும் குருவின் நினைவாக, மார்கழி மாதத்தில் கடந்த பதினேழு ஆண்டுகளாக,ஆண்டுவிழா மிக விமரிசையாகக் கொண் டாடி வருகிறோம்.இந்தியாவிலும்,வெளிநாடுகளிலும் நடந்த பல ஜோதிட மாநாடுகளில் கலந்து கொண்டு,அவர்களால் கௌரவிக் கப்பட்டவர் எமது குரு . அவர் வழி நடப்போம். அவர் புகழ் பரப்புவோம். ஸ்ரீ அகத்தியர் ஜோதிடப் பயிற்சி மையம்.மதுரை.மாணவர்கள்.
குரு பிரம்மா - குரு விஷ்ணும்,குரு தேவோ மகேஸ்வரக -- குரு சாஷ்ஷாத் பரப் பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ //
very useful
ReplyDelete